Showing posts with label JURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label JURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சனம். Show all posts

Friday, June 12, 2015

JURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சனம்




போயஸ்  தோட்டத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமும் , மர்மங்களையும் தன்னகத்தே உள்ளடக்கிய  ஜூராசிக் பார்க்  ஓப்பன்  ஆகுது. அங்கே ஓனர்  தான் வில்லன். மேகி நூடுல்ஸ் எப்படி செயற்கையான  கெமிக்கல்ஸ் மூலம் ருசியான  விஷத்துக்கு மக்களை அடிமைஆக்கி  கோடிக்கணக்கில் சம்பாதிச்சுதோ அதே  போல் ஹைபிரிட்ஸ் டினோசரை   உருவாக்கி  மிக அபாயமானாஆட்டத்தை  ஆடறார்.மக்களை  வர வைக்கனும், காசு சம்பாதிக்கனும் அப்டிங்கற ஆசை கலைஞரை விட அதிகமாவே வில்லனுக்கு இருக்கு.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட நவீன  டினோசர்  சாதா டினோசரை விட பல மடங்கு புத்திசாலித்தனமும், ஆபத்தும்  நிறைந்தது. பார்க்கில்வைக்கப்பட்ட  அந்த  டினோசர்  எஸ் ஆகிடுது.

அந்த  பார்க்கில்  இன்சார்ஜ் ஆக பணி புரியும் ஹீரோயினோட அக்கா பசங்க 2 பேரு  அங்கே  மாட்டிக்கறாங்க.பொதுவாவே இந்தக்காலத்துல 16 வயசு ஆனாலே பொண்ணுங்களுக்கு  லவ்வர்(ஸ்) இருப்பாங்க. ஹீரோயினுக்கும்  ஒரு லவ்வர்.அவர் தான்  ஹீரோ. அவர் எப்படி அந்தக்குழந்தைகளை காப்பாத்தறார்?என்பதே  கதை 




படத்தில்  முதல்  ஹீரோ  வழக்கம் போல்  கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தான். நம்மை  பிரமிப்பில்  கட்டிபோட்டுடறாங்க.கலக்கலான  சிஜி ஒர்க்ஸ்

ஹீரோவா  வரும் க்ரிஸ்  கலக்கலான  கம்பீரம், ஆண்மை  மிளிரும்  பாடிலேங்குவேஜ்,புத்திசாதுரியமான  நடவடிக்கைகள் மூலம்  மனம்  கவருகிறார். ரவா லட்டு மாதிரி காதலியைப்பக்கத்துலயே வெச்சுட்டு  இது  குழந்தைகளுக்கான படம்  என்பதால்கம்முன்னே  இருக்கார்.

ஹீரோயினா ப்ரிஸ்  பேருக்கு ஏத்த மாதிரி  ப்ரிஸ்க்க்கா  இருக்குது.அது  நமீதா மாதிரி  எடுப்பா  டிரஸ்  போட்டிருப்பதை வரவேற்கிறேன். அடிக்கடி திருப்பூர்  பனியன்  காஸ்ட்யூமில்  வேற  வந்து  கோடை வெய்யிலுக்கு  இதம் அளிக்கிறார்.இவரோட  நடிப்பைப்பத்தி  ஏன்  சொல்லலைன்னா இவரோட   அழகைப்பார்த்துட்டே  நடிப்பைகவனிக்க  மறந்துட்டேன் ( ஹீரோயின் கிட்டே  என்னைக்கு  தமிழன்  நடிப்பைப்பார்த்தான்?)



அந்த  பசங்க  2  பேரும் நல்லா பண்ணி  இருக்காங்க 


வில்லன்  நடிப்பு  மிரட்டவில்லை.ஆனாலும்  ஓக்கே 


ஒளிப்பதிவு  , லொக்கெஷன்  எல்லாம்  பார்க்க  அள்ளுது.


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  சந்தோஷமான வாழ்க்கை வேணும்னா எதுவுமே நம்ம கைல இல்லை /கன்ட்ரோல் ல இல்லை என்பதை ஒத்துக்கொள்வதே #ஜு


ஒரு கம்பெனில ஒரே வேலைக்கு அடிக்கடி ஆள் எடுப்பு விளம்பரம் வந்தா யோசிக்கனும் #ஜூ


நாயகி =,நீ சொல்ற ஜோக் எதுக்கும் எனக்கு சிரிப்பே வர்ல

நாயகன் = ஆனா எனக்கு வருதே? (மனசுக்குள்ளே.அரட்டை கேர்ள்னு நினைப்பு)#,ஜூ



4 ஒருத்தரை ஒருத்தர் மதிக்கனும்.அதுதான் பரஸ்பர புரிதல் #,ஜு


5 ஆபத்து வரும்போது உன் திறமையை/மூளையை எப்படி பயன்படுத்தறே? என்பதைப்பொறுத்தே உன் வளர்ச்சி விகிதம் தீர்மானிக்கப்படும் #ஜு

Bryce Dallas Howard 


Bryce Dallas Howard படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஈரோடு கலெக்டர்க்கு.விஎஸ்பி தியேட்டரில் ஜூராசிக் வோர்ல்டு படத்துக்கு பால்கனி டிக்கெட் 300 ரூ க்கு விற்கறாங்க.கவுன்ட்டர் ரேட் 100ரூதான்.


2 124 நிமிடங்கள் # ஜூ


3 பன்னிக்குட்டியை காட்டும்போது எதுக்கு தமிழன் கை தட்றான்? #ஜூ

ஹைபிரிட் டினோசரை செயற்கையா உருவாக்கி ஜூ வில் வெச்சிருக்கும்போது அது எஸ் ஆகுது.அதை எப்டி ஹீரோ பிடிக்கறார்?இதான் கதை #ஜு




5 பூனையா இருந்தே நமக்கு பழக்கமாகிடுச்சு #ஜு .( அதுக்குத்தான் தளபதி புலி யா வர்றாரு)

6 அனக்கோண்டா வில் அருவி யில் விழும் ஆளை பாம்பு பிடிக்கும் சீனை டினோசரா உல்டா பண்ணி ரீமிக்ஸ் # ஜூ





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஜூராசிக்  பார்க்  முதல்  பாகம்  ஏற்படுத்திய  பிரமிப்பை , 2 ,3  ம்  பாகங்கள்  ஏற்படுத்தலை. ஆனா  இந்த  4ம் பாகம்  நல்லா  பண்ணி  இருக்காங்க .திரைக்கதையோட  மக்கள் ஒன்றிடறாங்க

2  ஓப்பனிங்  சீன்ல  டினோசர்  பில்டப்பில்  காக்கா வைக்காட்டுவதும் , பன்னிக்குட்டி  ஓடுவதைக்கூட திகில் பிஜிஎம்மில் கட்டியதும் அப்ளாஸ்  அள்ளும்  காட்சி

3 ஒரு  கூண்டுக்குள்ளே  டினோசர். புது  வாட்ச்மேன்  உள்ளே  மாட்டிக்கறான். ஹீரோ  உள்ளே  போய்  நாய்க்குட்டியைப்பழக்குவது  போல்  பாம்பாட்டி மகுடியை வைத்து  பாம்பை மயக்குவது   போல்   டினோசரை  கண்ட்ரோல்  பண்ணுவதும் பின்  எஸ்  ஆவதும்  கலக்கல்  காட்சி 


4 டினோசர்  க்ளைமாக்சில் சுறாவால் கபளீகரம்  செய்யப்படும்  காட்சி  படமாக்கப்பட்ட  விதம்  திகில்



5  பார்க்கில்  காரில்  மாட்டிய  பசங்க  2  பேரையும்  டினோசர்    தாக்குவதும்  , அவங்க  தப்பிப்பதும்  நாடி  நரம்பை  உறைய வைக்கும்  காட்சி


6  முதல்  பாகத்தைப்போலவே  கலக்கலாக  அமைந்த அட்வென்ச்சர் மிஸ்டரி  பிஜிஎம் அட்டகாசம்





இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   ஓப்பனிங்க்  சீனில்  ஹீரோ  காருக்கு அருகில்  படுத்திருக்கும்போது   டினோசர்  வருது.மனித  வாசம் மோப்பம்  பிடிக்காம  இருக்க  ஹீரோ தன்  மேல் பெட்ரோல்  ஊத்திக்கறார்.ஓக்கே ,ஆனால் அதே போல்  இன்னொரு  காட்சியில் ஹீரோ இன்னொரு  காரில்  அருகே  இருக்கையில் டினோசர்  வரும்போது  அப்டி  ப்பண்ணலையே, ஏன்?  டினோசர்  கண்டுக்கவே  இல்லை.குமார சாமி  ஆவி  உள்ளே  பூந்துடுச்சா?


2  மனிதனை விட  பல மடங்கு  வேகமாக  ஓடும்  டினோசர்  தம்மாத்தூண்டு  பாப்பா  ஹீரோயினை 10  நிமிஷமா  துரத்திட்டு இருக்கு. எப்படி?

3 என்னதான்  ஹைப்ரிட்  புத்திசாலித்தனம்  உள்ள  டினோசரா  இருந்தாலும்  அதன்  உடம்பில்  மாட்டி  வைத்த  கண்காணிப்பு கேமராவைக்கூட  கண்டு  பிடிச்சு  அகற்றுவது  காதில்  பூ

4 அவ்வளவு  ஆபத்தான  பார்க்கில்   பாதுகாப்பான  கண்ணாடிக்கதவுகள் இல்லாம அப்படியா   அசால்ட்டா விட்டு  வெச்சிருப்பாங்க?

5 பார்க்கில்  மாட்டிய 20,000  பேரும்  செல் ஃபோன்  வெச்சிருக்காங்க, அவங்கள்ல  யாருமே  வெளி  உலகத்துக்கு ஏன்  தகவல் தெரிவிக்கலை?அட்லீஸ்ட்  மெசேஜ்  கூடவா  பண்ண மட்டாங்க?







சி  பி  கமெண்ட் = ஜூராசிக் வோர்ல்டு = குழந்தைகளுக்கான படம்.ரேட்டிங் = 2.75 / 5 எதிர்பார்த்த காட்சிகள் அப்படியே வருவது திரைக்கதையில் பலவீனம்






ஈரோடு விஎஸ் பியில்  படம் பார்த்தேன்

டிஸ்கி-டிஸ்கி 1


2  இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2015/06/blog-post_32.html

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2015/06/blog-post_68.html