Showing posts with label JOSEPH ( மலையாளம்) 2018 - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label JOSEPH ( மலையாளம்) 2018 - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Thursday, June 11, 2020

JOSEPH ( மலையாளம்) 2018 - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் )



ஓய்வு பெற்ற  போலீஸ்தான்  ஹீரோ. ஊர்ல ஏதாவது  கொலை கேஸ் நடந்தா போலீஸ் இவரைக்கூப்பிட்டு ஒப்பீனியன் கேட்கும் அளவு செல்வாக்கும் கூரிய மதிநுட்பமும் கொண்டவர். சிக்கலான கேஸ்களை சுலபமாக தீர்த்து வைப்பார்

ஃபிளாஸ்பேக் ல ஹீரோ வுக்கு வேலை கிடைக்கும் முன் பெண் கிடைத்து அவள் காதலும் கிடைக்கிறது. இந்தக்காலத்துல வேலை இருக்கறவனுக்கே  பொண்ணு தர மாட்டேங்கறாங்க , சொந்த வீடு இருக்கா? சொத்து இருக்கா? பேங்க் பேலன்ஸ் இருக்கா?னு 1008 கேள்விகள் கேட்கறாங்க , ஹீரோவுக்கு பொண்ணு தருவாங்களா? தர்ல. வேற பக்கம் மேரேஜ் ஆகிடுது காதலிக்கு . 2 வருசம் கழிச்சு இவருக்கும் மெரேஜ் ஆகிடுது.. ஒரு பொண்ணு . சில வருசங்கள் கழித்து  ஒரு கொலை கேஸ். இவரோட முன்னாள் காதலி கொலை செய்யப்பட்டிருக்கு 

 இவரு மூடு அவுட் ஆகி மனைவியிடம் சரியா பேசாம இருக்காரு . மனைவிக்கு  மேட்டர் தெரியாது. , இவரும் சொல்லலை . கருத்து வேறுபாடு கொண்டு இருவரும் பிரியறாங்க. மனைவி வேற ஒருவரை மேரேஜ் பண்ணிக்குது. இவரு மகளோட இருக்காரு  .மகளுக்கு  மூளைல கட்டினு  ஹாஸ்பிடல்ல சேர்க்கறாங்க. அங்கே இறந்திடுது. 

 கொஞ்ச நாட்கள் கழித்து மனைவி சாலை விபத்தில் இறக்குது.

 முன்னாள் காதலி , முன்னாள் மனைவி , மகள்  மூன்று பேர் இறப்பிலும் ஒரு மர்மம் இருக்கறதா  ஹீரோ நினைக்கறாரு அதை துப்பு துலக்க அவர் பண்ணும் சாகசங்கள் தான் கதை 

ஜோஜூ ஜார்ஜ் தான் ஹீரோ கம் ப்ரொடியூசர் . இவருடைய பாந்தமான நடிப்பு தான் படத்தின் முதுகெலும்பு  என்றால் திரைக்கதை தான் உயிர் நாடி. படத்தில்  4  மரண காட்சிகள் வருவதால் அதை ஒட்டி வரும் சோகங்கள் கொஞ்சம் உண்டு . செண்ட்டிமெண்ட் காட்சிகள் அதிகம். பொதுவா த்ரில்லர் மூவிகளில்  சோகம் அதிகம்  இருக்காது , இது விதி விலக்கு , ஒரு வேளை பெண்களைக்கவரும் த்ரில்லர் எடுக்கலாம்னு நினைச்சிருக்கலாம்

ஹீரோவோட ஓல்டு கெட்டப் நட்புக்காக சரத் குமார் கெட்டப்பை நினைவுபடுத்துது . அவர் துப்பு துலக்கும்  காட்சிகளில் ஹவுஸ்ஃபுல்  இரா பார்த்திபன்  மிடுக்கு . க்ளைமாக்சில் ரமணா விஜய்காந்த்தின் துணிகரம். ஓப்பனிங் சீன்களில்  மசாலாப்படங்களில் ஹீரோ வுக்கு ஃபைட் சீன் வைப்பது போல் த்ரில்லர் படங்களில் ஒரு கேசை எப்படி டீல் பண்றார் என வைப்பது புத்திசாலித்தனமான  ஐடியா 

 காதலியாக வரும் மாதுரி அசல் மலையாளப்பெண்ணின் அற்புத அழகு . வரும் காட்சிகள் குறைவு என்றாலும் வந்த வரை கண்ணுக்கு நிறைவு


 மனைவியாக வருபவர் நடிப்பு நல்லாருக்கு என்றாலும் அவரது கேரக்டர் ஸ்கெட்சில் இயக்குநர் சறுக்கி விட்டார் . அது நடிகை தவறல்ல 

ஒளிப்பதிவு , இசை அருமை என்றாலும் எடிட்டிங்  சுமார் ரகமே . பக்காவான எடிட்டிங் ஆக இருண்டிருந்தால் இன்னொரு ஜிகிர்தண்டா இது ( ஆனா அதை விட இது கமர்ஷியலா செம ஹிட் என்பது வேற விஷயம் )

 ,ஃபேமிலியுடன் பார்க்கத்தகுந்த 
சோக காட்சிகள் கொண்ட இந்த க்ரைம் த்ரில்லர்  அமேஜான் பிரைமில் கிடைக்குது



 சபாஷ் டைரக்டர் 

1   ஓப்பனிங்க் சீனில் வரும்  கொலைக்கேஸ் துப்பறியும் காட்சி மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் அபாரம் . ஸ்டெப் பை ஸ்டெப் ஹீரோ அதை விளக்குவதும் நல்லாருக்கு 

2  காதலியாக வரும் நாயகியின் கண்ணியமான அழகு முகம் 


3  சாலை விபத்து உருவாக்கப்படுவதும் அதைத்தொடர்ந்து காப்பாற வரும் கார் காரரின் நாடகமும் குறித்து ஹீரோ விளக்கும்போது அரங்கம் கை தட்டலால் அதிர்கிறது 

4   க்ளைமாக்க்சில் வரும் ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட காட்சிகள்  , வில்லனை முறியடிக்க ஹீரோ போடும் மதி நுட்பமான திட்டங்கள் கிளாசிக்

5  ஆளில்லா காட்டில் விபத்து நடந்தால் அது கொலையா? விபத்தா? என ச்ந்தேகம் வரும் அதனால் ஆள் பார்க்கும்போது விபத்து ஏற்படுத்துனா சந்தேகம் வராது என ஹீரோ வில்லன் ஐடியாவை சொல்வது அபாரம்

6 வில்லன் ஒவ்வொரு விபத்து ஏற்படுத்த ஒரு செக்ண்ட் ஹேண்ட் வண்டியை விலைக்கு வாங்குவதும் காரியம் முடிந்ததும் அந்த சிம்மை தூக்கிக்கடாசி விடுவதையும்  ஹீரோ கண்டு பிடிப்பது நல்ல விறு விறுப்பு

 நச் டயலாக்ஸ் 


1  தப்பு செஞ்சவங்க உடல் நடுக்கத்தை மறைக்க கை கட்டி நிற்கும்போது அவங்க பாடி லேங்க்வேஜ் காட்டிக்குடுத்துடும் 

2 நமக்குத்தெரிஞ்ச வேலையை நாம என்னைக்கும் மறக்க மாட்டோம், மறக்கவும் கூடாது 


லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில சொதப்பலகள்


1  ஹீரோ மனைவி கிட்டே சரியா பேசலை , முன்னாள் காதலி மரணம் காரணமா என்பது ஓக்கே , ஆனா மனைவி அதுக்காக திடீர்னு  வீட்டை விட்டுக்கிளம்புவதும் மண முறிவு ஏற்படுவதும் நம்ப முடியல. இன்னும் அழுத்தமாக இவங்க பிரிவு சொல்லப்பட்டிருக்க வேண்டும் 

2  கணவனுக்கும் , மனைவிக்கும் திடீர் சண்டை எதும் இல்லை . பின் ஏன் ராத்திரி நேரத்தில் மனைவி கோவிச்ட்டு ஆட்டோவில் கிளம்பனும்? விடிஞ்சு காலைல போலாமே? 

3   மகளுடன்  இருக்கும் கணவன்  தனிமையில் ஒத்தையா இருக்கும்போது மகள் , கணவன் இருவரையும் பிரிந்து வந்த மனைவி வேற ஒருவரை திருமணம் செய்வது ஏத்துக்க முடியலை . ஏற்கனவே எந்த தொடர்பும் இல்லாத நல்ல பெண் எப்படி மகளை  விட்டுட்டு இன்னொரு மேரேஜ் பண்ண நினைக்குது ?

4  விபத்தில் படு காயம் அடைந்தவரை காரில் ஏற்றிச்செல்லும் வில்லன் கும்பல் போகும் வழியில் பின் சீட்டில் இருப்பவரை சுத்தியலால் அடிபப்து  தேவை இல்லாதது . அது ரிப்போர்ட்டில் காட்டிக்கொடுக்காதா? 

5  பொதுவாக பிபி , சுகர் பேஷண்ட்ஸ் தங்கள் மாத்திரை மருந்துகளை டைனிங் டேபிள் , அல்லது கிச்சன் ரூம்,  ஹால் இப்டிதான் வைப்பாங்க . ஹீரோ கொலையான தன் மனைவி பீரோ செக் பண்ணும்போது ஹேண்ட் பேக்கில் மாத்திரை இருப்பதை பார்ப்பது நம்ப முடியல . நெக்லசை தான் அப்டி பூட்டி வைப்பாங்க 

6  ஹீரோ சர்ச் ல இருக்கும்போது ஒரு முக்கியமான கேஸ் விஷயமா கால் பண்றாங்க, ஹீரோ கட் பண்றாரு. அட்லீஸ்ட் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே? 


7  தமிழகம் , கேரளா இரு மாநிலங்களிலுமே வீடு கூட்ட ஒரு சீமாறு , வாசல் கூட்ட ஒரு விளக்குமாறு  ( ஈர்க்குமாறு ) உண்டு , ஆனா ஒரு சீனில்  வீட்டுக்குள்ளே  உபயோகப்படுத்தும்  விளக்கு மாறு வாசல் கூட்ட பயன்படுத்துவது . ஷூட்டி ந்க் டைம் ல அதான் கிடைச்சது போல 


 சி.பி கமெண்ட் = முன் பாதி ஸ்லோ , பின் பாதி விறு விறுப்பு . செண்ட்டிமெண்ட்ஸ் சீன்கள் கொண்ட ஒரு க்ரைம் த்ரில்லர் , ரேட்டிங்   3/ 5 
Directed by M. Padmakumar
Produced by Joju George
Written by Shahi Kabir
Starring Joju George, Dileesh Pothan, Athmiya Rajan, Malavika Menon, Madhuri Braganza
Music by Ranjin Raj
Cinematography Manesh Madhavan
Edited by Kiran Das
Release date 16 November 2018
Running time 138 minutes
Country India
Language Malayalam