Showing posts with label JOKE. Show all posts
Showing posts with label JOKE. Show all posts

Tuesday, February 04, 2014

பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்!

1.நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க போடும் சுடியின் துப்பட்டா 2 1/4 மீட்டர் நீளம் இருக்கும்.இப்போ ஜஸ்ட் 1 1/2 மீ தான் # உத்தேசமா


======================


2எதுவும் எழுதத்தோணலைன்னாக்கூட தமிழன் சும்மா இருக்கமாட்டான்.என்ன ட்வீட்டுவது?னு தெரியலையே? அப்டி னு ட்வீட்டி ஒரு ட்வீட் தேத்திடுவான்



=======================



3  சி சென்ட்டரான சென்னிமலை ல ஜில்லா 15 வது நாளா இன்னும் ஓடுது.தைப்பூசத்தேர்த்திருவிழாக்கூட்டம் தான் காரணம்னு சொல்லி சமாளிப்போம் ;-))


=========================


4 வீரம்னா என்ன தெரியுமா? சொந்தப்பையனா இருந்தாலும் சரி , பதவிக்கு ஆபத்து விளைவிப்பான்னு தெரிஞ்சா கட்சியை விட்டு கடாசுவதே!



========================



5 சிவனும் சக்தியும் தனியா பிரிஞ்சா மாஸ்டா



========================


6 நான் சின்ன வயசில் இருந்தே ஜெ வின் நடிப்புக்கு ரசிகன் - அழகிரி அதிரடி # சும்மா


========================


7  கலைஞரோட ராஜ தந்திரத்தைப்புரிஞ்சிக்கிட்டவன் இந்த ஜில்லாவுலயே கிடையாது ,அவர் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்


==========================



8 அழகிரி இனி அழுகைகிரி



=====================



9 அஞ்சா நெஞ்சன் ஆம் ஆத்மியில் சேருவாரா? புரட்சித்தலைவி பக்கம் போவாரா?



===========================



10 இளைய தளபதி க்கு நேரம் எப்படியோ? ஆனா நம்ம தளபதிக்கு நேரம் கை கூடி வந்திருக்கு #,அண்ணன் வெளியே தம்பி கோட்டைக்கு உள்ளே



======================



11 முதுகுல குத்துனது பெத்த அப்பாவா இருந்தா அவமானத்தை வெளில சொல்லக்கூடாது.



========================


12 தமிழ் நாட்டின் நன்மைக்காக மகனையே கட்சியை விட்டுத்துரத்திய மகானே! அப்டினு யாரும் இன்னும் பேனர் ரெடி பண்ணலையா?



======================



13   அழகிரி = காலிசோடா .ஸ்டாலின் = நேர் எதிர்




======================



14 மதுரையை விரட்டிய சுந்தர திராவிடர்



======================



15  மு க வீடு 2 பட்டா ரெட்டை இலைக்கு கொண்டாட்டம்



=====================


16 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.ஆனால் அவர் வைத்தது போல் ஒரு சூன்யம் இல்லை # சூது கவ்வும்




========================



17 தமிழர்களே தமிழர்களே கேப்டனைத்தூக்கி எறிந்து யார் பேசினாலும் கட்டுமரமாய் இருக்கமாட்டேன்.கட்டவிழ்த்து விட்டு விடுவேன்



=======================



18 தங்க மீன் கள் மாதிரி நல்ல படத்தை பாருங்கன்னா ஒரு பய கேட்பதில்லை.பாக்காதீங்கன்னா ஆளாளுக்கு ஏன்? னு கேட்கறாங்க #,தமிழேண்டா



===========================



19  பெரிய நெல்லிக்காயின் புளிப்பு மாதிரி நம் பிரிவுகள்! உன் நினைவுகள் நெல்லி விள்ளல் அள்ளலுக்குப்பின் குடிக்கும் நீர் போல் தித்திப்பானவை



===========================


20 பஸ் ரயில் பயணங்களில் உன் தேர்வு ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கும்! என் தேர்வு உன் மடி ஓரமாக இருக்கும் ,இறுக்கும், கிறுகிறுக்கும்



==================================


Wednesday, December 29, 2010

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/10/pen1.jpg
கடந்த 5 மாதங்களாக நான் பார்வையிட்ட பதிவுகளை ,பதிவர்களின் திறமையை பார்க்கும்போது ,பத்திரிக்கைத்துறைகளில் எழுதி கலக்க சரியான ஆட்கள் நம் பதிவர்கள்தான் என எண்ணத்தோன்றுகிறது.எனது 18  வருட பத்திரிக்கை உலக அனுபவங்களை வைத்து பதிவர்களுக்கு உபயோகமாக ஒரு பதிவு போட்டால் என்ன என தோன்றியது.ஜன ரஞ்சகப்பத்திரிக்கைகளில் எப்படி எழுதுவது என்பதைப்பற்றி ஆழமான பார்வையாக இது இருக்கும்.


இப்போது வெளி வரும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் தின மலர் வாரமலர் சன்மானம் தருவதிலும்,படைப்புகளை வெளியிட்டு வாசகர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது.பிறகு ஆனந்த விகடன்,குமுதம்,குங்குமம் என வரிசை நீள்கிறது.வாரம் ஒரு பத்திரிக்கை பற்றி விளக்கமாக பார்ப்போம்.



ஈரோடு,தஞ்சை,சேலம்,திருச்சி உட்பட்ட ஏரியாக்களுக்கு தனி வாரமலர் புக் வருகிறது.அதற்கான முகவரி தினமலர் வாரமலர். த பெ எண் 7225,சென்னை 600008. அது போக கோவை,திருப்பூர்,சென்னை உட்பட பெரும்பாலான ஊர்களில் வரும் வாரமலர் புக் அட்ரஸ் தினமலர் வாரமலர். த பெ எண் 517,சென்னை 600008.



ஜோக் வெளியிட்டு சன்மானம் தருவதில் வாரமலர் நெமப்ர் ஒன் இடத்தில் உள்ளது. ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு, அது போக ஜாக்பாட் ஜோக் ஒன்றுக்கு வாரம் ரூ 1000 பரிசு.வேறு எந்த புக்கும் இவ்வளவு பரிசு தருவதில்லை.வாரம் 6 ஜோக்ஸ் பிரசுரம் ஆகிறது.ஆனால் எந்த அளவுக்கு பணம் அதிகமா தோணுதோ அந்த அளவு போட்டியும் அதிகம். தினம் 5000 ஜோக்குகள் வாரமலர் இதழ் அட்ரஸுக்கு சராசரியாக போகிறது. 8 கட்டமாக தேர்வு நடக்கிறது.அரசியல்,டாக்டர்,ஊழல் சம்பந்தப்பட்ட ஜோக்குகள் வரவேற்கப்படுகின்றன.வேறு பத்திரிக்கைகளில் வந்த ஜோக் அல்லது உல்டா ஜோக் அனுப்புவர்கள் வக்கீல் நோட்டீஸ் பெறுவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.படைப்புகளை (ஜோக்ஸ்) போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்ப வேண்டும்.ஒரு கார்டில் ஒரு ஜோக் மட்டும் எழுத வேண்டும்.படைப்பு அனுப்பி 2 மாதம் கழித்துத்தான் பிரசுரம் ஆகும்.பொறுமை மிக அவசியம்.

http://graphics8.nytimes.com/images/2007/05/30/business/30pen.600.jpg
கவிதை - இதற்கு ரூ 1250 பரிசு. 20 வரிகளில் இருக்க வேண்டும், காதல் கவிதைகள்,சமூக விழிப்புணர்வுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன,ஏ 4 ஷீட்டில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்.அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.தினமும் சராசரியாக 400 கவிதைகள் வருகின்றன.


சிறுகதை - 4 பக்கங்களில் (ஏ 4 ஷீட்) எழுத வேண்டும். சன்மானம் ரூ 1500. நகைச்சுவை,சோகம் செண்ட்டிமெண்ட் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்குப்போட்டி குறைவு. தினமும் சராசரி 200 கதைகள் வருகின்றன. வாரம் ஒரு கதை பிரசுரம் ஆகிறது.


இது உங்கள் இடம் - நமது அனுபவங்கள், நாம் சந்தித்த மனிதர்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் எது வேணாலும் எழுதி அனுப்பலாம்.

முதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1500 பரிசும் ,2வது பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1000 பிறகு ஆறுதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 500 பரிசு பெறுகிறது.


இது போக அர்ச்சனை என்ற பெயரில் வாசகர் கடிதம் ,கேள்வி பதில் அதற்கும் பரிசு உண்டு. ரூ 250, ரூ 500 என பரிசு உண்டு.

கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால பொண்ணு பாக்கறது மாதிரி எந்த பத்திரிக்கைக்கு எழுத விரும்பறமோ அந்த புக்க்கை வாங்கி அல்லது லைப்ரரில போய் ஒரு கிளான்ஸ் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்க்கும்.

அடுத்த வாரத்தில் ஆனந்த விகடன், குமுதம் பற்றி எழுதறேன்.

டிஸ்கி - இந்தப்பதிவு  மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா