ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மிலிட்ரி மேன். ஆரம்பம் படத்துல வர்ற மாதிரி ஒரு ஊழல் நடக்குது . ஆயுதங்களை சப்ளை செய்யும் டீலர் ஆன வில்லன் டுபாக்கூர் துப்பாக்கிகளை சப்ளை பண்றான். ராணுவ வீரர்கள் ஒரு ஆபரேஷன் ; அட்டாக் ல ஈடுபடும்போது துப்பாக்கி செயல்படாம 30 பேர் இறக்கிறார்கள் , இந்த உண்மையை நாயகன் உலகத்துக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறான். கோர்ட்டில் கேஸ் நடக்கிற்து . வில்லன் ஆன அந்த ஆயுத சப்ளை டீலருக்கு தடை விதிக்கப்படுகிறது. அவன் கடுப்பாகி நாயகனைப்பழி வாங்க பொய்யான குற்றச்சாட்டில் நாயகனை படு காயபப்டுத்தி அவன் மனைவியை ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறான்
20 வருடங்கள் கழித்து நாயகனின் மகன் ஓப்பனிங் சீன்லயே ஒரு ரயிலைக்கடத்தி பிணையக்கைதிகளாக 350 பேரைப்பிடித்து வைத்துக்கொண்டு 40,000 கோடி ரூபாய் பணம் கேட்கிறான். அந்த ரயிலில் மாட்டியது வில்லனின் மகளும் ஒருவர். வில்லன் மகளுக்காக ஒரே ட்ரான்ஸ்செக்சனில் அந்தப்பணத்தை நாயகன் -ன் மகன் அக்கவுண்ட்டுக்கு மாற்ற நாயகனின் மகன் கத்தி படத்தில் வருவது போல விவசாயிகள் கடனை ஒரே டைமில் அடைக்கிறான்
ஒரு பிரபலமான அரசியல்வாதியை பொதுமேடைல அவர் பேசிட்டு இருக்கும்போதே ஷூட் பண்ணி காயப்படுத்தி ஒரு ஜி ஹெச்ல அட்மிட் பண்ணி அங்கே இருக்கும் வசதிக்குறைவை சுட்டிக்காட்டி அந்த மினிஸ்டரைக்காப்பாத்தனும்னா இந்தியாவில் இருக்கும் அனைத்து ஜிஹெச்லயும் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்னு நிபந்தனை விதிக்கிறான் நாயகனின் மகன்
இந்த சாத்தியமே இல்லாத காரியங்களுக்கு பேச்சு வார்த்தை நடத்த போலீஸ் ஆஃபீசர் ஆன நாயகி வருகிறார். நாயகனின் மகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடக்கிறது
இறுதியில் வில்லன் ஆன ஆயுத டீலர் , நாயகனின் மகனால் , நாயகனால் எப்படி வீழ்த்தப்படுகிறான் என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக ஷாரூக்கான் அசத்தி இருக்கிறார். இன்னமும் இளமை மாறாம துறுதுறுப்புடன் ஆக்சன் , டூயட் என கலக்கி இருக்கிறார்
நாயகி ஆக 2 கோடி லேடி நயன் தாரா . கச்சிதம். பில்லா படத்துக்குப்பின் இவரை மாடர்ன் டிரசில் ரசிக்க முடிகிறது
வில்லன் ஆக விஜய் சேதுபதி ஓக்கே ரகம் தான் . பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை
பிரியாமணி , சான்யா மல்ஹோத்ரா போன்றவர்களும் தலை காட்டுகிறார்கள்
170 நிமிடங்கள் படம் ஓடுகிறது . இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்..
அனிரூத் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம், பிஜிஎம் நல்லாருக்கு .
ஜிகே விஷ்ணு வின் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமான காட்சிகள் கண் முன் விரிகின்றன
சபாஷ் டைரக்டர் (அட்லீ)
1 ஷங்கர் படங்கள், விஜய் படங்கள் என கலந்து கட்டி காட்சிகளை சுட்டாலும் பாலிவுட் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் பிரம்மாண்டமான ஆக்சன் மசாலாப்படத்தை தந்த விதம் அருமை
2 நாயகன் - நாயகி இருவரையும் பயன்படுத்திய விதம் அருமை ஹீரோ ஓப்பனிங் சீன் , டபுள் ரோல் , இண்டர்வெல் பிளாக் எல்லாமே கனகச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 விவசாயிங்க வாங்கும் டிராக்டர் லோனுக்கு வட்டி விகிதம் 13% , ஆனா பணக்காரங்க வாங்கும் பென்ஸ் காருக்கு வட்டி விகிதம் 6 %
2 ஒரு பிஸ்னெஸ்மேன் க்கு பிரச்சனைன்னா அரசியல்வாதிங்க அவனுக்கு பணம் தர தயாரா இருக்கறப்ப அரசியல்வாதிகளுக்கு ஒரு பிரச்சனைன்னா அந்த பிஸ்னெஸ்மேன் பணம் தர மாட்டானா?
3 என்னை யாராவது கோபப்படுத்துனா டாக்டர் என்னை ஒரு மாத்திரை சாப்பிடச்சொல்லி இருக்கார். அந்த கறுப்பு மாத்திரையைக்கொடு. அதே என்னைக்கோபப்படுத்துனவங்களுக்கு சிவப்பு மாத்திரை கொடுக்க சொல்லி இருக்காரு ., அஞ்சு நிமிசத்துல வேலை முடிஞ்சிடும்
4 ஜெயில் என்பது செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுக்கும் இடம் அல்ல, இனி தப்பே செய்யாம வாழ வழி சொல்லித்தரும் இடம்
5 மற்ற துறைகளில் தப்பு நடந்தா அது ஊழல் , மருத்துவத்துறைல தப்பு பண்ணினா அது கொலை
6 இவ்ளோ பெரிய ஹைஜாக் பண்ணிட்டு ஊபர் ல போனா பிடிச்சிட மாட்டிங்க? அதனால ஜாபர் ( ஹெலிகாப்டர்) வேணும்
7 இந்த ஜெயிலைச்சுத்தி என் ஆளுங்க இருக்காங்க
தம்பி , இந்த ஜெயிலுகுள்ளே என் ஆளுங்க தான் ஆள்றாங்க
8 நான் தானே உன்னை சுட்டேன்?
ஆமா , ஆனா அப்போ அவரு சாகற மூட்ல இல்லை
டேய் , நீ மூடு
9 ஒண்ணு , ரெண்டுன்னா பரவால்லை , அஞ்சு தடவை சுட்டேனெடா? ( நீங்களே உங்களை கலாய்ச்சுக்கிட்டா அப்றம் நாங்க என்ன செய்ய ?)
10 அவங்க கேட்கற முறை தப்பா இருக்கலாம், ஆனா கேட்கும் விஷயம் நியாயமானது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஓப்பனிங் சீன்ல ஹீரோ உடம்பெல்லாம் பத்துப்போட்டு டேமேஜ் ஆன பாடியோட கிடைல படுத்துக்கிடக்காரு. 100 பேருக்கும் மேற்பட்ட ஒரு க்ரூப் கைல மிஷின் கன் , வாள் , வேல் உடன் வர்றாங்க . எல்லாரையும் தனி ஆளா இவரு வீழ்த்தறாரு . ரேஷன் கடைல வரிசைல நின்னு அரிசி வாங்கற மாதிரி அந்த அடியாளுங்க ஒவ்வொருத்தனாதான் வந்து அடி வாங்குவானுங்களா? 10 பேரு 10 பேரு கொண்ட க்ரூப்பா வர மாட்டானுங்களா?
2 எங்கேயோ சுரங்கப்பாதைல ரயில் நிக்குது . ஒரே இருட்டா இருக்கு . பேக்கு ஹீரோ கூலிங் கிளாஸ் போட்டுட்டு ரயிலுக்குள்ளே சுத்திட்டு இருக்காரு . பகல்லியே பசுமாடு தெரியதாம் , ராத்திரில கூலிங் கிளாஸ் போட்ட கண்ணுக்கு எருமை மாடு எப்படித்தெரியும் மொமெண்ட் ?
3 ரூ 40,000 கோடி ரூபாய் பணயப்பணம் தரும் அளவுக்கு வசதியாக இருக்கும் மல்ட்டி மில்லியன்ர் பொண்ணு ஏன் சாதா ரயிலில் பிரயாணம் செய்யுது ?
4 லோன் ட்யூ கட்டலைன்னா மூன்று முறை எச்சரிக்கை செய்வாங்க . அடுத்து செவன் டேஸ் நோட்டீஸ் அனுப்புவாங்க . அதுக்குப்பின் தான் வாகனம் சீஸ் செய்யப்படும். இதை எல்லாம் ஃபாலோ பண்ண மாதிரி தெரியல
5 டிராக்டரை சீஸ் செய்த அதிகாரி மீண்டும் வந்து அது அசலுக்கே சரியாப்போச்சு , வட்டிக்கு என்ன செய்ய?னு கேட்கறாரு /. அப்டி எல்லாம் ரூல்சே இல்லை . சீஸ் செய்ததுடன் அந்த வ்ண்டி என்ன விலைக்குப்போகுதோ அதை ஏலத்தில் விட்டுட்டு மீதி தொகையை நட்டக்கணக்கில் தான் எழுதனும்
6 எம் ஜி ஆர் , நம்பியார் காலத்துல ஒரு மருவை வெச்சு அடையாளம் தெரியாம தவிக்கற மாதிரி காட்சி வைச்சாங்க . நாயகி தன் வருங்காலக்கணவன் தான் ஹைஜாக் பார்ட்டி என்பது தெரியாமல் ஃபைட் போடறார். காரணம் அவரு மாஸ்க் போட்டிருக்காராம். கண்கள் , உதடுகள் பார்த்தா தெரியாதா?
7 நாயகன் ஜெயிலர் ஆவது ஓக்கே , ஆனால் அம்மா இருந்த /இறந்த அதே ஜெயிலுக்கு ஜெயிலர் ஆக வந்தது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - போர் அடிக்காத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வ்ழக்கம் போல நமக்குப்பார்த்துபழக்கபட்ட டெம்ப்ளேட் ஃபார்முலா மாஸ் மசாலா ஆக்சன் மூவி . பார்க்கலாம். ரேட்டிங் 2.5 / 5
Jawan | |
---|---|
Directed by | Atlee |
Screenplay by | Atlee S. Ramanagirivasan |
Dialogues by | Sumit Arora |
Story by | Atlee |
Produced by | Gauri Khan Gaurav Verma |
Starring | Shah Rukh Khan Nayanthara Vijay Sethupathi |
Cinematography | G. K. Vishnu |
Edited by | Ruben |
Music by | Anirudh Ravichander |
Production company | |
Distributed by | see below |
Release date |
|
Running time | 169 minutes (Theatrical release)[1] 170 minutes (Extended version)[2] |
Country | India |
Language | Hindi |
Budget | ₹300 crore (US$38 million)[3] |
Box office | est. ₹1,147.96 crore (US$140 million)[4] |