Showing posts with label JAMA(2024) -ஜமா -தமிழ் - சினிமா விமர்சனம் (உலக சினிமா ). Show all posts
Showing posts with label JAMA(2024) -ஜமா -தமிழ் - சினிமா விமர்சனம் (உலக சினிமா ). Show all posts

Tuesday, August 20, 2024

JAMA(2024) -ஜமா -தமிழ் - சினிமா விமர்சனம் (உலக சினிமா )

             

        ஒரு கமல் ஹாசனோ , சீயான்  விக்ரமோ  நடிக்க வேண்டிய ஒரு பிரமாதமான கேரக்டரை  ஒரு அறிமுக நடிகர்  துணிச்சலாக ஏற்று நடித்து அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டி இருக்கிறார் என்பது முதல் அதிசயம் . அவரே தான் படத்தின் இயக்குனர் அதுவும்  அவர் இயக்கும் முதல் படம் என்பது அடுத்த அதிசயம்  


கதாநாயகன் + இயக்குனர்  என்ற இரு அந்தஸ்தில் தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட முதல் நபர் கே பாக்யராஜ் .அவரைத்தொடர்ந்து  டி ராஜேந்தர் , ஆர் பார்த்திபன் , ஆர் பாண்டியராஜன் , சேரன் , கரு பழனியப்பன், தங்கர் பச்சான் ,அமீர்   என  நீளும் பட்டியலில் புதிய வரவாக  பாரி இளவழகன் . பிரமாதமான திரைக்கதை + அட்டகாசமான நடிப்பு என  கலக்கி இருக்கும் இந்தப்படத்தைப்பற்றிப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

தெருக்கூத்து நடத்துபவர்கள்  வைத்திருக்கும் குழு வுக்கு ஜமா  என்று பெயர் . வில்லன் நடத்தும் ஜமாவில்  நாயகன் பெண் வேடம் இட்டு நடிப்பவர் .இதனால் அவர் உடல் மொழியில் , பேச்சில் இயல்பாக ஒரு பெண் தன்மை வந்து விடுகிறது . ஊர் மக்கள்  இதை வைத்து  நாயகனை  கிண்டல் செய்கிறார்கள் .நாயகனுக்கு யாரும் பெண்  தர மறுக்கிறார்கள் . இதனால் கோபம் கொள்ளும் நாயகனின் அம்மா இனி பெண் வேடம் இட்டு நடிக்க வேண்டாம் என சொல்ல நாயகன் வில்லனிடம் போய் இனி ஆண்  வேடம் இட்டு நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்கிறான் . ஆனால்  வில்லன் மறுக்கவே நாயகன் தனியாக ஜமா ஒன்றைத்தொடங்க  திட்டம்  இடுகிறான் 

வில்லனின் மகளும்  , நாயகனும்  சின்ன வயதில் இருந்தே  காதலர்கள் . இது வில்லனுக்குப்பிடிக்கவில்லை . ஆனால் நாயகி தன காதலில் உறுதியாக இருக்கிறாள் . தன்னிடம் இருக்கும் பெண் தன்மையால்   நாயகிக்கு அவப்பெயர் வரக்கூடாது என நாயகன் நினைக்கிறான் .அதனால் நாயகியை விட்டு விலகியே இருக்கிறான் 

பிளாஸ்பேக்கில்   ,  நாயகனின் அப்பாதான் ஜமாவின் தலைவர் என்பதும் , அவரிடமிருந்து வஞ்சகமாக ஜமாவைக்கைப்பற்றியவன் தான்  வில்லன் என்பதும் நமக்குத்தெரிய வருகிறது 

நாயகனின்  ஜமா கனவும் , ஆண்  வேடம் இட்டு நடிக்கும் லட்சியமும்  நிறைவேறியதா? நாயகன் - நாயகி காதல் என்ன ஆனது ? என்பது மீதி திரைக்கதை 

நாயகன் ஆக அதகளம் செய்திருக்கிறார்   பாரி இளவழகன் .குறிப்பாக  பெண்  தன்மை மிளிரும் உடல் மொழியில் அசத்தி இருக்கிறார்  . தமிழ் சினிமாவில் இது போல் இதற்கு முன் செய்தவர்கள் அவ்வை சண்முகி கமல் , ஆணழகன் பிரசாந்த் ( காமெடி டிராக்குகளில்  விவேக் ,சந்தானம் ) பாஞ்சாலி  வேடத்தில் இவர் நடிப்பு அருமை எனில்   குந்தி தேவி வேடத்தில் இவர் நடிப்பு அட்ட காசம் .க்ளைமாக்சில் இவரது கனவு வேடம் ஆன அர்ஜுன் மகாராஜா  வேடத்தில் ஆர்ப்பரிக்கும் நடிப்பு 

வில்லன் ஆக சேத்தன் செமயான ரோல் . அசத்தி  இருக்கிறார் . நய வஞ்சகம் , ஆணவம் , கெத்து , வெறுப்பு என இவர் காட்டும் முக பாவனைகள் செம 

நாயகி ஆக  அம்மு அபிராமி .வரும் காட்சிகள் குறைவு , ஆனால் வந்தவரை அவர் நடிப்பு நிறைவு 

நாயகனின் அம்மாவாக  மணிமேகலை உணர்வுப்பூர்வமான நடிப்பு , அப்பாவாக கிருஷ்ண தயாள் அடக்கி வாசித்த நடிப்பு .அப்பா , மகன்  இருவருக்கும் துணை ஆக வரும்  பூனை  கேரக்டரில்  வசந்த் மாரிமுத்து  களை  கட்டும் நடிப்பு 

இந்தமாதிரி படங்களுக்கு இசை அமைப்பது இளையராஜாவுக்கு  அல்வா சாப்பிடுவது போல .புகுந்து விளையாடி இருக்கிறார் நீ இருக்கும் உசரத்துக்கு நானும் வருவது எப்போ  என்ற அட்டகாசமான மெலோடி  கலக்கல் ரகம் . பின்னணி இசை வழக்கம் போல் ராஜாங்கம் .க்ளைமாக்ஸ் காட்சியில் பின்னி இருக்கிறார் பிஜிஎம்மில் 

கோபால கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அழகு. கூ த்து நடக்கும் காட்சிகளை  படம் பிடித்த விதம் உயிரோட்டம் . எடிட்டிங்க் பார்த்தா . படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது.

நேர்த்தியாக திரைக்கதை  எழு தி   இயக்கி இருப்பவர்  பாரி இளவழகன்

சபாஷ்  டைரக்டர்

1  நாயகனுக்கும் , நாயகிக்கும் ஆல்ரெடி காதல் இருந்திருக்கிறது என்ற டிவிஸ்ட் வெளியாகும் இடம் , வெளியான விதம் இரண்டும் அருமை 

2  பெண் தன்மை மிளிர  நாயகன் நடந்து கொள்ளும் இடங்கள் , பாஞ்சாலி ஆக நடிக்கும்போது  ஒரு விதமான நடிப்பு , குந்தி ஆக நடிக்கும்போது சோக நடிப்பு , அர்ஜுன் மகாராஜாவாக நடிக்கும்போது கம்பீர நடிப்பு என  மாறுபட்ட பரிமாணங்களில்  நாயகனின் நடிப்புத்திறன் வெளியான விதம் . சில கோணங்களில் நாயகன் சிலம்பாட்டம் சிம்பு போல முக சாயல் கொண்டு இருப்பது பிளஸ் 

3 டைட்டில் போடும்போதே டைட்டில் டிசைனில்  நாயகன்  கேரக்டரை உணர்த்திய விதம் .முதல் காட்சியிலேயே   கதைக்குள் போன விதம் 

4   வாய்ப்பிருந்தும்  வன்முறைக்காட்சிகள்  , ரத்தம் , கொலை , சண்டை போன்றவற்றை தவிர்த்த விதம் 

5  ஆக்சன் மசாலா  படங்களில் வருவது போல வில்லனைப்பழி வாங்காமல்   தன்  நடிப்பால்  தவறை உணரச்செய்த விதம் 



ரசித்த  வசனங்கள் 


1  நமக்கு எதிரி அவனுக்கும்  எதிரியா இருக்கணும்னு அவசியம் இல்லை 


2  என் கோபம் என்  மகனுக்கு வராம நீ தான் பார்த்துக்கணும் 


3  ஒரு சில தெல்லாம் நம்ம வாழ்க்கைல லேட்டா வந்தாலும்  அதுவே முக்கியம் ஆகிடும் 


4  அடுத்து நாம தலைவன் ஆகலாம்னு பார்த்தா ஆளாளுக்கு போட்டிக்கு வர்றானுங்களே  ?


5   யார் மனசும் நோகாம யார் பேசறாங்களோ , நடந்துக்கறாங்களோ அவன் தான் ஆம்பளை 


6 நமக்குப்பிடிச்சவங்க  நம்மை தட்டிக்கொடுப்பாங்க . நம்மைப்பிடிக்காதவங்க  நம்மை அமுக்கப்பார்ப்பாங்க 


7  நமக்கு  திறமை இருக்கா ?இல்லையா?ன்னு நாம தான்  சொல்லணும் , மத்தவங்க சொல்ல மாட்டாங்க 


8 கல்யாணம் தான் இப்ப ரொம்பமுக்கியமா? 


 அதை விட வேற என்ன முக்கியம் ? 


9  கல்யாணம் பண்ணிக்கனு என்னை  ஒவுத்திரியம் (தொந்தரவு) பண்ணவே  எனக்கு கல்யாணம் னு பேரு  வெச்சுட்டாங்கபோல 


10  என்னை விட்டுப்போன்னு நீயே சொன்னாலும் உன்னை விட்டு எப்பவும் நான் போகமாட்டேன் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகனுக்கு பெண்பார்க்க பல வீடுகளுக்குப்போவதாக ஓப்பனிங்கில் சீன் வருகின்றன .ஆனால் பிளாஷ்பேக்கில்   நாயகன் - நாயகி  தெய்வீகக்காதல் எபிசோடு காட்டுகிறார்கள் . எப்படியும் நாயகன் நாயகியைத்தான்  திருமணம்  செய்துகொள்ளப்போகிறான் என்பது நாயகியின் அம்மாவுக்கும்  தெரியும் , பின்  எதற்காக பெண் பார்க்கும் படலங்கள் ? 

2  எந்த  தைரியத்தில் , என்ன நம்பிக்கையில் சொந்த நிலத்தை விற்று அந்தப்பணத்தை அட்வான்ஸாக ஜமா நடிகர்களுக்கு நாயகன் கொடுக்கிறார்? பணத்துக்கு என்ன கேரண்டி ?

3   நாயகன் - நாயகி காதல் போர்ஷனில் இன்னும் கொஞ்சம்  காட்சிகள் வைத்திருக்கலாம் . நாயகன் விலகி விலகிப்போவதும் , நாயகி நாயகனை மிரட்டிக்காதலிப்பது  போலக்காட்சிகளும்  காதலை  கேள்விக்குள்ளாக்குகிறது 

4  வில்லனை நாயகன் பேசியே திருத்துவது  எம் ஜி ஆரின் பல்லாண்டு வாழ்க , ஆர் பார்த்திபனின்  இவண்  ஆகிய  படங்களிலேயே   எடுபடலை .இதிலும் வில்லன் திருந்துவது  நம்பமுடியவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - தெருக்கூத்து பற்றித்தெரியாத  2 கே கிட்ஸ் கூட ரசிக்கும் அளவு பிரமாதமான திரைக்கதை , காட்சி அமைப்புகளுடன்   இளையராஜாவின் இசையும் , அனைவரது  அட்டகாசமான நடிப்பும்  பார்த்தே தீர வேண்டிய படமாக பரிந்துரைக்கும் .,அவதாரம் எடுத்த நாசர் கூட சிலாகிப்பார் .ரேட்டிங்  4 / 5 

டிஸ்கி - இந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகர் , இயக்குனர் ,  சிறந்த குணசித்திர நடிகர்   என 3 விருதுகளை இப்படம் வெல்லும் .அன்பே சிவம் , குணாபோல  இப்படமும் காலம் கடந்தும் பேசப்படும் 


ஜமா
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்பரி இளவழகன்
எழுதியவர்பரி இளவழகன்
தயாரித்தது
  • சாய் தேவானந்த் எஸ்
  • சசிகலா எஸ்
  • சாய் வெங்கடேஸ்வரன் எஸ்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுகோபால கிருஷ்ணா
திருத்தியதுபார்த்தா எம்.ஏ
இசைஇளையராஜா
உற்பத்தி
நிறுவனங்கள்
SSBV Learn and Teach Production Private Limited
மூலம் விநியோகிக்கப்பட்டதுபடப்பெட்டி நிறுவனம்
வெளியீட்டு தேதி
  • 2 ஆகஸ்ட் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்