இப்படிப்பட்ட
சூழ்நிலையில்தான்
நாயகியை சந்திக்கிறான். நாயகி சமீபத்தில்தான் திருமணம் ஆகி ஒரு கார் விபத்தில் தன் கணவனைப்பறி கொடுத்தவள் . கணவன் இறந்ததற்கு இன்சூரன்ஸ் பணமாக ரூ 2 கோடி வர இருக்கிறது . நாயகியின் கணவன் செல்வந்த குடும்பம். இதனால் நாயகன் நாயகியைக்கவர்ந்து திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம், இன்சூரன்ஸ் பணம் தன் கைக்கு வரும் என திட்டம் போடுகிறான்
நாயகன் த்ன் திட்டப்படி நாயகி , நாயகியின் மாமனார் , மாமியார் மூவரையும் கவர்ந்து நாயகியைத்திருமணம் செய்து கொள்கிறான். திருமணம் ஆன கொஞ்ச நாளில் நாயகனை ஒரு இன்சூரன்ஸ் பாலிசியில் கையெழுத்துப்போடச்சொல்லி நாயகி கேட்கிறாள்:.
இப்போது நாயகனுக்கு சந்தேகம் வருகிறது. நாமதான் நாடகம் போட்டு நாயகியை ஏமாற்றி இருக்கிறோமா? அல்லது நாயகி வலையில் மாட்டிக்கொண்டோமா? என
சந்தேகிக்கிறான்
இதற்குப்பின் கதையில்
நடந்த திருப்பங்கள் தான் பின்
பாதி திரைக்கதை
முதல் பாதி
திருட்டுப்பயலே படத்தில் நாம்
பார்த்த அதே மாதிரி
காட்சி அமைப்புகள் தான் , ஆனால் இடைவேளைக்குப்பின் அந்த
ட்விஸ்ட் வந்த பின்
கதையின் போக்கே மாறி
விடுகிறது , அடுத்து என்ன நடக்கும் என
எதிர்பார்க்க வைப்பதோடு க்ளைமாக்ஸ் ல 2
மாறுபட்ட ட்விஸ்ட்களும் அடுத்த
பாகத்துக்கான லீடும் வருகிறது
நாயகியாக தன்யா
பாலகிருஷ்ணன் முதல் பாதி
வரை குடும்பப்பாங்கான அப்பாவிப்பெண்ணாக வருபவர்
இடைவேளைக்குப்பின்
ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ரோலில் வில்லியாக
மாறி கலக்குகிறார்.அவரது உய்ரம்
அவரது வில்லித்தனத்துக்கு பிளஸ்
தேஜா ஐனாம்புடி தான் நாயகன்.
பிளே பாய் ரோல். நான் அவன் இல்லை
படத்தில் ஜீவன் ஏற்று
நடித்த ரோலை நினைவுபடுத்தினாலும் தனிப்பட்ட
திறமையான தன் நடிப்பால்;
உயிர் ஊட்டுகிறார்
நாயகியின்
கணவனாக சைதன்யா ராவ் அதிக வேலை
இல்லை என்றாலும் வந்தவரை
ஓக்கே
நாயகி பணி
புரியும் கம்பெனியில் பிராஜெக்ட்
மேனேஜராக வில்லனாக வரும்
பப்லு எனும் பிரித்விராஜ் ரோல் ஏன்
திக்குவாயாக காட்டப்படுகிற்து என்பது
தெரியவில்லை. அவர்
திக்கித்திக்கிப்பேசுவது
எரிச்சல் ஆக இருக்கிறது
கார்த்திக் அர்ஜூனின்
வசனங்கள் நச் ரகம்,
சுனில் பப்பாலா தான்
இயக்குனர் , பின் பாதியில் காட்டிய
விறு விறுப்பில் பாதியாவது முதல்
பாதியில் காட்டி இருக்கலாம், அட்டாலா அஜய் சரனன்
திரைக்கதை
எழுதி இருக்கிறார்.
இசை அஜய்
பிஜிஎம் மில் தெறிக்க
விடுகிறார்
இரண்டு மணி நேரத்துக்கு 10 நிமிடம் குறைவு, இந்தப்படம் பார்க்கத்தகுந்த சராசரி த்ரில்லர் மூவி டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் சில் காணக்கிடைக்கிறது
ரசித்த வசனங்கள்
1 என்ன சார் ? பிரமோஷன் வந்துச்சா?
பிரமோஷன் என்ன கேர்ள் ஃபிரண்டா? நினைச்சதும் கிடைக்க ?
2 ஒரு பிரச்சனைல சிக்கின பிறகு அதுல இருந்து பாதிலயே நழுவிடலாம்னு நினைக்கக்கூடாது
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங்கில் வரும் ஐபிஎல் மேட்ச் ஃபிக்சிங் , நாயகனின் பிளாக் மெயில் பின் பாதியில் வரும் பிராஜெக்ட் காப்பி சீட்டிங் என எல்லா தில்லு முல்லு வேலைகளிலும் இயக்குநர் சாமார்த்தியம் தெரிகிறது
2 ஐ டி கம்பெனியில் நடக்கும் மோசடிகள் பற்றிய பின் பாதி திரைக்கதையில் செம விறுவிறுப்பு
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அண்ட் செகண்ட் பார்ட்டுக்கான லீட் குட்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 விபத்தில் இறந்த நபருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டும் என்றால் முதல்ல டெட் பாடியை அவங்க பார்த்திருக்கனும். விபத்து என உறுதி செய்யனும்
2 வில்லன் நாயகியை ஃபோனில் மிரட்டுகிறான் சரி .அந்த மிரட்டல் வாய்சை மெமரி கார்டில் நாயகி எதற்கு பத்திரமாக வைத்திருக்கிறாள் ?
3 நாயகனைக்கண்காணிக்க பணிப்பெண்னை நாயகி நியமிப்பதற்குப்பதில் சிசிடிவி கே,மரா பொருத்தினால் போதுமே?
4 ஒரு கட்டத்தில் நாயகி ஒரு திட்டத்தின் மூலம் 20 கோடி ரூபாய் வர இருக்கிறது . அதில் பாதியை நாயகனுக்குத்தர ரெடியாக இருக்கிறாள் , ஆனால் நாயகன் எனக்கு 50 லட்சம் ரூபாய் போதும் என இறங்கி வருவது எதற்கு ? அதிகமா பங்கு கேட்டா நீ என்னைப்போட்டுத்தள்ளீடுவே என சொல்வது நம்பும்படி இல்லை . ஒரு பெண்ணின் கணவன்கள் அடுததடுத்து இறந்தால் போலீசுக்கு டவுட் வராதா?
5 வில்லனான பப்லு கொலைகாரன் - வில்லி இருவரும் ஃபோனில் பேசியதை ரெக்கார்டு பண்ணி அதை வைத்து வில்லியை மிரட்டுகிறான், ஆனால் அதே தப்பை அதாவது வில்லியுடன் ஒரு கொலை டீலிங்கை ஃபோனில் பேசி வில்லனும் எப்படி மாட்டுகிறான் ?
6 வில்லி கொலையாளியுடன் ஃபோனில் பேசுவது ஏன் ? போலீஸ் வில்லியின் ஃபோனை ட்ராக் பண்ணினால் மாட்டிக்கொள்வாரே?
7 இன்சூரன்ஸ் ஆஃபீஸ்ல நாயகிக்கு ஃபோன் பண்ணி ஒரு தகவல் சொல்றாங்க. நைட் டைம் ல / பொதுவா அவங்க காலை நேரத்தில்தான் பேசுவாங்க . மாலை 6 மணியோட ஆஃபிஸ் க்ளோஸ் ஆகிடும்
8 வில்லனிடம் 20 கோடியைஒரு பேக்கில் போட்டு அதை குறிப்பிட்ட இடத்தில் ஒப்ப்டைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது, இதற்கு முன் நடந்த டீலிங் எல்லாம் நெஃப்ட் தானே பண்ணப்பட்டது? இது மட்டும் ஏன் கேஷாக?
9 வில்லன் தான் மேனேஜர், அவனுக்குக்கீழேதான் வில்லி வேலை செய்வது, ஆனால் ஃபாரீன் கொரியன் கம்பெனியிடம் டீலிங் பேசுவது வில்லிதான், ஏன் டைரக்டாக வில்லனே அந்த வேலையை செய்யவில்லை? 20 கோடி மிச்சம்தானே?
10 ஐ டி கம்பெனியில் எம் டி என யாரும் இருக்க மாட்டார்களா? சி சி டி வி கேமரா இருக்காதா? வில்லியும் வில்லனும் தொடர்ந்து காப்பி பண்ணி விற்கும்போது கண்டு பிடிக்க மாட்டார்களா? மீட்டிங் மட்டும் போட்டாப்போதுமா? போலீசில் புகார் கொடுக்க மாட்டார்களா?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - லாஜிக் மிஸ்டெக்ஸ் நிறைய இருந்தாலும், நம்ப முடியாத காட்சிகள் சில இருந்தாலும் இது பார்க்கத்தகுந்த ஒரு த்ரில்லர் மூவிதான்