Showing posts with label Ithu Thanda Police (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்) - காமெடி. Show all posts
Showing posts with label Ithu Thanda Police (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்) - காமெடி. Show all posts

Wednesday, March 23, 2016

Ithu Thanda Police (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்) - காமெடி

ஆசியாவிலேயே  முதல் மகளிர் காவல் நிலையம் கோழிக்கோடு ( கேரளா)ல  1973ல்  தொடங்கப்பட்டது. இதை இன்ஸ்பிரேசனா வெச்சு எடுத்த  படம் தான் இது. சரி கதை என்ன?


ஒரு ஊர்ல ஒரு மகளிர் காவல்  நிலையம் இருக்கு. அந்த ஸ்டேஷன்ல போலீஸ்  ஜீப் க்கு டிரைவர் இல்லை, ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தான் மெயின் ஹீரோயின்.

 அதே  ஊர்ல முன்னாள் எம் எல் ஏவோட பையன்  யாரோ  ஒரு பொண்ணை தொட்டுட்டதால அது மாசம் ஆகிடுது. போலீஸ் ஸ்டேஷனுக்கு கேஸ் வருது. வி ஐபின்னு பார்க்காம அந்தப்பொண்ணையே  கண்ணாலம் கட்டிக்க வெச்சுடறார்  ஹீரோயின்.

 இதனால செம காண்ட் ஆன  வில்லன் அந்த இன்ஸ்பெக்டர்க்கு  ஏதாவது  தொந்தரவு  கொடுத்துட்டே  இருப்பேனு  சீமான் மாதிரி வெட்டிச்சவடால் விடறார்



நிற்க ( எந்திரிச்சு நிக்க வேணாம்)


இப்போ தான்  ஹீரோ எண்ட்ரி. போலீஸ்  ஜீப் டிரைவரா  ஹீரோ அப்பாயிண்ட் ஆகறார்.


அந்த மகளிர்  காவல்  நிலையத்துல  இருக்கற கான்ஸ்டபிள்ஸ் , செகண்ட்ஸ் , ஆண்ட்டீஸ்  எல்லாம்  ஹீரோக்கு  ரூட் விடுதுங்க /. ( போனா லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனாவோ, லேடி போலீஸ் ஸ்டேஷன் செக்யூரிட்டியாவோ  போகனும்)


அந்த  ஸ்டேஷன்ல நடக்கும்  காமெடிக்கூத்துகள்  தான் கதை




இதுல  முக்கியமான  விஷயம்  ஹீரோ ஹீரோயினை கரெக்ட் பண்ணலை. ஹீரோயின் ரிலேட்டிவ்  பொண்ணை லவ்வறார்.இதுல டூயட்  இல்லை. பஞ்ச் டயலாக் இல்லை

 ஒரு காமெடிப்படம்  கொடுக்கலாம்னு முயற்சி செஞ்ச டைரக்டர்  கொஞ்சம் சொதப்பி  ஒப்பேற்றி இருக்கார்னு  சொல்லலாம்





 ஹீரோவா அசிஃப் அலி  இவர் நம்ம  ஊரு பிரசன்னா  மாதிரி  முகச்சாயல். நல்லா  பண்ணி  இருக்கார். இவர்  லேடி போலீஸ் கான்ஸ்டபிள்சோட அடிக்கும் லூட்டிகள்  பொறாமையை வர வைக்குது. மொத்தம்  11 பேர் அடேங்கப்பா


ஹீரோயினா  போலீஸ் இன்ஸ்பெக்டரா நம்ம  ஊரு விருமாண்டி அபிராமி. போலீஸ் யுனிஃபார்மில்  செம  கெத்து. டைட் சர்ட்டில்  , டி சர்ட்டில்   எடுப்பாக  காட்ட கேமரா மேன் ரொம்ப  சிரமப்பட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தி  இருக்கார் ( க்ளோசப் ஷாட்ஸ் ம்ம்ம்)

 இன்னொரு  ஹீரோயினா  ஹீரோவுக்கு  ஜோடியா  ஜனனி அய்யர். இவர்  ஒரு நல்ல  ஃபிகர், ஆனா ஏன் லிப்ஸ்டிக் பூசத்தெரியாம  ஓவர் கோட்டிங்  அடிச்சிருக்குன்னு  தெரியலை. இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை. படத்தின்  திரைக்கதை  பூரா ஸ்டேஷன்லயே நடப்பதால்   இவருக்கு வலியனா 4 சீன் தான் இணைச்சிருக்காங்க ( சீன் = சாதா சீன் )


ஜொள்  பார்ட்டி  கான்ஸ்டபிளா  வரும்  ஃபிகர் பேரு  தெரியல. சரி நமக்கு பேரா முக்கியம்?


சபாஷ்  டைரக்டர் 


1   போலீஸ் ஸ்டேசனை மையப்படுத்தி  இப்போதான் ரிலீஸ் ஆன ஆக்சன் ஹீரோ பிஜூ படம் போல் இல்லாமல் அதன் சாயல் இல்லாமல் காமெடி  டிராக்கில் படம் எடுத்தது


2   போலீஸ் இன்ஸ்பெக்டரா  வரும்  அபிராமியை  லூஸ் போல் காட்டாமல்  கெத்தா காட்டியது


3  டூயட்  சீன்,  சோகப்பாட்டு, ஃபைட்  சீன்  எல்லாம் மெனக்கெட்டு வைக்காம காமெடி யாக படத்தைக்கொண்டு சென்றது

4  படத்தில்  3 பாட்டு  ஓக்கே ரகம், ஒளிப்பதிவு , எடிட்டிங் , பிஜிஎம்  எல்லாம்  நார்மல் குவாலிட்டி




  லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   ஜனனி ஐயரை ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போகாம அவரோட தோழி பர்த்டே பார்ட்டிக்கு  கூட்டிட்டுப்போன  ஹீரோவை அபிராமி பளார் கொடுக்குது. தப்பு  அவர் மேல இல்லைன்னு தெரிஞ்ச பின் ஒரு சாரி  கூட கேட்கலையே ஏன்?



2  வில்லன்  சரியான  சோப்ளாங்கி  வில்லனா இருக்கான். ஒரு வில்லனா  எந்த வேலையும் அவன் ஒழுங்கா செய்யலையே? ஆரம்ப சீனில் சவால்  விட்டதோட சரி


3  இது  முழுக்க  முழுக்க  மொக்கை காமெடி;ப்படமும்  இல்லை ஆக்சன் ஃபிலிமும் இல்லை. ஏன் ரெண்டுங்கெட்டானா  எடுத்து வெச்சிருக்கீங்க?



 டைம் பாஸ்க்கு வேற  படம் எதும் சிக்கலைனா  பார்க்கலாம்


திருவனந்த புரம்  நியூ தியேட்டர் ஸ்க்ரீன் 1 ல படம்  பார்த்தேன், செம தியேட்டர்



ரேட்டிங் = 2.5 / 5

Ithu Thaanda Police (2016) - Poster.jpg
Theatrical poster
Directed byManoj Palodan
Produced byElu Films
Written byManoj-Renjith
StarringAsif Ali
Janani Iyer
Abhirami
Sruthi Lakshmi
Sunil Sukhada
Sudheer Karamana
Music bySumesh Parameswaran
CinematographyHari Nair ISC
Edited bySamjith
Distributed byElu Films
Release dates
  • March 18, 2016
CountryIndia
LanguageMalayalam