Showing posts with label Ian Fleming. Show all posts
Showing posts with label Ian Fleming. Show all posts

Thursday, November 01, 2012

skyfall - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/uploads/2012/10/Skyfall-wallpapers-James-Bond-Movie-15-500x299.jpg 



ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்து 50 வருஷங்கள் ஆகுது.டெக்னிக்கலா சினி ஃபீல்டு எவ்வளவோ முன்னேறிடுச்சு. கோடிக்கணக்கில் செலவு பண்றவங்க கதை , திரைக்கதைல கவனம் செலுத்துனா மட்டும் போதாது. இந்த மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கு வெரைட்டி லொக்கேஷன்ஸ், ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் காட்டிட்டே பர பரனு படத்தை நகர்த்தனும். இந்த உண்மையை இந்நேரம் புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறேன்.


உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள்  பற்றிய தகவல்களை  ஒரு ஹார்டு டிஸ்க்ல வெச்சிருக்காங்க ஜேம்ஸ்பாண்ட் பணி புரியும்  உளவுத்துறைல.. அதை வில்லன் அபேஸ் பண்ணிடறான்.உடனே நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த உளவுத்துறை மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் போட்டு இதை கலைச்சுடனும்னு சொல்றாங்க.. கூட்டம் நடக்கும்போதே வில்லன் அங்கேயே வந்து அட்டாக் பண்றான்.


 வில்லன் வேற யாரும் இல்லை. அதே உளவுத்துறைல ஆல்ரெடி பணி ஆற்றியவன் தான். அவன் டார்கெட்டே  அந்த லேடி எம் என்பவரை போட்டுத்தள்ளத்தான் ஐ மீன் கொலை பண்றது.  ஜேம்ஸ் பாண்ட்  அவரை காப்பாத்துனாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை.. 


படத்தோட ஓப்பனிங்க் சீன் செம கலக்கல். 17 நிமிடங்கள் ஓடும் ஒரு சேசிங்க் சீன். விக்ரம் படத்துல கமல் , பிராஜக்ட் ஏ படத்துல ஜாக்கிசான் வீட்டின் மொட்டை மாடிகளில் , கூரைகளில் ஓடி துரத்துவது போல இதுல் ஹீரோ சேஸ் பண்றாரு . இவர் ஜேம்ஸ் பாண்ட் ஆச்சே.. அதனால பைக்ல.. எல்லா ஓட்டு வீட்டின் கூரையில் பைக்கில் போகும் காட்சி அப்ளாசை அள்ளுது.. 


அந்த சேசிங்க் முடியறப்ப ரயிலில் ஜம்ப் பண்ணும் சீன் கலக்கல். அந்த சேசிங்க்கை ஹீரோயின் அப்பப்ப லைவ் அப்டேட் பண்ணும் உரையாடல் காமெடி.. 

இந்த ஓப்பனிங்க் பிரம்மாண்டம் முடிஞ்ச உடனே நயன் தாரா - பிரபுதேவா இனி இணைய மாட்டாங்க, பிரிவுதான்னு நியூஸ் வந்தப்ப நயன் முகம் எப்படி வாடிப்போச்சோ அப்படி ஆகிடுது படம்.


 அதுக்குப்பிறகு வரும் சம்பவங்கள் எல்லாம் ரொம்ப சாதாரணமா கேப்டன் பட ரேஞ்சுக்குத்தான் இருக்கு.. 


http://hdfreewallpapers.com/walls/2012/10/08/berenice_marlohe_in_skyfall-wide.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தின் முதல் 20 நிமிட ஆக்‌ஷன் கலக்கல்ஸ், அந்த காட்சிக்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை அபாரம்


2. ஜேம்ஸ் பாண்ட் ஒரு பந்தயத்தில் கையில் தேள் வைத்து சரக்கு அடிக்கும் ஸ்டைலிஸ் சீன்


3. வில்லன் லிஃப்ட்டில்  போகும்போது பின்னாலயே அதுவரை பூனை போல் ஃபாலோ பண்ணியவர் லிஃப்ட் கிளம்புனதும் புலி போல் பாய்ந்து லிஃப்ட்டின் கம்பியை பிடித்து தொங்கியபடி செல்லும் லாவகம்.. நோ டூப், நோ கிராஃபிக்ஸ்.. செம ஆக்‌ஷன்


4. வில்லன் ஹீரோவுக்கு பின்னால் கூரையில் பாம் வீசி ஒரு பெரிய ஓட்டையை போட ஹீரோ “ இதனால எனக்கு என்ன பாதிப்பு? : என ஹீரோ நக்கல் அடிக்கும்போது வில்லன் “ இப்போ பாரு கண்ணா” என்பது போல பார்க்க அந்த ஓட்டை வழியே ஒரு பெரிய ரயிலே வந்து விழும் காட்சி.. 


http://image.buzzintown.com/files/movie/upload_14000/upload_original/342490-skyfall.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏன் கார் ரியர் வ்யூ மிரரை உடைச்சே? 

  ஹீரோயின் - முன்னாடி பார்க்கறவங்களுக்கு கண்ணாடி  பின்னாடி  தேவையில்லை  ( என்னாடி சொன்னே/?)



2. லேடி எம் - ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணு.. பாண்ட் இப்போ பைக்ல அவனை துரத்தி போய்ட்டு இருக்காரா? 


 இப்போ 2 பேரும் ரயில்ல போய்ட்டு இருக்காங்க.. 


 வாட்? 

 ஐ மீன் ரயில் மேல 


3. பாண்ட் - நான் வீட்டுக்குப்போய் ஃபிரெஸ் ஆகிட்டு வர்றேன்


 உன் வீட்டை வித்தாச்சு, மேரேஜ் ஆகாத ஒரு உளவாளி செத்துட்டா உடனே அவன் வீட்டை ஜப்தி பண்ணிடுவாங்க.. இது ரூல்


4. பாப்பா , என் எக்ஸ்பீரியன்ஸ் வெச்சு சொல்றேன், ஃபீல்டு ஒர்க் ரொம்ப கஷ்டம். வேணாம், நீ வேற வேலை பார்ப்பது நல்லது 


5. சாப்பாடு ருசியா இருக்கனும்னா சமையற்காரனா இருக்கனும்னு அவசியம் இல்லை ( ஓஹோ நல்ல சமையற்காரிக்கு புருஷனா இருந்தா போதுமா? ) 


6. உங்க கைரேகை மேட்ச் பண்ணி  ரெடி பண்ணின துப்பாக்கி இது.. உங்களால மட்டும்தான் சுட முடியும்.. 



7. மிஸ்டர் பாண்ட், குடுத்ததை எல்லாம் போறப்ப திருப்பிக்குடுத்துடனும் 


ஹூம், உலகம் ரொம்ப மாறிடுச்சு 


8. மிஸ்.. நான் எதையும் ஆர்டர் பண்ணலையே? இன்க்ளூடிங்க் யூ.. 


9. மிஸ்டர் பாண்ட், என்ன கத்தியால ஷேவிங்க் பண்றீங்க? நாகரீக உலகத்துல ஏகப்பட்ட நவீன வழிமுறைகள் வந்தாச்சே? 


மிஸ்.. பல விஷயங்களை பழைய முறைல செஞ்சாத்தான்  நல்லாருக்கும் ( டபுள் மீனிங்க் ) 


10. பயம்னா என்ன?னு உனக்குத்தெரியுமா? 


 தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கலை.. 



11. மேடம்,  பாதுகாப்பு அமைச்சகத்துல உங்களை கூப்பிடறாங்க.. 

 வேலை செய்ய வேண்டிய நேரத்துல  மீட்டிங்க் அட்டென்ட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண சொல்றீங்களா? 


12. இந்த உலகத்துல எல்லாருக்கும் ஒரு விலை இருக்கு.. உன்னோட விலை என்ன? 


 உன்னை கொல்றது


13. இந்த சிஸ்டத்துல குறிப்பிட்ட  சில ஃபைல்களை யாராவது சர்ச் பண்ணாலே ஆட்டோமெட்டிக்கா எரேஸ் பண்ற மாதிரி செட் பண்ணி வெச்சிருக்கு.. யாராவது உள்ளே புகுந்து ஏதாவது செய்ய நினைச்சா எரேஸ் ஆகிடும் . உலகத்துலயே 6 பேருக்கு மட்டும்தான் அந்த கலை தெரியும்


 அடடா, உங்களுக்கு ஏதும் தெரியாதா?

 ஹா ஹா, அந்த 6  பேருக்கு கத்துக்குடுத்ததே நான் தானே? 


14. ரயிலை ஓடி துரத்தி வில்லனை பிடிக்க ரயிலில் ஜம்ப் பண்ணும் பாண்டிடம் ஒரு அப்பாவிப்பயணி - வீட்டுக்குப்போக இவ்வளவு அவசரமா? 



15. நீங்க பண்றது அஃபீசியல் வேலை இல்லையே? 

 அதே சமயம் அது என் பர்சனல் வேலையும் இல்லை.. 

 என் வேலைக்கு உலை வைக்காம இருந்தா சரி


16. உளவாளி ஆக அநாதையாக இருப்பதே ரொம்ப பெரிய தகுதி 


http://www.moviedeskback.com/wp-content/uploads/2012/05/James-Bond-Skyfall-007-wallpapers-1.jpg



 இயக்குநருக்கு திரைக்கதையில் சில ஆலோசனைகள், சில சந்தேகங்கள்



1. படத்தோட ஓப்பனிங்க் சீன் ஆக்‌ஷன்ல ஓடும் ரயிலில் ஹீரோவும் , வில்லனும் கட்டிப்புரண்டு ஃபைட்டிங்க். ஹீரோயின் ரைபிளால் குறி வெச்சுக்கிட்டே மேலிடத்துல ஐடியா கேட்கறா. இப்போ சுட்டா ஜேம்ஸ் பாண்ட் மேல பட்டுட வாய்ப்பு இருக்குங்கறா. உடனே மேலிடம் “ வேற வழியில்ல ஷூட். அப்டினு ஆர்டர் குடுக்க அவ ஷூட் பண்றா. நெஞ்சுக்கு குறி வெச்சு. கரெக்டா வில்லன் விலக  பாண்ட் குண்டு பட்டு கடல்ல விழறாரு. 

 இந்த மாதிரி ரிஸ்க்கான டைம்ல எதுக்கு நெஞ்சுக்கு குறி வைக்கனும்? காயப்படுத்தி பலவீனப்படுத்த கால்லயோ, தோள்லயோ கைலயோ , உயிருக்கு ஆபத்தில்லாத  பகுதில சுட்டா யார் மேல குண்டு பட்டாலும் பரவாயில்லையே? 



2. ஜேம்ஸ் பாண்ட் கடல்ல விழும் இடம் அந்த லேடிக்கு தெரியும். அங்கே போலீஸ் ஆட்களை விட்டு தேடாமயே அவர் செத்துட்டதா எப்படி முடிவுக்கு வர்றாங்க? டெட் பாடி கிடைக்காம ஒரு ஆள் செத்துட்டதா முடிவுக்கு வரக்கூடாதுன்னு சட்டம் சொல்லுதே?அப்புறம் எப்படி பாண்ட் செத்துட்டதா அவர் வீட்டை ஜப்தி பண்ண முடியும்?


3. உயிர் பிழைச்ச பாண்ட்  மேலிடத்துக்கு ஏன் தகவல் தெரிவிக்கலை? மறுபடி பணியில் சேரும்போது யாரும் அது பற்றி கேட்கவே இல்லையே? எங்க ஆஃபீஸ்ல எல்லாம் கம்யூனிகேஷன் கரெக்டா இருக்கனும். லீவோ, பர்மிஷனோ மேலிடத்துக்கு தகவல் சொல்லிடனும்.


4. ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னால அவருக்கு ஃபிட்னெஸ் டெஸ்ட் நடக்குது. அந்த காட்சிகள் செம போர்.  வைஜயந்தி ஐ பி எஸ் , சத்ரியன் போன்ற தமிழ்ப்படங்களில் கூட இண்ட்ரஸ்ட்டிங்கா எடுத்திருந்தாங்க.. அவர் ஃபிட்னெஸ் இல்லைன்னு தெரிஞ்சும் மேடம் எம் எப்படி ராங்கா ஜாயினிங்க் ஆர்டர் குடுக்க முடியும்? கலைஞர் மாதிரி ஊழல் பண்ண வழி இல்லை. எல்லா ரிக்கார்ட்சும் கம்ப்யூட்டரைஸ்டு. என்ன தைரியத்துல அப்பாயிண்ட் பண்ணுனாங்க..? 


5. சாதாரண அவதூறு  வழக்குல கைதானவங்களையே  நம்ம ஆளுங்க ஜாமீன்ல வர முடியாத படி பாதுகாப்பா வெச்சு விசாரிக்கறப்ப , ஒரு நாட்டின் பாதுகாப்பையே அசைத்த வில்லனை போலீஸ் கஸ்டடில அப்படியா அசால்ட்டா வெச்சிருப்பாங்க? கை விலங்கு கால் விலங்கு எல்லாம் போட்டு சங்கிலியால் கட்டி 50 போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்க வேணாம்? என்னமோ ராமநாராயணன் எடுக்கும் லோ பட்ஜெட் படம் மாதிரி 3 போலீஸ்.  குருவி சுடற மாதிரி சுட்டுட்டு அவன் எஸ் ஆகறான்.. ஹய்யோ அய்யோ 



6. வில்லன் போலீஸ் யூனிஃபார்ம் போட்டு மாறு வேஷத்துல ரயில்ல தப்பிக்கறான். மத்த எல்லா போலீஸ் ஆஃபீசரும் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி இருக்காங்க. இந்த தத்தி ஃபங்க் விட்டிருக்கான்,. அவ்ளவ் முடி இருக்கு. ஆனா போலீசாலே கண்டு பிடிக்க முடியலை. ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. 


7. க்ளைமாக்ஸ்ல ஒரு வீடு. அதுல ஹீரோவும் மேடம் எம் லேடியும் பதுங்கி இருக்காங்க.. தத்தி வில்லன்  பல ஆளுங்களை நடராஜா மாதிரி நடக்க வெச்சு அனுப்பறான், மாட்டிக்கறாங்க. 20 பேரையும் பாண்ட் போட்டுத்தள்ளறாரு. டெக்னிக்கலா எவ்ளவோ டெவலப் ஆகியாச்சு. பெரிய டைம் பாம் போட்டா மேட்டர் ஓவர். இதை எவனும் கேள்வி கேட்டுடக்கூடாதுன்னு “ அவன் எனக்கு உயிரோட வேணும்”னு டெம்ப்ளேட் வசனம் வேற. சகிக்கலை.. ஹீரோ என்ன நமீதாவா? உயிரோட பிடிச்சு ஜப்பான் அழகி பட்டம் தரப்போறாரா வில்லன்..? 


8. க்ளைமாக்ஸ்ல சுரங்கப்பாதைல போகும் ஜேம்ஸ் பாண்ட் எதுனால கதவை மூடாமயே போறாரு? அந்த வீட்டுக்கு பாம் வெச்சிருக்காரு. வெடிக்கப்போகுது, தீ பரவும்னு தெரியும். கதவை மூடுனா பாதிப்பு கம்மியா இருக்குமே?



9. க்ளைமாக்ஸ் காட்சிகள்ல ஜேம்ஸ் பாண்ட் படங்கள்லயே இதுதான் செம மொக்கை.. அர்ஜூன் படங்கள்ல கூட இப்படி காட்ட மாட்டாங்க/... 



10. படத்துல ஷாங்காய் ,  மக்காவ் என 2 லொக்கேஷன்கள் மட்டும்தான். அதிக இடங்கள் காட்டவே இல்லை.. 2 ஹீரோயின் பேருக்கு.. அதுல ஒரு ஹீரோயின் டிக்கெட் ( அயிட்டம் ). பொதுவா ஜேம்ஸ் பாண்ட் படங்கள்ல அவர் எப்படி ஹீரோயினை மடக்கப்போறாரு? வளைக்கப்போறாரு? அப்டினு ஆர்வமா பார்ப்பாங்க ஆடியன்ஸ். இதுல பல கை பட்ட பஞ்சாமிர்தமா வரும் டிக்கெட்டை அவர் வளைச்சா என்ன? வளைக்காட்டி என்ன?


11. அவ்ளவ் பெரிய மீட்டிங்க் நடக்கும் ஹாலில் பாதுகாப்புக்கு 4 போலீஸ் தானா? நம்ம இந்தியாவிலேயே 100 போலீஸ் இருக்குமே? தனி ஆளாய் வரும் வில்லன் தன்னிடம் இருக்கும் சாதா துப்பாக்கியால் அனைவரையும் வீழ்த்தறான்



12. ஜேம்ஸ் பாண்ட் படம்னா வித்தியாசமான சாகச ஆயுதங்கள் வித விதமா வெச்சிருப்பாரு. இதுல எதுவுமே இல்லை..  இது மாபெரும் மைனஸ் 


http://www.bangersandnash.com/wp-content/uploads/2012/10/berenice-marlohe-in-skyfall-wallpaper.jpeg



இந்தப்படத்தை பல ஆங்கில வலைப்பூக்கள் ஆஹோ ஓஹோன்னு பாராட்டி இருக்கு. ரேங்க் கூட 10 க்கு 8 என போட்டிருக்கு.. ஏன்னு தெரியல. 



 சி. பி கமெண்ட் -  ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். ஆக்‌ஷன் விரும்பிகள் பார்க்கலாம். ஆனா எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்னு சொல்லிட முடியாது . ரெண்டே கால் மணி நேரம் போர் அடிக்காம படம் போனாலும்  ஜேம்ஸ் பாண்ட் ஆக்‌ஷன் காட்சிகள் மொத்தமே 17 நிமிடங்கள் தான்.  ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன். 2 இடத்துல ரொமான்ஸ் நடக்கற மாதிரி இருக்கு. ஆனா சென்சார் கட், ஸ்டில்லை நம்பி போகாதீங்க


 இந்தப்படத்தை பத்தி ஆஹா ஓஹோ பேஷ் பேஷ். இதுதான் ஜேம்ஸ் பாண்ட் சரித்திரத்திலேயே அப்படியாக்கும் இப்படி ஆக்கும் என படத்தின் ஹீரோ அள்ளி விட்ட பேட்டியின் தமிழாக்கம் காண 




diski -twitter sent a dm -
Udhayakumar Durai Udhayakumar Durai
@soundparty

அது ரிவர் வ்யூ மிரர் இல்லை, ரியர் வ்யூ மிரர், rear view mirror. தமிழில் தவறாகவே எழுதுகிறோம், நிறய நாவல்களில் இதை பார்த்திருக்கிறேன்
அட..ஒருவாட்டி கேட்டுப் பாருங்க..
சும்மா அதிருதில்லே
http://www.puradsifm.com/

அட..ஒருவாட்டி கேட்டுப் பாருங்க..
சும்மா அதிருதில்லே
http://www.puradsifm.com/