Showing posts with label IT ENDS WITH US (2024) -அமெரிக்கன் மூவி-ஆங்கிலம் /. தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts
Showing posts with label IT ENDS WITH US (2024) -அமெரிக்கன் மூவி-ஆங்கிலம் /. தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts

Monday, November 18, 2024

IT ENDS WITH US (2024) -அமெரிக்கன் மூவி-ஆங்கிலம் /. தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம் , ஜீ 5

             

            கோலின் ஹாவர் என்ற பெண் எழுத்தாளர்  2016 ஆம்  ஆண்டு எழுதிய நாவலைத்தழுவி  திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது .6/.8/2024  அன்று அமெரிக்காவில் ரிலீஸ் ஆன இப்படம் 25 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 349 மில்லியன் டாலர் வசூலில் கலக்கிய படம் 


ஒரு வசந்த ராகம் (1986),  சொர்ணமுகி  (1998) இயற்கை (2003) உட்பட  தமிழ்  சினிமாவில்  பல படங்களில்  நமக்குப் பரிச்சயம் ஆன முக்கோணக்காதல் கதை தான் .ஆனால்  டொமெஸ்டிக்  வயலன்ஸ்   பற்றியும்  இது பேசுகிறது 


18+ படம் என்ற சென்சார் சர்ட்டிஃபிகேட்    பார்த்தோ  , போஸ்டர்  டிசைன்  பார்த்தோ  அந்த மாதிரி படமோ என யாரும்  நினைக்க வேண்டாம் . இது நல்ல ரொமாண்டிக் ஃபேமிலி லவ் ஸ்டோரி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு செல்வந்தரின்  மகள் . டீன் ஏஜ்  காலத்தில்  அம்மா , அப்பா  இருவரும்  வேலை நிமித்தம் தினமும் வெளியே சென்று விட  நாயகி தனிமையில் இருக்கிறாள் . எதிர்  வீட்டில்  ஒரு அனாதை இளைஞனின்  அறிமுகம் ஏற்படுகிறது . பயணங்கள் முடிவதில்லை படத்தில்  மோகனின்   ஏழ்மையைக்கண்டு  பூர்ணீமா ஜெயராம் பரிதாபப்பட்டு பின் அது காதலாக மலர்வது போல  ஆரம்பத்தில்;  அவனுக்கு உணவு , உடை ஆகியவற்றைத்தந்து  உதவி செய்து  பின்  நெருக்கம்  ஆகிறது . நாயகி நாயகனுடன்  திருமணம்  ஆகாமலேயே  உறவு வைத்துக்கொள்கிறாள் . ஒரு நாள்  அப்பா  இவர்களைக்கையும் களவுமாகப்பிடித்து விட நாயகன் அடித்து விரட்டப்படுகிறான் 


சில  வருடங்கள்  கழித்து  அப்பா  இறந்த  செய்தி  கேட்டு  நாயகி  அம்மாவைப்பார்க்க   சொந்த ஊருக்கு வருகிறாள் . இதிலிருந்து தான்  மெயின் கதை  தொடங்குகிறது . மேலே  முதல்  பத்தியில் சொன்னது ஃபிளாஸ்பேக் 


நாயகி   வில்லனை  சந்திக்கிறாள் . அவன் ஒரு  டாக்டர் . நியூரோ சர்ஜன்  நாயகிக்கு நீண்ட  நாட்களாக  ஒரு ஃபிளவர் ஷாப் வைக்க வேண்டும் என்பது ஆவல் . கடைக்காக இடம் பார்த்து  கடையை டெக்ரேட் செய்ய ஒரு பெண்  நாயகியிடம் பணிக்கு சேர்கிறாள் . அவள் தான்  வில்லனின் தங்கை .தங்கையைப்பார்க்கும்  சாக்கில் வில்லன்  நாயகியை  அடிக்கடி பார்க்க கடைக்கு வருகிறான் . இருவருக்கும்  நெருக்கம்  உண்டாக  திருமணம்  ஆகாமலேயே  உறவு நிகழ்கிறது 


 வில்லன்  நாயகியை திருமணம்  செய்ய முடிவெடுக்கிறான்.  திருமணம்  நடக்கிறது . வில்லன் கோகுலத்தில் சீதை கார்த்திக்  மாதிரி  , மன்மதன்  சிம்பு  மாதிரி , மன்மத லீலை   கமல்  மாதிரி  பல    தோழிகளுடன் பழகியவன் தான் . இதை  வில்லனே  நாயகியிடம்  சொல்லி விடுகிறான் . வில்லனின்  தங்கையும்  நாயகியை ஆரம்பத்திலேயே  எச்சரிக்கிறாள் . இருந்தும் நாயகி வில்லனை மணக்கிறாள் . நாயகியும்  முதலிலேயே  தன்  முன்னாள்  காதல் + உறவு பற்றி  சொல்லி விடுகிறாள் 


நாயகி கர்ப்பமாக இருக்கிறாள் . இப்போது  ஒரு  ரெஸ்டாரண்ட்டில்  முன்னாள்  காதலனை சந்திக்கிறாள் . வில்லனுக்கு விஷயம்  தெரிய  வருகிறது . புரியாத  புதிர்  ரகுவரன்  மாதிரி  வில்லன்  நாயகியிடம் சைக்கோ  போல  நடந்து  கொள்கிறான் .


 நாயகி  வில்லனைப்பிரிய  முடிவு எடுக்கிறாள் . இப்பொது  வில்லன்  மன்னிப்புக்கேட்கிறான் . இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகி   லில்லி  ப்ளூம் ஆக  ப்ளேக்  லைவ்லி  கலக்கி இருக்கிறார். பொதுவாக  ஹீரோவுக்கு  ஃபிளாஸ்பேக்  சீன்  எனில்  பொறுக்கி மாதிரி  தாடியுடன்  இருந்தால்  தற்காலம் , க்ளீன்  ஷேவ்  செய்தால்  கடந்த காலம்  என   தனுஷ் , சிவகார்த்திகேயன்  மாதிரி  ஹீரோக்கள்  ஒரு பேட்டர்ன்  உண்டாக்கி  இருப்பது  போல  நாயகி  செய்ய  முடியாது . இதில் ஃபிளாஸ்பேக்  காட்சியில்  வேறு நாயகி .  நாயகன் , வில்லன்  இருவருடனும்  காதல்  கொள்ளும்  தருனங்களை  மிக கண்ணியமாக  வெளிப்படுத்தி இருக்கிறார் 


 வில்லனாக  ஜஸ்டின்  பால்டனி  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். நாயகனை  விட  இவருக்குத்தான்  அதிகக்காட்சிகள் . நாயகியைக்காதலிக்கும்போது  நாயகன்  போலவும் , சண்டை  போடும்போது  வில்லன் போலவும்   இரு மாறுபட்ட  முகங்கள்  காட்டுவது குட் 


 நாயகன்  ஆக  பிராண்டன் அளவாக   இயல்பாக  நடித்திருக்கிறார்

வில்லனின்  தங்கையாக  வருபவர்  கொஞ்சம்  ஓவர்  ஆக்டிங்க் . அதே  போல்  நாயகியின்  அம்மாவாக  வருபவர் நாயகி போல்  அழகில்லை . த்ரீஷா வை விட   அவர் அம்மா  அழகாக  இருப்பது  போல  ஒரு  நடிகையை  ஃபிக்ஸ்  பண்ணி  இருக்கலாம் 


ராப்  சைமன்சன்  தான்  இசை . காதுகளைக்காயபப்டுத்தாத  மெல்லிய பி ஜிஎம் 

பாரி பீட்டர்சன்  தான்  ஒளிப்பதிவு . இரு  நாயகிகளையும் , வில்லனின்  தங்கையையும்  அழகாகக்காட்டி  இருக்கிறது  கேமரா 


130  நிமிடங்கள்  ஓடுவது  போல  எடிட்டிங்க்  செய்து  இருக்கிறார்கள் . கதையோட்டம், டைம்  டியூரேசன் எல்லாம்  தமிழ்ப்படம் போலவே 


வில்லனாக  நடித்தவர்  தான்  படத்தின்  இயக்குனர் . திரைக்கதை  கிறிச்டி   ஹால் 




சபாஷ்  டைரக்டர்


1   நாயகியின்  ஃபிளாஸ்பேக் , தற்கால  நிகழ்வுகள்  என  காட்சிகள்  மாறி  மாறி  வருவது   சிறப்பு 


2  நாயகன் - நாயகி  காதல்  காட்சிகள் , வில்லன் - நாயகி காதல்  காட்சிகள்   அனைத்தும்  கவிதை 


3   அப்பா  அம்மாவை  அடிப்பது  போல  தன் கணவன்  தன்னை  அடித்ததும்  இது  நம்முடன்  முடியட்டும் , தன் குழந்தைக்கும் இது  நேரக்கூடாது  என  முடிவெடுக்கும் இடம்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 

1  உன்னைப்பற்றி ஷாக்கிங்கா எதுனா  சொல்லு 


 எனக்கு இப்போ  நீ வேணும் 

2   எனக்கு  ரிலேசன் ஷிப்ல எல்லாம் நம்பிக்கை இல்லை 


நீ  ஒரு காதலோ ,கல்யாணமோ பண்ணாம அதைப்பத்தி எப்படித்தெரியும் ? 


3  எத்தனை  பொண்ணுங்க  உன்  பேச்சைக்கேட்டு மயங்கி இருக்காங்க ?


எல்லாரும் 


4  பகல்லயும் நீ ரொம்ப அழகா  இருக்க


5 என்னால உன்னை மறக்கமுடியல 


 நான்  தான்  உன் பக்கத்துல  இருக்கேனே ?

 அதான் பிரச்சனை 


6   ஒரே ஒரு முத்தம் கிடைக்குமா?உன்னை மறக்க  அது ஒண்ணு  போதும் 


7 இவ்ளோ  நடந்தும்  அது உறுதியா இருப்பதால்தான் அது தேக்கு மரமாவே இருக்கு 


8 உன்னைப்பற்றி நினைக்காம என்னால இருக்க முடியல 


9 நான் உன் கிட்டே  கொஞ்ச்ம பேசணும் .தனியா 


 சரி . போலாம் .பேசத்தானே?


10    உனக்கு சமைக்கத்தெரியுமா? 


 ஆமா,நமக்குப்பிடிச்சவங்களுக்காக சமைக்க இன்னும் பிடிக்கும் 


11   நீ   என்னைக்கிஸ்   பண்ணுனது உனக்கு வேணும்னா? இல்லை?பஸ்ல இருக்கறவங்கள வெறுப்பேத்தவா? 


12   நீ என்னை என்ன பண்ணுனேன்னே தெரியல , ஆனா என்னோட பேவரைட்  பர்சன் ஆகிட்டே 

13   நீ சந்தோஷமா இருக்கியா? 


 என் சந்தோஷமே நீ தான் 


14 நீ சந்தோஷமா இருக்கியா? 


எல்லாரும் எல்லாநேரத்துலயும்  சந்தோஷமா இருக்க மாட்டாங்க 


15   உனக்கு  யாரையாவது லவ் பண்ணனும்னு தோனுச்சு ன்னா  நான் ஒருத்தன் இருப்பதை மறக்காதே 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   அப்பாவின்  இறூதிச்சடங்கு  அன்று  அப்பாவைப்பற்றிப்பேச  நாயகியை  அழைக்கிறார்கள் . ஆனால்  நாயகியால்   எதுவும்  பேசமுடியவில்லை . பாராட்டிப்பேச   பாய்ண்ட்  கிடைக்காவிட்டல் என்ன? அம்மாவை அடித்தார் . அதனால்  எனக்கு  அவர்  இறப்பில் சோகம் எல்லாம் இல்லை என  பேசி இருக்கலாமே? 


2 டீன்  ஏஜ்  மகளை  ஒரு செல்வந்தர்  குடும்பம்  தனியே  விட்டு விட்டுப்போகுமா? பணிப்பெண்  நியமிக்க மாட்டார்களா? 


3   நாயகன்  பல வருடங்கள்  கழித்து நாயகியை  சந்திக்கும்  வரை  அவர் 96  பட  நாயகன்  போல  ராமன்  ஆக  இருந்தார் , ஜோடி யாரும்  இல்லை என்பதை  நம்ப முடியவில்லை . அதற்கான  அழுத்தமான  காட்சிகள்  வைக்கப்பட வில்லை 


4  நாயகி , நாயகியின்  அம்மா  இருவருக்கும்  முக  சாயல் ஒற்றுமை  கொஞ்சம்  கூட  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இரு  நாயககிகளின் அழகுக்காகவும், காதல்  காட்சிகள்  கவிதையாக  எடுக்கப்பட்டதற்காகவும்  பார்க்கலாம், ரேட்டிங் 2.5 / 5 


It Ends with Us
Theatrical release poster
Directed byJustin Baldoni
Screenplay byChristy Hall
Based onIt Ends with Us
by Colleen Hoover
Produced by
Starring
CinematographyBarry Peterson
Edited by
  • Oona Flaherty
  • Robb Sullivan
Music by
Production
companies
Distributed bySony Pictures Releasing
Release dates
  • August 6, 2024 (AMC Lincoln Square)
  • August 9, 2024 (United States)
Running time
130 minutes[4]
CountryUnited States
LanguageEnglish
Budget$25 million[5]
Box office$349.5 million[6][7]