Showing posts with label INJI IDUPPAZHAGI. Show all posts
Showing posts with label INJI IDUPPAZHAGI. Show all posts

Friday, November 27, 2015

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்



சின்ன வீடு படத்துல  கே பாக்யராஜ் எடுத்த அதே நாட் தான். தனக்கு வரப்போகும் சம்சாரம் ஜீரோ சைஸ் இடை அழகியா வரனும்னு எதிர்பார்க்கும் ஆள்  எதிர் மாறா பிந்து கோஷ் டைப் பார்ட்டியா அமைஞ்சா என்ன ஆகும்? மேரேஜ்க்கு முன் பொண்ணு குண்டாகி இருந்தா பரவால்லை , உண்டாகித்தான் இருக்கக்கூடாது எனும்  கருத்து தான் படம் /


 அங்கிள் பன் படத்துல ஆல்ரெடி  மொகன் லால் இப்டி ஒரு குண்டு  கேரெக்டர்  பண்ணி இருந்தப்போ யாரும் அதை கண்டுக்கலை. ஆனா அழகு ராணி அஸ்கா உதட்டழகி அனுஷ்கா இப்டி  பிந்துகோஷா வர்றார்னு தெரிஞ்சதும் தமிழன் அப்டியே  பதறிட்டான்.


ஹீரோயின்  சப்ஜெக்ட் படம் இது.அதனால  நாம அப்படியே ஹீரோயின்  கண்ணோடட்டத்தில் தான் படம் பார்க்கனும் ( நாம எந்தக்காலத்துல  ஹீரோவைப்பார்த்தோம் ?) 


ஹீரோ டபுள் ஃபிஃப்டி கேஜி நாயக்கர் மஹால் .உயரமாவும் வளர்ந்து அகலமாவும் வளர்றாங்க. வீட்ல  மாப்ளை பார்க்கறாங்க . எல்லா மாப்ளைங்களும்  பொண்ணு குண்டுன்னு ஒதுக்கிடறாங்க ( தமிழன்  சினிமா ல , பொது இடத்துல  ரசிக்கும்  பெண் செம  கட்டையா இருக்கனும்பான், ஆனா தான் தாலி கட்டும்  பொண்ணு மட்டும் ஸ்லிம்மா இருக்கனும்னு எதிர்பார்ப்பான்) 



அதனால  ஹீரோயின் சைஸ் ஜீரோ ஸ்லிம் ஆக   வில்லனோட  ஜிம்க்குப்போறாங்க . அங்கே  திடீர்னு ஒல்லி ஆகும் இல்லீகல் மருந்து சாப்ட்டு  ஒரு தோழி உயிருக்குப்போராடுது. ஹீரோயின் இன்சிடெண்ட் வெயிட் லாஸ்  போதைக்கு எதிரா விழிப்புணர்வுப்பிரச்சாரம்  மேற்கொண்டு  தோழியை எப்படிக்காப்பாத்தறாங்க என்பது தான் கதை ( படத்தை எப்படிக்காப்பாத்தப்போறாங்களோ? ) 


ஹீரோவா செம ஃபிட்னஸ் ஆர்யா. ஆள்  செம  எனர்ஜெட்டிக்கா  இருக்காரு ( நற நற ) இது ஹீரோயின் ஓரியண்ட்டட் ஃபிலிம் என்றாலும் அனுஷ்கா தான் நாயகின்னு தெரிஞ்சதும் ஒத்துக்கிட்டாராம். வாழ்க அவர் உள்ளம். வந்தவரை அவர் பங்கை கனகச்சிதமா செஞ்சிருக்காரு . ( 2 நாயகிங்க கூட அப்பப்ப ரொமான்ஸ் பண்றதுக்கு கசக்குதா? இதுக்கு  சம்ப்ளம் வேற தனியா ஹூம் ) 


ஹீரோயினா மல்கோவா மாம்பழக்கன்ன அழகி , அஸ்கா  உதட்டழகி அனுஷ்கா .படம் பூரா  இவரை சுத்தி தான்  கதை நகருது ( எங்கே நகருது? ஒரே இடத்துல இல்ல நிக்குது ) செண்ட்டிமெண்ட்ஸ்  சீன்  எல்லாம்  அழுவுது. என்னால  தாங்க  முடியல 


சைடு ஹீரோயினா , வில்லியா ஒயிட் சைட் சோனல் சவுஹான். சோனல்னு பேர் வெச்சதுக்கு கில்மா சேனல்னு வெச்சிருக்கலாம் . கல்யாண விசேசத்துக்குப்போனாக்கூட  லோ ஹிப்  சுடி , லோ கட் டி சர்ட்  தான்  போடுது. தாராள மனசு . பாப்பா  சீக்கிரம் முன்னுக்கு வந்துடும் 


ஊர்வசி  ஹீரோயினுக்கு அம்மா  கேரக்டர். வழக்கம்  போல்  லொட லொட பார்ட்டி 

 வில்லனா பிரகாஷ்  ராஜ் . என்னமோ  மேஜிக் மேன் மாதிரி  கெட்டப் . சுமார்  தான். 


ஒளிப்பதிவு நீரவ்  ஷா. அவர்  திறமைக்கு படத்தில்  வேலை இல்லை . திரைக்கதைக்கே  வேலை இல்லை , அப்புறம் என்ன ? 


கீரவாணி  இசைல  பாட்டெல்லாம்  சராசரி  ரகம்  தான் . பிஜி எம் கூட  சுமார் தான் 


திரைக்கதை , இயக்கம் எல்லாம் கனிகா.எல்லாரும்  ஜிம்க்கு போங்க . வாக்கிங்க் போங்க . சைக்கிளிங்க்  போங்க அப்டின்னு 5  நிமிசத்துல சொல்ல வேண்டியதை  2 1/4  மணி  நேரம்  சொல்றார். சப்பா 











மனதைக் கவர்ந்த  வசனங்கள்

சந்தோசமாக இருக்கும் பெண்கள்தான் அழகான பெண்கள் # இ இ


2 இதெல்லாம் லோக்கல் பஜார்லயே கிடைக்கும்.எக்சைட்டிங்கா ஏதாவது காட்டு.

ஆன்ட்டி.என் கிட்டே அப்டி ஏதும் இல்லையே? # இ இ ( டபுள் மீனிங்)

3 ஆயில் உணவில் அதிகம் ஆனா ஆயுள் குறைஞ்சிடும் #,இ இ

4 90% ஹார்ட் அட்டாக்ஸ் ,ஹார்ட் பிராப்லம்ஸ் சரியா எக்சசைஸ் பண்ணாததாலதான் வருது. # இ இ

5 ஆர்யா = ஏ சி ரூம்ல உக்காந்து ட்வீட் மட்டும் போட்டு சோசியல் சர்வீஸ் பண்றவன் நான் இல்ல #,யாரை தாக்கறாரு ? # இ இ


6 காதலைச்சொல்லும் வழிகள் கடலினும் பரந்தது # இ இ


7 நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் எப்போதும் நம்மை விட்டுச்செல்ல மாட்டார்கள் # இ இ


8 வெறும் லாஜிக்கை வெச்சு ஏ டூ இசட் வரைக்கும்தான் யோசிக்க முடியும்.ஆனா கற்பனை க்கு என்றும் எல்லையே இல்லை # இ இ


9 அனுஷ்கா = எப்போ பாரு 8மணி புராணமே பாடறானே? மேரேஜ்க்குப்பின் 8 மணிக்குப்பின் எதுவுமே செய்ய மாட்டானோ? # இ இ


10 என்ன ஆனாலும் சரி.என் ஆர் ஐ எருமையை கட்டிக்க மாட்டேன் -அனுஷ்கா


11 பாசம் இருக்கற இடத்துலதான் கோபம் இருக்கும்.ஆனா என் அம்மா அப்பா என் மேல கோபமே பட்டதில்லை #,இ இ


12 அனுஷ்கா டூ ஒல்லி வில்லி = உனக்கு இருக்கற வேகத்தை பாத்தா இந்தியாவில் இருக்கும் எல்லா கக்கூசையும் நீயே க்ளீன் பண்ணிடுவே போல


13 அழகு முக்கியம் இல்லை.ஆரோக்யம் தான் முக்கியம் # இ இ


14 உன் தலை எழுத்தை நீ தான் எழுதனும்.உன் எதிர் காலத்தை நீ தான் தீர்மானிக்கனும் # இ இ


15 சைஸ் ஜீரோ ஒரு பைத்தியக்காரத்தனம்.இன்சிடென்ட் வெயிட் லாஸ் ஒரு முட்டாள் தனம் # இ இ


16 அரசியல்லயும் மீடியாவுலயும் நிரந்தர நண்பரும் இல்லை.நிரந்தர எதிரியும் இல்லை # இ இ

17 மத்தவங்களுக்காக கஷ்டப்படறவங்க ரொம்ப ரேர் #,இ இ

18 GET FIT ,DONT QUIT

19 போர்க்களம் னு வந்துட்டா தர்மம் எது?அதர்மம் எது? ங்கறது முக்கியம் இல்லை.ஜெயிக்கறது தான் முக்கியம் # இ இ









 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தியேட்டர் பூரா பொண்ணுங்க கூட்டம்.காலேஜ்க்கு கட் அடிச்ட்டு வந்துட்டாங்க போல.ஆர்யா வரும்போது கை தட்டுற கோஷ்டி மாதிரி தான் தெரியுது.# இ இ


2 ஒருத்தன் காதலி,காதலியோட தங்கச்சியையும் கூட்டிட்டு வந்து நடு சென்ட்டர்ல உக்காந்துக்கிட்டான்.நல்லா இருங்கடே

3 ஓப்பனிங் சீன்ல அனுஷ்கா ஜாக்கெட்க்கு பேக் ல ஜிப் போட்டு விடறாங்க.தெறி ஓப்பனிங் # இ இ

4 சைஸ் ஜீரோன்னு ஒரு குத்தாட்ட்ப்பாட்டுக்கு பிரகாஷ்ராஜ் பிரேக் டான்ஸ் ஆடறாரு.அய்யோ # இ இ

5 பொண்ணு பார்க்க வரும் மாப்ளை கிட்டே தனியா பேச பொண்ணை பெட்ரூம்க்கு அனுப்பறாங்க.இது எந்த ஊர்ல? # இ இ


6 ஓப்பனிங் சீன்ஸ் ல ராஜா ராணி சாயல் தெரியுது # இ இ


7 சாதா காதல் கதை.மிக மெதுவான திரைக்கதை.ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கு # இ இ இடைவேளை


8 ஆர்யாவுக்கு ஏகப்பட்ட பிகருங்க செட் ஆகுதே எனும் வயிற்றெரிச்சல் அவர் படங்கள் தோல்விஅடைகையில் சரி ஆகிறது # இரண்டாம் உலகம் ,இஞ்சி இடுப்பழகி


9 மீடியம் பிளாப் : இஞ்சி இடுப்பழகி ப்ளாப்ப்பா.... கொஞ்சமாச்சும் தேறாதாண்ணே.."

10 இருக்கு.(தெலுங்குல) ஆனா இல்லை (தமிழ்ல) : lip lock ethum iruka film LA "


11 "அனுஷ்கா இருக்கு : என்ன விஷயம், கதை நல்லா இல்லையா, இல்லை கதையே இல்லையா?"



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 தெலுங்குப்பதிப்பில் 6 லிப் கிஸ்  சீனாம் .  தமிழ்ல மட்டும்  யு சர்ட்டிஃபிகேட் க்காக  அதை வெட்டிட்டாங்க அதையும்  மீறி  படத்தில்  சில  கிளு கிளு காட்சிகள் , வசனங்கள் . வாழ்க  வளமுடன் 


2 க்ளைமேக்ஸ்  ல  ஏதோ  ஒரு சாக்கை  வெச்சு  கோலிவுட்  விஐபிங்களை  ஒரு சீன்  நடிக்க வெச்சது 


3  படத்தில்  உருப்படியா  ஒரு மெசேஜ்  சொன்னது . பெண்களை  தரக்குறைவாக  கிண்டல் செய்யும்  வசனங்கள் எழுதும்  வாய்ப்பு  இருந்தும்  அதை செய்யாதது 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஹீரோ  ஆர்யா  நிஜமா  யாரை  நேசிக்கறார்னு  தெளிவா  இயக்குநராலயே சொல்ல  முடியலை . 2 ஹீரோயினையும்  சம அளவில்  லவ்வறார் ( அவர் யார் கிடைச்சாலும் லவ்வுவார் என்பது  வேறு விஷயம் , அவர் பர்சனல்  மேட்டர்.  திரைக்கதையில்  தெளிவா  இருக்க  வேணாமா? )


2  ஹீரோயினால்  வாயைக்கட்ட  முடியவில்லை  என்பதை  நாசூக்காக  சொன்னால் போதாதா?  அவரை ஒரு தீனிப்பண்டாரமாக  காட்சிக்கு காட்சி  காட்டிட்டு இருக்கனும்னா? கவர்ச்சி  காட்னா  ரசிக்கலாம். இதை  எல்லாம் எப்டி ரசிக்க? 


3  ஹீரோ  வேற  ஒரு பெண்  கூட  லிப்  கிஸ்  அடிச்சதைப்பார்த்த  பின்பும்  ஹீரோயின் அவர்  மேல்  எந்தக்கோபமும் இல்லாமல்  சகஜமா  இருப்பது  எப்படி?  நிஜ  வாழ்வில்  போட்டு  உலுக்கி  எடுத்துட மாட்டாங்களா? 


4  வில்லன்  அவ்வளவு  சோப்ளாங்கி  யாகவா  இருக்கனும்?  மீடியா  காதுக்கு  விஷயம், போகும் வரை  தேமேன்னா இருப்பான்/?








சி  பி  கமெண்ட் =இஞ்சி இடுப்பழகி = ஆரோக்யமான கதைக்கரு,ஆனால் ஐக்கியம் ஆக முடியாத சுவராஸ்யம் இல்லா திரைக்கதை, விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= சுமார்



 ரேட்டிங்= 2.25 / 5

ஈரோடு தேவி அபிராமியில் காலேஜ் பொண்ணுங்க கூட்டத்துக்கு நடுவில் பயந்துக்கிட்டே தனி ஆளா படம் பார்தேன். கோபியர் கொஞ்சும் ரமணா