ஃபாரீன் படங்கள் என்றாலே கிளாமரான காட்சி அமைப்புகள் கொண்டதாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தைத்தவிடு பொடியாக்கி தமிழ்ப்படங்கள் போலவே அம்மா, அப்பா செண்ட்டிமெண்ட்ஸ் , காதலி , மனைவி பாசப்பிணைப்பு காட்சிகள் கொண்ட கண்ணியமான படம் இது . ஆச்சரியப்படத்தக்க அளவில் இதில் தமிழ்ப்படங்களான 12 பி , இது நம்ம ஆளு , முந்தானை முடிச்சு போன்ற படங்களின் ரெஃப்ரன்சும் இருக்கிறது . 2023ஆம் ஆண்டு வெளியான எரா ஓரா (ERA ORA) STILL TIME என்ற படத்தின் சாயலும் இருக்கிறது. இரு படங்களுக்கும் மூலக்கதை ஏதோ ஒரு நாவலாக இருக்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .எப்படியாவது ஒரு நல்ல ஆண் துணையைக்கண்டறிந்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். நாயகன் ஒரு தொழில் அதிபர், தான் உண்டு தன் வேலை உண்டு என் இருப்பவர் . நாயகன் , நாயகி இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்
அடுத்த நாள் காலை எழும்போது இருவருக்கும் அதிர்ச்சி . இருவரும் ஒரே அறையில் ஒரே படுக்கையில் இருக்கிறார்கள் . இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆனதாகத்தெரிகிறது . இருவருக்கும் எதுவும் நினைவில்லை . அவரவர் பெற்றோருக்கு ஃபோன் பண்ணி தங்களுக்கு திருமணம் ஆனதை உறுதி செய்கின்றனர்
அடுத்த நாள் இரவு இருவரும் தூங்கி எழுந்திருக்கும்போது நாயகி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை
படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் புரியவில்லை ., இது டைம் ட்ராவல் கதையா? ஃபேண்ட்டசி கதையா? என குழப்பமாக இருக்கிறது . பிறகு திரைக்கதை மெல்ல மெல்ல சூடு பிடித்து அனைத்து சந்தேகங்களுக்கும் விடை அளிக்கிறது
நாயகியாக நடித்த பர்க்கு ஆஜ்பெர்க் (BURCU OZBERC) நம்ம ஊர் ஹன்சிகா மாதிரி முகச்சாயலிலும் கொழுக் மொழுக் உடல் அமைப்பிலும் அழகாக இருக்கிறார். இந்திய வம்சாவளி பெண் போலவே இருப்பது சிறப்பு, இவரது நடிப்பு அழகு . இருவரும் கணவன் மனைவியா? நம்ப முடியலை என சொல்லி இந்த உண்மை தெரியும் வரை நமக்கு தனித்தனி படுக்கை தான் என படுக்கையைப்பிரிக்கும் காட்சி அந்த் முகத்தில் தெரியும் பதட்டம் அக்மார்க் தமிழ்ப்பெண் தோற்றாள்
நாயகனாக நடித்த முரட் போஸ் (MURAT BOZ) நம்ம ஊர் பரத் மாதிரி முக சாயலுடன் அருமையாக நடித்திருக்கிறார். அப்பாவுடனான அந்த செண்ட்டிமெண்ட் காட்சியிலும் மாமனார் - மாமியார் உடன் பழகும் பாந்தத்திலும் கே பாக்யராஜ் சாயல் தெரிகிறது
நாயகியின் அம்மா , அப்பா , நாயகனின் அப்பா மூவரும் மிக யதார்த்தமாக குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவு ஷார்ப் ஆக கட் செய்திருக்கிறார் எடிட்ட்ர் . ஒளிப்பதிவு , பின்னணி இசை ஆர்ட் டைரக்சன் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்
சபாஷ் டைரக்டர்
1 அப்பாவுடன் ஏன் பேசுவதில்லை என் நாயகி நாயகனிடம் கேடும்போது அம்மாவின் இறுதிச்சடங்குக்கூட வர முடியாமல் ஆஃபீஸ் வேலையில் பிசியாக இருந்ததால் அப்பா என்னை வெறுத்துட்டார் என ஃபிளாஸ்பேக் சொல்லும் காட்சி
2 என் மனைவிக்கு என் அம்மா தந்த பரிசு இது , இப்போ அவள் மறைவுக்குப்பின் உனக்கு என மாமனார் மருமகளிடம் தங்க செயினை பரிசாகத்தரும் காட்சி
3 குழந்தையாக வரும் நபர் கொள்ளை அழகு அவள் கேட்கும் பொம்மை வாங்கி வரும் நாயகனைக்கண்டு குதித்து ஓடி வருவது காணக்கண் கோடி வேண்டும்
ரசித்த வசனங்கள்
1 உனக்கு ஒரு விஷயம் சரியாத்தெரியலைன்ன்னா அதையே திருப்பித்திருப்பிக்கேட்டுட்டு இருக்கக்கூடாது
2 உனக்கும், உன் சம்சாரத்துக்கும் நேத்து சண்டையா? நேத்து உனக்கு கால் பண்ணி இருக்கா? ஆனா நாட் ரீச்சபிள்னு வந்தததாமே?
நாட் ரீச்சபிள்னு வந்தா ரீசசபிள் அக இருக்க பிரியம் இல்லைனு அர்த்தம், இதை அவ கிட்டே சொல்லிடு
3 என்னோட ஆசை எல்லாம் ஒண்ணுதான். மேரேஜே ஆகாம ரொம்ப நாளா இருக்கும் நான் ஒரு நாள் தூக்கத்தில் எழுந்து விழிக்கும்போது எனக்கான துணை என் அருகில் இருக்கனும்
4 காலத்தின் கைகளில் உன் பிரச்சனைகளை ஒப்படைத்து விடு , எல்லாம் காலம் பார்த்துக்கும்
5 ஏம்மா,மின்னல்,இந்தப்பொம்பளைங்க எல்லாம் ஏன் எப்போப்பாரு அரவை மிஷின் மாதிரி லொட லொடனு பேசிக்கிட்டே இருக்கீங்க ?
6 ஒரே மாதிரியான கனவு இரு வேறு நபர்களுக்கு ஒரே நாளில் ஒரே சமயத்தில் வருவதற்குஅறிவியல்பூர்வமான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில்லை
7 என் அம்மா இறக்கும் முன்னே பெரிய ஆள் ஆகி சாதிச்சுக்காட்டனும்னு நினைச்சேன், ஆனால் இந்த உலகில் பலருக்கும் அந்த பாக்கியம் கிட்டாமயே போய்டுது
8 நான் இதுவரைக்கும் தொடாத ஒரு பொண்ணு என்னால கர்ப்பம் ஆனா என்பது விசித்திரமா இருக்கு
நல்ல வேளை , நீ தொட்டிருந்தா வீசு பூரா குழந்தைகள் காப்பகமா ஆகி இருக்கும்
9 உன் வாழ்க்கையை மாற்றி அமைக்கனும்னு தீர்மானிச்சா யாருக்காகவும், எதுக்காகவும் காத்திருக்காதே , உடனே செயல்படுத்து
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தக்க இப்படம் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது . ஆங்கில சப் டைட்டில் உண்டு ரேட்டிங் 2.75 / 5