ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு விட்னஸ் செக்யூரிட்டி ஆபீசர் .அதாவது ஒரு கொலை ,,கொள்ளை திருட்டு ஏதாவது நடந்தால் குற்றவாளியை நேரில் பார்த்த சாட் சியை அந்த கேஸ் கோர்ட்டில் நடக்கும் வரை சாட் சியை பாதுகாப்பாக தன கஸ்டடியில் வைத்திருப்பவர் .
நாயகன் ஒரு ஓவியர் .போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு உதவியாக இருப்பவர் . குற்றவாளியை நேரில் பார்த்த சாட் சி கொடுக்கும் விவரங்கள் , வர்ணனைகளை வைத்து குற்றவாளியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து கொடுப்பவர்
நாயகி ஒரு தனியார் டி வி யில் பணி புரிபவர் . அலுவலக வேலையாக ஒரு வேலை செய்யும்போது ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார் .கொலையை நேரில் பார்த்த சாட் சியான இவரை வில்லன் தன் கஸ் டடியில் வைக்கிறான்
ஒரு ஜவுளிக்கடையில் ட்ரையல் ரூமில் துணி மாற்றும்போது அங்கே ரகசியக்கேமரா போன் இருப்பதை ஒரு பெண் பார்த்து விடுகிறார் .அந்தப்பெண்ணை வீடியோ எடுத்த நபர் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்கிறான் . இந்த மிரடடல் பேர்வழியைத்தான் யாரோ கொடூரமாகக்கொலை செய்கிறார்கள் .அதைத்தான் நாயகி பார்த்து விடுகிறார்
கொலையை நேரில் பார்த்த அதிர்ச்சியில் நாயகி ஓடி வரும்பொது ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு பேச ரிகக்னைஸ் குறைபாடு ஏற்படுகிறது .அதாவது இவர் ஒரு முகத்தை நேரில் பார்த்தால் அடுத்த 10 நிமிடங்கள் கழித்து அதே முகத்தை நேரில் பார்த்தாலும் சரியாக அடையாளம் சொல்ல முடியாது
இப்படிப்பட் ட சூழலில் வில்லன் நாயகியை நாயகனிடம் அழைத்து வருகிறான் .நாயகி விபரங்கள் சொல்லச்சொல்ல நாயகன் கொலைகாரன் ஓவியத்தை வரைகிறான் . அந்த ஓவியத்தைப்பார்த்து வில்லன் அதிர்ச்சி அடைகிறான் .ஏன் எனில் அது நாயகனின் முகம் தான் .இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக டொவினோ தாமஸ் கலக்கி இருக்கிறார் .அல்டடல் , பந்தா இல்லாத இயல்பான நடிப்பு . ஆக்சன் காட் சிகளில் , சேசிங்க் காட் சிகளில் பொறி பறக்கிறது
வில்லன் ஆக வினய் தெனாவெட்டாக வருகிறார் . நாயகனை விட பர்சனாலிட்டியாக இருக்கிறார்
நாயகி ஆக த்ரிஷா அற்புதமாக நடித்திருக்கிறார் . கொலையைப்பார்த்து மிரளும்போதும் சரி ,தனக்கு வந்திருக்கும் நோய் கண்டு கலங்கும்போதும் சரி கலக்கல் நடிப்பு .தமிழ் சினிமாவில் பய முகத்தை அருமையாகப்பதிவு செய்தவர்கள் இருவர் தான் .1 நூறாவது நாள் நளினி 2 ஹலோ யார் பேசறது ஜீவிதா .அந்த பட்டியலில் இணைகிறார் த்ரிஷா
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம் .கார் சேசிங் ,ஹெலிகாப்டர் சீன என கலக்கலாகப்பதிவு செய்திருக்கிறது அவரது கேமரா . ஜாக்ஸ் பிஜோய் தான் இசை .5 பாடல்கள் . சுமார் ரகம் . பின்னணி இசை அருமை சமன் சாக்கோ வின் எடிட்டிங்கில் படம் 157 நிமிடங்கள் ஓடுகின்றது . பின் பாதியில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் . அகில் பால் + அனாஸ் கான் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்கள்
சபாஷ் டைரக்டர்
1 பரபரப்பாக நகரும் முதல் பாதி திரைக்கதை அருமை
2 பின் பாதியில் திரைக்கதை வேறு பாதையில் சென்றாலும் சுவராஸ்யமாகவே இருக்கிறது
3 நாயகன் , வில்லன், நாயகி உட்பட அனைவரது நடிப்பும் அருமை
ரசித்த வசனங்கள்
1 ஒருவரது முகத்தைப்பார்த்தால் முதலில் மனதில் தங்குவது அவரது ஹேர் ஸ்டைல் தான்
2 எல்லாருக்குமே சாப்பாடு ,இசை இந்த இரண்டில் பிடித்தவை ,அலாதியானவை என ஒரு பட்டியல் இருக்கும்
3 மிருகங்களோட முகத்தை வைத்து அடையாளம் காணும் அறிவு சாதா மனித மூளைக்கு இல்லை
4 உன் வில் பவரால் நீ அடைந்ததை வேற யாராலும் திருப்பி எடுத்துக்க முடியாது
5 ஒரு கொலை செய்ய அவன் என்னை ஒரு கருவி ஆக்கி இருக்கான்
கொலைக்கு சாட் சியாக உன்னை உருவாக்கிட் டான்னும் சொல்லலாம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அவ்ளோ பெரிய ஜவுளிக்கடையில் ஒரு செக்யூலாரிட்டி கூட இருக்க மாட்டா ங்களா? செல்போன் கேமரா வைத்தவனைத்துரத்த ஆள் இல்லை
2 வானிலை அறிக்கை வாசிக்கும் நாயகி திடீர் என துப்பறியும் ஆள் போல பாலோ செய்வது எப்படி ?
3 திருப்பங்கள் வேண்டும் என்பதற்காக வலிய திணிக்கப் பட் டதாகவே பின் பாதி திரைக்கதை அமைந்திருக்கிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U/A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் , ஆக்சன் த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம் .செம ஸ்பீடு படம் .ரேட்டிங் 3 / 5
Identity | |
---|---|
Directed by |
|
Written by |
|
Produced by |
|
Starring | |
Cinematography | Akhil George |
Edited by | Chaman Chakko |
Music by | Jakes Bejoy |
Production companies |
|
Distributed by | Sree Gokulam Movies |
Release date |
|
Running time | 157 minutes |
Country | India |
Language | Malayalam |
Box office | ₹23.20 crore |