Showing posts with label IAS. Show all posts
Showing posts with label IAS. Show all posts

Thursday, November 19, 2015

கேரளாவில் அசத்தும் நம்ம ஊர் ஐ.ஏ.எஸ் தம்பதி!


காதலின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து, வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கும் 
ஈரோடு கார்த்திகேயன்- சென்னை வாசுகி தம்பதியர், தற்போது கேரளாவின் அன்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தம்பதியராக அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கே...

உங்களின் காதல் எப்போது, எப்படி மலர்ந்தது?

(முதலில் பேச ஆரம்பித்த வாசுகி)" 2003-ல் மெடிக்கல் தரவரிசையில நான் தமிழகத்துலயே முதலாவதாகவும், கார்த்திகேயன் மூன்றாவதாகவும் இடம்பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில எம்.பி.பி.எஸ் படிக்க ஆரம்பிச்சோம். எங்களுக்கு சமூக சேவையில அதிக ஆர்வம் இருந்ததால, எங்க படிப்பை சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில மாத்திக்க ஆசைப்பட்டோம். அதன்படி ரெண்டு பேருமே ஃபைனல் இயர் படிக்கும் போது, ஐ.ஏ.எஸ் படிக்கலாம்னு ஒரே வேவ் லென்த்துல முடிவு பண்ணினோம். அந்த டைம்ல எங்க ரெண்டு பேருக்கும், ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு ஃப்ரெண்ட்ஸ்ங்கிற சர்க்கிளைத்தாண்டி, காதல் வைப்ரேஷன் இருந்துச்சி. அதை முதல்ல கார்த்திதான் சொன்னாரு. கொஞ்ச நாள் கழிச்சி, நானும் சம்மதம் சொன்னேன்."

மருத்துவத்துறையே பொதுமக்களுக்கு சேவை செய்கிற துறைதானே? குறிப்பாக ஐ.ஏ.எஸ் ஆனால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா?


"நீங்க சொல்றது சரிதான். மக்களுக்கு எதாவது நோய் வந்த பிறகுதான், மருத்துவரால் சேவை செய்ய முடியும்; சிகிச்சைக் கொடுக்க முடியும்" எனத் தொடர்கிறார், கார்த்திகேயன். ஆனால், 'மக்களின் தேவையை அறிந்து, பிரச்னை வருவதற்கு முன்பாகவே உதவுறதுக்கு, ஆளுமை பதவிகள்ல இருந்தால்தான் செய்ய முடியும். அதனால்தான் ஐ.ஏ.எஸ் ஆக முடிவு செய்தோம்."

உங்க ஐ.ஏ.எஸ் கனவு எப்போ நிறைவேறியது?

"நீங்க ஈஸியா இந்த கேள்வியை கேட்டுட்டீங்க. ஆனா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு மணி நேரமாவது ஆகுங்க. இருந்தாலும் சுருக்கமா சொல்றேன்" என புன்னகையுடன் பதிலளிக்கிறார், வாசுகி.

"2007-ம் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, முழு மூச்சாக நானும், கார்த்தியும் ஐ.ஏ.எஸ் படிக்க ஆரம்பிச்சோம். தேர்வுகளை எழுதி, முதல் முயற்சியிலேயே செலக்ட் ஆனோம். நான் தமிழ்நாட்டுல டாப் 10 மற்றும் கார்த்தி டாப் 20 ரேங்கிற்குள் இடம் பிடிச்சோம். எனக்கு ஐ.ஏ.எஸ் போஸ்டிங் கிடைச்சது. ஆனால் கார்த்திக்குக்கு ஐ.எஃப்.எஸ் போஸ்டிங்தான் கிடைச்சிது.

கார்த்திக் நீங்க எப்போ கலெக்டர் ஆனீங்க... உங்களுக்கு எப்போது திருமணம் நடந்துச்சி?

"எனக்கு ஐ.எஃப்.எஸ் போஸ்டிங் கிடைச்சாலும், எனக்கு ஐ.ஏ.எஸ் ஆகணும்கிறதுதான் ஒரே சாய்ஸா இருந்துச்சி. அதனால, கிடைச்ச ஐ.எஃப்.எஸ் பணியை ராஜினாமா செய்தேன். அடுத்து மறுபடியும் ஐ.ஏ.எஸ்-க்கு ப்ரிப்பேர் பண்ணினேன். ஐ.ஏ.எஸ்-ஆக செலக்ட் ஆன வாசுகி, உத்ரகாண்ட் மாநிலத்துல ட்ரெயினிங்கில் இருந்தாலும், தினமும் ட்ரெயினிங் முடிந்ததும், எனக்காக நோட்ஸ் எடுத்து இரவு நேரத்துல மெயில் பண்ணுவாங்க. மறுபடியும் 2009-ம் ஆண்டுல எக்ஸாம் எழுதினேன். அதுல ஐ.ஆர்.எஸ் பணிதான் கிடச்சிது. 

ஐ.ஆர்.எஸ் பணியில சேர்ந்து, லாங்க லீவ் எடுத்துகிட்டு, மறுபடியும் ஐ.ஏ.எஸ்-க்கு படிக்க ஆரம்பிச்சேன். மறுபடியும் 2010-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்தான் கிடைச்சிது. அந்த காலகட்டம் எல்லாம், 'நாங்க எவ்வளவு வேதனையில இருந்தோம் என வார்த்தையில சொல்ல முடியாது.

பொறுத்தது போதும்னு கிடைச்ச ஐ.ஆர்.எஸ் பணிக்கு ஓகே சொல்லி, ட்ரெயினிங்கில கலந்துகிட்டேன். அப்போ வாசுகி மத்திய பிரதேசத்துல சப்-கலெக்டரா இருந்தாங்க. அந்த நேரத்துல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நாக்பூர்ல ட்ரெய்னிங்கில இருந்துகிட்டே, தொடர்ந்து ஐ.ஏ.எஸ்-க்கு ப்ரிப்பேர் பண்ணிட்டேதான் இருந்தேன். இதனால, 1-2 மாசத்துக்கு ஒரு முறைதான் நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்குவோம்.

ஒரு வழியா 2011-ம் ஆண்டு, நான் ஐ.ஏ.எஸ் ஆக செலக்ட் ஆனேன். இந்த இடைப்பட்ட காலத்துல எங்க முதல் பொண்ணு, சையூரி பிறந்தாள். இந்த இடைப்பட்ட காலம் முழுக்க எங்க காதல், பாசம் எல்லாமே போன் மூலமாகத்தான் டெலிவரி ஆச்சி."
 
ரெண்டு பேரும் ஐ.ஏ.எஸ் ஆனீங்க சரி. எப்படி கேரளாவுல சங்கமிச்சீங்க?

"அவருக்கு ஐ.ஏ.எஸ் ட்ரெயினிங் முடிந்து, கேரளாவுல அசிஸ்டெண்ட் கலெக்டராக போஸ்டிங் கிடைச்சுது. அப்போ எனக்கு மத்தியப்பிரதேச மாநிலத்துல சப்-கலெக்டர்ல இருந்து, கலெக்டர் ஃப்ரமோஷன் வாங்குற தருணத்துல இருந்தேன்..ஆனா, கார்த்தி கூடவே இருக்கணும்னு, கேரளாவுக்கு 'கார்டர் சேஞ்ச்'க்கு அப்ளை பண்ணினேன். ஆனா, அப்போதைய-இப்போதைய மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், 'நம்ம வீட்டுப் பொண்ண நாம ஏன் கேரளாவுக்கு அனுப்பனும்; அவருடைய கணவரை இங்க போஸ்டிங் வாங்கிட்டு வரச்சொல்லுங்க'ன்னு சொல்லிட்டார்".

ஒருவழியா, 2012-ம் ஆண்டு கார்டர் சேஞ்ச் வாங்கி, கேரளாவுக்கே போயிட்டேன். 

நீங்க ரெண்டு பேரும், இப்போ எந்தெந்த துறைகளில் பணிபுரியிறீங்க?

"திருவனந்தபுரம் சப்-கலெக்டரா பணியாற்றிட்டு இருக்கும் நான், இன்னும் ஆறு மாசத்துல கலெக்டர் ஆகிடுவேன்" எனத் தொடர்ந்த கார்த்திகேயன், "வாசுகி, 'சுசித்வா மிஷன்' '(Suchitwa Mission) எனப்படும் 'தூய்மை கேரளா' துறையின் எக்ஸிகுடிவ் இயக்குனரா இருக்காங்க" என்றார். 

இந்த குறிப்பிட்ட காலகட்டத்துல நீங்க ரெண்டு பேரும் உங்களுடைய துறைகள்ல சாதித்தவைகள்?


"கிரீன் புரோட்டோகால், சபரிமலையை தூய்மையாக்குவது, கழிவு மேலாண்மை போன்ற பல திட்டங்களை வெற்றிகரமா செயல்படுத்துகிறேன்" எனக் கூறிய வாசுகி, 'வேஸ்ட்?' என்ற புத்தகத்தை எழுதி, அதனை கேரள முதல்வர் உம்மன்சாண்டி வெளியிட்டதாக பெருமிதம் கொள்கிறார். 

தொடந்த கார்த்திகேயன், "சமீபத்தில் வெற்றிகரமாக தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது, ஆக்கிரமிப்பு நீரோடைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தது போன்ற பல செயல்பாடுகளை செய்து முடித்தேன். தற்போது சப்-கலெக்டர் பதவியுடன், கூடுதலாக ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, ஏழை மக்களுக்கு இலவச வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தைக் கவனிக்கும் அதிகாரியாகவும் இருக்கிறேன்" என்றார். 

இரண்டு கலெக்டர்களும் வீட்டில் எப்படி?


"நாங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு, பல வருஷம் பொறுத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதனால, வீட்டுல ரெண்டு பேருக்கும் ஈக்குவல் ரைட்ஸ்தான்" என ஆரம்பித்தார் கார்த்திகேயன்.
"தினமும் காலையில குழந்தைகள் ரெண்டு பேரையும் ரெடி பண்ணி, ஸ்கூலுக்கு அனுப்பும் வேலை என்னுடையது. மாலையில குழந்தைகளுக்கு ஸ்னேக்ஸ் கொடுத்தும், இரவு சாப்பிட வைத்தும், தூங்க வைக்கிறதும் வாசுகியோட வேலை. இப்படி வீட்டு வேலைகளை சரிசமமாக பிரித்துதான் ரெண்டு பேருமே செய்கிறோம். பெண்களுக்கு சம உரிமை கொடுக்கச் சொல்லும் காலம் இதுங்க. அது வீட்டுக்குள்ள இருந்தே தொடங்கட்டுமே" என ஆச்சர்யப்பட வைக்கிறார்கள், ஐ.ஏ.எஸ் தம்பதியினர்.

இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு, நீங்க கத்துக்கிட்ட வாழ்க்கைப் பாடம் என்ன?

"எங்களோட காதல்தான், எங்க இலக்குக்கு வழிகாட்டியா இருந்துச்சி. அதனால, காதலுடைய பாதையில, துன்பமும்-இன்பமும் கலந்து பயணிச்சோம். முடிவுல நல்ல பாதை கிடைச்சிது. இப்போ மகிழ்ச்சியாக வாழ்ந்துட்டு இருக்கிறோம். மக்களுக்கு எங்களால் முடிந்த சேவைகளை சிறப்பாக செய்துகிட்டு இருக்கிறோம். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போவதுதான், காதலின் உண்மையான அர்த்தமாக நாங்க நினைத்தோம்; வெற்றி பெற்றோம்" என  புன்னகையுடன் முடித்தனர், நம்ம ஊர் ஐ.ஏ.எஸ் தம்பதியர்.

கலக்குங்க கலெக்டர்ஸ்!

thanks vikatan

Sunday, November 11, 2012

ஐ.ஏ.எஸ்., ஐ பி எஸ் படிக்க என்ன செய்யனும்? கல்விக்கட்டுரை @ கல்கி

நீங்க ..எஸ். ஆகணுமா

மனித நேயம்அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி மாணவர்களிடையே பேசிய உரையின் தொகுப்பு:

இந்திய ஆட்சிப் பணிக்கு அடிப்படைப் பயிற்சி
IAS என்பது எவராலும் எட்டமுடியாத சிகரம் கிடையாது. முயற்சி செய்தால் அனைவராலும் எளிதில் அடையக்கூடிய சிறந்த பணியாகும்.
தகுந்த பயிற்சியும், விடா முயற்சியும், சிறந்த வழிகாட்டுதல் மட்டுமே இந்தத் தேர்வுக்குத் தேவை. அதுதவிர, சமூகப் பொறுப்புடன் தரமான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்களின் வழிகாட்டுதல்களும் இன்றியமையாதவை.
பட்டப்படிப்பு முடித்த நிலையில், எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல், திடீரென்று ..எஸ். தேர்வுக்குத் தயார் ஆவதை விட, சிறிய வயது முதலே இதற்கான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றிக் கனியைச் சுலபமாகப் பறிக்கலாம். வளர்நிலையில் ஒவ்வொரு பருவத்திலும் எத்தகைய பயிற்சிகள் தேவை என்பதைப் பார்க்கலாம்.

இளம் குழந்தைகளுக்கு(Pre-School Stage)
இளம் வயதுக் குழந்தைகளின் மனத்தில், நீ கலெக்டராக ஆக வேண்டும்" என்று எடுத்துக் கூறி வளர்த்தாலே போதுமானது. ஏனெனில் ஆட்சிப் பணிகளுக்கு ஆளுமைப் பண்பு அவசியமானது. ஆளுமைப் பண்புகளை வளர்க்கக் கூடிய சுற்றுச்சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ‘என்னால் முடியும்என்று கூறும் அளவுக்குக் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு
இந்த வயதுக் குழந்தைகளுக்கு அவர்களது பாடப் புத்தகங்கள் தவிர, பொது அறிவு, விளையாட்டு, விஞ்ஞானம் போன்ற நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடிய பத்திரிகைகளில் ஆர்வம் வளரச் செய்யலாம்.
Scout, JRC (Junior Red Cross) போன்ற அமைப்புகளில் பங்குபெறச் செய்து, தொண்டு மனப்பான்மையை வளர்க்கலாம்.

வகுப்புகளில் தலைமை மாணாக்கர் பொறுப்புகள், வினாடி வினாப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் பங்குபெறச் செய்யலாம்.
6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு
இந்த வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகின்றன. எனவே, இவற்றை ஆண்டுத் தேர்வுகளுக்கு மட்டும் படிக்காமல் போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக் கொள்ளும்படி புரிந்து படிக்க வேண்டும்.
படிக்கும் முறை
* எடுத்துக்காட்டாக வரலாறு படிக்கும் போது அதிலுள்ள முக்கியமான கருத்துகளைக் குறிப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் படித்து ஆழ்மனத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
* அறிவியல் படிக்கும் போது உயிரியலுக்கும் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) இயற்பியலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* குடிமையியல் சுற்றுச்சூழலியல் புவியியல் இவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு படிக்கலாம்.
* தற்கால நிகழ்வுகளின் பின்புலங்களை அறிந்து கொண்டு, பொது அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு தரமான ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களைப் படிக்க வேண்டும். தொலைக்காட்சி, செல்ஃபோன், கணினியில் விளையாடுவது போன்றவற்றைத் தவிர்த்து, பயனுள்ள தகவல்களைத் தேடிப் படிக்க வேண்டும்.
பெற்றோர், இளம் வயது மாணவ - மாணவியரை நூலகத்திற்கு அழைத்துச் சென்று ஆர்வமூட்டுவதுடன், நல்ல சிறு சிறு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
இந்தப் பணிகைளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் பட்டப் படிப்பு முடித்தவுடன் ஒரே முயற்சியில் அகில இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகலாம்.
புத்தகங்களின் விவரம்

1. இந்திய பொருளாதார வளர்ச்சி - 11 ஆம் வகுப்பு
2. சமூக அறிவியல் - 6,7,8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு
3. அறிவியல் - 6, 7, 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு
4. விலங்கியல் - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
5. புள்ளியியல் - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
6. அரசியல் அறிவியல் - 11 மற்றும் 12 ஆம் வுகுப்பு
7. தமிழ் - 6, 7, 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு
8. இந்தியப் பண்பாடும் கலாசாரமும் - 12 ஆம் வகுப்பு
9. தமிழ் இலக்கியக் களஞ்சியம் - முனைவர். தேவிரா
குறிப்பு: 6,7,8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடப் புத்தகங்கள்
தமிழ்நாடு தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு பாட நூல் கழகத்தால் வழங்கப்படும் 6 முதல் 12 வகுப்பு வரை பாடப் புத்தகங்களை மட்டுமே படித்தால் போதுமானது. அதே போல் மத்திய தேர்வாணையம் (UPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு 6 முதல் 12 வரை உள்ள (NCERT) புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
NCERT Book List:
1. Science - Class VI
2. Science - Class VII
3. Science - Class IX
4. Science - Class X
5. India People and Economy - Class XII
6. India Physical Environment - Class XI
7. Fundamentals of Human Geography - Class XII
8. Fundamentals of Physical Geography - Class XI
9. Medieval India - Class XI
10. Ancient India - Class XI
11. Modern India - Class XII
12. India and the Contemporary World - 1 - Class IX
13. India and the Contemporary World - II - Class X
14. Indian Economic Development - Class XI
15. Science and Technology
பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களை இந்த நிலையிலிருந்து படிக்கத் தொடங்கலாம்.
சமயோசித சிந்தனைகளை (Common Sense) வளர்த்துக் கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு:

கல்லூரிப் பாடப் புத்தகங்களைப் படித்த பிறகு, கிடைக்கும் நேரங்களை வீணாக்காமல் போட்டித் தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்க இதுவே சரியான தருணம்.
இதுபோன்ற திட்ட மிட்டு படிப்பதன் முக்கியத்துவம் என்னவெனில் கல்லூரி முடித்த உடன் ஒருவர் வெற்றிபெற்றால் அவர் இந்திய அரசின் உயர்ந்த அரசுப் பணியாளர் (Cabinet Secretary) ஆகும் வாய்ப்பைக் கூட பெறலாம்.
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அகில இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகும் மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டின் உயர்ந்த பதவிக்கும் நாட்டிற்கு அதிகமான நாட்கள் பணியாற்ற வாய்ப்பும் கிடைக்கும்.
பயிற்சி மையங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது வழிகாட்டுதல்களோடு எவற்றைப் படிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு விடா முயற்சியுடனும் தளராத பயிற்சியுடனும் படித்தால் வெற்றி நிச்சயம்.
தற்கால நிகழ்வுகளை (Current Affiars) அறிந்துகொள்ள அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவற்றில் National Issues, International Issues, Schemes and Programmes, Economic Issues, Science and Technology, Sports and Important personalities ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மாதாந்திர அரசுப் பத்திரிகைகளான Yojana', 'Kurukshetra' மற்றும் "Civil Service Chronicle' ஆகிய பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
CSAT (Civil Service Aptitude Test)
முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாளான இதில் 10-ஆம் வகுப்பு வரையிலான கணக்கு மற்றும் ஆங்கில அறிவை சோதிப்பதற்கான வினாக்கள். இந்தத் தாளுக்கு R.S.Aggarwal எழுதிய Aptitude, Reasoning ability ஆகிய இரு புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இனி, ..எஸ்.தேர்வு பற்றியும் அதை எதிர்கொள்ளும் விதம் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்...

..எஸ்., .பி.எஸ். போன்ற பதவிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. நீங்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் மாநில அரசுக்காகப் பணி செய்வீர்கள். உங்களை நியமிப்பது குடியரசுத் தலைவர். கடும் போட்டிக்கிடையே தேர்வு எழுதித்தான் ..எஸ்., .பி.எஸ். என்று ஆகிறீர்கள் என்றாலும் இவை ஏதோ பட்டம் பெறுவது போன்றதல்ல. தவிர ..எஸ். .பி.எஸ் - ஸுக்கென்று தனித் தேர்வு கிடையாது. பலவித அரசு உயர்நிலைப் பணிகளுக்கான ஒரே தேர்வுதான் அது.
கீழே உள்ளவை போன்ற பணிகளுக்கு ஒரே தேர்வை எழுதினால் போதும்.
* IAS (இந்திய ஆட்சிப் பணி)
* IPS (இந்திய காவல் பணி)
* IFS (இந்திய வெளியுறவுப் பணி)
கீழே உள்ளவற்றின்க்ரூப் பணிகள் (அதாவது மேல்நிலை அதிகாரிகள் பிரிவு)
* இந்திய வருவாய் பணி
* இந்திய தபால் தொலை தொடர்பு கணக்கு மற்றும் நிதி சேவை
* இந்திய அஞ்சல் பணி
* இந்திய பாதுகாப்புப் பணி
* இந்திய ரயில் போக்குவரத்து சேவை
இவற்றில்க்ரூப் பிபணிகளில்கெஸடெட்’ (Gazetted) வகைக்கும் இதே தேர்வுதான்.
மேலே உள்ள அத்தனை பணிகளுக்குமான இந்த ஒரே தேர்வுஇந்திய சிவில் சர்வீஸ் தேர்வுஎன்று அழைக்கப்படுகிறது.
தேர்வில் நீங்கள் பெற்ற மதிப் பெண்ணின்படி தரவரிசை வழங்கப்படும். உங்கள் தர வரிசைப்படி உங்கள் விருப்பம் கேட்கப்படும். உங்களுக்கு எந்தப் பணி விருப்பமோ (அந்தப் பணியில் காலியிடங்கள் இருந்தால்) அந்தப் பணியைத் தேர்ந்தெடுக்கலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் குறைந்தபட்ச கல்வித் தகுதி எது?

பட்டப் படிப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதி வேண்டும். மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட பட்டப் படிப்பாக இது இருக்க வேண்டும்.
பட்டப் படிப்பு முடிவு வெளியாவதற்குள் முதல்நிலை தேர்வை எழுதலாம். ஆனால் முக்கியத் தேர்வை எழுதுவதற்குள் பட்டப் படிப்புச் சான்றிதழை அனுப்பிவிட வேண்டும்.
நான்கு முறை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள். அதற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுதலாம். உடல் ஊனமுற்றவர்கள் 40 வயதுக்குள்ளும், எஸ்.டி., எஸ்.சி. 35 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.
வயது வரம்பு
முதல்நிலைத் தேர்வு எழுதும்போது 21 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அந்த ஆண்டின் ஆகஸ்ட் 1 அன்று 30 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.
சில பிரிவினருக்கு உச்சவரம்பில் மேலும் சில வருடங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. இதோ அந்த விவரங்கள்.
எஸ்.சி., எஸ்.டி. 35 வருடங்கள்
பிற்படுத்தப்பட்டவர் - 33 வருடங்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1.1.1980லிருந்து 31.12.1989 வரை குடியேறியவர் 35 வருடங்கள். பாதுகாப்புப் பணியியில் ஈடுபட்டு, உடல் ஊனம் ஏற்பட்டு அதனால் பணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர் 33 வருடங்கள். பார்வையிழந்தவர், வாய் பேச இயலாதவர்கள், பிற உடல் ஊனமுற்றவர்கள்... 40 வருடங்கள்.
மேலும் சில விதிவிலக்குகளும் உண்டு

ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவில் தகுதி பெற்றவர் என்றால் அதில் அதிகபட்ச உரிமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது பார்வையிழந்த ஒருவர் எஸ்.டி. ஆகவும் இருந்தால் அவர் வயது உச்சவரம்பில் பத்து வருட சலுகையைப் பெறலாம்.
ஒருமுறை முதல்நிலை தேர்வு எழுதினால் (ஒரே ஒரு தாள் என்றாலும் கூட) அது தேர்விற்கான ஒரு முயற்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.
வயதுக்கான சான்று
மெட்ரிகுலேஷன் அல்லது பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இதே சான்றிதழை பலமுறை தேர்வெழுதும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வு
சிவில் சர்வீஸ் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
(1) முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) - இதில் ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுத்து சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போன்ற (Multiple choice type questions) கேள்விகள் கேட்கப்படும்.
(2) முக்கியத் தேர்வு (Main Examination) என்பது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றைக் கொண்டது.
முதல்நிலைத் தேர்வு
இது இரண்டு தாள்களைக் கொண்டது. மொத்தம் 400 மதிப்பெண்கள். இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்துதான் முக்கியத் தேர்வுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
முதல் தாள் என்பது பொதுப்பாடம் - 200 மதிப்பெண்கள். இரண்டாவது தாள் என்பது உளச்சார்பு (Aptitude) - 200 மதிப்பெண்கள். வினாக்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும்.
வினாக்களின் தரம் எப்படி இருக்கும்?

விருப்பப் பாடங்களில் பட்டப் படிப்புக்கு சமமாக இருக்கும். ஒவ்வொரு வினாத்தாளுக்கும் இரண்டு மணிநேரம் அளிக்கப்படும். பார்வை இல்லாதவர்களுக்குக் கூடுதலாக இருபது நிமிடங்கள். தவறாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு விடைக்கும் மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைத்து விடுவார்கள். எனவே ஏதாவது கேள்விக்கு பதில் தெரியவே தெரியாது என்றால் அதற்கு விடையைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிடலாம். அப்போது மதிப்பெண்ணைக் குறைக்க மாட்டார்கள்.
இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றால் அடுத்த கட்டத் தேர்வுக்குச் செல்லலாம் என்று கேட்டால் அதற்குக் குறிப்பான விடை இல்லை. ஏனென்றால் எவ்வளவு காலியிடங்கள் உள்ளதோ அதைப் போல சுமார் 12 மடங்கு பேரை முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களிருந்து தேர்ந்தெடுத்து முக்கியத் தேர்வுக்கு அனுமதிப்பார்கள். எனவே மற்றவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதும் உங்கள் வாய்ப்பைத் தீர்மானிக்கும்.
சென்ற ஆண்டுத் தேர்வில் குறைந்த பட்சம் 198 மதிப்பெண்கள் பெற்றவர்கள் (பொதுப் பிரிவு) அடுத்த நிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் குறைந்தபட்ச மதிப்பெண் 175. எஸ்.ஸி. என்றால் 165. எஸ்.டி. என்றால் 162. இந்தப் புள்ளிவிவரம் ஒரு தோராயமான முடிவுக்கு வருவதற்கு மட்டும் தான்.
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். முதல்நிலைத் தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் தர வரிசை முக்கியத் தேர்வை எழுதும் வாய்ப்பை உங்களுக்கு அளிப்பதோடு சரி. மற்றபடி இறுதிக்கட்ட முடிவுக்கு இந்த மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
முதல்நிலைத் தேர்வு - தாள் 1
சமீப காலத்திய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள்
இந்திய சரித்திரம், இந்திய தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய ஆட்சியமைப்பு, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம்.
பொதுவான அறிவியல் - சுற்றுச் சூழல், உயிரியல் உட்பட
முதல்நிலைத் தேர்வு - தாள் 2

கட்டுரை அளித்து அது தொடர்பான கேள்விகள்
ஒருவருக்கொருவர் இணைந்து பழகும் ஆற்றல், தகவல் பரிமாற்ற ஆற்றல், தர்க்கரீதியான அணுகுமுறை மற்றும் பிரச்னைகளைத் தீர்த்தல், முடிவெடுக்கும் ஆற்றல்.
அடிப்படைக் கணிதம் (பத்தாம் வகுப்புத் தரம்), தரவுகளை அறிந்து கொள்ளும் திறன் (Data interpretation), ஆங்கில மொழியில் பொருள் அறிந்து பதிலளிக்கும் திறமை (Comprehension)
முக்கியத் தேர்வு (Main Examination)
இந்தத் தேர்வின் விருப்பப் பாடங்கள், முதுகலை பட்டப் படிப்பிற்கு இணையாக இருக்கும். (பொறியியல் மற்றும் சட்டப் படிப்பு என்றால் இளநிலை பட்டப் படிப்புக்கு இணையாக இருக்கும்).
முக்கியத் தேர்வில் மொத்தம் ஒன்பது தாள்களை எழுத வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 300 மதிப்பெண்கள். பின்னர் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள்.
தாள் 1 - மொழிப்பாடம் (இந்திய அரசியல் அமைப்பில் உள்ள எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகளில் ஏதாவது ஒன்று)
தாள் 2 - ஆங்கிலம், தாள் 3 - கட்டுரை, தாள் 4, 5 - பொதுப்பாடம், தாள் 6, 7, 8, 9 - விருப்பப் பாடங்கள்.
விருப்பப் பாடங்களாக இரண்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு தாள்கள். முதல் இரண்டு தாள்கள் (மொழி மற்றும் ஆங்கிலம்) மெட்ரிகுலேஷன் தரத்தில் இருக்கும். இந்த இரண்டு தாள்களிலும் கட்டாயம் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டும். (என்றாலும் கூட ஒன்பது தாள்களையும் ஒரே சமயத்தில் மதிப்பீடு செய்துவிடுவார்கள்). ஆனால் இந்த இரண்டு தாள்களில் பெறப்படும் மதிப்பெண்களை தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
முதல் இரண்டு தாள்களில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களை வெளிப்படையாக அறிவிக்க மாட்டார்கள். நீங்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றீர்களா இல்லையா என்பதை மட்டும் தெரியப்படுத்துவார்கள்.
முக்கியத் தேர்வில் எவற்றை விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுக்கலாம்?
கீழே உள்ளவற்றில் ஏதாவது இரண்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

வேளாண்மை, கால்நடை அறிவியல், மானிடவியல், தாவரவியல், வேதியியல், கட்டடப் பொறியியல், வணிக மற்றும் கணக்கியல், பொருளாதாரம், மின்னணுப் பொறியியல், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம், மேலாண்மை, கணிதம், இயந்திரவியல், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல், பன்னாட்டு உறவுமுறைகள், மனோதத்துவம், பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல்.
மேலே உள்ளவற்றில் ஏதாவது இரண்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்றாலும் கீழ்க்கண்ட பாடங்களின் கலவையை (combination) அனுமதிக்க மாட்டார்கள்.
அரசியல் அறிவியல் - பன்னாட்டு உறவுகள் மற்றும் பொது நிர்வாகம்
வணிகவியல் - கணக்கியல் மற்றும் மேலாண்மை
மானிடவியல் மற்றும் சமூகவியல்
கணிதம் மற்றும் புள்ளியியல்
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம்
பொறியியல் பாடங்களில் கட்டடப் பொறியியல், மின்னணுவியல், இயந்திரவியல் என ஏதேனும் ஒரு பாடத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல்
விருப்பப்பாட தாள்களுக்கான கேள்விகளுக்கான விடைகள் கட்டுரை வடிவில் எழுத வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு தாளுக்கும் மூன்று மணி நேர அவகாசம் அளிக்கப்படும்.
வினாத்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருக்கும். அரசியலமைப்புச் சட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள எந்த மொழியிலும் இந்தத் தாள்களுக்கு விடை அளிக்கலாம்.
நேர்முகத் தேர்வு

உங்கள் அறிவுத் திறனை மதிப்பிடத்தான் நேர்முகத் தேர்வு என்று நினைக்கக் கூடாது. உங்கள் சமூகப் பண்புகள், நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில் ஈடுபாடு ஆகியவை மதிப்பிடப்படும். சுருக்கமாக சொல்வதென்றால் அரசுப் பணிக்கு ஏற்புடையவராய் நீங்கள் என்பதை மதிப்பீடு செய்யத்தான் நேர்முகத்தேர்வு.
எண்ணத்தைத் தெளிவாக வெளிப்படுத்துதல்; விவாதங்களைப் புரிந்து கொள்ளும் திறமை; பகுத்தறிவு; சமூக பொருளாதாரப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு; மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட தன்மை; ஆட்சிப் பணிக்கான நேர்காணல் என்பதால் ஆளுமைத் திறனும் மதிப்பீடு செய்யப்படும். தலைமைப் பண்பு, சமநிலைத் தேர்வு, நாணயம் போன்றவையும் மதிப்பிடப்படும்.
நேர்முகக் காணலில் கேட்கப்படும் கேள்விகள் எவை தொடர்பானவையாக இருக்கக்கூடும்?
உங்கள் பெயர் ஏதாவது பிரபலத்தின் பெயரை ஒத்திருக்கிறதா? அப்படியானால் அந்தப் பிரபலத்தைப் பற்றிய விவரங்கள்
உங்கள் லட்சியம் - எதற்காக ..எஸ். (அல்லது .பி.எஸ்.) ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள்?
உங்கள் பொழுதுபோக்குகள் தொடர்பான வினாக்கள்
சமீபத்திய சூடான செய்திகள்
அன்றாடச் செய்திகள் (சமீப தலைப்புச் செய்திகள் உங்கள் விருப்பப் பாடத்துடன் தொடர்பு கொண்டவை என்றால் அவற்றை மிகச் சிறப்பாக ஆய்வு செய்திருப்பது நல்லது)
உங்கள் மாவட்டம், மாநிலம் தொடர்பான கேள்விகள்.
படித்த கல்வி நிறுவனம் குறித்து.
தேர்வு மையங்கள்
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். ஆனால் சென்னையில் மட்டும் தான் முக்கிய தேர்வு நடைபெறும்.
பொதுவாக தேர்வுச் சுற்று எப்படி அமைகிறது?
தேர்வுக்கான அழைப்பு - நவம்பர் அல்லது டிசம்பர் (உதாரணத்திற்கு 2012 ஆண்டு என்று வைத்துக் கொள்வோம்)
முதல்நிலைத் தேர்வு - மே அல்லது ஜூன் (2013)
முக்கியத் தேர்வு - அக்டோபர் அல்லது நவம்பர் (2013)
நேர்காணல் - ஏப்ரல் அல்லது மே (2014)
இறுதி முடிவு வெளியிடல் - மே அல்லது ஜூன் (2014)
தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள

பள்ளிப் படிப்பு முடிந்தவுடனே இந்தத் தேர்வுக்குத் தயாராவது மிக நல்லது. சிலர் முதல்நிலைத் தேர்வு முடிந்தபிறகு அதன் முடிவுகள் வெளியான பிறகே முக்கியத் தேர்வுக்காகத் தயாராகிறார்கள். இது சரியல்ல. இடையிலுள்ள ஒவ்வொரு மாதமும் மிக முக்கியமானவை. எனவே முதல்நிலைத் தேர்வு முடிந்தவுடனேயே முக்கியத் தேர்வுக்குத் தயாராகிவிடுங்கள்.
பட்டப் படிப்பாக எந்தப் பாடத்தை எடுத்தீர்களோ அதையே விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்வது நல்லது.
தேர்வுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகத் தயார் செய்வது நல்லது. வேலை பார்த்துக் கொண்டே தேர்வுக்குத் தயார் செய்வது கஷ்டம். வேலை செய்தாலும் தேர்வுக்கு முன்பு இரண்டு மாதமாவது விடுமுறை எடுத்துக் கொண்டு முழுமையாக தேர்வுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல் முக்கியத் தேர்வு எழுதி முடித்தபிறகு அதன் முடிவு வெளியாகும் வரை காத்துக் கொண்டிருக்காமல் அப்போதிலிருந்தே நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் பதில்கள் வார்த்தைகளில் மட்டுமல்ல, சரியான உடல் மொழியிலும் வெளிப்படட்டும். ஆரோக்கியமான உடல்நலம், சுற்றுச்சூழல், வெற்றி ஆகியவற்றை அளிக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆல் தி பெஸ்ட்!
மனிதநேய அறக்கட்டளையின் சாதனை

சென்னையில் இயங்கும் சில நிறுவனங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை செய்து வருகிறதுமனித நேயஅறக்கட்டளை.
தற்போதைய சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியால் துவக்கப்பட்ட மனிதநேய அறக்கட்டளை இந்த அமைப்பை நடத்துகிறது.
இதுவரை இரண்டாயிரம் பேர்மனிதநேயம்அமைப்பு தந்த பயிற்சி மூலம் அரசாங்கப் பணிகளால் தேர்வாகியுள்ளனர் என்பது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கு முரிய செய்தி.
2006ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ..எஸ். / .பி.எஸ் பயிற்சி மையம், சாதி சமய வேறுபாடின்றி இலவசப் பயிற்சி அளிக்கிறது என்பதுடன் யாரிடமும் நிதியுதவியோ நன்கொடையே பெறக் கூடாது என்பதையும் கடைப்பிடிக்கிறது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும், க்ரூப் - 1 பணிகளுக்கான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையர் நடத்தும் தேர்வுகளுக்கும் இலவசப் பயிற்சி அளித்து வருகிறது.
பயிற்சி வகுப்பு, உணவு, தங்குமிடம், உடை, வேண்டிய பாடப் புத்தகங்கள், ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக தினசரி நாளிதழ்கள், யோகா பயிற்சி, மருத்துவப் பரிசோதனை - சிகிச்சை, போக்குவரத்து என அனைத்தும் தேர்வுப் பயிற்சி பெறுபவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகின்றன.
முதல்நிலைத் தேர்வுக்கு உதவ சில நூல்கள்
NCERT Secondary school text books & Class VIII to XII physics, chemistry, biology, history
Year book . Manorama or Publication division's Current Year Book
Competition success review, competition wizard, competition services chronicle
The wonder that was India & A.L.Bashyam
Mughal administtration & V.N.Day
Indian economy & S.K.Mishra and V.K.Puri
Constitutional history of India and national movement & R.C.Agarwal


நன்றி - கல்கி