2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஏழாம் அறிவு எந்த ஹாலிவுட் படத்தில் இருந்து உருவிய கதை என தெரியவில்லை., ஆனால் ஏழாம் அறிவு படத்தை அட்லீ இடம் தந்து ஹாலிவிட் படம் ஒன்று எடுக்கச்சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் ஹிப்னாட்டிக் படம். இது ஏற்கனவே இதே டைட்டிலில் 2021ல் ரிலீஸ் ஆன படத்தின் ரீ க்ரியேஷன் தான். 65 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 17 மில்லியன் டாலர் மட்டுமே வசூலித்த படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ் ஆஃபீசர். அவரது மகள் காணாமல் போய் 3 வருடங்கள் ஆகிறது . அந்த நிகழ்ச்சியால் மன நிலை பாதிக்கப்பட்ட நாயகன் எப்போதும் தன் மனைவி , மகள் நினைவாகவே இருக்கிறான் . மன நல மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று விட்டு வெளியே வரும் நாயகன் போலீஸ் காரில் செல்லும்போது ஒரு தகவல் வருகிறது.
ஒரு வங்கியில் குறிப்பிட்ட ஒரு லாக்கர் கொள்ளையடிக்கப்பட இருக்கிறது . அந்தத்தகவல் கிடைத்ததும் நாயகன் அந்த பேங்க்குக்கு விரைந்து செல்கிறான். குறிப்பிட்ட அந்த லாக்கரைத்திறந்து பார்த்தால் அதில் நாயகனின் மகளின் ஃபோட்டோ இருக்கிறது . நாயகனுக்கு ஒன்றும் புரியவில்லை
வில்லன் நோக்கு வர்மம் கற்றவன். அதாவது எதிராளியின் கண்களைப்பார்த்தாலே வசியம் செய்து விடுவான் . எதிராளியின் மூளையை அவன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் நினைத்ததை முடித்து விடுவான். அவனுக்கும் தன் மகள் காணாமல் போனதுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நாயகன் சந்தேகப்படுகிறான். துப்பு துலக்கக்களம் இறங்குகிறான்
நோக்கு வர்மம் கற்ற இன்னொரு பெண்ணின் நட்பு நாயகனுக்குக்கிடைக்கிறது . அவள் நாயகனுக்கு உதவுகிறாள் . இவளுடனான பயணத்தில் சாகசத்தில் நாயகனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது . நாயகனுக்கும் நோக்கு வர்மம் தெரியும். ஆனால் வில்லனை விட பவ்பர் ஃபுல் ஆன சக்தி கொண்டவன் நாயகன். நாயகன் , நாயகி இருவரையும் விட அதிக சக்தி கொண்டவள் தான் நாயக்னின் மகள் . அதனால் தான் அவள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறாள் . இதற்குப்பின் நாயகன் எடுக்கும் ஆக்சன் அவதாரம் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக பெஞ்சமிக்ன் அஃப்லெக்ஸ் அபாரமாக நடித்திருக்கிறார். அர்னால்டு பாணியில் அவரது ஆக்சன் அதிரடிகள் ரசிக்க வைக்கிறது .
நாயகி ஆக அலைஸ் பிராகா அழகாக நடித்திருக்கிறார். இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட . பிரேசில் நாட்டைச்சேர்ந்த நடிகை . 2002 ல் ரிலீஸ் ஆன சிட்டி ஆஃப் காட் படத்தில் நடித்தவர்
வில்லன் ஆக வில்லியம் எய்ட்ச்னர் மிரட்டி இருக்கிறார். பார்வையாலேயே அனைவரையும் கட்டிப்போடும் காட்சிகள் அபாரம்
மகள் ஆக வரும் சிறுமி கொள்ளை அழகு
94 நிமிடங்கள் ஓடும் படத்தில் பெரும்பாலும் சேசிங் காட்சிகள் தான் .பரபரப்பாக படம் ஓடுகிறது
ரெபல் ரோட்ரிக்ஸ் இசையில் பிஜிஎம் தெறிக்கிறது
ஒளிப்பதிவை இருவர் கவனித்திருக்கிறார்கள் . ஹிபானடிக் காட்சிகள் பிரம்மாண்டமாகப்படம் ஆக்கப்பட்டுள்ளன
ராபர்ட் ரோடிங்க்னஸ் தான் கதை , திரைக்கதை , இயக்கம் எல்லாம்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனுக்கு நடக்கும் சம்பவங்கள் செட் செய்யப்பட்டு ரீ க்ரியேட் ஆகும் தன்மை கொண்டவை என்ற சஸ்பென்ஸ் ஓப்பன் ஆகும் இடம் அருமை
2 நாயகனுக்கு உதவி செய்யும் பெண் , நாயகனின் மனைவி இருவரையும் கனெக்ட் செய்யும் யுக்தி அபாரம்
3 நாயகனின் மகளுக்கு என்ன ஆகி இருக்குமோ? என பதற வைத்து பின் அவள் ஒல்ரு சூப்பர் பவர் உள்ள ஆள் என்ற ட்விஸ்ட்டை ஓப்பன் செய்யும் காட்சி
4 நாயகனின் மகள் அறிமுகக்காட்சியில் தொட்டால் சரியும் சீட்டுக்கட்டு போல செட்டப்பை பிரம்மாண்டமாகக்காட்டிய ஆர்ட் டைரக்சன்
ரசித்த வசனங்கள்
1 நீங்க் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத விஷயங்களை ஹிப்னாடிக்சால செய்ய முடியும், உங்களுக்குத்தேவையான வேலையை அவங்க மூளையை வெச்சு செய்ய முடியும்
2 டெலிபதியால மைண்ட் ரீடு மட்டும் தான் செய்ய முடியும், ஹிப்னாடிசத்தால இன்சிடெண்ட்டை ரீ ஷூட் செய்ய முடியும்
3 நீ எனக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கே
அதை எனக்குக்கத்துக்கொடுத்ததே நீ தான்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - லிப் லாக் சீன் மட்டும் ஒரு இடத்தில் உண்டு , யூ படம் தான்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் பிரியர்கள் பார்க்கலாம் , படம் போர் அடிக்காமல் ஸ்பீடாகப்போகிறது . ரேட்டிங் 2.75 / 5
Hypnotic | |
---|---|
Directed by | Robert Rodriguez |
Screenplay by |
|
Story by | Robert Rodriguez |
Produced by |
|
Starring | |
Cinematography |
|
Edited by | Robert Rodriguez |
Music by | Rebel Rodriguez[2] |
Production companies | |
Distributed by | |
Release dates |
|
Running time | 94 minutes[3] |
Country | United States |
Language | English |
Budget | $65 million[4] |
Box office | $16.3 million[5][6] |