என்னதான் வித விதமாக வாய்க்கு ருசியாக டிபன் சாப்பிட்டாலும் தமிழனுக்கு புல் மீல்ஸ் சாப்பிட்டால் தான் ஒரு திருப்தி . அதே போல சிறுகதைகளின் தொகுப்பு , அல்லது குறும்படங்களின் தொகுப்பு எனில் அவ்வளவா அவன் ரசிப்பதில்லை . ஒரு முழுப்படம் பார்த்த திருப்தியை அது தருவதில்லை என நினைக்கிறான். இந்த நிலை மாற வேண்டும். . அனைவரும் அதை வரவேற்க வேண்டும் .
இந்தப் படத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நான்கு குறும்படங்களை இணைத்திருக்கிறார்கள் .29/3/2024 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது அமேசான் பிரைம் , , ஆஹா தமிழ் ஆகிய ஓடி டி தளங்களில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
1 ஹேப்பி மேரீடு லைப் - திருமண்ம் ஆன பின் பெண் தான் கணவன் வீட்டுக்குப்போகிறாள் . ஆண் ஏன் மனைவி வீட்டுக்குப்போகக்கூடாது . ஆண் தான் பெண்ணுக்குத் தாலி கட்டுகிறான் , ஏன் ஒரு பெண்
ஆணுக்குத்தாலி கட்டக்கூடாது என்ற கேள்வியை படம் எழுப்புகிறது . முதல் கேள்விக்கு பதில் வீட்டோட மாப்பிள்ளை என அவனை யாரும் மதிக்க மாட்டார்கள் .இரண்டாவது கேள்விக்கு பதில் தண்ணி அடிக்க தன தாலியை தானே கழட்டி அடமானம் வைத்து விடுவான் . எனக்கு இந்தக்கதை கான்செப்ட்டே பிடிக்கவில்லை . ஆனால் பெண்கள் கை தட்டி ரசிப்பார்கள்
2 கோல்டன் ரூல்ஸ் - நாயகன் , நாயகி இருவரும் காதலிக்கிறார்கள் . தங்கள் பெற்றோரிடம் சொல்லும்போது தான் ஒரு உண்மை தெரிய வருகிறது . இருவரும் பெரியப்பா - சித்தப்பா வாரிசுகள் .அதாவது இருவரும் அண்ணன் - தங்கை முறை சொந்தம் . இதற்குப்பின் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ் . இதுவும் எனக்குப்பிடிக்கவில்லை . 12 நிமிடப்படம் தான்
3 தக்காளி சட்னி - நாயகன் - நாயகி இருவரும் காதலர்கள் . இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் . ஒரு கட்டத்தில் நாயகனுக்கு வேலை போகிறது .காதலியிடம் செலவுக்குப்பணம் வாங்கி சமாளிக்கிறான் . பணத்துக்கு சிரமப்படும் போது நாயகனுக்கு ஒரு ஆபர் வருகிறது .கேபிள் சங்கரின் நான் ஷர்மி வைரம் நாவலில் வரும் நாயகன் போல ஆண் விலை மகன் ஆகும் வாய்ப்பு . கரும்பு தின்னக்கூலியா? ரன்பது போல நாயகன் அந்த வேலையை செய்கிறான் . அவன் வாழ்க்கையில் இரு திருப்பங்கள் வருகின்றன . ஒரு முறை ஹோட்டலுக்குப்போனபோது கஸ்டமராக அவனது அம்மாவே அங்கே இருக்கிறாள் . அடுத்து நாயகன் இப்படிப்பட்ட தொழில் தான் செய்து வருகிறான் என்பது தெரிந்த நாயகி எடுக்கும் வித்தியாசமான முடிவு . இந்தத்தொகுப்பில் இந்தக்கதை தான் மெய்ன் கதை போல , அதிக நீளமும் இதுதான்
4 நாயகன் , நாயகி இருவரும் இரு குழந்தைகளுக்கு பெற்றோர் . 8 வயது சிறுமி . 5 வயது சிறுவன் . இருவரையும் டி வி ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க வைக்கிறார்கள் . இருவருமே புகழ் பெறுகிறார்கள் . வசதியும் கிடைக்கிறது . குழநதைகள் வயதுக்கு மீறிய வசனம் பேசி நடிப்பது அப்பாவுக்குப்பிடிக்கவில்லை .
பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் . என மகளை எனக்குப்பார்த்துக்கத்தெரியும் என்கிறாள் . ஆனால் விபரீதமான சம்பவம் நடக்கிறது . இதை பெற்றோர் எப்படி எதிர் கொண்டனர் என்பது மீதி கதை
முதல் கதையில் ஜோடியாக ஆதித்யா பாஸ்கர் - கவுரி ஜி கிஷன் நடித்திருக்கிறார்கள் . இதில் கவுரி நல்ல அழகு , நடிக்க அதிக வாய்ப்பில்லை . நாயகன் வசனம் பேசும் இடங்கள் எல்லாம் டிராமா பார்ப்பது போல இருக்கிறது . நாயகிக்கு 2 இடங்களில் தான் க்ளோப் ஷாட் , நாயகனுக்கு 37 இடங்களில் க்ளோப் ஷாட் ,. என்ன கொடுமை சார் இது ?
இரண்டாவது கதையில் ஜோடியாக சாண்டி - அம்மு அபிராமி நடித்திருக்கிறார்கள் . அதிக வாய்ப்பில்லை . வந்த வரை ஓகே
3 வது கதையில் ஜோடியாக சுபாஷ் - ஜனனி அய்யர் நடித்திருக்கிறார்கள் .இருவருமே நல்ல நடிப்பு ,குறிப்பாக ஜனனி நாயகனை மடக்கும் க்ளைமாக்ஸ் காட்சி குட்
4 வது கதையில் ஜோடியாக கலையரசன் -சோபியா நடித்திருக்கிறார்கள் .இருவருமே நல்ல நடிப்பு ,குறிப்பாக கலையரசன் கண்களைக்கலங்க வைக்கும் உணர்ச்சிகரமான நடிப்பு . டி வி ஷோக்கள் நடத்துபவர்கள் , ரசிப்பவர்கள் இரு தரப்புக்கும் செப்பல் ஷாட்
சதீஷ் ரகுநாதன் வான் இசை குட். 3 சின்னசின்ன பாடல்கள் . பின்னணி இசை ஓகே ரகம் . கோகுல் பெனாய் ஒளிப்பதிவு சராசரி தரம் எடிட்டிங்க் முத்தையன் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது
கதை திரைக்கதை வசனம் இயக்கம் விக்னேஷ் கார்த்திக் . சமூக அக்கறை தெரிகிறது . ஆனால் எதற்கும் சரியான தீர்வு சொல்லாமல் முடிவை நம்மிடமே விடுகிறார்
சபாஷ் டைரக்டர்
1 நான்கு தனித்தனிக்கதைகளையும் இணைக்க கையாண்ட யுக்தி மிக எளிமை என்றாலும் அருமை
2 முதல் இரண்டு கதைகளில் செயற்கையான நாடகத்தனம் தெரிந்தாலும் 3 வது , 4 வது கதைகளில் அழுத்தமான முத்திரையைப்பதித்தது
3 கலையரசன் , ஜனனி , அம்மு அபிராமி மூவரின் அருமையான நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 புகுந்த வீட்டில் பெண்கள் ராணி மாதிரி வாழ்கிறார்கள்< ஆனால் பிறந்த வீட்டில் ராணியாகவே வாழ்கிறார்கள்
2 ஒரு விஷயத்தை முதல் தடவை யாராவது செய்யும் வரை எல்லாமே பிராக்டிக்கலாக முடியாத விஷயம் தான்
3 ஒரு மாற்றத்தை முதல் முறை யாராவது கொண்டு வரவேண்டும் , அது ஏன் நானாக இருக்கக்கூடாது ?
4 என் சம்சாரம் டீ போட்டா அது காபி மாதிரி நல்லாருக்கும்
5 ALL IS FAIR IN LOVE AND WAR
6 நாம யாரையாவது கொலை பண்ணினா அதுக்கு ஜெயில் தண்டனை, ஆனா கோழி , ஆடு வெட்டினா அது கொலை இல்லை நம்ம சவுகரியத்துக்கு மாத்திக்கிட்டோம்
7 நம்ம சைஸ்க்கு ஏத்த மாதிரி சட்டை போடுவது போல நம்ம இஷ்டத்துக்கு சட்டத்தை உருவாக்கிக்கிட்டோம்
8 நேத்து நைட் பிக்பாஸ் பார்த்தியா?ஏன் புரியாத மாதிரி பேசறே?
9 சமூகத்த்தில் 16 வயசுக்கீழே உள்ள சிறுவர்கள் வேலை செய்தால் அது குழந்தை தொழிலாளர் சட்டப்படி தவறு . ஆனா டி வி ஷோக்களில் நடிக்கலாம் ?
10 குழந்தைகளின் அழகே அவங்களோட வெகுளித்தனம் தான் , அதை நாசம் பண்ணிடாதீங்க
11 குழந்தைகளை அவங்க வயசுக்கு மீ றிய பாத்திரங்களில் டி வி ஷோக்களில் நடிக்க வைப்பது ரேப்பிஸ்ட் கிட்டே கூட்டிக்கொடுப்பதற்கு சமம், அதை செய்யாதீங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இப்ப எல்லாம் பெண் வீட்டார் தான் கண்டிஷன் போடுகிறார்கள், அவர்கள் வைத்ததுதான் சட்டம் . அது தெரியாமல் இன்னும் பெண் உரிமை அது இது என வசனம் வேற
2 ஒரே ஊரில் இருக்கும் அக்கா - தங்கை இருவரும் 25 வருடங்களாக பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்காதது எனோ?
3 ஆண் விலைமகன் என தெரிந்தும் காதலனை மணக்கத்தயாராக இருக்கும் நாயகி ..
4 டி வி சுடேஷனில் கரண்ட் போய் விட்டால் ஜெனரேட்டர் இருக்கும் .அது போக அங்கே அவ்ளவ் கூட்ட நெருக்கடியில் ரேப் நிகழ வாய்ப்பில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - A
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் கதை பெண்களுக்குப்பிடிக்கும் .இரண்டாவது கதை வேஸ்ட் . 2 , 4 இரண்டும் குட் . ரேட்டிங் 2.5 / 5
பகிரலை | |
---|---|
இயக்கம் | விக்னேஷ் கார்த்திக் |
எழுதியவர் | விக்னேஷ் கார்த்திக் |
உற்பத்தி | கே.ஜே.பாலமணிமார்பன் சுரேஷ் குமார் |
நடிக்கிறார்கள் |
|
ஒளிப்பதிவு | கோகுல் பெனாய் |
திருத்தியவர் | முத்தையான் உ. |
இசை | சதீஷ் ரகுநாதன் வான் |
உற்பத்தி நிறுவனங்கள் | KJB டாக்கீஸ் ஏழு வாரியர் படங்கள் |
வெளிவரும் தேதி |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |