ஒரு இயக்குநர் தன் வாழ்வில் அவர் சந்தித்த பத்து பெண்களின் கதை தான் பதினொரு இயக்குநர்கள் இயக்கியுள்ள “எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் ப்ரெசென்ட்” படத்தின் கதை.
ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10 நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.
திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குநர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது எக்ஸ்.
சிறுவயதில் கே தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் சந்திக்கும் பெண்ணில் இருந்து, அவரது முதல் படத்திற்கு உதவும் பெண், பள்ளிப்பருவ காதலி, மனைவி என பலரது வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து இருக்கிறார்கள் இந்தியாவின் நியூ-ஜென் இயக்குநர்கள்.
கல்கத்தாவில் இருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்க செல்கிறான் கே. அங்கு இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் இரவு முழுவதும் வேலை பார்ப்பதால், அவனுக்கு பகலில் மட்டும் வீடு தேவைப்படுகிறது. காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு பெண் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புகிறாள். இருவருக்கும் அந்த ஒரே வீட்டை வாடகைக்கு விடுகிறார் வீட்டின் உரிமையாளரான பாடகி உஷா உதுப். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே ஆறு மாதம் அந்த வீட்டில் தங்குகிறார்கள். திடீரென ஒருநாள், கிஷன் ஏதோ அவசர நிகழ்விற்காக கல்கத்தாவை விட்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தப்பெண் கதறி அழுவதோடு அந்தக்கதை முடிகிறது. இப்படி படம் முழுக்க காதலும், காமமும் கலந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் வரும் காட்சிகளை இயக்கி இருப்பவர் சூது கவ்வும் நலன் குமாரசாமி. அந்தக்காட்சிகளை எழுதியது ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அவர் வேறு சில காரணங்களால் இயக்கமுடியாமல் போக, பின் நலன் இயக்கி இருக்கிறார். படத்தின் இந்தக் காட்சிகளுக்கு திரை அரங்கில் பலத்த சிரிப்பலை.
தனித்தனி படம் என்பதால் சான் ஃப்ரானிஸ்சோவில் ஒரு பெண்ணின் கதை, லண்டனில் ஒரு பெண்ணின் கதை என ஒவ்வொரு இயக்குநரும் கலர்ஃபுல்லாக எடுத்து இருக்கிறார்கள். முழுப்படமும் இரண்டு நாட்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தை எடிட் செய்து ஒரு கோர்வையாக மாற்ற மட்டும் ஒரு ஆண்டு காலம் ஆகி இருக்கிறது. முழுப்படத்தையும் ஸ்ரீகர் பிரசாத்தும், விஜய் பிரபாகரனும் எடிட் செய்து இருக்கிறார்கள்.
பல கதைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால், படம் சற்றே தலை சுற்ற வைக்கும். சினிமா ஆர்வலர்கள், வித்தியாச சினிமா பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
பிரமாச்சாரிகள் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனா தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பாங்க இல்லையா? அந்த மாதிரி ஒரு பார்ட்டி.. 4 ஃபிரண்ட்ஸ்சும் கார்ல கிளம்பறாங்க கமலின் பஞ்ச தந்திரம் படத்துல பெங்களூர் போற மாதிரி வேகாஸ் போறாங்க. அங்கே போய் சரக்கு அடிச்சு மட்டை ஆகறாங்க..
விடிஞ்சு பார்த்தா ஏகப்பட்ட மாற்றங்கள்.. மாப்ளையை காணோம்.. பாத்ரூம்ல ஒரு புலி இருக்கு. விடுதலைப்புலி அல்ல, காட்டுப்புலி.. சோபாவுல ஒரு கைக்குழந்தை இருக்கு, ஒருத்தன் பாக்கெட்ல ரூ 80000 க்கு ஷாப்பிங்க் பண்ணுன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பில் இருக்கு. ஒருத்தன் பல் உடைஞ்சு கிடக்கு. அவன் பல் டாக்டர் வேற.. யாருக்கும் ஒண்ணும் புரியல. நைட் என்ன நடந்ததுன்னு நினைவும் இல்லை
அதைக்கண்டுபிடிக்க மீதி இருக்கும் 3 பேரும் கிளம்பறாங்க.. போற வழில கார் டிக்கில ஒரு சத்தம் கேட்குது. திறந்து பார்த்தா யார்னே அறிமுகம் இல்லாத ஒரு ஆள் டிரஸ்சே இல்லாம கிடக்கான்.. எதுக்காக என்னை 4 பேரும் சேர்ந்து ரேப் பண்ணுனீங்க?ன்னு கேட்டுட்டு அவன் ஓடிடறான்.. இவங்க 3 பேரும் செம காண்ட் ஆகிடறாங்க.. அய்யய்யோ.. இதெல்லாம் வேற நடந்திருக்கா? இன்னும் என்ன என்ன ஆச்சோ? மாப்ளை உயிரோட இருக்கனா? யாராவது போட்டுத்தள்ளிட்டாங்களா?என்பதுதான் மிச்ச மீதிக்கதை..
திரைக்கதைல என்ன சுவராஸ்யம்னா மர்மத்துக்கு விடை கண்டு பிடிக்கப்போன இடத்துல 4 பேர்ல ஒரு ஆள் ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி மேரேஜும் பண்ணி இருக்கான்.. அந்த பொண்ணுக்குத்தான் 80000 டாலர் செலவு பண்ணி இருக்கான்.. இப்போ அந்த பணத்தை மீட்க சீட்டு ஆடி 82,400 டாலர் சம்பாதிக்கறாங்க
படத்துல முதல்ல நம்ம மனம் கவர்வது அந்த தாடிக்கார ஆள் தான்.. கஞ்சா கறுப்பு மாதிரி முணு முணுன்னு பேசறார்.. சந்தானம் மாதிரி கவுண்ட்டர் பஞ்ச் கொடுக்கறார்.. ஆரவாரம்./. படத்துல மாப்ளையா வர்றவர் தான் முறைப்படி ஹீரோ, ஆனா அவருக்கு காட்சிகள் கம்மிதான்.. அந்த தாடிக்காரர் குழந்தையை படுகர் இனத்தவர் போல் மார்போடு கட்டிக்கொண்டு அலைவது அழகு
மனம் கவர்ந்த வசனங்களில் நினைவில் நின்றவை
1. விடிஞ்சா மேரேஜ், மாப்ளை எங்கே?
இந்த மேரேஜ் நடக்காதுன்னு நினைக்கறேன்,மாப்ளையை காணோம்..
2. டேய்.. இந்த புக்ல குரூப்பா விளையாண்டா ஜெயிக்கலாம்னு போட்டிருக்கு
அது இல்லீகல்
தப்பு, சுய உரிமை
3. என்னது? நீ டாக்டரா? வெறும் பல்டாக்டர்தானே, ஓவரா சீன் போடாத..
எனக்குத்தெரியும், உனக்குத்தெரியுதா?ன்னு செக் பண்ணேன்
5. வெளீல வாங்கறதை விட நாம தங்கற ஹோட்டல்ல எல்லாமே 4 மடங்கு விலை அதிகமா இருக்கும், அதனால எதுவும் வாங்கக்கூடாது
6. நானும், அவளும் 3 வருஷம் ஒண்ணா இருக்கோம்.. அவளை கல்யாணம் பண்ணிக்கப்போறேன்
டேய், சொன்னாக்கேளு, அவ ஒரு ரூட்டு ( பீட்ரூட்டா/)
7. உன் காதலி வேற ஒருத்தன் கூட படுத்து இருந்தது கூட பரவாயில்லை, போயும் போயும் ஒரு பார் அட்டெண்டர் கிட்டே படுத்ததை தான் எங்களால தாங்கிக்க முடியல..( தாங்கிக்க முடியாத அளவு அவ்ளவ் வெயிட் பார்ட்டியா?)
8. தம்பி.. லிஃப்ட் மேலே போகுது...
நாங்களும் தான்,. ஏன்? நாங்க மேலே போகமாட்டோமா?
9. நான் தனி ஆள்.. அதாவது தனிக்காட்டு ராஜா.. என் காட்டுக்குள்ள இன்னொரு ராஜா வந்தான்.. இப்போ 2 ராஜா.. அப்படியே 4 ராஜா ஆயாச்சு.. 4 ராஜாக்களும் இப்போ லாஸ் வேகாஸ் போகப்போறோம்..
13. போலீஸ் ஆஃபீசர்.. இந்த பணத்தை வாங்கிக்கிட்டு என்னை ஐ மீன் எங்களை விட்டுடுங்க..
என் கை ரொம்ப சுத்தம்.. நீயே என் பாக்கெட்ல வெச்சு விடு.. ( அடேங்கப்பா அம்புட்டு கறை படியாத கையா?)
14. டாக்டர்.. என்ன சொல்றீங்க? எங்களை யாராவது ரேப் பண்ணி இருப்பாங்களா?
இருங்க , பார்த்து சொல்றேன்.. யாரோ உங்களுக்கு மருந்து கொடுத்திருக்காங்க. அதான் பழசை எல்லாம் மறந்துட்டீங்க>.
15. டாக்டர்... அந்த இடம் எங்கே இருக்கும்.. வழி காட்டுங்க ப்ளீஸ்..
இப்படியே போனா ஒரு முட்டுச்சந்து வரும்.. அதுல முட்டி செத்துடு... ஐ ஆம் எ டாக்டர்.. நாட் எ கைடு.. ஒரு மேப் வாங்கிக்குங்க, அப்புறம் தேடுங்க.. என்னை ஆளை விடுங்க..
16. என் தாத்தாபோர்ல செத்தாரு..
பெரிய படை வீரரா?
நோ நோ வேடிக்கைபார்க்கப்போன இடத்துல போட்டுத்தள்ளீட்டாங்க..
17. புலிக்கு பெப்பெர்னா பிடிக்கும்..
அது உனக்கு எப்படித்தெரியும்?
நேஷனல் ஜாக்ரஃபி சேனல்ல காட்னாங்க.
18. அவ ஒரு பைலட் கூட படுத்தவ தானே?
பார் அட்டெண்டர்னு எத்தனை டைம் சொல்றது?
19. டேய்.. டேய்.. பார்த்து பார்த்து.. அவ என் ஒயிஃப்டா.. நானே தூக்கிக்கறேன்.. கையைஎடு
20.. சரக்கு அடிக்கறதுக்கும் ரூஃப்னோல் ( ஒரு வகை போதை மருந்து) சாப்பிடறதுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
அதெல்லாம் தெரியாது, சரக்கு அடிச்சா ரோட்ல மண்லயே மல்லாந்துடுவேன், ரூஃப்னோ அடிச்சா மாடில வந்து மல்லாந்துடுவேன்
21. ஹாய்.. ஸ்வீட்டி.. ஐ ஆம் கிளாடு டூ மீட் யூ..
ஸோ வாட்?
ஐ ஆல்சோ ஒர்க்டு அஸ் எ பார் டெண்டர், ப்ளீஸ் கிவ் மீ எ சான்ஸ்.. ஹி ஹி
சக் த டிக்
இருக்கட்டும் பரவால்ல ஹி ஹி
22. என் கணவர்ட்ட பேசனும், ஃபோனை அவர் கிட்டே குடு,.. அவர் எங்கே?
பக்கத்துல தான்.. ஆனா ஃபோனை குடுக்க முடியாது,., ஏன்னா எங்களுக்குள்ள ஒரு கேம்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்கவங்க மனைவி கூட யாரும் பேசக்கூடாது.. நண்பர்கள்டதான் பேசனும்
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. 4 பேர்ல ஒருத்தன் தன் மனைவி கிட்டே பேசறான்.. அப்போ போலீஸ் வருது.. நியாயமா செல்லை ஆஃப் பண்ணிட்டோ அல்லது கட் பண்ணிட்டோ தானே போலீஸ் கிட்டே யாரும் பேசுவாங்க.. எந்த லூஸாவது செல் ஃபோனை ஆன்ல வெச்சுக்கிட்டே அப்படி போலீஸ் கிட்டே பேசி சம்சாரம் கிட்டே மாட்டுவாங்களா?
2. குழந்தை காணோம்.. உடனே அந்த குழந்தையோட அம்மா இந்த 4 பேரில் ஒருத்தனுக்கு ஃபோன் போட்டு எங்கே இருக்கீங்க?ன்னு விசாரிக்க மாட்டாளா?
3. அவங்க காருக்குள்ளே ஒரு ஆள் கிடப்பது எப்படி தெரியாம போச்சு? அவன் உள்ளே தூங்கிட்டா இருப்பான்? டப டபன்னு பேனட்டை தட்ட மாட்டானா?
4. ஹோட்டல்ல ரூம்ல புலியை பார்த்தா உடனே ரூம் சர்வீஸ்க்கு ஃபோன் பண்ணி ஃபார்ஸ்ட் ஆஃபீசரை வரச்சொல்லி ஒப்படைச்சா வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு புலிக்கு பர்கர் தர்றது, பயப்படறது எல்லாம் மொக்கை காமெடி
5. படத்துல பல் டாக்டர் பற்றிய வசனங்கள்ல தேவை இல்லாம நக்கல்ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டாக்டர்னா உசத்தி, பல் டாக்டர்னா மட்டமா?
6. ரூம்ல 4 பேரும் ஒரு டிக்கெட்டை கூட்டிட்டு வந்து நைட் மேட்டர் முடிச்சிருக்காங்க. விடிஞ்சதும் அது பாட்டுக்கு பொறுப்பில்லாம சொல்லாம கொள்ளாம கிளம்பிடுது.. பணத்துக்காக ஆசைப்பட்டு வர்ற பொண்ணுன்னா ரூம்ல எல்லாரும் மயக்கமா இருக்கறதைபயன் படுத்தி அங்கே இருக்கும் பணத்தை லவட்டிட்டு போய் இருக்கனும்.. அல்லது யோக்கியமான பொண்ணுன்னா அவங்க எல்லாரும், அல்லது யாராவது ஒருத்தர் எந்திரிச்சதும் சொல்லிட்டு போய் இருக்கனும் ( அப்போ அவங்க குழப்பம் குறைஞ்சுருக்குமே?)
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. தெளிவான திரைக்கதை, இயல்பான காமெடி.. என்ன சொல்ல வந்தாரோ அதை நச்னு சொன்ன விதம்.. ஏகப்பட்ட அவார்டை அள்ளி இருக்கு..
2. நால்வரில் ஒருவரின் மனைவி அடிக்கடி ஃபோன் பண்ணி கிராஸ் செக் செய்வதும் அதுக்கு சமாளிக்கும் கணவரின் ரீ ஆக்ஷனும் செம காமெடி
3. ஹோட்டல் ரூமில் புலி வருவது, அதை கொண்டு போய் சேர்ப்பது என்பதெல்லாம் லாஜிக் சொதப்பலாக இருந்தாலும் வாய் விட்டு சிரிக்கும் அளவு காமெடி சென்ஸுடன் தான் இருக்கு
4. பின்னணி இசை.. என்னமோ நாமே அவங்களோட டூர் போற மாதிரி ஒரு தோரணை.. ஃபீல்
சி.பி கமெண்ட் - படத்துல ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பேசறாங்க.. மற்றபடி காட்சி அமைப்பில் எந்த விரசமும் இல்லை.. செம ஜாலியான காமெடி ஃபிலிம்.. லேடீஸும் பார்க்கலாம்.. இந்தப்படத்தை பார்த்து ஓரளவு உல்டா செய்த படங்கள் பஞ்ச தந்திரம், கோவா , ஹிந்தில ஜிந்தகி ந மிலேகி, மலையாளத்தில் சைனா டவுன் .. தகவல் உதவி 1.Dream on!!!@abrarabru, 2. KARTHICK@kartigenn,3. Surendhar @iamsurendhar,Rajessh Logharaj@IamRajessh, ஆன் லைனில் முழுப்படத்தையும் ஓ சி யில் பார்க்க -http://www.movie2k.to/The-Hangover-watch-movie-61564.html... இந்தப்படத்தின் சாயலில் வந்ததாக சொல்லப்படும் மலையாளப்படம் விமர்சனம் -
ஜாக்கிசான் ரசிகர்களுகு அதிர்ச்சி ஊட்டும் ஒரு மேட்டரை முதல்லியே சொல்லிடறேன் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 100 வது படம் செம டப்பா.. த புரொடக்டர் படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து த ஆர்மர் ஆஃப் காட், ஸ்பானிஸ் கனெக்ஷன்,போலீஸ் ஸ்டோரி படங்களின் மூலம் ஆக்ஷனின் உச்சத்தை, பொழுது பொக்கின் பிரம்மாண்டத்தை காண்பித்த அகில உலக ஆக்ஷன் ஹீரோவின் 100 வது படம் ரொம்ப சாதாரணமாக அமைந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியே..
படத்தோட கதை என்ன? 100 வருடங்களுக்கு முன் சீனாவில் மன்னர் ஆட்சி நடந்த காலம்.. நம்ம ஊர் ஜெ மாதிரி யார் பேச்சையும் மதிக்காத ,ஒரு ராணி சீனாவை ஆள்கிறார்.. கஜானா காலி.. ஆட்சி செய்ய முடியல.. இங்கே எப்படி பஸ் கட்டணம், பால் விலை எல்லாம் உயர்த்தி தன் கையாலாகாத்தனத்தை புரட்டாசித்தலைவி நிரூபிச்சாங்களோ அந்த மாதிரி அந்த ஊர் ராணி ரயில்வே டிபார்ட்மெண்ட்டை அடகு வெச்சு காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை.. எல்லா ஊர்லயும் பொம்பளைங்க ஆட்சி இப்படித்தான் போல..
சுன்யாட்சன் என்பவர் சிப்பாய் கலகத்தை ஆரம்பிக்கிறார்.. ராணிக்கு பண உதவி செய்ய வேண்டாம் என இங்கிலாந்திடம் கேட்டுக்கொள்கிறார். அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படுது.. சீனாவில் நடத்தும் புரட்சிக்கு ஜாக்கிசான் தான் தலைமை.. ஆனா அவர் தமிழ்நாட்ல எப்படி கேப்டன் செயல்படாம சும்மா இருக்காரோ அந்த மாதிரி சும்மாதான் இருக்கார்..
ஜாக்கிசான் படம்னா மக்கள் என்ன விரும்புவாங்க? ஏதோ காமெடி இருகும் , அதிரடி சாகசம் இருக்கும்னு தானே ஆவலா இருப்பாங்க.. சரி போர் சம்பந்தப்பட்ட படம்னா ஓரளவு ஃபைட் சீனாவது காட்டனும்.. சும்மா தொண தொண னு பேசிட்டே இருக்காங்க.. செம கடுப்பு..
சுன்யாட்சன் குடியரசுத்தலைவரா தேர்ந்தெக்கப்படறார்.. சீனா முழுவதும் கைப்பற்றப்பட்ட பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் தான் சீனாவின் குடியரசுத்தலைவர் ஆகனும்னு சுன்யாட்சன் பதவி விலகறார்.. எல்லாரும் கை தட்டி அந்த முடிவை வரவேற்கறாங்க.. தியேட்டர்ல நம்மாளுங்க செம காண்ட்ல கிளம்பறாங்க..
நாட்டுக்கு ஒரு நல்லவன்ல சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்படி ஏமாற்ற,ம் அடைஞ்சாங்களோ. அந்த மாதிரி ஜாக்கிசானின் ரசிகர்கள் இதுல ஏமாற்றம் அடைஞ்சு கிளம்பறாங்க..
படத்துல ஜாக்கிசான் வர்ற நேரத்தை விட சுன்யாட்சனா வர்றவர் நடிப்புதான் நல்லா இருக்கு.. அவருக்கு தான் அதிக காட்சிகள் வேற..
ரசிக்க வைத்த வசனங்கள்
1. நாங்க எங்கே வாழந்தாலும் சீனா தான் தாய்நாடு.. தாய் நாட்டுக்கு முன்னால தாத்தா சொத்து முக்கியம் இல்ல. இந்த சொத்தை வித்து வந்த பணத்தை புரட்சிக்கு நான் தர்றேன்..
2. ரயில் துறையை அடமானம் வெச்சா நம்ம மானமே போயிடும்னு மக்கள் பேசிக்கறாங்க..
ஆள்றது நான்.. அவங்க என்ன சொல்றது? நான் என்ன கேட்கறது? ( இந்த ராணியோட டி என் ஏ வை தூண்டி விட்டு ஜெ வுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி வெச்சிருப்பாங்களோ? )
3. நீங்க கொடுக்கப்போற பணத்தை வெச்சு கோயிலா கட்டப்போறாங்க?ஆயுதங்களை வாங்கி எங்களை அழிப்பாங்க...
. 4. நம்ம 2 பேருக்கும் வயசு 40.. ஆனா 50 வயசுல தான் எல்லா குழப்பங்களும் வரும்னு சொல்றாங்க..
5, என்னை கொன்னு போட்டுட்டு இந்த சுவர்ல இருக்கற ஃபோட்டோ மாதிரி மாட்டி வைக்க ஆசைப்படறீங்களா?
6. உங்க ஆட்சி மாறப்போகுது..
அதானே, நாடு 2 பட்டாலும் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே..
7. உயிரோட இருக்கனும்னு ஆசைப்பட்டா அந்த காலை வெட்டியே ஆகனும்.. கொஞ்சம் பொறுத்துக்குங்க..
ஆ ஆ ஆ
ஏய்... அறுக்கறதை நிறுத்து,.. அவர் இறந்துட்டாரு.
8. அடிக்கடி சொல்வீங்களே.. ஒரு தடவை தோத்தா இன்னொரு தடவை ஜெயிச்சே ஆகனும்னு ஒரு தத்துவம்.. இப்போ அதை சொலுங்க..
9. உன் கை...?
போராட்டத்துக்கு காணிக்கையா கொடுத்துட்டேன் ( ஆனா ஒரே ஒரு விரல் மட்டும் தான் கட் ஆகி இருக்கு... வசனகர்த்தா மிஸ்டேக் போல)
10. புரட்சியால மட்டும் தான் மக்களோட வாழ்க்கைத்தரம் உயரும்..
11. பணத்தை கொண்டு வர்லை.. நம்பிக்கையை கொண்டு வந்திருக்கேன்.
12. என்ன சார் .. கோபத்துல ஒவ்வொரு ஜாடியா உடைச்சிட்டு இருக்கீங்க/ இந்தாங்க சார்.. உடைங்க..
சார்,, இந்தாங்க .. இதை உடைங்க.
போதும் போர் அடிக்குது.. நீங்களே உடைங்க..
. 13. ஹீரோயின் ஜாக்கியிடம் - நம்ம குழந்தையை நான் சுமந்துட்டு இருக்கேன்.. ( ஆடியன்ஸ் - இது எப்போ நடந்தது சொல்லவே இல்ல? ஏப்பா ஆபரேட்டர்.. இந்தப்படத்தை நிறுத்திட்டு அந்தப்படத்தை போடு . சீனாவது பார்க்கலாம்.. ) # சீனா படத்தில் சீனா?
14. இப்போ புரட்சி ஜெயிச்சாச்சு. மன்னர் குடும்பத்தை என்ன செய்யப்போறீங்க? கொல்லப்போறீங்களா?
புரட்சி ஜெயிச்சா மன்னர் குடும்பத்தை கொல்லனும்னு அவசியம் இல்ல.. அவங்களும் இந்த நாட்டோட குடி மக்கள் தான்..
ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன் 2ம் குறிப்பிட்டு சொல்லும் அளவு இருக்கு.. போர்க்காலத்தை அப்படியே கண் முன் வந்து நிறுத்துது.. சைனாவில் வேண்டுமானால் இது ஹிட் ஆகலாம்..
STARRING: Jackie Chan, Li Bing Bing, Zhao Wen Xuan, Joan Chen, Jaycee Chan
DIRECTOR: Jackie Chan, Zhang Li
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்.
சி.பி கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் கூட பார்க்க முடியாது