Showing posts with label HIT ( THE FIRST CASE ) - TELUGU - சினிமா விமர்சனம் ( க்ரைம். Show all posts
Showing posts with label HIT ( THE FIRST CASE ) - TELUGU - சினிமா விமர்சனம் ( க்ரைம். Show all posts

Sunday, May 31, 2020

HIT ( THE FIRST CASE ) - TELUGU - சினிமா விமர்சனம் ( க்ரைம் , மிஸ்ட்ரி த்ரில்லர் )

நீங்க உங்க வாழ்நாட்கள் ல இதுவரை பார்த்த டாப் 10 க்ரைம் த்ரில்லர்களை மனசுக்குள் பட்டியல் போடுங்க , பிறகு இந்தப்படம் பாருங்க , நிச்சயம் அதுல டாப்1 ஆக இது இருக்கும். பிரமாதமான, க்ரிஸ்ப் ஆன திரைக்கதை, க்ளைமாக்ஸ் மட்டும் எல்லா தரப்பும் ஏத்துக்கற அளவு இல்லை . காளிதாஸ் படத்துல பட,ம் பிடிச்ச பலருக்கும் க்ளைமாக்ஸ்  ஏற்புடையதா இல்லை. அது மாதிரி தான் இதுவும். ஆனாலும் மிஸ் பண்ணிவிடக்கூடாத படம் .நான் ஈ பட ஹீரோ நானியின் சொந்தப்படம்




 ஹீரோ  ஒரு போலீஸ் ஆஃபீசர் . அவரோட காதலி கூட கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங். கொஞ்ச நாளா டச் இல்லை . திடீர்னு அவரோட காதலி காணாம போகுது . இன்னொரு பொண்ணும் அதே மாதிரி காணாம போகுது. இந்த 2 காணாம போன சம்பவத்துக்கும் ஒரு லிங்க் இருக்குனு ஹீரோ நினைக்கிறார்

காணாமப்போன ஒரு பொண்ணுக்கு பெற்றோர் யார்னு தெரியாது, வளர்ப்புப்பெற்றோர்தான். ஒரு பங்களாவில் வசதியா வாழ்ற டைவர்ஸ் ஆன ஒரு ஆண்ட்டிக்கு காணாம போன 2 பொண்ணுங்களையும் பழக்கம்.ஒவ்வொருவர் மேலயும்  சந்தேகம், வருது ஹீரோயின் கூட கருத்து வேறுபாடு கொண்டிருந்த காரணத்தால டிபார்ட்மெண்ட்ல ஹீரோ மேலயும் சந்தேகப்படறாங்க . எப்படி துப்பு துலக்கறாங்க என்பதே திரைக்கதை 


ஹீரோவா விஸ்வக் சென்  நல்ல நடிப்பு போலீஸ் ஆஃபீசருக்குண்டான மிடுக்கு, தோரணை  உடல் மொழி , கம்பீரம் எல்லாம் அபாரம். காதலியுடனான ரொமாண்டிக் போர்சனும் கன கச்சதம். சேசிங் காட்சிகளிலும் , ஃபைட் சீன்களிலும் நல்ல சுறு சுறுப்பு ஓப்பனிங் சீன்ல   வீடியோ ஆதாரம் உள்ள ஒரு தற்கொலை கேசை கொலைதான் என கண்டு பிடிக்கும் காட்சி அபாரம்  


நாயகி ருஹானி சர்மாவுக்கு அதிக வாய்ப்பில்லை. ஆனா வந்தவரை குறை ஒன்றும் இல்லை ஹையர் ஆஃபீசரா வரும் பானுச்சந்தர் கச்சிதமான நடிப்பு . ஹீரோவை ஒரு ஹையர் ஆஃபீசர் அறையும் காட்சி இதுவரை நான் பார்த்ததில்லை . துணிச்சலான சீன்

போலீஸ் இன்ஸ்பெக்டராக வ்ரும்  முரளி சர்மா  அனாயசமான நடிப்பு . டிபார்ட்மெண்ட்டால் தண்டிக்கப்படும்போது அனுதாபம் பெறுகிறார்

சிசிடிவி கேமராக்கள் இந்தக்கால கட்டத்தில் ஒரு கேஸ்க்கு எவ்ளோ முக்கியம் என்பதை பல இடங்களில் பதிவு பண்ணி இருக்காங்க 

உண்மை கண்டறியும் சோதனை பாலிகிராப்ட் டெஸ்ட் காட்சிகள் எல்லாம் இதுவரை இவ்வளவு டீட்டெய்லாக காட்டியதில்லை . ஒரு புத்திசாலி கிரிமினல் தன் இதயத்துடிப்பை சாதாரணமாக வைத்துக்கொண்டால் அவன் உண்மை கண்டறியும் சோதனையில் ஏமாற்ற முடியும் என்று டயலாக் வைத்து அந்த டைவர்ஸ் லேடி குற்றவாளியா? இல்லையா? என்பதை உறுதியா சொல்ல முடியலை  என்று குழப்பும் டெக்னிக் அபாரம் 

காணாமப்போன 2 பெண்களும் கொலை செய்யப்படலை , ரேப் மோட்டிவ் இல்லை , பணம் பறிக்கும் உத்தேசம் இல்லை , பிளாக்மெயில் காலும் வர்லை என்ற போது இது வேறு மாதிரியான திசை என்பது யூகிக்க முடியுது . மோட்டிவ் மிக மாறுபட்டது

 பின்னணி இசை கலக்கல் , ஒளிப்பதிவு பக்கா .எடிட்டிங்  அருமை ஒரு சீன் என்றால் ஒரு சீன் கூட போர் இல்லை 



சபாஷ் டைரக்டர் 


1   ஜாகிங் போய்க்கிட்டே காமெராவில் ஷூட் பண்ணின குறும்படம் மாதிரி மிக வேகமாகப்பயணிக்கும் திரைக்கதை பெரிய பிளஸ்


2  மொக்கை காமெடி , ஆடியன்சை தம் அடிக்க கிளம்ப வைக்கும்  டூயட் காட்சிகள் எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்

3  ஒரு காட்சியில் தோண்டி எடுக்கப்படும் அழுகிய நிலை பிணம் தத்ரூபமாக ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்படிருப்பது அபாரம் 


4  க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன்பு வரும் அந்த சேசிங் காட்சி , ஃபைட் காட்சி செம , தியேட்டரில் விசில் பறந்திருக்கும் 

5  இந்தப்படத்துக்கு 2ம் பாகம் வரப்போகுது என்பதற்கான லீடு சீன் க்ளைமாக்சில் வருவது அபாரமான திருப்பம் 


நச் டயலாக்ஸ் 

1   உன் உறவு சம்பந்தப்பட்ட கேஸ்ல நீ இன்வால்வ் ஆனா உன் இண்ட்டெலிஜென்சை விட  உன் எமோஷன் உன்னை அமுக்கிடும் 


2   பசங்க எப்பவுமே அப்படித்தான், ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிச்ட்டா அவங்க கூட கற்பனைலயே வாழ்க்கை நடத்த ஆரம்பிச்சுடுவாங்க    ( ஏன்? பொண்ணுங்க அப்டி  இல்லையா? அவங்களும் தான் ) 


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டே அவரோட ஹையர் ஆஃபீசர் கேஸ் சம்பந்தபப்ட்ட ஒரு ஃபைல் கேட்கறார். அதை அவர் ஸ்டேஷன்ல இருந்து எடுத்துட்டு கார்ல போறப்ப அந்த ஃபைல் தானா?னு செக் பண்ண மாட்டாரா? மாறிடுச்சு வேற ஃபைல்  அப்டினு ஹையர் ஆஃபீசர் சொன்ன பிறகு மீண்டும் காரில் ஸ்டேசன்க்கு போய் கான்ஸ்டபிளை திட்றார். ஃபைலைக்கூட கரெக்டா பார்த்து எடுத்து வைக்க முடியாதா?னு , ஆனா இவர் ஏன் செக் பண்ணலை? ( கதைப்படி  அவர் அந்த ஹை வே ல  2 டைம் அப் அண்ட் டவுன் போக வேண்டிய சிச்சுவேஷன், ஆனா எதையாவது மறந்து வெச்ச மாதிரி காட்டி இருக்கலாம் ) 


2 உன் மேல ஒரு டவுட் இருக்குனு ஒரு போலீஸ் ஆஃபீசர் இன்னொரு ஆஃபீசர் கிட்டேயே சொல்வாரா? அவர் உஷார் ஆகிக்க மாட்டாரா? காதலியின் அம்மா வுக்கு உன்னை பிடிக்க ல, உன்னை சந்தேகப்படறாங்க என சொல்வதும் ஆபத்துதான் . 


3  அந்த டைவர்ஸ் லேடி கேஸ்க்கு எல்லா வகைலயும் ஒத்துழைப்பு த்ருது, கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுது. திடீர்னு கைகள் இரண்டையும் பின்னால் கட்டி விலங்கு போட்டு  ஜீப்ல ஏற்றுவது ஓவர். சும்மா டவுட்ல அப்டி அரெஸ்ட் பண்ண சட்டத்தில் இடம் இருக்கா? எவிடென்சே இல்லாம கை விலங்கு போட்டு  கூட்டிட்டு போறது ஓவர்


4 க்ளைமாக்ஸ்ல போலீஸ் ஆஃபீசர்ஸ்  2 பேரு சந்தேகிக்கும் நபர் வீட்டுக்கு ரகசியமா போறாங்க . அவன் வீட்டை செக் பண்ணிட்டு இருக்கும்போது அவன் ஸ்பாட்க்கு வர்றான். ஸ்பாட்ல போலீஸைப்பார்த்ததும் டக்னு நைசா நழுவி இருக்கலாமே? எதுக்கு லூஸ் மாதிரி துப்பாக்கியால்; சுட முயற்சி பண்ணி தன்னை வெளிப்படுத்திக்கறான்? 2 பேரை அட்டர் டைம்ல சுட முடியாதுனு தெரியுமுல்ல? 


5  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில் குற்றவாளி மீது   வெறுப்பு வர்லை , பரிதாபம் தான் வருது. அது கேசின் பலவீனம்

6   ஒரு டெட்பாடியை ஒரு இடத்துல குழி தோண்டி புதைச்ச சுவடுக்கும் , அதே பாடியை  குழி தோண்டி புதைச்சு பின் மீண்டும் குழி தோண்டி வெளியே  எடுத்து அதை மீண்டும் அதே இடத்தில் புதைத்து மண் மூடி விட்டாலும் வித்தியாசம்  தெரியாதா? மண் இளகி இருக்குமே? போலீஸ் அதை கவனிக்கலையா? 


சி.பி கமெண்ட் - ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கான மாறுபட்ட க்ரைம் மிஸ்ட்ரி த்ரில்லர் . குடும்பத்துடன்  பார்க்கலாம் . வல்காரிட்டி , வயலென்ஸ் இல்லை . 
ரேட்டிங்   3.5  / 5