Showing posts with label HINDI FILM REVIW. Show all posts
Showing posts with label HINDI FILM REVIW. Show all posts

Monday, January 30, 2012

AGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா விமர்சனம் .

http://survi.in/site/wp-content/uploads/2012/01/main_image-91952.jpg ரீமேக்  பண்ற ராஜாக்கள் ,கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் 1. அம்மா ,அப்பாவை கொன்னவனை பழி வாங்கற சப்ஜெக்ட், 2 . தங்கச்சியை ரேப் செஞ்சவனை கதற கதற கொல்லும் ஹீரோ  கதை இதை எல்லாம் தயவு செஞ்சு அவாய்டு  பண்ணுங்க ,உஷ் அப்பா முடியலை.

படம் போட்டு  முக்கால் மணி நேரம் கழிச்சுத்தான் ஹீரோ  வர்றார்  .அதனால படம் பூரா  வியாபிச்சு இருக்கற வில்லன் சஞ்சாய் தத் தான் ஹீரோ மாதிரி ...ஆள் பார்க்க நம்ம  ஆளவந்தான் மொட்டை கமல் மாதிரி ஜம்முனு இருக்கார் ,அவரோட எக்சசைஸ்  பாடிக்கு முன்னால ஹீரோ பாடி கம்மிதான் ..

ஊர் ல நல்லவரா இருக்கும் ஹீரோவோட அப்பா வை வில்லன் கொலை பழி சுமத்தி கொன்னுடறான் ,பல  வருஷம் கழிச்சு பெரிய ஆள் ஆகி பின் ஹீரோ அவனை பழி வாங்கி நம்மையும் பழி வாங்கறதுதான்  கதை ..

 ஹீரோ ஆள் பார்க்க ஜம்முனு இருக்கார் , ஆனா உருப்படியா எதுவும் செய்யலை .. (ஹீரோயின் கூட ஒழுங்கா டூ யட் கூட பாடலை அவ்வ்)

http://media2.intoday.in/indiatoday/images/stories/agneepath350_012712040235.jpg


எனக்கு தோன்றிய  சில சந்தேகங்கள் 

1 - ஹீரோயின் பிரியங்காசோப்ரா எதனால ரிப்பனை தாவணியா போட்டிருக்கார்?


2.தளபதி ரஜினி மாதிரி ஹீரோ படம் பூரா உம்முன்னே இருக்காரே, எதனால?


3.சின்னப் பையனா ஹீரோ வரும் ஃபிளாஸ்பேக்ல ஒருபோலீஸ் ஆபீசரையே சுடடு கொல்றாரு, அப்பவே வில்னையும் கொன்னருக்கலாமே?

4. ஹீரோயின் முதல் சீன்ல ஹீரோ தன் தாவணியை உருவுனதும் பதட்டப்பட்டாரு, அதுக்குப்பிறகு அப்படியே தேமேன்னு இருக்காரே, ஏன்?

5. ஒவ்வொரு சீன்லயும் ஹீரோயின் 18 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு வர்றாரே, அது ஏன்?


http://img.india-forums.com/wallpapers/1280x1024/174824-priyanka-in-agneepath-2012-stills.jpg

6. வில்லனும்,ஹீரோவும் இடைவேளைக்கு முன்னமே சந்திக்கறாங்க, ஆனா அவரை கொல்ல எந்த ஸ்டெப்பும் ஹீரோ எடுக்கலை, அது ஏன்?

7. வில்லன் ஹீரோவை அடிச்சு துவம்சம் பண்ணி 4 கிமீ இழுத்துட்டுபோய் அவரை கட்டிப்போட்டு கொல்ல முயற்சி பண்றாரு,ஏன்?அபபவேகொல்லலை?

8. ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் கேத்ரினா கைஃப் வாங்குன அப்ளாஸ்ல பாதி கூட ஹீரோயின் வாங்கலையே, ஏன்?ஹீரோயினுக்கு ஏன் காட்சிகள் ஆழமா வைக்கலை?

9.படத்துல காமெடி காமெடின்னு சொல்வாங்களே,அது மருந்துக்கு கூட இல்லையே, அது ஏன்?

10. க்ளோசப் காடசிகளில் பிரம்மாண்டமா தெரியற வில்லன் லாங்க் ஷாட்ல ரொம்ப சாதாரணமா பாடி பில்டப் இல்லாம இருக்காரே, ஏன்?

http://img.india-forums.com/crop/265x300/174878-hulf6wqp.jpg


படு மொக்கையான இந்தப்படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டர்ல பார்த்தேன்..யாரும் போயிடாதீங்க :(((((((((

டிஸ்கி - இந்த லட்சணத்துல இந்தப்படம் மும்பைல செம ஹிட்டாம் அவ்வ்வ்வ்