படத்தின் இயக்குநர் ராம் அருண் கேஸ்ட்ரோ 2019 ல் ரிலீஸ் ஆன செம ஹிட் படமான வி1 மர்டர் கேஸ் படத்தின் இயக்குநர் 2014ல் ஓட்டத்தூதுவன் என்ற டைட்டிலில் இவர் நாயகன் ஆக நடிக்க ஒரு படம் எடுத்தார்.1850 ல் நடந்த உண்மை சம்பவம் இது . பல ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் படம் திரை இடப்பட்டு பாராட்டுக்களைப்பெற்றது . இயக்குநர் நியூயார்க் கில் நடிப்புக்கான பயிற்சி பெற்றவர் . 2014ல் இவர் நாயகன் ஆக நடித்த ஓட்டத்தூதுவன் தான் இப்போது காளி வெங்கட்டை வைத்து ஒரு எக்ஸ்ட்ரா போர்சன் உருவாக்கி சேர்த்து ஹர்காரா என ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ம்த்திய அரசு ஊழியர் ஆக தபால் நிலையத்தில் போஸ்ட்மேன் ஆக பணிபுரிகிறார். ஆனால் அவர் பணி புரியும் இடம் ஒரு மலைப்பாங்கான கிராமம். மிக சிரமமான பணி .
கிராமத்து மக்கள் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாம் தெரியாமல். அதை ஃபாலோ பண்ணாமல் நாயகனை அன் டைமில் தொந்தரவு செய்கிறார்கள் . இதனால் கடுப்பான நாயகன் வேறு இடத்துக்கு பணி மாற்ற,ம் கேட்கிறார், ஆனால் கிடைக்கவில்லை
அதனால் நாயகன் ஒரு சதி செய்கிறார்.கிராம்த்து மக்களே எழுதுவது போல ஒரு பெட்டிஷன் ரெடி செய்து அதை கலெக்டர் ஆஃபீஸ்க்கு அனுப்புகிறார். இந்த ஊருக்கு தபால் நிலையமே வேண்டாம், மாறாக ஒரு கூட்டுறவு வங்கி இருந்தால் போதும் என்பதுதான் பெட்டிஷனின் மையப்பொருள்
நாயகனிடம் எதேச்சையாக அந்த ஊரில் முன்பு 150 வருடங்களுக்கு முன்பு பணி ஆற்றிய மாதேஸ்வரன் என்பவர் பற்றிய கதையை கேட்கிறார். அதற்குப்பின் மனம் மாறுகிறார்.
அந்த மாதேஸ்வரனின் கதை என்ன? அவர் மனம் ஏன் மாறியது? என்பது தான் பின் பாதி திரைக்கதை
நாயகன் ஆக காளி வெங்கட் யதார்த்தமான நடிப்பு, கிராமத்து மக்களிடம் எரிச்சல் படும்போதும், தனக்கு பெண் கொடுக்க யாரும் இல்லை என வருத்தப்படும்போதும் கவனிக்க வைக்கும் நடிப்பு
மாதேஸ்வரன் எனும் போஸ்ட்மேன் ஆக இயக்குநர் ராம் அருண் கேஸ்ட்ரோ . அபாரமான நடிப்பு , இணைந்த கைகள் அருண் பாண்டியன் போல ஜிம் பாடி. வாய்ப்புக்கிடைத்தால் ஆக்சன் ஹீரோ ஆகலாம்
கிராமத்து மக்களின் யதார்த்த நடிப்பும் , சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கும் ரசிக்க வைக்கின்றன
படத்தில் பாராட்ட வேண்டிய முதல் அம்சம் ஒளிப்பதிவு தான். பிரமாதம்.,ஃபிலிப் ஆர் சுந்தர் , லோகெஷ் இளங்கோவன் இருவரும் கலக்கி இருக்கிறார்கள்
டேனி சார்ல்ஸ் தான் எடிட்டிங்க். ஃபிளாஸ்பேக் காட்சிகளுக்கு தனி கலர் கொடுத்து ஒளிப்பதிவாளர் படம் பிடித்ததை சாமார்த்தியமாக நான் லீனியர் கட்டில் தொகுத்திருக்கிறார்
ராம் சங்கர் பின்னணி இசை ஜீவன் உள்ள உயிரோட்டமான இசை
ஒப்பனையே இல்லாத ஒப்பனையே தேவைப்படாத இயற்கை அழகு நாயகி, சில காட்சிகள் வந்தாலும் அருமை
சபாஷ் டைரக்டர் (ராம் அருண் கேஸ்ட்ரோ)
1 தான் நாயகன் ஆக நடித்த குறும்படத்தை முழுப்படம் ஆக்க என்ன தேவையோ அதை உணர்ந்து கச்சிதமாக செய்தது
2 கமர்ஷியல்; மசாலா அயிட்டங்கள் மொக்கைக்காமெடி , டான்ஸ் ., டூயட் என எதுவும் வைக்காமல் தில்லாக கதைக்குத்தேவை எதுவோ அதை மட்டும் காட்டியது
3 கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் உள்ள இடத்தை நாயகன் கடக்கும்போது இன்னும் எவ்ளோ தூரம் என எப்போக்கேட்டாலும் நடக்கற தூரம் தான் என திரும்ப திரும்ப சொல்லும் கிராம வாசி நடிப்பு
4 நாயகனிடம் 250 ரூ கடன் வாங்கும் கிராமத்துப்பெண் நாணயமாக திருப்பிக்கொடுத்து பேசும் வசனம் அருமை .. நடிப்பும் கிளாசிக்
5 ரூ 1000 பென்சன் பணம் கிடைத்ததும் உணர்ச்சி வசப்பட்டுப்பேசும் பாட்டியின் நடிப்பு அருமை
6 கானகத்தின் அருவி அழகை அட்டகாசமாகப்படம் பிடித்தது . தேனி மாவட்டத்தின் அழகைக்கண் முன் நிறுத்தியது
ரசித்த வசனங்கள்
1 ஆபத்துக்கு உதவாத பிள்ளையும், ஆத்திரத்துக்கு உதவாத பணமும் தண்டத்துக்கு சமம்
2 இடமலைக்கு எம்புட்டு தூரம் ?
எல்லாம் நடக்கற தூரம் தான்
அப்போ பக்கம்னு சொல்லுங்க , ஏன் தூரம்னு சொல்றீங்க
எகத்தாளம்தான்
3 என்னய்யா, இங்க்லீஷ்ல சைன் பண்ற அளவு படிச்சிருக்கே? ஆனா நான் கொடுத்த பேப்பர்ல என்ன எழுதி இருக்குனு படிச்சுப்பார்க்காம சைன் பண்றே?
படிச்சுப்பார்த்து சைன் பண்ணுனா அப்றம் நீங்க போட்டிருக்கும் யூனிஃபார்ம்க்கு என்ன மரியாதை ?
4 ஃபோர் ஜி வ்ந்தா என்ன? ஃபைவ் ஜி வந்தா என்ன? போஸ்டல் டிபார்ட்மெண்ட் போகும் இடத்துக்கு எந்த டெக்னாலஜியும் வந்துட முடியாது
5 உலகத்துலயே பெரிய போஸ்டல் சர்வீஸ் நம்ம இந்தியாவுதுதான்
6 போற பாதை கடுமையா இருந்தாத்தான் பேரு நிலைச்சு நிற்கும்
7 மாட்டுக்கும் அடிமைக்கும் எந்த உணர்ச்சியும் இருக்கக்கூடாது , இருந்தா திமிறிக்கிட்டே இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
இந்தமாதிரி நல்ல படங்களில் கூட லென்ஸ் வைத்து குறை கண்டு பிடித்து நொட்டை சொல்லிக்கொண்டிருந்தால் நாம் மீண்டும் மீண்டும் விக்ரம், ஜெயிலர் , லியோ மாதிரி மாமூல் மசாலாப்படங்கள் , வன்முறை தூண்டும் படங்களையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - படம் ஸ்லோ தான், ஆனால் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய உலக சினிமா . மாமூல் மசாலாப்பட ரசிகர்கள் , தெலுங்கு டப்பிங் பட பிரியர்கள் தவிர்க்கவும் , நல்ல சினிமா ரசனை உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம். ரேட்டிங் 3/ 5
Harkara | |
---|---|
Directed by | Ram Arun Castro |
Written by | Ram Arun Castro |
Produced by | Kalorful Beta Movement |
Starring |
|
Cinematography | Philip R Sunder Lokesh Elangovan |
Edited by | Dani Charles |
Music by | Ramshanker |
Production company | Kalorful Beta Movement |
Release date |
|
Country | India |
Language | Tamil |