2018 ஆம் ஆண்டு கேரளா - திருவனந்தபுரம் விலங்கியல் பூங்காவில் ஒரு ஆள் எட்டிக்குதித்து விட்டான் .சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பி விலங்கை உசுப்பி விட்டதால் அது அந்த ஆளைத்தாக்கிக்கொன்று விட்டது . அந்தக்காட்சி வைரல் ஆனது . அந்த ஒன் லைன் செய்தியை வைத்து ஒரு காமெடி டிராமா வாக திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள் . தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போது பெரும் எதிர்பார்ப்புடன் வந்தாலும் வசூல் ரீதியாக சுமாராகத்தான் போனது . ஆனால் விமர்சன ரீதியாக மீடியாக்கள் பாராட்டப்பெற்ரது 14/6/2024 அன்று திரை அரங்குகளில் வெளியான இப்படம் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ல தமிழ் டப்பிங்க்லயும் கிடைக்குது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு பெரிய அரசியல் கட்சித்தலைவரின் மகள் . வேலை வெட்டி இல்லாத ஒரு விளங்காத ஆளைக்காதலிக்கிறாள் . இருவரும் ஓடிப்போவதாக பிளான். அவங்க திட்டப்படி சம்பவம் நடக்கும் நாள் அன்று நாயகன் நாயகிக்கு ஃபோன் பண்ணியும் நாயகி அட்டெண்ட் பண்ணவே இல்லை . இதனால் கடுப்பான நாயகன் சரக்கைப்போட்டு விட்டு ஓவர் மப்பில் ஒரு ஜூவில் சிங்கம் இருக்கும் குகை அருகே சென்று விடுகிறான்
அந்த ஜூவில் விலங்குகளூக்கு இரை கொடுத்து கண்காணிக்கும் பணியில் உள்ள ஆபீசர் மேல் ஆல்ரெடி ஒரு புகார் . அதாவது சிங்கத்துக்கு தினசரி தர வேண்டிய இறைச்சியில் பாதியை வேலையாட்கள் ஆட்டையைப்போட்டு விடுகிறார்கள் . அதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்யத்தவறியதால் அவர் மீது ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு
அந்த ஆபீசரின் மனைவியின் தம்பிக்கு நாயகியைப்பெண் பார்க்க போகிறார்கள் . அந்த சம்பவத்தால் தான் நாயகன் ஃபோன் செய்த போது நாயகியால் எடுக்க முடியவில்லை
நாயகனை சிங்கத்திடம் இருந்து ஆபீசர் காப்பாற்றினாரா? நாயகன் - நாயகி காதல் நிறைவேறியதா? என்பதை காமெடியாக சொல்ல முயன்று இருக்கிறார்கள்
நாயகன் ஆக குஞ்சாக்காபோபன் ரொம்ப இயல்பா நடித்திருக்கிறார் . இது ஒரு காமெடிப்படம் என்பதாலும் , அவர் குடிகாரன் என்பதாலும் சிங்கத்திடம் அவர் மாட்டிக்கொள்வாரோ ? என்ற பதை பதைப்பு நமக்கு ஏற்பட வில்லை
ஜூ ஆஃபீசர் ஆக சுராஜ் வெஞ்சாரமூடு கச்சிதம் . அவரது மனைவியாக வரும் ஸ்ருதி நல்ல அழகு ஆனால் அதீத ஒப்பனை . இருந்தலும் ரசிக்க முடிகிறது
நாயகி ஆக அனகா மரூத்ரா இயல்பாக நடித்திருக்கிறார்
டான் வின்செண்ட் , கைலாஷ் மேனன் , டோனி ஆகிய மூவரும் இசை . . பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
ஒளிப்பதிவு ஜெயிஷ் நாயர் . அழகான படப்பிடிப்பு விவேக் ஹர்சன் எடிட்டிங்கில் படம் 2 மணி நேரம் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜே கே
சபாஷ் டைரக்டர்
1 பத்திரிக்கை செய்தியை ஒன் லைனாக வைத்து காமெடியாக திரைக்கதை அமைத்த சாமார்த்தியம்
2 நாயகனின் நண்பன் மீடியாக்களீடம் மாறி மாறி ஒரே விஷயத்தை திருப்பி திருப்பி வெவ்வேறு மாடுலேஷனில் சொல்வது
3 யாரும் சத்தம் போடாதீங்க என ஃபயர் சர்வீஸ் ஆட்கள் ஸ்பீக்கரில் சத்தமாக சொல்வதும் உடனே மக்கள் ஆரவாரமாக கை தட்டுவதும் நுட்பமான காமெடி
4 நாயகியைப்பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைக்கு டேக்கா கொடுத்து விட்டு நாயகி தப்பிக்கும் காட்சி கலக்கல்
5 சிங்கத்துக்கு மயக்க ஓசி போட வேண்டிய டாக்டர் ஒரு குவாட்டர் அடித்தால் தான் ஸ்டெடியாக வேலை செய்வார் என்பதும் அந்த ஜூ இன்சார்ஜ் லேடி அலறுவதும் காமெடி
ரசித்த வசனங்கள்
1 சாகனும்னா விஷம் குடிச்சு சாக வேண்டியதுதானே? ஏன் என் உயிரை எடுக்கறே?
பலசாலி கிட்டே மோதி சாகறவன் தான் வீரன்
2 ஒருவழியா மருந்து கிடைச்சிடுச்சு , ஆனா எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச்ட்டதா இருக்கே?
ஒண்ணும் பிரச்சனை இல்லை ,. மனுசனுக்கா தரப்போறோம் ? விலங்குக்குத்தானே? அதுக்குத்தெரியவா போகுது ?
3 கள்ளன் சிலையை உடைக்கனும்
அது முடியாது , கள்ளன் ஜெனரல்
கள்ளன் ல கூட ஜெனரல் கள்ளன் இருக்கா? \
அய்யோ அது மேஜர் கள்ளன்
4 ஒரு அமைதியான கடல் ஒரு போராளியை உருவாக்க முடியாது . புயல் உடன் கூடிய கடல் தான் மாலுமியை வீரன் ஆக்கும்
5 மாமா செத்த பின் அவரோட கவர்மெண்ட் ஜாப் உனக்குக்கிடைச்சா வேண்டாம்னா சொல்லப்போறே?
6 நீ சரக்கு அடிச்சுட்டு என்ன வேலை செஞ்சே?ன்னு உனக்கு நினைவு இருக்கா?
இல்லை
அட்லீஸ்ட் சரக்கு பேராவது நினைவு இருக்கா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் சிங்கத்திடம் மாட்டுவது , ஆபீசர் அவனைக்காப்பற்றுவது இவை தான் படத்தின் மெயின் ஆன காட்சிகள் , ஆனால் அந்தக்காட்சியில் பெரிய காமெடி உண்டாகவில்லை
2 ஜூவில் இருந்து நாயகன் தப்பிய பிறகு 40 நிமிடங்கள் படத்தை இழுத்தது ஓவர்
3 நாயகியின் அப்பா க்ளைமாக்சில் மனம் மாற காரணமே சொல்லப்படவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தியேட்டரில் பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . டி வி ல போட்டா பார்க்கலாம் . ரேட்டிங் 2.25 / 5