ஏ கப்பட்ட திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த நடிகைக்கான விருதை நாயகி எம்மா தாம்சனுக்குப்பெற்றுத்தந்த படம் இது. ஒன்றரை மணி நேரப்படத்தில் இரண்டே இரண்டு முக்கியக்கேரக்டர்கள் நான்கு முறை சந்திக்கிறார்கள் . முதல் சந்திப்பு 30 நிமிடங்கள் , அடுத்த இரண்டாவது சந்திப்பு 30 நிமிடங்கள் , மூன்றாவது சந்திப்பு 15 நிமிடங்கள் , நான்காவது சந்திப்பு 15 நிமிடங்கள் , ஆக மொத்தம் 90 நிமிடங்கள் படம் முழுக்க பேசிக்கொண்டே இருப்பதுதான் சிறப்பு . பொறுமைசாலிகள் பார்க்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி 41 வயதான விதவை , இவருக்கு ஒரு மகன் , ஒரு மகள் . வாரிசுகள் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள் கணவன் இறந்து இரு வருடங்கள் ஆகின்றன. நாயகி ஒரு டீச்ச்சர். தன் வாழ்நாளில் தன் கணவனைத்தவிர யாருடனும் நெருக்கமாக இருந்ததில்லை
நாயகி டீச்சராக இருந்த தருணங்களில் மாணவிகளிடம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக நடந்து கொள்பவர் , அவர்கள் உடுத்தும் உடை கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர். யாராவது கிளாமராக உடை உடுத்தி வகுப்புக்கு வந்தால் அவர்களை கடுமையாக திட்டுபவர் .
நாயகி தன் உடல் தேவைக்காக ஒரு ஆண் பாலியல் தொழிலாளீயை ஆன் லைன் மூலம் புக் செய்கிறார். அவன் தான் நாயகன் . நாயகன் நாயகி இருக்கும் இடத்துக்கு முதல் முறை வரும்போது அவனுக்கு நாயகியின் மகன் வயதுதான் என்பதை உணர்கிறார். இருவரும் அவரவர் வாழ்க்கை பற்றிப்பேசிக்கொண்டே 30 நிமிடங்கள் கழித்து விடுகிறார்கள்
இரண்டாவது சந்திப்பில் அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படுகிறது . இப்போதும் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
மூன்றாவது சந்திப்பில் இருவருக்கும் சண்டை வந்து விடுகிறது . காரணம் நாயகன் தன் தொழில் நிமித்தம் தன் பெயர் மற்றும் விபரங்களைப்போலியாக சொல்லி இருந்தான், அதை கண்டுபிடித்து அவன் உண்மையான பெயரை நாயகி அறிந்து வைத்திருந்தாள் . இது பற்றிய உரையாடலின் முடிவில் நாயகன் கோபித்துக்கொண்டு சென்று விடுகிறான்
நான்காவது சந்திப்பு தான் க்ளைமாக்ஸ் . ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு எடுக்கிறார்கள் . அங்கே வெய்ட்டராக நாயகியின் முன்னாள் மாணவி இருக்கிறார். முதலில் நாயகி நாயகனை தன் காரை வாங்க வந்தவர் என பொய் சொல்லி அறிமுகம் செய்கிறார். பிறகு மனம் மாறி நாயகன் யார் என்பதையும் , அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்பதையும் கூறி அந்த மாணவியை ஒரு காலத்தில் திட்டியதற்கு மன்னிப்பும் கேட்கிறார். போதாததற்கு நாயகன் நல்லவன் , வல்லவன் ., கெட்டிக்காரன் பெண்டு ஏடுககறதுல என சர்ட்டிஃபிகேட் வேற கொடுத்து நீ வேணும்னாக்கூட அவனை புக் பண்ணிக்கலாம் என்கிறார்
அவ்வளவுதான் , படம் முடிஞ்சுது , எல்லாரும் எழுந்து செல்லலாம்
சபாஷ் டைரக்டர்
1 இரண்டே இரண்டு கேரக்டர்களை வைத்து படம் எடுக்க துணிந்தது
2 போர் அடிக்காமல் 90 நிமிடங்கள் வசனம் பேச வைத்தது
ரசித்த வசனங்கள்
1 இதுவரைக்கும் நீங்க எத்தனை பேரை காதலிச்சிருக்கீங்க >
பொதுவா ஜெண்ட்டில்மென் அந்த கணக்கை சொல்ல மாட்டாங்க
2 எனக்கு 41 வயசாகுது , இதுவரை நீங்க சந்தித்ததில் மிக அதிக வயதான பெண்ணின் வயது என்ன?
இந்தக்கேள்வி எதற்கு ?
சும்மா தெரிஞ்சுக்கத்தான்
82
3 நான் ஒரு டீச்சரா இருக்கறதால ஒருவர் பேசும் வார்த்தைகளை வைத்தே அவங்க என்னவா எதிர்காலத்துல ஆவாங்கனு கணிக்க முடியும், ஒருவர் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைகளை வைத்து சொல்ல முடியும்
4 உங்க குழந்தைகள் எப்பவாவது உங்களை தர்மசங்கடமான நிலைமைக்கு உங்களை தள்ளி விட்டிருக்காங்களா?
இல்லை, அது அவங்களால முடியாது . உங்க அம்மா சங்கடமான சூழலில் இருப்பதை உன்னால எப்பவாவது உணர முடிஞ்சிக்ருக்கா? அப்போ நீ என்ன செஞ்சே?
5 என் வாழ்க்கை முழுவதும் நான் சந்தித்த ஒரே அட்வென்ச்சர் நீ தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
படத்தில் லாஜிக் மிஸ்டேக்ஸ் எதுவும் இல்லை . ஆனால் இந்தப்படத்தை எல்லாம் வெட்டியா உக்காந்து பார்த்தேனே அதுதான் நான் செய்த மிஸ்டேக், இந்த லட்சணத்துல சிறந்த நடிகைக்கான அவார்டு வேற
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - கடைசி 5 நிமிடங்களில் ஒரு நிமிடம் மட்டும் அடல்ட் கண்ட்டெண்ட் இருக்கிறது, வசனங்களில் லைட்டா பச்சை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இந்த டப்பாப்படத்தை சிபாரிசு செய்த அந்த நபரைத்தான் வலை வீசித்தேடிட்டு இருக்கேன். ரேட்டிங் 1 / 5
Good Luck to You, Leo Grande | |
---|---|
Directed by | Sophie Hyde |
Written by | Katy Brand |
Produced by |
|
Starring | |
Cinematography | Bryan Mason |
Edited by | Bryan Mason |
Music by | Stephen Rennicks |
Production companies |
|
Distributed by |
|
Release dates |
|
Running time | 97 minutes |
Countries |
|
Language | English |
Box office | $9.7 million[1] |