Showing posts with label GOLD (2022) மலையாளம் திரை விமர்சனம். Show all posts
Showing posts with label GOLD (2022) மலையாளம் திரை விமர்சனம். Show all posts

Thursday, January 05, 2023

GOLD (2022) மலையாளம் திரை விமர்சனம் ( மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

 


இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன்  தனது  முதல்  படமாக  தமிழ், மலையாளம்  ஆகிய  இருமொழிகளில்  ஒரே  சமயத்தில்  ரிலீஸ்  செய்த  “நேரம்”2013ம்  ஆண்டின்  மாறுபட்ட  படமாக  அமைந்தது ,  2015ல்  வெளிவந்த  மலையாளப்படமான  பிரேமம்  ஆட்டோகிராஃப்  பட  சாயல்  என்றாலும்  கேரளாவில்  அதிரி  புதிரி  வெற்றி . கிட்டத்தட்ட  ஏழு  வருட  இடைவெளிக்குப்பின்  இப்போது  வெளியாகி  இருக்கும்  கோல்டு  படம் அவருக்கு  ஏழரையாக  அமைந்ததா? ஏழாவது  அதிசயமாக  அமைந்ததா? என்பதைப்பார்ப்போம்

ஸ்பாய்லர்  அலர்ட்

நாயகன்  ஒரு  செல் ஃபோன்  கடை  ஓனர். அவருக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகி  இருக்கிறது . புது  மணப்பெண்ணுக்காக  அவர்  வாங்கிய  புதிய  கார்  டெலிவரி  ஆகி  வீட்டின்  முன்  நிறக  இருக்கும்  தருணத்தில்  ஒரு  சிக்கல். யாரோ  ஒருவர்  நாயகன்  வீட்டு  வாசல்  முன் ஒரு  டெம்போ  வேனை   நிறுத்திவிட்டுப்போய்  விட்டார்கள். வேனில்  ஸ்பீக்கர்கள்  200  இருக்கின்றன


 நாயகன்  போலீஸ்  ஸ்டேஷன்  போய்  புகார்  கொடுக்கப்போனால்  2  நாட்கள்  அந்த  வேன்  அங்கேயே  இருக்கட்டும்  என  சொல்லி  விடுகிறார்கள் . திரும்பி  வந்த  நாயகன்  அந்த  ஸ்பீக்கர்களில்  ஒன்றை  எடுத்து  வீட்டுக்குள்  சென்று  உபயோகப்படுத்த  முயலும்போது  ஆனந்த  அதிர்ச்சி . கொடுக்கற  தெய்வம்  கூரையைப்பிய்த்துக்கொண்டு  கொடுக்கும்  என்பார்கள், ஆனால்  அதிர்ஷ்ட  லட்சுமி    காலிங்  பெல்லை  அழுத்தாமலேயே  உள்ளே  வந்தால்  எப்படி  இருக்கும்?  அந்த  உணர்வுதான்  நாயகனுக்கு . 200  ஸ்பீக்கர்களிலும்  தங்கக்கட்டிகள்  மறைக்கப்பட்டு  வைக்கப்பட்டுள்ளன்


இதற்குப்பின்  நாயகன்  அந்த  200  கிலோ  தங்கத்தை  ஆட்டையைப்போட  எடுக்கும்  நடவடிக்கைகளும் .  தங்கத்துக்கு  சொந்தக்காரர் , போலீஸ்  இரு  தரப்புகளும்  நாயகனுக்கு இழைக்கும்  இடைஞ்சல்களும்  தான்  காமெடியான  திரைக்கதை 


நாயகனாக  பிருத்விராஜ். மாறுபட்ட  படங்களைத்தேடி  தேடி  நடிக்கும்  இவருக்கு  இது  ஒரு  சறுக்கல்  படம்  என்றே  சொல்ல  வேண்டும். ஆனால்  அவர்  மீது எந்தக்குறையும்  சொல்ல  முடியாத  அளவு  கச்சிதமாக நடித்திருக்கிறார்


நாயகியாக  நயன்தாரா. அவரது  ரசிகர்களுக்கு  அதிர்ச்சியான  செய்தி . இவர்  நாயகனுக்கு  ஜோடி  இல்லை . இவர்  வரும் காட்சிகள்  மொத்த  3  மணி  நேரப்படத்தில்  10  நிமிடங்கள் மட்டுமே.  கேமியோ  ரோல் தான். ஐயா  படத்தில் அழகாகப்பார்த்த  இவரை  இளைத்த  வடிவில்  இப்படிப்பார்க்க  சங்கடமாக  இருக்கிறது 


ரோஷன்  மேத்யூ  வில்லனாக  கலக்குவார்  என  எதிர்பார்த்தால்  அவர்  கூட  கெஸ்ட்  ரோல்  தான், அதிக  வாய்ப்பில்லை . அஜ்மல்  அமீர்  காமெடி  வில்லன்  ரோல். எடுபடவில்லை 


கதைக்கு  சம்பந்தம் இல்லை  என்றாலும்  தீப்தி யின்  நடனக்காட்சிகள் அபாரம். அந்த  நடனக்குழு  முழுவதற்கும்  அந்த  க்ரெடிட்  போய்ச்சேர  வேண்டும், அசத்தி  இருக்கிறார்கள் 


காமெடியாக  படத்தை  நகர்த்த  முயன்று  அதில்  பாதி  அளவு  கூட  வெற்றி  பெற வில்லை  இயக்குநர், நம்பகத்தன்மை  இல்லாத  திரைக்கதை, வலுவற்ற  காட்சி  அமைப்புகள், நாயகனைத்தவிர  யாருக்குமே ஸ்க்ரீன்  ஸ்பேஸ்  தராதது  என  மைனஸ்  களை  அடுக்கிக்கொண்டே  செல்லலாம்


ராஜேஷ்  முருகேஷன்  இசை  கச்சிதம் விஷ்வஜித் , சந்திரன் இருவரது  ஒளிப்பதிவும்  ஓக்கே  ரகம் .எடிட்டிங்கும்  அல்போன்ஸ்  புத்திரன் தான் , நீள  நீளமான  காட்சி  அமைப்புகளில்  கத்திரி  வைத்திருக்கலாம்,  கதாபாத்திரங்கள் நடந்து  வருவதை  அதிக  நேரம்  ஸ்லோ  மோஷனில்  காட்டி  இருப்பதைக்குறைத்து  இருந்தாலே   ரெண்டரை  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம் பண்ணி  இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர் 


1  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  அப்போவே  ஏன்  வண்டியைக்கொண்டு  போகல? என  யாரும் கேள்வி  கேட்க  முடியாத  வண்னம்  அங்கே  ஒரு  பிரச்சனையை  உருவாக்கி  அதைக்காமெடியாக  பிரசண்ட்   செய்த  சாமார்த்தியம்

2   நயன்  தாராவை  கெஸ்ட்  ரோலில்  புக்  பண்ணி  நாயகி  மாதிரி  பிரமோக்களில்  , போஸ்டரில்  டிசைனில்  போட்டு   ஒப்பேற்றிய  வித்தை 


3  இந்தக்கதை காமெடிக்கலக்கலாக  அமையும்  என  நாயகனை  நம்ப  வைத்து  கால்ஷீட்  வாங்கிய  சாமார்த்தியம்


ரசித்த  வசனங்கள்


1  பெரிய  பெரிய  இடங்களில்  சின்னச்சின்ன  விஷயங்களை  நாம  கண்டுக்கக்கூடாது


2  இந்த  சரக்கு  என்ன?னு  தெரியுமா?  99.99%  கோல்டு\


அப்போ  100%  கிடையாதுனு  சொல்லுங்க 


  கோல்டுல  100%  எதுவுமே  கிடையாது


3  புதையல்  டெய்லி  எப்பவும்   எங்கேயும்  கிடைக்காது ,  அதிர்ஷ்டம்  இருந்தா  வாழ்நாளில்  எப்போதாவது  யாருக்காவது  கிடைக்கும்


4  என்னது? சாகலாம்னு  தூக்குல  தொங்க  ரெடி  ஆகும்போது  ஃபோன் அடிக்குது ? சரி  சாகப்பொறோம், செல் ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணிட்டுப்போவோம் 


5  சாரே, எனக்கு  கோல்டு  டெலிவரி  பண்ற  டைம்ல  ஒரு  பிரச்சனை  உண்டாச்சு


 எல்லாம்  க்ளியர்  ஆகிடுச்சா?


 ஆமா,  டோலா  650  போட்டுக்கிட்டேன், இப்போ  தேவலை


 யோவ், உன்னைப்பற்றிக்கேட்கலை , கோல்டு  டெலிவரில  பிரச்சனை  இல்லையே? 


6    நான்  பிரமாதமான  ஐடியாக்கள்  சொல்வதைப்பார்த்துத்தான்  நான்  ஒர்க்  பண்ற  கம்பெனில  ஐடியா  சாஜினு  பட்டம்  கொடுத்தாங்க

  நீ  ஐடியா  சாஜியோ  பிஎஸ் என்  எல்  சாஜியோ, எனக்குத்தேவை  இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   செல் ஃபோன்  கடை  ஓனரான  நாயகன் தங்கத்தை  உருக்கும்  பணி  பற்றி  அறியாதவர். ஒரு  பொற்கொல்லரிடம்  தங்கம்  உருக்கும்  கருவி  வாங்கி  வீட்டுக்கு  வந்து  அவரே  உருக்கிக்கொள்வது  எப்படி ? அனுபவமே  இல்லாமல்  அவரே  செய்கிறாரே?


2  ஸ்பீக்கர்கள்  200  வேண்டும்  என  நாயகன்  கடை  ஓனரிடம்  கேட்கும்போது  அவர்  அட்ரஸ்  கேட்க நாயகன்  சொல்கிறார். நாளை  பிரச்சனை  வரும்போது  மாட்டிக்கொள்ள  வாய்ப்பிருக்கிறதே?  தன்  அட்ரசை  ஏன்  தருகிறார்? இவரே  ஆள்  வைத்து  போய்  டெலிவ்ரி  எடுத்துக்கொண்டால்  ஆள்  அடையாளமும்  தெரியாது , முகவரியும்  கண்டு  பிடிக்க  முடியாது 


3   வரதட்சனையாஅ  200  கிலோ தங்கம்  தருபவர்  அப்படியே  தராமல்  அதை  ஸ்பீக்கரில்  மறைத்து  கள்ளக்கடத்தல்காரன்  போல்  தருவது  ஏன்? அந்த வேலை  செய்யும் நேரத்தில்  வேற  ஐடியா பண்ணி  இருக்கலாம். அல்லது  வாங்குபவர்  வேலை  என  அவங்க  கிட்டே  கை  காட்டி  விட்டிருக்கலாம்


4   ஒரு  வேன்  டிரைவர்  200  கிலோ  தங்கம்  இருப்பது  தெரிந்தும்  அம்போனு  ஒரு  இடத்தில்  விட்டுட்டு  வருவது  எப்படி ?


5   வேனில்  தங்கம்  இருப்பது  தெரிந்தும்  ஹீரோ  அதை  சேஃப்டியாக  உள்ளே  வைக்காமல்  அப்படியே  கேட்டுக்கு  வெளியே    வைப்பது  ரிஸ்க் . நைட்  யாராவது  ஸ்பீக்கரை  ஆட்டையைப்போட  நினைத்தால்  லாஸ்  ஆச்சே?


6  பொதுவா  போலீஸ்  ஒரு   வண்டியை  பார்த்தால்  என்ன  லோடு  என  முதல்  வேலையாப்பார்ப்பாங்க, ஆனால்  இந்த  வேனில்  என்ன  லோடுன்னே  முதல்  2  ம்ணி  நேரம்  பார்க்கவே  இல்லை 


7 நாயகன்  தன்  அம்மாவுடன்  ஒரே  வீட்டில்  வசிக்கிறார், ஆனால்  அம்மாவிடம்  தங்கம்  பற்றிய  மேட்டரை  சொல்லாமலேயே  200  கிலோ  தங்கத்தை  மாறாட்டம்  செய்வ்து  எப்படி ? அம்மா  என்ன  பண்றே?னு  கேட்க  மாட்டாரா?


8  200   ஸ்பீக்கர்களில்  170  மாற்றிய  பின்  டைம்  இல்லை , அப்போ  மீதி  30  மட்டும்  ஸ்டிக்கர்  மாற்றாமல்  பாக்சாகவே  அப்ப்டியே  மாற்றி  இருக்கலாமே? 


சி பி எஸ்  ஃபைனல்கமெண்ட்  -  லாஜிக்  இல்லா  மேஜிக்  என  சொல்ல  முடியாது , ஆனா நம்பமுடியாத  டஹால்டிப்படம்  என  வேணா  சொல்லலாம்,


 கோல்டு  அல்ல, கோல்டு  கவரிங். இது அமேசான்  பிரைமில்  காணக்கிடைக்கிறது 


Gold
Gold.Malayalam.Film.jpg
First look poster
Directed byAlphonse Puthren
Written byAlphonse Puthren
Produced bySupriya Menon
Listin Stephen
StarringPrithviraj Sukumaran
Nayanthara
CinematographyAnend C. Chandran
Viswajith Odukkathil
Edited byAlphonse Puthren
Music byRajesh Murugesan
Production
companies
Distributed by
Release date
  • 1 December 2022
Running time
165 minutes
CountryIndia
LanguageMalayalam