தீவிரவாதத்தின் எதிர்ப்பு சிறப்புப்படையின் தலைவன் ஆக வில்லன் முதலில் இருந்தான் .பின் பண ஆசையால் துரோகி ஆக மாறியதால் அந்த பதவிக்கு வேறு ஒருவர் வருகிறார் .அவர் தலைமையின் கீழே தான் நாயகன் ஸ்பெஷல் ஆண்ட்டி டெர்ரரிசம் ஸ்குவாடில் பணி ஆற்றுகிறார் .நாயகன் தனது டீம் உடன் சேர்ந்து தீவிரவாதிகளின் ஆயுதம் ஆன யுரேனியத்தைக்கைப்பற்றும்போது எதிர்பாராதவிதமாக வில்லனின் மனைவி , மற்றும் மகன் இறக்கிறார்கள்
இதனால் செம கடுப்பான வில்லன் நாயகனின் 5 வயது மகனைக்கடத்திக்கொண்டு போய் அவனது கஸ்டடியில் வளர்க்கிறான் . அந்த விசயம் நாயகனுக்குத்தெரியாது . மகன் இறந்து விட்டதாக நாயகன் நினைக்கிறான்
15 வருடங்களுக்குப்பின் வெளிநாடு டூர் போகும் நாயகன் அங்கே தன மகனைப்பார்க்கிறான் . வில்லனின் வளர்ப்பு மகன் என்பது தெரியாமல் அவனை தன்னுடன் அழைத்து வருகிறான் .இதற்குப்பின் நடக்கும் திருப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் மற்றும் மகன் ஆகிய இரு வேடங்களில் விஜய் . மகன் இறந்ததாக நினைத்துக்கதறும் காடசியிலும் , என் மகன் எங்கே? என மனைவி கேட்கும்போது உண்மையை சொல்லமுடியாமல் கலங்கும் காடசியிலும் , விஜய் பிரமாதமாக நடித்திருக்கிறார்
நாயகனின் டீமில் உடன் பனி ஆற்றுபவர்களாக பிரசாந்த் , அஜ்மல் , பிரபுதே வா ஆகிய மூவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் . நாயகனின் ஹையர் ஆபீசர் ஆக ஜெயராம் உருக்கமான நடிப்பு .மனைவி ஆக சினேகா அதிக வேலை இல்லை .. மகன் விஜய்க்கு ஜோடியூயாக மீனாட்சி சவுத்ரி ஒரே ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுகிறார்
வில்லன் ஆக மைக் மோகன் , இவரது கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை . நாயகனின் ,மகனாக வரும் இன்னொரு விஜய் கேரக்டர் ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவாக்கி இருப்பதால் கொஞ்ச்ம பிசிறடிக்கிறது .அவரது வில்லன் நடிப்பு எடுபடவில்லை .பிரியமுடன் படத்தில் அவரது வில்லனிசம் நன்றாக இருந்தது
யோகிபாபு சில காட் சிகளில் தான் வருகிறார். ஓரளவு சிரிக்க வைக்கிறார் , யோகிபாபு சில காட் சிகளில் தான் வருகிறார். ஓரளவு சிரிக்க வைக்கிறார் .சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் வருகிறார்
இசை யவன் சங்கர் ராஜா . பாடல்கள் சுமார் ரகம் தான் .பிஜிஎம் பட்டாசு சித்தார்த் துணியின் ஒளிப்பதிவில் சேசிங்க் காட்சிகள் ஆங்கிலப்படங்கள் போல இ ருக்கின்றன .
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் வெங்கட் பிரபு
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங்க் சீனில் கேப்டன் விஜயகாந்த் ஏ ஐ டெக்னாலஜியில் இளமையாகத்தோன்றும் காட்சி செம
2 விசில் போடு பாடல் காட்சியில் விஜய் , பிரபு தேவா , பிரசாந்த் மூவரின் நடனம் கலக்கல்ஸ் ரகம்
3 நாயகன் - வில்லன் சண்டைக்காட்சி முடிந்தபின் வரும் இண்ட்டர்வல் பிளாக் சீன்
ரசித்த வசனங்கள்
1 யாருக்குமே தெரியாம யுரேனியத்தைக்கடத்திட்டு வாங்கன்னா ஒரு ரயிலையே டேமேஜ் பண்ணிட்டு வந்திருக்கீங்க?
2 இவன் ஒருத்தன் சின்ன வயசுல இருந்து ஓவர் ஆக்டிங் பண்றதை நிறுத்தவே மாட்டே ங்கறான்
3 என்னங்க , போன்ல ஒரு பொண்ணோட வாய்ஸ் கேட்குது , என்ன பண்றீங்க?
இனிமே தான் பண்ணனும்
4 ஹலோ , எங்கே இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
வாய்ல ...
வாட் ?
வாயு னு சொல்ல வந்தேன்
5 டேய , ஏதாவது பேசுடா
நாம இவ்ளோ பேசுனதாலதான் மாட்டி இருக்கோம்
6 உன்னை உயிரோட எப்படி காப்பாத்தி இருக்கலாம்னு 1000 வழிகளில் யோசி ச்சேன் , , ஆனா நீ உயிரோட இருந்தும் ஒரு வாட்டி கூட யோசிக்கலையே?
7 அவன் ரொம்ப டேஞ்சர் ஆனா ஆளுப்பா
உன் அப்பா எப்பேர்ப்பட்ட ஆளுன்னு தெரியாம பேசிட்டு இருக்கே
8 நான் சொன்னபடி செஞ்சா உன் மகனைத்தூக்கிடலாம்
அவனை நான் தூக்கி அரை மணி நேரம் ஆகிடுச்சு
9 வயசாகிடுச்சேன்னு யோசிக்கறீங்களா?
வயசானா என்னய்யா? சிங்கம் எப்போதும் சிங்கம் தான் , காடு மாறினாலும், அதன் போராடும் குணம் மாறாது
10 ஹலோ , நான் காந்தி பேசறேன் , ஏங்க யாரு?
, சுபாஷ் சந்திரபோஸ் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
என்னது?
ஆமா, நீ காந்தியா இருக்கும்போது நான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆக இருக்கக்கூடாதா?
11 செல் போன் திருடன் தானே? நீ? சி சி டி வி யைப்பார்த்தா எல்லா உண்மையும் தெரிஞ்சுடும்
நான் என்ன சப்பையா? முதல்ல ஆப் பண்றதே சி சி டி வி யைதான்
12 என்னடா? டிவிஸ்ட் பண்றயா? நீ பிறந்தது ல இருந்தே உன் அப்பா என் பிரெண்டு டா, அவனை எனக்கு நல்லத்தெரியும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் மகன் அடையாளம் தெரியாத அளவு கருகிய நிலையில் இறந்த உடலாக கண்டெடுக்கப்பட்டபோது டி என் ஏ டெஸ்ட் மூலம் அது தன் மகன் தானா? என்பதை செக் பண்ணி இருக்கலாமே?
2 எஸ் ஏ சந்திர சேகர் இயக்கி கேப்ட ன் விஜயகாந்த் நடித்த ராஜதுரை (1993) படத்தின் கதை யிலிருந்து இன்ஸபிரேஷன் ஆகித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்
3 துப்பாக்கி படத்தில் வரும் இண்ட்டர்வல் பிளாக் சீன ஆன " ஐ ஆம் வெயிட்டிங்க் " டயலாக் சீன குட் தான் , ஆனால் அதே டயலாக்கை இன்னும் எத்தனை படத்தில் வைப்பாங்க?
4 மகன் விஜய் தன பயலாஜிக்கல் பாதர் யார் என்று தெரிந்தபின்னும் வளர்ப்புத்தந்தைக்கு உதவியாகஇருக்க வலுவான காரணங்கள் இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் = ஒரு லிப் லாக் சீன உண்டு . வன்முறைக்காட்சி உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - THE GOAT(2024) -விஜய் ரசிகர்கள் கொண்டாடுவது போல துப்பாக்கி , கில்லி ரேஞ்ச்சுக்கு எல்லாம் இல்லை , அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வது போல பீஸ்ட் , பிகில் அளவு டப்பாவும் இல்லை . பார்க்கலாம் . விகடன் மார்க் 42 , ரேட்டிங் 2.75 / 5