Showing posts with label GLASS ONION; A KNIVES OUT MYSTRY (2022) ஆங்கிலம் - திரை விமர்சனம். Show all posts
Showing posts with label GLASS ONION; A KNIVES OUT MYSTRY (2022) ஆங்கிலம் - திரை விமர்சனம். Show all posts

Wednesday, January 04, 2023

GLASS ONION; A KNIVES OUT MYSTRY (2022) ஆங்கிலம் - திரை விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


 

GLASS ONION; A KNIVES OUT MYSTRY (2022)  ஆங்கிலம் - திரை  விமர்சனம் ( க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்


 அகதா  கிறிஸ்டியின்  நாவலைத்தழுவி  எடுக்கப்பட்டு 2019ல்  வெளி வந்து  மெகா  ஹிட்  ஆன  நைவ்ஸ்  அவுட்  படத்தின்   அடுத்த  பாகம்  இது . அந்தப்படம்  பார்க்காதவர்களுக்கும்  இது  புரியும் 


சாருலதா  படத்தில்  பிரியாமணி  ட்வின்ஸ் சிஸ்டர் ஆக  இரு  வேடங்களில்  வருவாரே  அது  போல  படத்தின்  நாயகிக்கும்  ஒரு  ட்வின்ஸ்  சிஸ்டர்  உண்டு அவர்  திடீர்  என  மர்மமான  முறையில்  இறந்து  கிடக்கிறார்/ நாயகிக்கு  மட்டும்  அது  கொலை தான்  என்  நன்றாகத்தெரியும்.தன்  சகோதரியின்  உடைமைகளை  செக்  செய்து  பார்த்த  போது  ஒரு  பார்ட்டிக்கான  அழைப்பிதழ்  கிடைக்கிறது 


  டெக்னாலஜி  மன்னரும்  ,  மிகப்பெரும்  கோடீஸ்வரருமான  ஒரு  நபர்  அவரது  ஐந்து  நண்பர்களை  ஒரு  பார்ட்டிக்கு  அவரது  தனித்தீவுக்கு  அழைக்கும்  அழைப்பிதழ்    அது 


நாயகி  படத்தின் நாயகனான  டிடெக்டிவ் வை  அணுகி  விபரம்  தெரிவித்து  அந்த  அழைப்பிதழைக்கொடுத்து  அந்த  தீவுக்கு  போகச்சொல்கிறார். அங்கே  போனால்  கொலை  பற்றி  ஏதாவது  துப்பு  கிடைக்கலாம்  என்கிறார்


அப்போது  டிடெக்டிவ் ஆன  நாயகன்  ஒரு  ஐடியா  சொல்கிறார்.  இறந்து  விட்ட  அல்லது  கொலை  செய்யப்பட்ட   சகோதரியின்  உருவ  அமைப்பில்  நாயகி  இருப்பதால்  உடை  அலங்காரம்,  சிகை  அலங்காரம்  இரண்டையும்  சகோதரி  போல  மாற்றி  நாயகியும்  அந்த  தீவுக்கு  வர  வேண்டும். அப்போது  பல  உண்மைகள்  வெளி  வரும் 


இப்போது  நாயகன் , நாயகி  இருவரும்  தனித்தனியே  அந்த  தீவுக்கு  செல்கின்றனர் ,இதற்குப்பின்  இந்தக்கதையில்  நிகழும்  சுவராஸ்யமான  சம்பவங்கள்  தான்  திரைக்கதை 


டிடெக்டிவ்    ஆக , நாயகன்  ஆக முன்னாள்  ஜேம்ஸ்பாண்ட் நாயகன் டேனியல்  கிரெய்க்  பிரமாதப்படுத்தி  இருக்கிறார். அவரது  உடை  அலங்காரம், உடல்  மொழி  எல்லாமே  அசத்தல் தீவில்  நடக்கும்  இரண்டு  கொலைகளை  துப்பறியும்  விதமும்  அருமை 


பார்ட்டிக்கு  அழைக்கும்  கோடீஸ்வரர்  ஆக  எட்வர்டு அட்டகாசம்  பண்ணி  இருக்கிறார். அவருக்கு  வைக்கப்பட்ட  மதுக்கோப்பையை  வேறு  ஒருவர்  எடுத்துக்குடித்து  மரணம்  அடைந்ததும்  பதறி  இது  எனக்கு  வைக்கப்பட்ட  குறி, கொலையாளியைக்கண்டு  பிடிங்க  என  பதறும்போது  அவர்  உடல்  மொழி  அபாரம் 


இரட்டை  சகோதரிகளாக  மாறுபட்ட  இரு  வேடங்களில்  நாயகியாக ஜெனெல்லா  மோனே  அதகளமான  நடிப்பு . கொலை  செய்யப்பட்ட  என்  சகோதரி  உருவத்தில்  நான்  அந்த  தீவுக்கு  வந்தால்  என்  உயிருக்கு  ஆபத்து  ஏற்படாதா? என  நாயகனை  மடக்கும்  காட்சியும்  சரி , க்ளைமாக்சில்  வில்லனை  எதிர்க்கொள்ளும்  தில்லான  காட்சியிலும்  சரி ,  விலை  உயர்ந்த  பொருட்களைப்போட்டு  துவம்சம்  செய்யும்  கோபத்திலும்  சரி   அந்த  பாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார்


ஜிம்  பாடியில்  ஜைஜாண்டிக்காக வரும்  நபர்  கொலை  செய்யப்படும்போது  காட்டும்  துடிப்பு  பதை பதைக்க  வைக்கிறது


  ஒரு  தீவில்  கதை  நடப்பதால்    லொக்கேஷன்  , ஒளிப்பதிவு  இரண்டுமே  கண்களுக்கு  விருந்து ஸ்டீவ்  ராட்லின்  தன்  கேமரா  மூலம்  அடியன்ஸை  கட்டிப்போடுகிறார், குறிப்பாக  மோனலிசா  ஓவியத்துக்கு  அடிக்கும்  லைட்டிங்  கலக்கல்  ரகம் 


பாப்  டூக்காசியின்  எடிட்டிங்கில்  ரெண்டே  கால்  மணி  நேரம்  தமிழ்ப்படம்  போல  ஓடினாலும்  சலிப்பு  தட்டவில்லை , முதல்  20  நிமிடங்கள்  பாத்திரங்கள்  அறிமுகப்படலம்.  பிறகு  40  நிமிடங்கள்  சில  சம்பவங்கள். படம்  போட்டு  ஒரு  மணி  நேரத்தில்  ஒரு  கொலை  நடக்கும், அதற்குப்பின்  பர பரப்பான  திரைக்கதை 


எழுதி  இயக்கி  இருப்பவர்  ரியான்  ஜான்சன் . எந்த நேரத்தில்  எந்த  சஸ்பென்ஸை  ஓப்பன்  செய்ய  வேண்டும்  என்பதை  நன்கு  அறிந்திருக்கிறார் 


இந்த  க்ரைம்  த்ரில்லருக்கு  நாதன்    ஜான்சன்  பின்னணி  இசை  கூடுதல்  பலம் 


ரசித்த  வசனங்கள் 


  1  நான் எப்பவும்  உண்மையை  மட்டும்தான்  பேசுவேன், என்னை  மாதிரி  கட்ஸ் உள்ளவங்க  யாராவது  இங்கே  உண்டா?

  எல்லா  இடங்களிலும், எல்லாரிடமும்  உண்மையைப்பேசுவது  நல்லதல்ல 


அப்போ  நான  அபாயகரமானவள்னு  நினைக்கறீங்களா?


2 உங்களுக்கு  என்ன  ட்ரிங்க்ஸ் பிடிக்கும்னு  எனக்குத்தெரியாது, ஆனா  உங்களுக்கு  என்ன  பிடிக்கும்னு  உங்களுக்குத்தெரியும்தானே? நீங்க  செலக்ட்  பண்ணிக்கலாம் 


3   மோனோலிசா  ஓவியத்தை  ஒவ்வொரு  முறை  பார்க்கும்போதும்  ஒவ்வொரு  மாதிரி  இருக்கும், முகத்தில்  இருப்பது  கோபமா? வருத்தமா? சந்தோஷமா? கணிக்க  முடியாது 


4  ஒரு  பொய்யை   நிரூபிக்க  இன்னொரு  பொய்  பேசலாம், ஆனா  ஒரு  உண்மையை  நிரூபிக்க  உன்னால்  பொய்  பேச  முடியாது  , தேவையும்  இல்லை 

5   என்  மனசு  பூரா  ரேஸ்  கார்  ஓடிட்டு  இருக்கு, ஆனா  நான்  அதுல  ஏறி  எங்கேயும்  போக  முடியாது 


6  பெரும்பாலும்  மக்கள்  அவங்களையும்  அறியாம  சில  இடங்களில்  உண்மையைப்பேசிடுவாங்க 


சபாஷ்  டைரக்டர் 


1    ஆர்ட்  டைரக்சன்  அபாரம்  . க்ளைமாக்ஸ்  காட்சியில்  நாயகி  கண்னாடிப்பொருட்களை  உடைக்கும்  காட்சியில்  ஒளிப்பதிவாளர்  ,  ஆர்ட்  டைரக்டர்  இருவரின்  உழைப்பு,ம்   தெரிகிறது 


2  நாயகனை  விட  வில்லனின்  கேரக்டர்  டிசைன்  அபாரம், குறிப்பாக  க்ளைமாக்சில்  நாயகியை  அசால்ட்டாக  டீல்  செய்யும்  இடம் 


3  தீவில்  நடக்கும்  முதல்  கொலையில்  வில்லன்  எப்படி  சாமார்த்தியமாக  நம்மை  எல்லாம்  ஐ  வாஷ்  செய்தான்  என்பதை  ஹீரோ  விவரிக்கும்  இடம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1    கொலை  செய்யப்பட்ட  தன்  சகோதரி  உருவில்  நாயகி  அந்த  பார்ட்டிக்கு  செல்வது  ஓக்கே ,ஆனால் அந்தக்கொலையை  செய்த  நபரும்  பார்ட்டியில்  பங்கேற்கிறார்  எனும்போது  அந்த  விபரம்  வில்லனுக்குத்தெரியாமல்  இருக்குமா? 


2  எம்  ஜி யார்  காலத்து  டெக்னிக்கான  ஆள்  மாறாட்டம்  சுமார்  தான்  என்பதும்   நாயகி  புல்லட்  பாய்ந்தும்   இறக்கவில்லை  என்பதும்   பின்னடைவு 


3  நாம்  அழைப்பிதழே  அனுப்பலை, ஆனா   அழைப்பிதழ்  வந்ததாக  பொய்  சொல்லும்  நாயகன்  ஒரு  டிடெக்டிவ்  எனத்தெரிந்தும்  ஏன்  அந்த  கோடீஸ்வரர்  அனுமதிக்கிறார்?  அதில்  அவருக்கு  லாபம்  என்ன?


சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  முதல்  பாகம்  அளவுக்கு  பிரமாதம்  இல்லை  என்றாலும்  இது  பார்க்கத்தகுந்த  ஒரு  த்ரில்லர்  மூவி  தான்  ரேட்டிங்  2.75 /.5 

Glass Onion: A Knives Out Mystery
Directed byRian Johnson
Written byRian Johnson
Produced by
StarringDaniel Craig
CinematographySteve Yedlin
Edited byBob Ducsay
Music byNathan Johnson
Production
company
Distributed byNetflix
Release dates
  • September 10, 2022 (Toronto)
  • November 23, 2022 (United States)
  • December 23, 2022 (Netflix)
CountryUnited States
LanguageEnglish
Budget$30–50 million