31/5/2024 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் 20/6/2024 முதல் அமேசான் பிரைம் ஓடி டி தளத்தில் காணக்கிடைக்கிறது . பல ஹிட் படங்களில் இருந்து காட்சிகளை உருவி இருந்தாலும் டைம் பாஸ் படமாக இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு அரசியல்வாதி. தேர்தல் நேரம், ஓட்டுக்குப்பணம் கொடுக்க ரூ 100 கோடி ரூபாய் ஹாட் கேஷ் ஆக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக்கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது . வில்லனின் அடியாள் ஒரு யோசனை சொல்கிறான். அதன்படி வினாயகர் சதுர்த்தி ஆர்டர் என சொல்லி பிரம்மாண்டமான ஒரு வினாயகர் சிலைக்குள் பணக்கட்டுக்களை அடைத்து லாரியில் சிலையை ஓப்பனாகவே கொண்டு வரலாம். யாரும் செக் செய்ய மாட்டார்கள் என்கிறான். அதனபடி சிலை வருகிறது
நாயகன் ஒரு வெட்டாஃபீஸ் . சின்னச்சின்ன திருட்டுகளை செய்பவன். அவனுக்கு ஒரு காதலி . லைஃபில் நல்லா செட்டில் ஆகு, அதன் பின் தான் நம்ம மேரேஜ் என்று சொன்னவள் ஒரு கட்டத்தில் பெற்றோர் பார்த்த பணக்கார மாப்பிள்ளையைக்கல்யாணம் பண்ண சம்மதிக்கிறாள் . இதனால் கடுப்பான நாயகன் மேரேஜ்க்கு இன்னும் ஒரு மாதம் இருக்கு , அதுக்குள் நான் லட்சாதிபதி ஆகிறேன் பார் என சவால் விட்டு வருகிறான்
நாயகனுக்கு ஒரு ஆஃபர் வருகிறது. பிரபல நகைக்கடையின் ஓனர் மகன் தன் அப்பாவிடம் கொண்ட கருத்து வேறுபாட்டால் தன் கடையில் தானே கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறான். அப்பாவிடம் ரூ 7 கோடி மதிப்புள்ள ஒரு வைரக்கல் இருக்கிறது . அதைக்கொள்ளை அடித்து வர நாயகனுக்கு ரூட் போட்டுத்தருகிறான். இந்த வேலையைச்செய்தால் நாயகனுக்கு ரூ 40 லட்சம் சம்பளம்
அதற்கு ஓக்கே சொன்ன நாயகன் திட்டப்படி வைரத்தைக்கொள்ளை அடித்த பின் அதை ஆட்டையைப்போட திட்டம் போடுகிறான். காரில் வரும்போது செக் போஸ்ட் . முன்னால் 100 கோடி மதிப்புள்ள பணம் உள்ள வினாயகர் சிலை இருக்கும் லாரி. போலீஸ் செக்கிங்க் நடக்கிறது . அப்போதைக்குத்தப்பிக்க நாயகன் தன்னிடம் இருந்த வைரக்கல்லை வினாயகர் சிலைக்குள் போட்டு விடுகிறான் . அந்த சிலைக்குள் 100 கோடி ரூ பணம் இருப்பது நாயகனுக்குத்தெரியாது
இதற்குப்பின் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஆனந்த் தேவர்கொண்டா கச்சிதம். காமெடி , காதல் , புலம்பல் , ஆக்சன் என எல்லாமும் சராசரி ஹீரோ போல் சமாளிக்கிறார்
நாயகி ஆக நயன் சரிகா . நயன் தாரா போலவும் இல்லை , சரிகா கமல் போலவும் இல்லை . காரணப்பெயர் வேறாக இருக்கலாம், ஆனாலும் ரசிக்க வைக்கும் அழகு
வெண்ணிலா கிஷோர் காமெடிக்கு , ஆனால் அவருக்கான போர்சன் மிகக்குறைவே
சைதன் பரத்வாஜ் தான் இசை , 5 பாடல்கள் சுமார் ரகம் ., பின்னணி இசை சராசரி
ஆதித்யா ஜவ்வாடி தான் ஒளிப்பதிவு . நாயகிக்கான க்ளோசப் ஷாட்கள் இன்னும் நிறைய வைத்திருக்கலாம்
ஆதித்யா சீனிவாஸ் எடிட்டிங்கில் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது . பின் பாதி ரொம்ப இழுவை
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் உதய் பொம்மி செல்லி
சபாஷ் டைரக்டர்
1 சீரியஸ் ஆன கதையை காமெடி ஆன திரைக்கதையால் வேகமாகக்கொண்டு போனவிதம்
2 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் உடல் உறுப்புக்களை திருடும் காமெடியன் டாக்டர் கேரக்டர் செம
3 பின் பாதி திரைக்கதையை இழுப்பதற்காக இரண்டாவது நாயகி , நான்காவது வில்லன் சாமியார் கேரக்டர் ஆகிய புது கேரக்டர்களை திணித்த லாவகம்,
ரசித்த வசனங்கள்
1 டைட்டானிக் நாயகி ரோஸ் கூட நம்ம கலாச்சாரத்தால் இன்ஸ்பயர் ஆகி பேரை ரோஜானு மாத்திக்கிட்டாங்க
2 பொண்ணூங்களை நாம டீஸ் பண்ணும்போது அவங்க உதட்டில் இருந்து சிரிப்பு வரனும், கண்களீல் இருந்து கண்ணீர் வரக்கூடாது
3 வீட்டுக்கு சாப்பிட வாங்க
உன் வீட்டுக்கா இன்வைட் பண்றே?
இல்லை, இது லைஃப்க்கான இன்விட்டேசன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனை தன் அடியாட்கள் இருவருடன் காரில் துரத்தும் வில்லன் சில ஷாட்களில் தனியாக இருக்கிறார். பின் சீட் காலி. பல ஷாட்களில் பின் சீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் . எடிட்டிங்க் ஃபால்ட்டா?
2 நாயகனோ, அவன் நண்பனோ வைரத்தை நேர்ல் பார்த்ததில்லை . ஃபோட்டோவிம் இல்லை . சைஸ் , கலர் எதுவும் தெரியாது . அப்படி இருக்கும்போது நகைக்கடை ஓனர் எக்சாக்ட் ஆக அந்த வைரத்தைத்தர வேண்டிய அவசியம் என்ன? எதையோ ஒரு ட்ம்மிப்பீசை தந்தாலும் அவர்களுக்கு அதை அடையாளம் தெரியாது . வாங்கிக்கொள்வார்கள் .
3 அவ்ளோ பிரம்மாண்டமான வினாயகர் சிலையை சும்மா பைப்பில் தண்ணீர் பீய்ச்சி அடித்தே உருக்குகிறார்கள் . அவ்ளோ பலவீனமான சிலையை ஓப்பன் ஆக லாரியில் கொண்டு வருகிறார்களே? மழை பெய்தால் கரையாதா? கவர் பண்ணி தானே கொண்டு வரனும் ?
4 நாயகன் ஒரு அவசரத்தில் வினாயகர் சிலையின் தும்பிக்கையில் வைரத்தை வைக்கிறான். பல 100 கிமீ பயணத்தில் அது இடம் மாறாதா? அதாவது உள்ளே போகாதா? நாயகன் மீண்டும் வந்து எடுக்க முயல்கையில் கை பட்டு உள்ளே போகிறது
5 சிலை மாறாட்டம் நடந்ததை விஷூவலாகக்காட்டாமல் சும்மா வசனத்திலேயே வடை சுட்டு சமாளிக்கிறார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மொக்கைக்காமெடி ரசிகர்கள் பார்க்கலாம் .ரேட்டிங் 2.25 / 5
Gam Gam Ganesha | |
---|---|
Directed by | Uday Bommisetty |
Written by | Uday Bommisetty |
Produced by |
|
Starring | Anand Devarakonda |
Cinematography | Aditya Javvadi |
Edited by | Karthika Srinivas |
Music by | Chaitan Bharadwaj |
Release date |
|
Running time | 132 minutes |
Country | India |
Language | Telugu |