தமிழன் கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருக்கு.. அம்புலிமாமா, பால மித்ரா, பூந்தளிர் புக்ஸ் எல்லாம் குடுத்து நல்ல மாயா ஜாலக்கதைகள் இருக்கு ,படிடான்னா படிக்க மாட்டான்.. எளக்காரமா பார்ப்பான்.. ஆனா ஃபாரீன் புக்ஸ்ல செம சேல்ஸ்னு ஹாரி பாட்டர் மாதிரி இங்கிலீஷ் புக் வந்தா மட்டும் அரை குறை இங்கிலீஷ் நாலெட்ஜை வெச்சு ஒப்பேத்தி ஆஹா ஓஹ்ஹோ பேஷ் பேஷ்ம்பான்..
அதே மாதிரிதான் உலகின் சிறந்த , கலப்படம் இல்லாத குளுமை பானம் இளநீர்னா கேட்க மாட்டான்.. குடிக்க மாட்டான், கண்டுக்க மாட்டான்.. ஆனா பூச்சிக்கொல்லி மருந்து மாதிரி இருக்கற , உடல் ஆரோக்யத்துக்கு பாதிப்பே வந்தாலும் பரவால்ல, நமக்கு ஸ்டேட்டஸ்ஸூம், பந்தாவும் தான் முக்கியம்னு 50 ரூபா செலவு பண்ணி பெப்ஸி, கோக்கோ கோலா இப்டி குடிச்சு உடம்பை கெடுத்துக்குவான்..
அந்த மாதிரிதான் நம்மூர்ல மாயாஜாலப்படம் வந்தா கிண்டல் பண்ணுவான், இதெல்லாம் நடக்க சாத்தியமே இல்லம்பான்... ஆனா ஃபாரீன் படத்துல அது வந்தா மட்டும் ரசிச்சு பார்ப்பான்.. அந்த மாதிரி குழந்தைப்பசங்க ரசிக்கற ஒரு மாயா ஜாலப்படம்தான் இது.. காதுல பூக்கூடையையே சுத்துனாலும் , கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ஆர்ட் டைரக்ஷன் , ஹீரோயின் கிளாமர் இந்த 3 க்காக எப்படியும் ஆடியன்ஸ் வந்துடுவாங்க அப்டிங்கற தைரியத்துல எடுக்கப்பட்ட படம்..
படத்தோட கதை என்ன? லைப்ரரியை அழிக்க அம்மா ஜெ முயற்சி பண்ற மாதிரி மனிதர்களை அழிக்க ஒரு தீய சக்தி முயற்சி பண்ணுது.. ஆனா அது கலைஞர் இல்ல.. அந்த தீய சக்தியை கடவுளால கூட தடுக்க முடியலை.. வெறும் பர்வையாளனா மட்டுமே வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை.. இப்போ நம்ம பிரதமர் மாதிரி.. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஹீரோ தான் அதை செய்யறார்.. அவரோட அம்மா வை கொலை பண்ணிடறாங்க.. ஹீரோ அம்மாவை கொலை செஞ்ச வில்லனை யும், உலகத்தை அழிக்க நினைக்கிற ஆளையும் பழி வாங்கனும்.. 2 வேலையா? நோ நோ ஒரே வேலை.. 2ம் ஒரே ஆள் தான்..
சரி ஹீரோயினுக்கு என்ன வேலை? அவங்க தான் கடவுளோட தூதர்.. கன்னித்தன்மை மிக்கவங்க.. (!!!!!!) அவங்க கண்ணுக்கு எதிர்காலத்துல என்ன நடக்குதுன்னு பார்க்க முடியும்.. ஆனா தெய்வ வாக்கு ரேவதி மாதிரி தான் ஆக பாப்பா விரும்பல.. அதனால ஒரு டெக்னிக்.. இந்தியாவுல இதுவரை யாருமே கண்டுபிடிக்காத டெக்னிக்.. அதாவது ஹீரோ கிட்டே சொல்றாரு.. நீங்க என்னை கெடுத்துடுங்க... (!!!!!!) அப்போதான் நான் சராசரி மனுஷி ஆவேன்கறா..
நம்மாளுங்க சும்மாவே பிட்டை போடுவானுங்க.. எக்ஸாம் ஹால்ல சூப்பர்வைசரே நோட்சை எடுத்து கைல கொடுத்தா? ஹீரோவும் அந்த கஷ்டமான வேலையை செய்யறார்.. ( வில்லன் கிட்டே கேட்டிருந்தாக்கூட அதை செஞ்சிருப்பாரே?)
யாரும் கிளு கிளுப்பு அடைய வேண்டாம்.. அந்த சீன் ரொம்ப நாசூக்காதான் படத்துல சொல்லப்பட்டிருக்கு.. ( சென்சாரின் நாசூக்கில் இடி விழ,.,. )
ஆனா ஒரிஜினல் படத்துல கில்மா சீன் இருக்காம்.. இந்தியாவுக்கு மட்டும் அது கட்டாம்.. ஹீரோயின் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டாராம்.. எனக்கு இந்தியாவுல மரியாதை ,அந்தஸ்து , கவுரவம் எல்லாம் இருக்கு.. அதனால ஃபாரீன்ல எவ்ளவ் கேவலமாவேணாலும் சீன் காட்றேன்.. ஆனா இந்தியாவுல மட்டும் அதை காட்ட மாட்டேன் அப்டினு சொன்னாராம்.. ( ஆதாரம் - விக்கி உலகம் என்சைக்ளோ பீடியா)
ஒரு மந்திர வில் இருக்கு... அதை கைப்பற்றிட்டா உலகத்தையே வசம் ஆக்கிடலாம்.. அதை கஷ்டப்பட்டு ஹீரோ கைப்பற்றிடறார்.. அப்புறம் லூஸ் மாதிரி அதை வில்லன் கிட்டே விட்றாரு..
வில்லன் அதை யூஸ் பண்ணி போர் புரியாம கைல வெச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்கறான்..
கடவுளோட தேவ தூதர்கள் கடவுளுக்கே தெரியாம கட் அடிச்சுட்டு பூமிக்கு வர்றாங்க ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ண.. ( அது கூட தெரியலைன்னா அவர் என்ன கடவுள்?னு கேள்வி யாரும் கேக்காதிங்க.. எனக்கு பதில் தெரியாது,, )
கடவுளோட தேவ தூதர்கள்க்கு என்ன அடையாளம்? கலைஞர் போட்டிருக்கற மஞ்சள் துண்டு மாதிரி உடம்பு பூரா மஞ்சள் பெயிண்ட் அடிச்சிருப்பாங்க.. ஆனா பாருங்க அவங்களையும் வில்லன் அழிச்சிடறான்..
வில்லன் கோஷ்டிக்கு என்ன அடையாளம்னா அவங்க முகத்துல இந்தப்பக்கமா 3 கீறல். இடம் இருந்து வலம்.. அந்தப்பக்கமா 3 கீறல் இடம் இருந்து வலம்.. மொத்தமா 6 கீறல் முகத்துல இருந்தா அவன் வில்லன் கோஷ்டி.. இலைன்னா ஹீரோ கோஷ்டி.. எப்பூடி? இந்த ஐடியா எதுக்குன்னா ஷூட்டிங்க் ட்டைம்ல அவங்களுக்குள்ள குழப்பம் வந்துடக்கூடாதே.. அதுக்குத்தான்..
எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்க வில்லன் ஹீரோவுக்கு தூது அனுப்புறான் என் கூடவே சேர்ந்துக்கோன்னு.. அதாவது கூடன்குளம் பிரச்சனைக்கு அப்துல்கலாமை காங்கிரஸ் அனுப்பிச்ச மாதிரி.. ஆனா பப்பு வேகலை..
போர் புரிந்து ஹீரோ ஜெயிக்கறாரு.. அவ்ளவ் தான் கதை முடிஞ்சுது.. எல்லாம் அவங்கவங்க வீட்டுக்குப்போய் அவங்கவங்க பொண்டாட்டிங்க கூட சண்டை போடுங்கன்னு டைரக்டர் சொல்லிடறாரு..
ஹீரோ ஆள் செம பாடிபில்டப்.. கட்டுமஸ்தான உடம்பு.. ஃபைட் போடும் லாவகம்.. எல்லாம் அசத்தல்.. மேன் ஆஃப் ஸ்டீல் அப்டினு ஒரு சூப்பர் மேன் படம் அடுத்த வருஷம் வருது.. அதுல அண்ணன் தான் ஹீரோ.. ஆல்ரெடி இவர் கவுண்ட் ஆஃப் மாண்டோ கிறிஸ்டோ, பிளட் க்ரீக் போன்ற மெகா ஹிட் படங்கள்ல நடிச்சவர் தான்.. ஹீரோவைப்பற்றி இன்னும் நிறையா சொல்லலாம், ஆனா ஆம்பளைங்களை புகழக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் (!!!)_ கருதி இத்தோட அதை ஸ்டாப்பிக்கறேன்.. ஏன்னா ஃபிகர்களை புகழவே இடம் பற்ற மாட்டேங்குது..
300 அப்டினு ஒரு ஹாலிவுட் படம் வந்ததே தமிழ்ல கூட நம்மாளுங்க கேவலமா 300 பருத்தி வீரர்கள்னு டைட்டில் குடுத்து ரிலீஸ் பண்னாங்களே.. அந்தப்பட தயாரிப்பாளர் தான் இந்தப்பட தயாரிப்பாளர்..
த செல் , தி ஃபால் படங்களை இயக்கிய டார்செம் தண்ட்வார் சிங்க் தான் இதன் இயக்குநர்... இவர் முழுக்க முழுக்க ஒரு இந்தியர்..
அப்புறம் ஹீரோயின் - ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீட்டா பிண்டோ.. பாப்பா ஷோக்காத்தான் கீது.. உதட்டழகு செம.. நடிப்பு கொஞ்சம் கொஞ்சம் வருது... பொதுவா நடிகைங்க கிட்டே நடிப்பை எதிர்பார்ப்பது அகில உலக ஜொள்ளர்கள் சங்கத்துல தடை செஞ்சதால அதை நான் கண்டுக்கல..
அ
படத்தில் ஹீரோயின் கிளாமரையும் தாண்டி ரசிக்க வைத்த வசனங்கள்
1. மத போதகர் -கடவுளை நம்பு.. அவர் உனக்கு மோட்சத்தை தருவார்...
வில்லன் - இப்போ நான் உனக்கு அதை தர்றேன்...
2. ஒரு வீரன் தன் வாழ்நாள்ல எத்தனை பேரை அழிச்சான்கறது முக்கியம் இல்ல.. வாளை எதுக்காக கையில் எடுக்கறான்கறது தான் முக்கியம்.. ( அண்ணே, அழகிரி அண்னே நோட் இட்)
3. கடவுள்ட்ட கருணையை எதிர்பார்த்தேன், மவுனம் தான் பதிலா கிடைச்சது
4. புனிதமான உங்களுக்கு என் கடைசி வணக்கங்கள்
5. கடவுளை ஏன் நீ நம்பலை..?
இல்லாத ஒண்ணு கிட்டே நடக்கக்கூடாத ஒண்ணை வேண்டிக்கறது வேஸ்ட்... நோ யூஸ் ( 2ம் ஒண்ணுதானே?)
. 6. எந்த சூழ்நிலையிலயும் ஒரு சந்நியாசி எந்த உயிரையும் எடுக்க மாட்டான் , அதுக்கு அவனுக்கு உரிமையும் இல்ல.. ஏன் அவன் தன் உயிரையும் எடுக்க மாட்டான்.. ( தற்கொலை செஞ்சுக்க மாட்டான்)
7. கோபம் தான் ஒரு மனுஷனை தோல்வியை நோக்கித்தள்ளுது..
8. ஃபிகரு - நீங்க திருடனா?
ஆமா... உங்களை தூக்கிட்டுப்போக வந்த திருடன்..
9. நீ நடந்த துக்கத்துக்காக வருத்தப்படறே.. நான் நடக்கப்போற துக்கத்துக்காக வருத்தப்படறேன்..
10. டேய்.. ஃபிகர் கூட நைட் தங்குனியே என்னாச்சு?
மருந்து குடுத்தா..
பார்த்தா மருந்து மட்டும் குடுத்தா மாதிரி தெரில்யே கண்ணா./..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஓப்பனிங்க் ஃபைட் சீனில் ஹீரோ தன் அம்மாவைக்காப்பாற்ற போடும் ஃபைட் சீன் செம ஸ்பீடு.. தியேட்டரே செம அப்ளாசில் மூழ்குது..
2. ஒளிப்பதிவு செம.. ஒரு சீன்ல லாங்க் ஷாட்ல ஏதோ ஒரு புள்ளியை காட்டி அது கடல்ல வர்ற ஒரு போட்னு ( BOAT)காட்ற சீன் கலக்கல்..
3. க்ளைமாக்ஸ் போர் - பிரம்மாண்டம்.. கிராஃபிக்ஸ்..ஒளிப்பதிவு எல்லாம் செம..
4. ஹீரோயின் பக்கத்துல இருக்கற அந்த 4 ஃபிகர்ஸ் ஹி ஹி .... படத்தோட கதைக்கு தேவையே இல்லைன்னாலும் அடியன்ஸ் கண்கள் குளுமைக்காக ஹீரோயினை ஹீரோ கூடவே சுத்த விட்டது அழகு,.
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள் ( எப்படியும் அவர் தமிழ் படிக்க மாட்டாரு. கண்டபடி கேட்கலாம்)
1. கடவுள் பூமிக்கு வர்றப்ப அவரோட தேவ தூதர்கள் 3 பேரு போர்ல இறந்துடறாங்க.. அவங்களை காப்பாத்த முடியாதா? அவங்களும் சராசரி மனுஷன் போலவே ஏன் சாகறாங்க?
2. வில்லன் ஹீரோவை படம் ஆரம்பிச்ச 2 வது ரீல்லயே பிடிச்சிடறான், ஆனா அப்பவே அவனை கொல்லாம சுரங்கத்துல வேலை பார்க்கட்டும்னு விட்டுடறான். வில்லன் என்ன வேலை வாய்புத்துறை அமைச்சரா? அப்பவே போட்டுத்தள்ள வேண்டியதுதானே?
3. ஹீரோயின் ஃபிரண்ட்ஸ் 4 பேரை வில்லன் ஒரு பொம்மை காலை மாட்டுக்குள்ள அடைச்சு வைச்சு நெருப்பு மூட்டி 4 மாசம் (!!!) சித்திரவதை பண்றான்.. 4 மாசமா வேகாம இருக்கற அந்த ஃபிகர் ஹீரோ வந்து காப்பாத்தறப்ப செத்துடறாங்க.. ஹீரோவுக்கு யாரை தொட்டாலும் சாகடிக்கற சக்தி இருக்கா?
4. கடவுள் க்ளைமாக்ஸ்ல வந்து என்னமோ பண்ணி எல்லாத்தையும் இடிக்க வைக்கறாரு.. அதே வேலையை அவர் அங்கே இருந்தே பண்ண முடியாதா? டவர் கிடைக்காதா? பவர் பத்தாதா?
5. தமிழில் வந்த விட்டலாச்சாரியார் படங்கள் ல பார்த்து ஏன் கேவலமா காபி அடிக்கறீங்க?
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்
சி.பி கமெண்ட் - படம் எல்லாருமே பார்க்கலாம்.. மோசம் இல்ல.. ஜாலியா பொழுது போகுது..
டிஸ்கி -1 இந்தப்படத்துல பெரிசா சீன் எதுவும் இல்ல.. ஆனாலும் ரசிகர்கள் ஏமாறக்கூடாதுங்கறதுக்காக சில ஸ்டில்களை போடறேன்.. இதெல்லாம் ஃபாரீன்ல மட்டுமே இருக்கு.. படத்துல இல்லை..
டிஸ்கி 2 -