Showing posts with label FILM REVIEW. Show all posts
Showing posts with label FILM REVIEW. Show all posts

Saturday, August 10, 2019

கொலையுதிர் காலம் - சினிமா விமர்சனம்


kolaiyuthirkaalam എന്നതിനുള്ള ചിത്രംஒரு பெரிய எஸ்டேட் ஓனரம்மா தன்னை மாதிரியே அச்சு அசலா  ஓவியம் வரைஞ்ச ஒரு  செவித்திறன் இல்லாத பேச்சாற்றல் இழந்த சிறுமியை சந்திக்கிறார். அவரை தத்து எடுத்து வளர்த்து அவர் இறக்கும்போது அந்த சிறுமியை யே வாரிசாக்கி உயில் எழுதி வைக்கிறார். சிறுமி வளர்ந்து ஆளாகி எஸ்டேட், அனாதை இல்லங்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்க  ஸ்பாட்டுக்கு  வரும்போது மர்ம நபரால்  துரத்தப்படுகிறார்,க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு என்பதை வெண் திரையில் காண்க


 நாயகியா 2 கோடி சம்பளம் வாங்கும் லேடி ஸூப்பர் ஸ்டார் தலைவி நயன் தாரா ( இதுக்கு முன்னால அனுஷ்கா வை தலைவின்னீங்களே?ன்னு லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது, முதலாம் தலைவி , இரண்டாம் தலைவி , மூன்றாம் தலைவினு நாமளும் லிஸ்ட் வெச்சிருக்கோமில்ல? )


இதுக்கு முன்னமே  இதே சாயலில் நானும் ரவுடிதான் , ல நடிச்ச கேரக்டர் தான். அசால்ட்டா பண்ணிட்டார் . படத்துல அநியாயத்துக்கு சிக்கனம் , இவருக்கு மூணே மூணு சி சர்ட் , 2 ஜீன்ஸ்  , ஒரு லெக்கிங்ஸ் , ஒரு சுடி பாட்டம் அவ்ளோவ் தான் காஸ்ட்யூமே.,ஒரே பங்களாவுலயே கதை நடப்பதால் செலவே இல்லை, மொத்தப்படமே ஒண்ணே முக்கால் மணி நேரம் தான் என்பதால்  ஃபிலிம் செலவும் மிச்சம், இடைவேளைக்குப்பின் வில்லன், ஹீரோயின் என ரெண்டே கேரடக்ர்கள் என்பதால்  துணை நடிகர்கள் சம்பளமும் மிச்சம்., படம் ஒரு வாரம் ஓடினாலே போட்ட காசு எடுத்துடலாம்


வில்லன் ஒரு மஞ்ச மாக்கானா இருக்கான், 1980 கள் ல வந்த வில்லன் மாதிரி  மாஸ்க் போட்டு சுத்திட்டு இருக்கான் ( அனேகமா  இது 1980 கள்ல வந்த ஒரு நாவலா இருக்கலாம்)திரைக்கதை அமைக்கும்போது இயக்குநர் இந்தக்காலத்துல கொலை காரனும் , கொள்ளைக்காரனும் இப்படித்தான் இருக்காங்களா? என உறுதி செய்து பின் ஷூட்டிங் போய் இருக்கலாம்

 தியேட்டரிக்கல் அப்டேட்டட்  ட்வீட்ஸ்


1  பொட்டி வந்திடுச்சேய் #KolaiyuthirKaalam 5.45 pm fdfs


நச் வசனங்கள்


1   தானமா கிடைச்ச எதுவுமே உனக்கு தகுதி இல்லைன்னா நீ அதை இழந்துடுவே


2  நல்லவங்க தான் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை சீக்கிரமா செஞ்சுட்டு  சீக்கிரமாவே இந்த உலகை விட்டுப்போய்டறாங்க


3 தனக்கு எதுவும் இல்லைன்னாலும் தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு எல்லாம் கிடைக்கனும்னு நினைக்கறவங்க அபூர்வம், அப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்டவ தான் இந்தப்பொண்ணு 


 சபாஷ் இயக்குநர்


1  நயன்  தாராங்கற ஒரே ஒரு ஆள் கால்ஷீட் மட்டும் கிடைச்சா போதும் கதை திரைக்கதை எதுவும் தேவை இல்லை என நினைச்ச அந்த அதீத தன்னம்பிக்கை 


2  நயன் தாரா நடிச்ச படங்கள்லயே மிக கம்மியான டிரஸ் போட்ட படம் பில்லா , டூ பீஸ் டிரஸ். படம் பூரா மூணே மூணு செட் டிரஸ் மட்டுமே போட்ட படம் இதுதான்




 ;லாஜிக் மிஸ்டேக்,  திரைக்கதையில் சில சொதப்பல்கள்


1  ஒரு பெரிய ட்ரஸ்ட்டோட தலைவி  மேடை ஏறிப்பேசறாரு , அவர்  தோற்றம் கண்ணியமா இருக்க வேண்டாமா? லோகட் ஜாக்  போட்டு ( அது சர்ட்டா? ஜாக்கெட்டா?)  1 பட்டனை கழட்டி வேற காத்தாட விட்டிருக்கார்



2  ஒரு  சீன்ல  நயன் தாரா ஒரு தோட்டத்துல ஒரு சிலைக்கு முன் விளக்கு  ஏத்துவார், இடம் அமெரிக்கா , பனி, பனிப்புகை வாய் வழியா வருது. ஜில் க்ளைமேட் , தீப்பெட்டி ஓப்பன்  ஸ்பேஸ் ல நமுத்துப்போய் இருக்காதா? பத்த வெச்சதும் உடனே எப்படி பத்துது?


3  எஜமானி அம்மா ஆசிரமத்துக்குள்ளே போறப்ப தன் செரு;ப்பைக்கழட்டி மரியாதையா போறார்,. ஆனா அவர் கூட வரும் அல்லக்கைக 2ம் செருப்போடவே  போறாங்களே?


4   கோடிக்கணக்கான சொத்துக்கு  வாரிசு இவர்தான்னு உயில் எழுதும்போதே சட்டப்படி அது நயனுக்கு சொந்தம் தான்,. ஆனா நயன் வந்து சில பேப்பர்ல சைன் பண்ணி அதை ரெஜிஸ்டர் பண்ணாதான் செல்லும்னு ஒரு டயலாக் வருது



5  ஃபிளைட்ல வந்து இறங்குன நாயகி மஞ்சள் கலர் சி சர்ட் போட்டிருக்கார். அன்னைக்கு நைட்டும் அதே சர்ட் ( வந்ததும் குளிச்ட்டு மாத்திக்க மாட்டாரா?) அடுத்த நாளும் அதே கலர் சட்டை

6  வில்லன் டெட் பாடியை கார்ல  டிரைவர் சீட்ல உக்கார வெச்சு  ஸ்டியரிங்கை தொட்டதும் கார் மூவ் ஆகுது. எக்சலேட்டரை அமுக்க தேவை இல்லையா?


7  நாயகியைத்துரத்தும்  வில்லன் ஒரு இடத்தில்   கதவை உடைத்து தன் கையை  கதவு கேப்பில் விடறார், நாயகி கையில் கத்தி இருக்கு ., அந்தக்கையை அல்லது மணிக்கட்டில் ஒரு கீறு கீறுனா ஜோலி முடிஞ்சது அதை விட்டுட்டு நாயகி கதவோட சேர்த்து ஒரு அசம்ப்சன்ல வில்லன் கால்ல குத்தறார் . அது கதவு ல ஒரு இஞ்ச் பாய்ஞ்சு பின் தானே உடலில் ,லைட்டா படு ம்? 


8  நாயகி செம ஃபிகரு . மாற்றுத்திறனாளி வேற , வில்லன் அவரை ரேப் பண்ண ட்ரை பண்ணவே இல்லை

9   நாயகியின் வேலைக்காரியை கொலை செய்த வில்லன் அப்பவே அவருக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்கும் நாயகியை அங்கேயே போட்டுத்தள்ளி இருக்கலாம், ஆனா செய்யலை 

10  க்ளைமாக்ஸ்ல   திடீர்னு ஒரு ட்விஸ்ட் வருது. அடுத்த பாகத்துக்கான லீடா? புரியலை 




சி.பி கமெண்ட்-கொலையுதிர் காலம் − முதல் பாதி ஸ்லோ ஸ்க்ரீன்ப்ளே,பட் குட்,பின்பாதி ஹீரோயின்− வில்லன் ஒரே பங்களாவில் சேஸ் பண்ணிட்டே இருப்பது பின்னடைவு,நயன் மட்டுமே +
ஏ சென்ட்டர் க்ரைம் த்ரில்லர் ,விகடன் 41 ,ரேட்டிங் 2.75 /5 #KolaiyuthirKaalam

Friday, March 22, 2019

KESARI (HINDI - சினிமா விமர்சனம்

Image result for kesari movieஇது ஒரு  போர் முனை கதை,. வழக்கமான கதைகளைக்கண்ட ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட கதைக்களம், இது ஒரு உண்மைச்சம்பவம்.


1897 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  இந்துகுஷ் மலை அருகே  சரஹர்ஹி போர் சம்பவங்களைத்தொகுத்து அளித்து இருக்கும் படம் தான் கேசரி


ஓப்பனிங் சீனே எம் ஜி ஆர் ஃபார்முலா.கணவனோடு வாழப்பிடிக்காத ஒரு முஸ்லீம் பெண், அவரை விட்டுப்பிரிந்து போனபோது ஒரு கும்பல் அவரைத்துரத்தி வருது.கணவனும் அந்த கும்பல்ல. துரத்துனவங்க பிடியில் மாட்டிக்கிட்ட அந்தப்பெண் கிட்டே “ கடைசி வாய்ப்பு, அவன் கூட வாழ்றியா? இல்லையா? இல்லைங்குது. உடனே கணவன் கையால் வாளால் வெட்டப்பட இருக்கும் தருணம்  நாயகன் எண்ட்ரி


ஹீரோ எண்ட்ரி சும்மா பட்டாசா இருந்த படங்களில் முக்கியமானவை கேப்டன் பிரபாகரன் , ஊமை விழிகள் , வெற்றி விழா . அதே மாதிரி இதிலும் செம எண்ட்ரி

ஹீரோவா அக்சய் குமார் அபாரமான நடிப்பு . 21 சீக்கிய வீரர்களுக்கு தலைமை தாங்கி போரை வழி நடத்தும் பாத்திரம். இந்த 21 வீரர்களைக்கொண்டு 10,000  படை வீரர்களை அழித்தார்கள் என்றால் யாரும் நமப மாட்டார்கள்< ஆனால் அதுதான் நடந்தது. நம்புற மாதிரி அதை திரைக்கதை ஆக்கியதில் இயக்குநரின் வெற்றி

இதில் காமெடி  டிராக் கிடையாது, நாயகியின் ஜெனீலியாத்தனங்கள் , பிக் பாஸ் ஜூக்லித்தனங்கள் கிடையாது, மசாலா கமர்ஷியல் ஐயிட்டங்கள் ஏதும் இல்லை., ஆனால் ஒரு சீன் கூட போர் அடிக்காமல் டெம்ப்போ குறையாமல்  திரைக்கதை பயணிக்கிறது


Image result for kesari movie


நச் டயலாக்ஸ்

1  உன் உயர் அதிகாரியை விட நீ சிறந்தவன் என்ற எண்ணம் உன் மனதில் இருந்தால் நீ நல்ல அடிமை ஆக முடியாது (hindi)


2 முகலாயர்களுக்கு நாம அடிமையா இருந்தோம்,இப்போ ஆங்கிலேயர்களுக்கு.நம்மை நாம் ஆள்வது எப்போது? (hindi)


3 இத்தனை நாளா என்னை ஒரு படை வீரன்னு நினைச்ட்டு இருந்தேன்.இப்பதான் உயர் அதிகாரிக்கு எந்நாளும் நாம் அடிமை என்பதை உணர்ந்தேன் (hindi)


4 நீ என் அருகில் இருக்கும்போது மட்டும் "நேர் கொண்ட பார்வை" பார்க்க முடிவதில்லை,அது ஏன் பெண்ணே !? (hindi)


5 ஒரு போர்வீரன் ட்யூட்டி டைம் ல யூனிபார்ம்ல தான் இருக்கனும். போர் நடக்குதோ ,இல்லையோ அது இரண்டாம் பட்சம் (hindi)


6 படை வீரர்கள் பட்டினியா இருக்கும்போது படைத்தளபதி சாப்பிட முடியாது (hindi)


7 சமூக சேவைங்கறது மனமுவந்து தானா செய்யறது.பலவந்தப்படுத்தி ஒருவரை சேவை செய்ய வைக்கக்கூடாது,முடியாது (hindi)


8 எப்படியும் நீ ஜெயிக்க முடியாது,சரணடைஞ்சுட்டா உயிராவது மிஞ்சும்


போராடறதுன்னா இறுதி வரை போராடனும்.இறுதி மூச்சு இருக்கும் வரை போராடனும்,அதுதான் போர் வீரனுக்கு அழகு (hindi)



சபாஷ் டைரக்டர்

1  ஒரு படை வீரன் தப்பு பண்றான், அவனுக்கு அசைவ உணவு  2 நாட்கள் கட்னு தண்டனை. உடனே மற்ற வீரர்கள் நாங்களும் சாப்பிட மாட்டோம் என அடம் பிடிக்க படைத்தளபதியும் சாப்பிடாமல் இருப்பது  உருக்கமான காட்சி


2   ஆங்கிலேயர்களை எதிர்த்து எழுதபப்ட்ட வசனங்கள்  அக்மார்க் புரட்சி ரகம்

3  படைவீரர்களாக வரும் அனைவரின் நடிப்பும் அருமை

4   திரைக்கதையில்  75% போர்க்காட்சிகளே என்றாலும் போர் அடிக்கவில்லை என்பது ஆச்சரியம்




லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  நம்ம மூன்றாம் கலைஞர் சுமதி என்ற் இயற்பெயர் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியனை அழகி என பாராட்டி ஓட்டுக்கேட்டது எப்படி தேவை இல்லாத ஆணி என அவங்க கட்சிக்காரர்க்ளாலேயே விமர்சிக்கப்படுதோ அது மாதிரி படத்தில் அந்த  நாயகி வரும் காட்சிகள்  தேவை இல்லாத தாவணி. போர்க்காட்சிகள் ஆக்ரமித்து இருப்பதால் ஒரு ரிலாக்ஸ்க்கு லவ் சீன் இருக்கட்டும் என இயக்குநர் நினைத்து இருக்கக்கூடும், ஆனால் ராங்க் மூவ்


2 இந்தப்படத்துக்கு 8 இசை அமைப்பாளர்கள்., அஷ்டமத்துல சனி. இளையராஜாவா இருந்தா ஒத்தை ஆளு ஆனா துவம்சம் பண்ணி இருப்பாரு. படத்தில் பல +களுக்கு நடுவே பிஜிஎம்  அந்த அளவு பிரமாதம் இல்லை


3   திருநங்கை  மாதிரி தோற்றத்தில் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது எதுக்கு? மாற்றுத்திறனாளிகள், திருநந்கைகள் இவர்களை வில்லன்களாக காட்டாமல் இருப்பது சமூகப்பொறுப்புணர்வு


4   அந்த  வில்லன் கடும் வெய்யிலில்  பாலைவனத்தில்  போர் புரியும்போது அவருக்கு மட்டும் க்ளோசப் காட்சியில் ஓவர் மேக்கப் துருத்திக்கொண்டு தெரியுது. போர்க்களத்தில்  பவுடர் அடிக்க எல்லாம் டைம் இருக்கா?



சி.பி கமெண்ட் -kesari ( hindi) முழுக்க முழுக்க போர் முனையில் திரைக்கதை பயணிக்கிறது.ஏ சென்ட்டர் பிலிம்.வசனம் ,ஒளிப்பதிவு,நடிப்பு அருமை.பிஜிஎம் இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்.அக்சய்குமாருக்கு இது (நிஜமான) 300 கோடி கலெக்சன் படமாக அமையும், ரேட்டிங் 3 / 5


கேரளா கோட்டயம் தன்யா வில் படம் பார்த்தேன். மொத்தம் 8 பேர்தான் ஆடியன்ஸ். டோட்டல் கெபாசிட்டி 468 சீட்ஸ். பாவம் எப்படி கட்டுபடி ஆகுதோ, இது ல ஏசி வேற

Tuesday, November 06, 2018

சர்கார் -சினிமா விமர்சனம்

sarkar के लिए इमेज परिणामஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு  விசிட் அடிக்கறார், யாருக்கு ஆப்பு விழுமோன்னு கம்பெனிங்க நடுங்கறப்ப தன் ஓட்டைப்போடத்தான் வந்திருக்கார்னு தெரிஞ்சு ஆசுவாசம் ஆகிடறாங்க. ஆனா அவர் போட வேண்டிய ஓட்டை வேற ஒருத்தன் போட்டுடறான். எதிர்த்து கேஸ் போடறாரு, அந்த தொகுதில மட்டும் தான் தேர்தல் கேன்சல் ஆகும்னு அசால்ட்டா இருந்த ஆட்கள் அதைப்பார்த்து 234 தொகுதி ஆட்களும் கேஸ் போட டோட்டல் டேமேஜ், தேர்தல் கேன்சல். வில்லனுக்கும் , ஹீரோவுக்கும் நடக்கற போராட்டம்தான் பின் பாதிக்கதை


 ஏ ஆர் முருகதாஸ்  எப்பவும் கதைக்கருவில் ஒரு நம்பகத்தன்மையையும், பலமான அடித்தளத்தையும் அமைச்சுடுவார், அதே ஃபார்முலா இதிலும் ஒர்க் அவுட் ஆகி இருக்கு, ஆனா பின் பாதி திரைக்கதைல தடுமாறிட்டார், 234 தொகுதிகள்லயும் ஹீரோ செல்வாக்கு பெறுவதை கரெக்ட்டா எக்சிக்யூட் பண்ண முடியல


 ஹீரோவா தளபதி விஜய். ஆக்சன் காட்சிகளில் அதகளம் பண்ணி இருக்கார், படத்தின் முக்கிய பிளஸ்சே ஃபைட் சீன்கள் தான். இவருக்கோ , இவரோட அப்பாவுக்கோ ஒரு ஓவர் கான்ஃபிடன்ஸ் மனசுக்குள்ள இருக்கு , இதே மாதிரி ஒரு சந்தர்ப்பம் ராசய்யா பட ரிலீஸ்ல பிரபு தேவாகிட்ட இருந்தது , என் சம்பளம் இப்போ ஒரு கோடி-னு பஞ்ச் பேசுனார், ராஜ்கிரண் மாணிக்கம் ல ஒரு டஹால்டி பஞ்ச் பேசுனார், அதே போல் 3 இடங்களில்  விஜய் பஞ்ச் பேசறார். பாடல் காட்சிகள், நடனம் வழக்கம் போல் விஜய் ஸ்கோர் பண்றார். சில இடங்களில் நாடகத்தனம் தூக்கலா தெரியுது


வில்லியா வரலட்சுமி, செம ஆக்டிங். இவருக்கு ஜெ வின் உடை அலங்காரம் , சசிகலாவின் திமிர்த்தனம் வர்ற மாதிரி கேரக்டர் செட் பண்ணி இருக்காங்க , நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு


 நாயகியா கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் ல பட்டையைக்கிளப்பின கீர்த்தி இதுல சராசரி ஆகி இருக்கார்

 யோகி பாபு சும்மா கெஸ்ட் ரோல் மாதிரி


ராதாரவி கவனிக்க வைக்கும் நடிப்பு, எத்தனை வருச அனுபவம்!!


இசை  குட் , பின்னணி இசை இன்னும் கலக்கி இருக்கலாம். 

 ஒளிப்பதிவு  , எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் சராசரி ரகம். திரைக்கதை முன் பாதி சுவராஸ்யமா கொண்டு போற இயக்குநர்  பின் பாதில தடுமாறி இருக்கார் 

 பெண்கள் , குழந்தைகளுக்குப்பிடிக்குமா? என்பது டவுட் தான், விஜய் ரசிகர்களுக்கு செம தீபாவளி விருந்து



நச் டயலாக்ஸ்

1  FB ல சிங்கிள்னு போட்டிருந்தீங்க?

ஆமா
ஆனா கூட ஒரு பொண்ணு இருந்ததே?
ஆமா,ஒரு பொண்ணு தானே இருந்தது?அதான் சிங்கிள்னு போட்டேன்


நெம்பர் 2 பொசிஷன்ல இருக்கற உனக்கே இவ்ளோ அதுப்பு இருந்தா நெ 1 பொசிஷன்ல இருக்க எனக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்!? ,விஜய் உள்குத்து பஞ்ச்


இந்தக்காலத்துல எவன் யோக்கியனா இருக்கான்?

எங்க அப்பா ரொம்ப நல்லவரு,கம்மியாதான் லஞ்சம் வாங்குவாரு


5  திருடனை பிடிப்பது மட்டும் சட்டத்தோட வேலை இல்லை,திருடப்பட்ட பொருளை உரியவங்களுக்கு திருப்பித்தர்றதும் சட்டத்தோட கடமைதான்

மக்கள் சாகவே கூடாதுனு அரசாங்கம் நினைக்கல,கலெக்டர் ஆபிஸ் முன்னால வந்து பிரச்சனை பண்ணக்கூடாதுனு நினைக்கறாங்க

நம்ம நாட்டுல பிரச்சனைக்கு தீர்வு தேவை இல்லை,இன்னொரு பிரச்சனை தான் தேவை,மக்கள் டைவர்ட் ஆனா போதும்

இந்தப்பிரச்சனைக்கு மக்களோட ரீ ஆக்சன் என்ன?
ஸ்பாட்ல இருந்தவன் அவன் பிரண்ட்சுக்கு எல்லாம் பார்வார்டு பண்ணான்,அவங்க அவங்களோட பிரண்ட்சுக்கு பார்வார்டு பண்ணாங்க,அவ்ளவ்தான்

நம்ம எல்லாருக்கும் பொதுவா இருக்கறது பணம்தானே?
இல்லை,மக்கள்.ஒவ்வொரு இடத்துலயும் மக்கள்தான் பொது


10 அவன் கிட்ட எந்த வம்பும் வெச்சுக்காதீங்க,ரொம்ப டேஞ்சரான ஆளு (SAC எடுத்துக்கொடுக்க ஜெயமோகன் தொடுத்துத்தந்த பஞ்ச் போல)


11 நம்ம ஜனங்கள்ல பாதிப்பேரு முட்டாளுங்க
யோவ்....
சரி,நம்ம ஜனங்கள்ல பாதிப்பேரு புத்திசாலிங்க
ஆங்,அது
பாத்தீங்களா?ஒரே விஷயம் தான்,சொல்ற விதத்துலதான் வேறுபடுது

12 நெகடிவ்வா சொன்னாதான் ஒரு விஷயம் ஜனங்களுக்கு போய்ச்சேரும்


13 1000 ருபா திருடுன திருடனைப்பிடிக்க போலீஸ் 10,000 ருபா செலவு பண்றதில்லையா? 9000 ருபா நட்டம்னு நினச்சா அந்த திருடன் அவன் வாழ்நாள் பூரா திருடீட்டே இருப்பான்

14 ஆட்சிக்கு வந்தா எது வேணா பண்ணலாம்னு நினைக்கற அரசியல்வாதிங்க திமிரை அடக்கனும்,நான் அடக்கறேன்


15 தப்பு பண்றதை விட அபத்தம் அதை மறைக்கறது


16 நீங்க பண்ற ஒவ்வொரு தப்பும் எதிரிக்கு லாபம்


17  கண்ட்டெய்னர் ல கோடி கோடியா பணத்தை கடத்துனவங்க எல்லாம் செத்தே போய்ட்டாங்க ( அதிமுக ஜெ வை அட்டாக்கிங்)


18 தேர்தல் ல போட்டியிட ரூல்ஸ் எல்லாம் தெரியுமில்ல?
அதெல்லாம் அவருக்கு தெரிஞ்சதாலதான் எலக்சனே மறுபடி வருது

19 எதிர்க்க ஆளே இல்லைன்னு இறுமாப்போட இருக்கறதுதான் ஜனநாயகத்தோட முதல் பலஹீனம்


20 வரலட்சுமி பஞ்ச் = அவன் கார்ப்பரேட் கிரிமினல், நான் கருவிலேயே கிரிமினல்






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  சர்கார் ,தீபாவளிக்கொண்டாட்டம் @ ஈரோடு ஸ்ரீநிவாசா 4.30 am ஷோ ,ஹவுஸ்புல் ,ஜனங்க கிட்ட இருக்கற இந்த விழிப்புணர்வு படிக்கறப்ப இருந்திருந்தா எல்லாரும் கலெக்டராவோ,ஐபிஎஸ் ஆபிசராவோ ஆகி இருக்கலாம் (என்னையும் சேர்த்து)


தியேட்டர்ல பார்க்கற அனுபவமே தனி,ரசிகர்களோட உற்சாகக்குரல்,கை தட்டல்,விசில் கொண்டாட்டத்தோட படம் பார்க்கறதே தனி அனுபவம்.


கூகுள் சுந்தர் பிச்சை + டிராபிக் ராமசாமி = சுந்தர் ராமசாமி (ஹீரோபேரு உருவான வரலாறு)

ஹீரோ ஓப்பனிங்க் சீன் துப்பாக்கி,கத்தி லெவல்ல ... ஹீரோயின் ஓப்பனிங்க் சீன் டம்மி

5  தலைவா படத்துல தண்ணி அடிச்ட்டுப்பாடற அதே சிச்சுவேசன்ல சிம்டாங்கரன் சாங். தர லோக்கல் குத்து டான்ஸ்

விஜய்,யோகிபாபு காம்போ சீன் ஒரு ரிலாக்சேசனுக்காக.ஆனா மெயின் கதையோட சீரியஸ்னெஸ் பாதிக்கப்படுது


கீர்த்தி சுரேஷ் வழக்கம் போல,ஆனா வரலட்சுமி ராக்கிங் பர்பார்மென்ஸ்,கிட்டத்தட்ட வில்லி

சர்கார் இடைவேளை வரை ஓகே. இந்த கதைக்கு விஜய்காந்த் ரொம்ப பொருத்தமா இருப்பார்,குழந்தைகளை,பெண்களை இது போன்ற சீரியஸ் விஜய் கவர்வாரா?தெரியல


விஜய் உள்குத்து ஹம்மிங் −வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்....

10  ரைட்டர் ஜெயமோகன் நல்ல திறமைசாலிதான்,ஆனா பீர்பால் கதைகள்,பஞ்ச தந்திரக்கதைகள் ல இருந்து வசனங்களை உருவி பட்டி டிங்கரிங் பண்ணாம அப்டியே ராவா தர்றாரு

11 தீனா,கஜினி,துப்பாக்கி ல காமிச்ச ரொமான்ஸ் போர்சன் ரசனையை அதுக்குப்பின் ARM காட்டவே முடில,ஆக்சன் காட்சிகள்ல கலக்கறார்

12 பின் பாதி திரைக்கதைல இயக்குனர் தடுமாற்றம்.திடீர்னு ஹீரோ 234 தொகுதிலயும் ஆள் நிறுத்தற படலம் ,அதுக்கு மக்கள் ஆதரவு நாடகத்தனம் ,லைட்டா போரிங்

13 திருமலைக்குப்பிறகு ஆக்சன் காட்சிகள் ,ஸ்டண்ட் இதில் அதகளம் ,விஜய் ராக்கிங் பர்பார்மென்ஸ்





சபாஷ் டைரக்டர்

1   சட்டப்பிரிவு 49 பி பிரிவை பரவலா ஜனங்க கிட்டே கொண்டு வந்து சேர்த்த விதம் அருமை,  சமூக விழிப்புணர்வுப்பதிவு 

2  வரலட்சுமியின் பாத்திரப்படைப்பு, அவருக்கான காஸ்ட்யூம் டிசைன்ஸ், பாடி லேங்க்வேஜ் எல்லாமே கலக்கல்ஸ்

\
3  சிம்டாங்காரன்  உட்பட எல்லாப்பாடல்களுமே ஹிட் ரகம்





லாஜிக் மிஸ்டேக்ஸ்


1   நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்னு பஞ்ச் பேசும் ஹீரோ அதை செயலில் கடைசி வரை காட்டவே இல்லை


2  ரஜினி , கமல், விஜயகாந்த்  மாதிரி பல வருடங்கள் மக்களைக்கவர்ந்தவர்களே அனைத்து தரப்பு மக்களையும் கவர முடியாத நிலையில் ( கேப்டன் 12%) ஒரு ஃபாரீ ஆள் என் ஆர் ஐ திடீர்னு மக்கள் ஆதரவை 234 தொகுதிகள்லயும் பெறூவது எப்படி? என்பதுதான் திரைக்கதையின் அடிநாதம், அதில் கோட்டை விட்டுட்டாங்க

3  நாயகிக்கு திரைக்கதையில் பெரிய வேலை எதும் இல்லை, சும்மா டூயட் பாடத்தான் ( தமிழ் சினிமாவின் விதி )


4  ஒரு மாநில முதல்வர் சொந்தமா யோசிக்கவே மாட்டாரா? மகள் கொடுக்கற ஐடியா மட்டும் தான் ஃபாலோ பண்றார்

5  முதல்வன் படத்துல் ஒரு முதல்வர் ஹீரோவுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுப்பார்னு பக்காவா காட்டி இருந்தாங்க , அந்த டீட்டெய்லிங் இதுல மிஸ்சிங்



சி.பி கமெண்ட் - சர்கார் −முதல் பாதி சுவராஸ்யம்,பின் பாதி திரைக்கதை நம்பகத்தன்மை குறைவு,தடுமாற்றம்.ஆக்சன் சீன்ஸ் அதகளம்.வரலட்சுமி கெத்து நடிப்பு,சீரியஸ்னெஸ் முகத்துடன் விஜய் .துப்பாக்கி,கத்தி க்கு கீழே,ஸ்பைடருக்கு மேலே.விகடன் 42 ,ரேட்டிங்க் 2.75 / 5 . ARM+ விஜய் ஹாட்ரிக் ஹிட்




============







Friday, April 07, 2017

காற்றுவெளியிடை - சினிமா விமர்சனம்

Image result for kaatru veliyidai stills

மணிரத்னம் ஒரு சகாப்தம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நாயகன் , தளபதி டைப் ஹீரோ வேல்யூ படமானாலும், அலை பாயுதே , ஓ காதல் கண்மணி போன்ற லவ் சப்ஜெக்டானாலும் சரி , ரோஜா , பம்பாய் ,கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற காண்ட்ரவர்சியான சப்ஜெக்டான்ன  சரி ,அக்னி நட்சத்திரம் போன்ற கமர்சியல் கலக்கல் படமானாலும் சரி தன் முத்திரையை பதிக்க அவர் தவறுவதே இல்லை .

 ஆனாலும் அவருக்கும்  ராவணன் , ஆய்த எழுத்து , கடல் போன்ற ஃபிளாப் படங்கள் அமைந்தது காலத்தின் கட்டாயம் . ரோஜா பாகம் 2 என சிலரால் யூகிக்கப்பட்ட பருத்தி வீரன் கார்த்தி காம்போ வில் வந்த இந்தப்படம் எந்த லிஸ்ட்ல சேரப்போகுதுன்னு பார்ப்போம்


கார்கில் போர் நடந்த காலகட்டமான 1999 ல் கதை நடக்குது

ஹீரோ மிலிட்ரில  பைலட் , ( ஆனா ஏர்ஃபோர்ஸ் ல பெரிய ஆஃபீசர் போல் பில்டப்) ஹீரோயின் ஒரு டாக்டர் . மெடிக்கல் ஆஃபீசர். 2 பேருக்கும் லவ் . இந்த ரொமாண்டிக்கான  சம்பவங்களை வெச்சு 4 ரீல் ஜாலியா போகுது

ஹீரோவோட கேரக்டர் பெண்களை மதிக்காம இருப்பது ஹீரோயினுக்கு பிடிக்கல. 4 பேர் முன்னால மட்டம் தட்டுவது  , தனியா இருக்கும்போது உருகுவது இதெல்லாம் அவங்களுக்கு இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்துது/

இவங்க காதல் என்னாச்சு? சேர்ந்தாங்களா?இல்லையா? என்பதுதான் கதை

ஹீரோவா கார்த்தி.  பாலிவுட் இமேஜுக்காக அவர் மீசை எடுத்த கெட்டப்பில் வருவது  எடுபடலை. சில காட்சிகளில் மணி ரத்னம் , ரவிவர்மன் உதவியுடன் சமாளித்தாலும்  கோபமான முக பாவனைகளான நடிப்பில் கடுப்பை ஏற்படுத்துது.

Image result for kaatru veliyidai stills
ஹீரோயினா  அதிதி . வாட் எ க்யூட் ஃபேஸ் & ஆக்டிங் . அட்டகாசமான பர்ஃபார்மென்ஸ் . பாடல்  காட்சிகளில்  மிதக்கிறார்.  அவரது ஜாக்கெட்  டிசைன்கள் எல்லாம் பிரமாதம் ( என்னமோ லேடீசுக்கான பவுட்டிக் ஷாப் வைக்கற மாதிரி ஒரு சம்பந்தமில்லாத விமர்சனம் )


 ஆர் ஜே பாலாஜி அவரது துடிப்பான டைமிங் ஜோக்குகளை வெளிப்படுத்த முடியாத கேரக்டர் ( மணி ரத்னம் படத்தில் வசனம் 2 லைன் தாண்டக்கூடாதில்ல?_

ஒளிப்பதிவு பிரமாதம் , இசை  அருமை. அழகியே பாட்டு கலக்கலான படமாக்கம்

காதலர்களுக்குமிகவும் பிடித்த  முன் பாதி நிகழ்வுகள் மணி ரத்னம் படங்களுக்கே உரித்தானவை


Image result for kaatru veliyidai stills


இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   ஹீரோ  ஹீரோயினுக்கு இடையேயான சண்டை வரும் காட்சி செயற்கை. எந்த காதலனும் தன் நிஜ முகத்தை கல்யாணத்துக்குப்பின் தான் காட்டுவான்.அல்லது  காதலியை   அடைந்த பின் தான். ஆனால் நாயகன்  ஓப்பனிங்கிலேயே நாயகியை மட்டம் தட்டுவது செயற்கை


2  நாயகன்  4 பேர் முன் தன்னை மட்டம் தட்டி பின் தனிமையில் மன்னிப்புக்கேட்பதை நாயகி நம்புவது நம்மால் நம்ப முடியலை.


3  ஒரு லேடி டாக்டர் ஸ்லீவ் லெஸ் டிரஸ்சில் ட்யூட்டிக்கு வருவது எப்டி?


4   வருங்கால   மாமனார் மாமியார் காதலி முன் நாயகன் திமிராக ;பேசும் காட்சியும் கடுப்பு தான் நாடகத்தன்மை தூக்கல்

Image result for kaatru veliyidai stills


நச் டயலாக்ஸ்

என் மொத்த கடந்த காலத்திலும் இருக்கும் ஒரே வெளிச்சம் நீ தான் வெ

2 என்னை கல்யாணம் பண்ணிக்குவியா?


ம்

எப்போ?
முத புள்ள பொறந்த பின் வெ

3 என்னுது மொக்கை ஜோக்னு தெரியும்

10 சொன்னா 1 க்கு சிரிக்க மாட்டீங்களா?னு ஒரு நம்பிக்கை வெ


4 இது நடக்கும்னு எனக்கு முன் கூட்டியே தெரியும்


எது?

இப்டி இமயமலை மேல ரைடு

ம்
தலைவிதி ல நம்பிக்கை இருக்கா?

நோ.
ம் # கா வெ

5 இது ரொம்ப அபாயம்னு தோணுது


எது?

இப்டி நாம ( அடிக்கடி) மீட் பண்ணிக்கறது வெ


6 ஹாய்


ம்

இது நல்ல அழகிய தருணம்
பொய் சொல்றே.ஆனா கேட்க நல்லாதான் இருக்கு வெ


7 இந்த நிமிசத்தை நான் மறக்க மாட்டேன்


நான் 1 சொல்லனும்

சொல்லாதே
நான் என்ன சொல்ல.வரேன்னே தெரியாதே #,கா வெ

8 கோபப்படும் ஆம்பளையை ,மக்கு ன்னு திட்றவனை ,அடிக்க கை ஓங்குபவனை எனக்குப்பிடிக்காது # கா வெ

8 நான் 1 சொல்லனும்.ஆனா சொல்ல முடியாது .லெட்டர் அனுப்பறேன்.இல்ல.கூரியர் #,கா வெ.( ஜி மெயில் அனுப்புனா கூரியர் சார்ஜ்25,ரூ மிச்சம்)

9 பொம்பளைன்னா கருத்து சொல்லக்கூடாது.சொந்தமா யோசிக்கக்கூடாது.அதானே? # கா வெ

10 நீ கூப்பிடும்போது எல்லாம் செல்ல நாய்க்குட்டி மாதிரி /அடிமை மாதிரி நான் ஓடி வரனும்.அதானே?,சாரி. வெ

11 நமக்கு சாய்ஸ் இல்லை. ஒன் மிஸ்டேக் பர்மனண்ட் மிஸ்டேக் # கா வெ

12 ஒண்ணா என்னை ராணி மாதிரி மதிக்கறே , இல்ல , கீழே போட்டு மிதிக்கறே # கா வெ

13  நான் ஏன் உன் கிட்டே திரும்ப திரும்ப வர்றேன்? தெரியல

அதான் லவ்  # கா வெ

14 




Image result for kaatru veliyidai stills
 தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கீதாஞ்சலி (இதயத்தை திருடாதே) கிரிஜா , தில் சே ( உயிரே) ப்ரீத்தி ஜிந்தா வுக்குப்பின் மணி படத்தில் அழகிய நாயகி அறிமுகம் அதிதி ராவ் ஹைதரி வெ

2 ஹீரோயின் ஒரு DR.ஆனா ஒயிட் கோட் போடாம தேவதாஸ் போல ஒரு பெட்சீட் போத்திக்குது.எப்டி/எதை தமிழன் ரசிப்பான்? # கா வெ

3 ஹீரோயின் ஜோதிகாவுக்கே அக்கா போல.காமெடியன் கிட்டே பேசும்போது கூட நவரசத்தையும் ஓவரா காட்டுது முகத்துல வெ

4 ட்ரெய்லரில் எடுபடாத கார்த்தியின் கெட்டப் படத்தில் பொருந்துது.அது தான் மணிரத்ன மேஜிக் # கா வெ

5 10 ஜோடி டான்ஸ் ஆடறாங்க.ஜோடியை.10 நிமிசத்துக்கு ஒரு டைம் மாத்தி 10 தடவை.எல்லாரும் தனுசு ராசியாம் வெ

6 ஹீரோ கிட்டே பேசிட்டிருக்கும்போது ஹீரோயினை.விட ஹீரோயினோட தோழி அதிகம் வெட்கப்படுது.க்யூட் வெ

7 அடர்த்தியான புருவம் உள்ள அழகிகள் அழகு நிலையம் போய் அதை ட்ரிம் பண்ணிக்கும் காலத்தில் நாயகி தன் மெல்லிய புருவத்தை அடர்த்தி ஆக்கிக்க . ட்ரை பண்ணுது போல. வெ


சிரிடி ஓ மை டார்லிங்.அழகியே செம ரொமாண்டிக் சாங்.மணிரத்னம் ரா க்கிங் மேக்கிங் # கா வ

9 திருமண மண்டப நிகழ்வுகளை அழகியலாகப்படம் பிடிக்கத்தெரிந்தவர்கள் /நிரூபித்தவர்கள் இருவர் 1,மணிரத்னம் 2 கவுதம் #,கா வெ

10 ஒரு இயக்குநர் ஆதிக்க படத்தில் ஹீரோ வை ஹீரோயின் டாமினேட் செய்வது துரதிர்ஷ்டம்தான்.அதிதி செம ஆக்டிங் # கா.வெ

Image result for kaatru veliyidai stills

சிபி கமெண்ட்-காற்று வெளியிடை - ரொமாண்டிக்கான முன் பாதி , செயற்கையான பிரிவு நிக ழும் பின் பாதி ,காதலர்களுக்கு , மணி ரசிகர்களுக்கு பிடிக்கும், விகடன் -41 ரேட்டிங் - 2.75 / 5

Thursday, January 12, 2017

பைரவா - சினிமா விமர்சனம்

Image result for bairava

சரஸ்வதின்னு பேர் வெச்சிருந்தா மட்டும் நல்ல கல்வி அறிவு வந்துடாது, வளர்மதின்னு பேர் இருந்தா மட்டும்  அறிவு வளர்ந்துட்டே போகும்னும் சொல்லிட முடியாது, கல்வித்தந்தைன்னு தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கிட்டா மட்டும் அவர் பண்ற தப்பு எல்லாம் சரி ஆகிடாது. இது தான் படத்தோட ஒன் லைன்.

பிரைவேட் பேங்க் ல  ஹீரோ லோன் செக்சன் ல  ஒரு கலெக்சன்  ஏஜெண்ட் / எக்ஸ்க்யூட்டிவ் ( எதுக்கு இந்த குழப்பம்னா டயலாக்ல அவரு ஏஜெண்ட் ,க்மிஷன் அப்டிங்கற வார்த்தை 3 டைம் வருது, ஆனா டிரஸ் கோடு பேங்க் எக்ஸிக்யூட்டிவ் போல் ). வராத கடனை  வசூல் பண்ணி தருவாரு.

ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனை, அதை ஹீரோ தீர்த்து வைக்கறாரு. ஹீரோயின் ஃபிளாஸ் பேக் என்ன? மெடிக்கல் காலேஜ்ல நடக்கும் முறைகேடுகள். அடிப்படை வசதிகள் இல்லாம ஃபீஸ் மட்டும் கரெக்டா வாங்கிட்டு நடத்தும் நிர்வாகத்தை தட்டிக்கேட்கும்  கதை


ஹீரோவா இளைய தளபதி விஜய். விக் வெச்சது பெரிய குறையா தெரியல. வழக்கம் போல் ஸ்மார்ட் லுக், அசால்ட் பர்ஃபார்மென்ஸ்.. 2 கலக்கல் டான்ஸ் , 3 பஞ்ச் டயலாக்ஸ் , 4 ஃபைட். இது போதாதா ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு?


ஹீரோயினா ஆர் டி ஓ ஆஃபீஸ் போய் சும்மா சிரிச்செ வாய்ல 
எட்டு போட்டு காட்டி லைசன்ஸ் வாங்கிய கீர்த்தி சுரேஷ். பொம்மை மாதிரி வந்துட்டுப்போறார்,ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைனு தெரிஞ்சும் பெரிய அளவில் முயற்சி எடுக்கலை


காமெடிக்கு சதீஷ், ட்விட்டர்ல , தினத்தந்தி குடும்ப மலர்ல வ்ந்த மொக்கை ஜோக்ஸ் 4 சொல்லி 15 ரீல் படத்தை கவர் பண்ண முடியுமா?

 அவர் ராமராஜன் போல் லிப்ஸ்டிக் போட்டு வருவது , அதை வெச்சு கா,மெடி தேத்துவது எல்லாம் ரண கொடூரம்

 வில்லன் ஒரு மாங்கா மடையன் போல.ஒண்ணுக்கும் லாயக்கில்ல .

 அவரோடு ஒப்பிடும்போது கிளை வில்லன்  தேவலை.

பாடல்கள் , இசை ஓக்கே ரகம் . வரலாம் வரலாம் வா பைரவா கலக்கல் பிஜிஎம், 2 டப்பாங்குத்து பாட்டு சிவகாசி பேரரசுவை நினைவு படுத்துது. ஒரு மெலடி சாங்கில் விஜய் டான்ஸ் அருமை

கோர்ட் சீன்கள் எல்லாம் அந்தக்கால எஸ் ஏ சந்திர சேகர் படங்கள் பார்ப்பது போல் ரொம்ப போர். இன்னும் பக்காவா பண்ணி இருக்கலாம்

 படம்   ரொம்ப நீளம் . ரெண்டே முக்கால் மணி நேரப்படத்தை ரெண்டே காலாக ட்ரிம் பண்ணனும்
 அழகிய தமிழ் மகன் படத்தை விட இதை ஒரு படி நல்லாவே பண்ணி இருக்கார்

 ஆனா பிரச்ச்சனை என்னான்னா  துப்பாக்கி , தெறி , கத்தி அளவுக்கு இல்லைனு பொது ஜ்னங்க கம்பேர் பண்ணி கமெண்ட் அடிப்பாங்க


தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

Bairava 168 minutes

2 Symbolic shot Vijaya production shows mgr next rajni and then vijay

Opening shot of some heroes may b bike shot .next level cycle shot

As usual vijay handsome look.

5 The director knows the pulse of the fans .opening shot ,first fight shot ,the bgm all good

Opening song 🎶 pattaiyai kilappu is an average.but Vijay dance 💃 performance awesome

The dialogue writer slipped.the bank loan section collection executive get incentive.not commission.

The melody song 🎶 manjal ,simple dance movement

Comedy actor sathese has no scope due to poor comedy script.his lipstick 💄 comedy not work out

10 The total audiences of the theatre stand up during varalaam varalaam vaa bairavaa song 🎶 & fight

11 Bairavaa step down to azhakiya Tamil magan till now.

12 A commercial hero film screenplay must b with full & full hero oriented scenes.the director missed it.20 minutes without hero

13 The first half of azhagiya Tamil Magan consists of thrilling scenes and un expected twist.but in bairava the suspense fails

14 The flash back of the heroine look like paari vaendhar pacha muthu

15 After vaseegara now only Vijay had done a mgr special Dance 💃 movement

16 Azhakiya soodaana poovae song 🎶 very good dance steps.vijay's special touch

17 The court scenes r remembering S.A.Chandrasekaran films

18  Bairavaa - an average commercial masaala movie 🎬 better than sura,puli,vaettaikaran.vikatan mark may b 40.rating 2.5 / 5

19 Kalakkal dappaanguthu song 🎶 vaappaa vandhaadappaa sema dance.the director becomes sivakasi paerarasu









நச் வசனங்கள்


1 டைமிங்கை மட்டும் ஒருத்தன் சரியா கீப் அப் பண்ணிட்டா டைம் சரி இல்லைனு  அவன் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது #பைரவா


=============


2 இன்னைக்கு சம்பாதிக்கும் பணத்தை இன்னைக்கே செலவு பண்ணிட்டாதான் நாளை சம்பாதிக்க இன்னும் உத்வேகம் பிறக்கும் #பைரவா


==============
3 சேமிச்ச உணவு  ஃபிரிட்ஜ்ல வெச்ச உணவு போல பழசா இருக்கும், வேட்டையாடி சாப்பிடறதுதான் ஃபிரஷ்சா இருக்கும் #பைரவா

===============

4  ஐ டி ல ஒர்க் பண்ற பொண்ணு கூட நைட்டில நல்லாருக்காது #பைரவா

==============

5 என் ஆளு 1000 பேர் நிற்கற கூட்டத்தில் கூட தனியா தெரிவா


ஒரு வேளை தனியா போய் நின்னிருப்பாளோ?
#பைரவா
-- 
===============
6 வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு குடிக்க எதுனா கொண்டு வாடா

 அவங்க லேடி, குடிக்கற பழக்கம் இருக்குமா? #பைரவா

===============

plan பண்ணி வந்த உனக்கு எதும் மாட்டலை, ஆனா PLAIN னா வந்த எனக்கு ஒரு ஃபிகர் மாட்டி   இருக்கு #பைரவா


==============



டிராஃபிக் போலீஸ் - ஹெல்மெட்?
ஹீரோ - அதான் நீங்க போட்டிருக்கீங்க இல்ல?
லைசென்ஸ்?
எடுத்தாச்

பேப்பர்?
படிச்சாச் #பைரவா
=============

9 நீயா நானா கோபினாத்தை நக்கல் அடிச்சு ஒரு  டயலாக் - கனம் கோட்டார் அவர்களே! #பைரவா

===========


10   வாழ்க்கைல எதை இழந்தாலும் திரும்ப மீட்டுக்கலாம், ஆனா உறவை மட்டும் இழந்துடவே கூடாது #பைரவா

================
11 

 யார் கிட்டயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என் கிட்டே இருக்கு, அதான் சொன்ன சொல்லை காப்பாத்தறது  #பைரவா 


==============



 சபாஷ் டைரக்டர்

1   டீசர் , ட்ரெய்லர்  எடிட்டிங் , கட்டிங் ஒட்டிங் எல்லாம் பக்கா. ஒரு பக்கா கம்ர்ஷியல் ஹீரோ ரசிகர்களை திருப்திப்படுத்தும்படி படம் இருக்கு

2  நெருப்புடா கபாலி பஞ்ச் போலவே சிறப்பு , வெகு சிறப்பு என ரஜினி ரூட்டில் விஜயை திருப்பி விட்டது

3  விஜய் படங்களுக்கே உரித்தான ஆடல் பாடல் கொண்டாட்டங்கள், பஞ்ச் கள், பிஜிஎம்கள்


 இயக்குநரிடம் சில கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  ஒரு சீனில் ஹீரோ மேல் பெட்ரோல் ஊத்திடறாங்க அடியாட்கள். தீ பத்த வைக்க ட்ரையிங்.. உடனே   ஹீரோ  ஓடறாரு. புத்திசாலித்தனமா எதுனா செய்வார்னு பார்த்தா  வில்லனோட பெட்ரோல் பங்க் போய் பைப்பை எடுத்து பெட்ரோலை அடியாட்கள் ,மேல் பீய்ச்சி அடிக்கறாரு. அவங்க தீ பற்றி எரியறாங்க. மறு முனை இவர் கிட்டே தானே இருக்கு, அதே நெருப்பு அவர் கிட்டே வராதா?

2   கிளை வில்லன் ஒரு சீன்ல  ஹீரோயின் கிட்டே “ குழந்தை எப்டி பிறக்குது? சொல்லு” அப்டினு டீட்டெய்லா கேட்க அதுக்குப்பழி வாங்கும் விதமா ஹீரோ வில்லனோட மகளுக்கு ஃபோன் போட்டு உன் மக கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோ என்பதெல்லாம் விரசம். எம் ஜி ஆர் ஃபார்முலாவில் நடக்கும் விஜய் பேரை இப்படி கெடுக்கனுமா/


3  க்ளைமாக்சில் திடுதிப்பென பிரதமர் கொலை முயற்சி வ்ழக்கில்  வில்லனை சிக்க வைக்கும் ஹீரோ செயல்கள் எடுபடவில்லை.அவ்ளோ ஈசியாவா போலீஸ் ஏமாறும்?


4  வாய்ப்பிருந்தும் கோர்ட் காட்சிகள் பிரமாதமாக கையாளப்படவில்லை



சி.பி கமெண்ட் -  பி, சி செண்ட்டர்களில் ஓடும். அதுக்குள்ளே சிங்கம் 3 வராம இருக்கனும். விஜய் ரசிகர்கள் பார்க்கலாம்.எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 , ரேட்டிங் 2.5 /5



16 Kerala CHANGANASERRY apsara bairava fdfs fans celebration 1

a===================

Bairava celebration 2 CHANGANASERRY kerala

a===================

Bairava celebration 3 CHANGANASERRY Kerala apsara theatre 🎦