2010 ஆம் ஆண்டு முதன் முதலாக நான் ஆன் லைன் வந்தபோது சினிமா விமர்சனங்களில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள் மூவர் 1 ஏ செண்ட்டர் ரசிகர்களை, பெண்களைக்கவர்ந்த கேபிள் சங்கர் என்னும் சங்கர நாராயணன். 2 பி செண்ட்டர் ரசிகர்களைக்கவர்ந்த டீட்டெய்லிங் கிங் உண்மைத்தமிழன் 3 பி அன்ட் சி செண்ட்டர் ரசிகர்களைக்கவர்ந்த தரை லோக்கல் கிங் ஜாக்கி சேகர் . இதில் கேபிள் சங்கர் கொத்து பரோட்டா மூலம் மிகவும் புகழ் பெற்றவர் . தொட்டால் தொடரும் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவரது முதல் வெப் சீரிஸ் இது . லாக் டவுன் கதைகள் என்ற வரிசையில் முதல் எபிசோடு கதை இது. இது ஒரு ஆந்தாலஜி ரொமாண்டிக் டிராமா
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் - நாயகி இருவருக்கும் காதல் மலருவதை இயற்கையாகக்காட்டியது . ரொம்ப ஜவ்வாக இழுக்காமல் நேரடியாகக்கதைக்குள் நுழைந்த விதம்
2 லோ பட்ஜெட் படம் என்பதால் தேவை இல்லாமல் பல ஆர்ட்டிஸ்ட்கள் இல்லாமல் இரண்டே கதாபாத்திரங்கள் வருவது போல திரைக்கதை அமைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 நமக்குப்பிடிச்ச வரியை ஆண் எழுதி இருந்தா என்ன? பெண் எழுதி இருந்தா என்ன?
2 ரெண்டு நாள் தங்கற எனக்கு உன் கவனிப்பு ஓவரா தெரியுதே?
என் கூட தங்கறவங்களை கம்ஃபர்ட்டபிளா வெச்சுக்க வேண்டியது என் பொறுப்பு , அது ரெண்டு நாளோ லைஃப் லாங்கோ
3 ஃபேஸ்புக் பக்கம் இப்பவெல்லாம் உன்னைப்பார்க்கவே முடியறதில்லை ?
ஃபேஸ்புக் எல்லாம் பூமர் அங்க்கிள் பிளேஸ். நமக்கு , நம்மை மாதிரி யூத்துக்கு இன்ஸ்டா தான் பெஸ்ட்
4 யூ நோ மீ வெரிவெல் , அதனால தான் என்னை விட்டு ஈசியா விலக முடியுது
5 என்னதான் புரட்சிகரமாப்பேசினாலும் ரிலேஷன்ஷிப்னு வந்துட்டா பொசசிவ்னெஸ் வரத்தானே செய்யும் ?
6 யாரு யாரை வெச்சிருகாங்க என்பது முக்கியம் இல்லை , வெச்சிருக்கறவங்களை சந்தோஷமா வெச்சிருக்கறதுதான் முக்கியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 என்னதான் நாயகி மாடர்ன் கேர்ள் என்றாலும் ஒரு அந்நிய ஆள் வீட்டில் தங்கும்போது அவன் நீட்டாக ஃபுல்லாக கவர் பண்ணிய ஆடைகளை அணிந்திருக்கும்போது இவள் மட்டும் வெறும் டிராயர் , டி சர்ட் பனியனுடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை . அட்லீஸ்ட் முதல் நாளாவது ஃபுல்லாக கவர் பண்ணும் ஆடைகளை அணிந்திருக்கலாம்
2 பொதுவாக பெண்கள் இமேஜ் மெயிண்ட்டெயின் செய்வார்கள் . ஒரு ஆண் தன்னிடம் சரக்கு அடிக்கும் பழக்கம் இருக்கா? எனக்கேட்கும்போது அப்படி இருந்தாலும் இல்லை என்று தான் சொல்வாள் . நாயகன் கூப்பிட்டதுமே சரக்கு அடிக்க கூட உட்காருவதும் உறுத்துகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ லிப் லாக் சீன் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - 30 நிமிடமே ஓடக்கூடிய குறும்படம். டைம் பாஸ் கேட்டகிரி .பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5