தமிழ் நாட்ல ஒரு படம் ஹிட் ஆகிட்டா உடனே பாகம் 2 எடுத்து அது ஊத்திக்கிட்டதும் கம்முனு ஆகிடுவாங்க ( உதா = அமைதிப்படை மெகா ஹிட் , பாகம் 2 அட்டர் ஃபிளாப் , புலன் விசாரணை அதிரி புதிரி ஹிட் , பாகம் 2 வந்த சுவடே பலருக்கு தெரியல.). ஒரு சில விதி விலக்குகளும் உண்டு. சிங்கம் 1, 2 எல்லாம் மாஸ் ஹிட்.. முனி . காஞ்சனா கலக்கல் ஹிட். பில்லா செம ஹிட் (அஜித் வெர்ஷன்) பாகம் 2 மீடியம் ஹிட்
ஆனா ஹாலிவுட்ல பல படங்கள் பல பாகங்கள் வந்து மெகா ஹிட் ஆகி இருக்கு. அந்த லிஸ்ட் எடுத்தா தனி புக்கே போடலாம் . ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் இதுவரை 6 பாகங்கள் எடுத்து வசூல் மழையில் நனைஞ்சுட்ட பிறகு இப்போ 7ம் பாகம் வந்திருக்கு.
முந்தைய 6 பாகங்களையும் இயக்கிய ஜஸ்ட்டின் லின் 7 வது பாகத்தைஇயக்கலை. வாய்ப்பை மறுத்துட்டார்..ஜேம்ஸ்வான் தான் 7ம் பாக இயக்கம். இந்தப்படம் எந்த அளவு ஒர்க் அவுட் ஆச்சுன்னு பார்ப்போம்.
ஒரு வீரப்பனையோ , ஒசாமா பின் லேடனையோ , சதாம் உசேனையோ தேட அரசாங்கம் செஞ்ச செலவுகள் எவ்வளவு இருக்கும்? இந்த ,மாதிரி தேடப்படும் நபரை ரொம்ப ஈசியா கண்டு பிடிக்க ஒரு சாஃப்ட்வேர் கண்டு பிடிக்கறாங்க. அது ஒரு பொண்ணு கிட்டே இருக்கு
பொதுவா கொலை நடந்த ஆதார வீடியோ கேசட் அல்லது பென் டிரைவ் இதெல்லாம் பொண்ணு கிட்டே இருந்தா தான் சவுகர்யம் . கிளாமருக்கு கிளாமர் . இயக்குநருக்கு பல வகைல சவுகர்யம். திரைக்கதை எழுதும்போதே பொண்ணு வர்ற மாதிரி பண்ணிடுவாங்க.
அந்தப்பொண்ணை தீவிரவாதிங்க கடத்திடறாங்க . நம்ம ஊர்ல யாராவது யாரையாவது கடத்துனா உயிருக்கு எல்லாம் பாதுகாப்பு இருக்கும் ஒரு பயமும் இருக்காது. சுண்டல் விக்கறவன் , டீகடைக்காரன் எல்லாம் பணயக்கைதியைப்பார்த்துட்டு வரலாம், ஆனா ஃபாரீன் ல டெரரிஸ்ட் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ,
அவங்க கைல அந்த சாஃப்ட்வேர் சிக்கிக்கிச்சுன்னா பெரிய ஆபத்து . நாட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரி ஹீரோவைக்கூப்ட்டு அந்த பொண்ணை பாதுகாப்பா கூட்டிட்டு வரும் பணியை ஒப்படைக்கிறார். ஹீரோ தன் டீமோட எப்படி அந்தப்பணியை வெற்றிகரமா முடிக்கறார் என்பதே கதை.
ஹீரோ வின் டீசல் , வில்லன் ஜேசன் ஸ்டெதம். இருவரும் வரும் காட்சிகள் தியேட்டரில் அப்ளாஸ் தான்.
போன 6 வது பாகத்தில் ஹீரோ வின் டீசல் டீம் மெம்பரான சுங்காங் கொலை ஆவதுடன் படம் முடியுது. இதுல 7 ம் பாகத்தில் வில்லன் ஜேசன் ஸ்டெதம் தன் அண்ணனைக்கொன்னவங்களைப்பழி வாங்கக்கிளம்புவது போல் ஓப்பனிங் ஆகுது
படம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுது , பெரிய படம் தான் ஆனால் நான்-ஸ்டாப் ஆக்ஷன் தான் . இடையிடையே காமெடி டய்லாக்சும் உண்டு.
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 என்.ஸ்டைல் தெரியுமில்ல?,ஒண்ணு ஸ்பீடா ஓட்டுவேன்.இல்ல ஓட்டவே மாட்டேன் #FF7
2 ஒரு நிழலை எப்படி அழிக்கனும்னு தெரியுமா ? அது மேல லைட் அடிச்சா போதும் #FF7
3 பிஸிக்கலா உன்னால இந்த ஒர்க்கை பண்ண முடியாது.
பிஸிக்ஸால முடியாட்டி என்ன?மேத்சால முடிப்பேன் #,Ff7
4 அடேய்.அதெப்பிடிடா எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் ஒரே டயலாக் விட்டே கரெக்ட் பண்ணிடறீங்க?#FF7
=================
5 ஏன் தனியா வந்த?உதவிக்கு ஆர்மியைக்கூட்டிட்டு வந்திருக்கலாமில்ல ?
எதுக்கு?நானே ஒன் மேன் ஆர்மி தான் #FF7
===========
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 ஓடும் ( பறக்கும்) விமானத்தில் இருந்து வீரர்கள் கார்களில் ஜம்ப் பண்ணுவதும் பாரசூட் விரிவதும் கலக்கலான காட்சி . அந்த சீனில் காமெடியனின் டயலாக்ஸ் செம
2 பள்ளத்தில் பாயும் காரிலிருந்து ஹீரோ தப்பும் காட்சி அப்ளாஸ் அள்ளும் காட்சி
3 அபுதாபியில் எடுக்கப்பட்ட பில்டிங்கில் கார் பாயும் காட்சி ரணகளம் ஆக்சன் மாஸ்ட ர் கலக்கிட்டார் .அடுக்கு மாடிக்கட்டிடத்தில் கார் அந்தரத்தில் பாய்வது கிராஃபிக்ஸ் இல்லாமல் ரியல் ஸ்டண்ட் அருமை
4 பால் வாக்கர் படத்தின் 7 பாகங்களிலும் நடித்தவர் . இவர் நடித்த கடைசிப்பபட்ம் இது. இறந்து விட்ட இவருக்குபடத்தின் இறுதியில் செய்யப்பட்ட மரியாதை குட் ( கார் விபத்தில் காலமானார்)
படம் பற்றிய சில சிறப்பு செய்திகள்
1 இது போன வருசம் மார்ச் மாசம் ரிலீ ஸ் ஆகி இருக்க வேண்டிய படம் .திடீர் என ஒரு கார் விபத்தில் பால் வாக்கர் இறந்து விட்டதால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படமே ரிலீஸ் செய்ய மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது . பின் இந்த வருசம் ரிலீஸ்டு
2 இதன் தயாரிப்பு செலவு 250 மில்லியன் டாலர் .
3 நம்ம ஊரில் எப்படி ரஜினி ஸ்டைலா தம் அடிப்பதைப்பார்த்து பலரும் கெட்டுக்குட்டிச்சுவராய் ஆனாங்களோ அதே போல் இந்த ப்படம் பார்த்து ஃபாரீனில் ரேஸ் கார் ல வேகமாய்ப்போய் ஆக்சிடெண்ட் ஆன சம்பவங்கள் பல உண்டு
4 டைரீஸ் கிப்சன் நம்ம ஊர் வடிவேல் சந்தானம் போல் காமெடிக்காட்சிகளில் கலக்கி இருக்கார்
5 டோனி ஜோ வின் முதல் ஹாலிவுட் அறிமுகப்படம்
5 டோனி ஜோ வின் முதல் ஹாலிவுட் அறிமுகப்படம்
சி பி கமெண்ட் FAST & FURIOUS 7 = 130 நிமிட நான் ஸ்டாப் ஆக்சன்.பார்க்கலாம்.=,ரேட்டிங். = 3/ 5
Vizhuppuram kalyaan delux. Fast &furious 7
Add caption |
Furious 7 | |
---|---|
Directed by | James Wan |
Produced by | |
Screenplay by | Chris Morgan |
Based on | Characters by Gary Scott Thompson |
Starring | |
Music by | Brian Tyler |
Cinematography |
|
Edited by |
|
Production
company | |
Distributed by | Universal Pictures |
Release dates
| |
Running time
| 137 minutes[2] |
Country | United States |
Language | English |
Budget | $250 million[3] |
Box office | $32.7 million |