Showing posts with label FAMOUS. Show all posts
Showing posts with label FAMOUS. Show all posts

Wednesday, December 29, 2010

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/10/pen1.jpg
கடந்த 5 மாதங்களாக நான் பார்வையிட்ட பதிவுகளை ,பதிவர்களின் திறமையை பார்க்கும்போது ,பத்திரிக்கைத்துறைகளில் எழுதி கலக்க சரியான ஆட்கள் நம் பதிவர்கள்தான் என எண்ணத்தோன்றுகிறது.எனது 18  வருட பத்திரிக்கை உலக அனுபவங்களை வைத்து பதிவர்களுக்கு உபயோகமாக ஒரு பதிவு போட்டால் என்ன என தோன்றியது.ஜன ரஞ்சகப்பத்திரிக்கைகளில் எப்படி எழுதுவது என்பதைப்பற்றி ஆழமான பார்வையாக இது இருக்கும்.


இப்போது வெளி வரும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் தின மலர் வாரமலர் சன்மானம் தருவதிலும்,படைப்புகளை வெளியிட்டு வாசகர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது.பிறகு ஆனந்த விகடன்,குமுதம்,குங்குமம் என வரிசை நீள்கிறது.வாரம் ஒரு பத்திரிக்கை பற்றி விளக்கமாக பார்ப்போம்.



ஈரோடு,தஞ்சை,சேலம்,திருச்சி உட்பட்ட ஏரியாக்களுக்கு தனி வாரமலர் புக் வருகிறது.அதற்கான முகவரி தினமலர் வாரமலர். த பெ எண் 7225,சென்னை 600008. அது போக கோவை,திருப்பூர்,சென்னை உட்பட பெரும்பாலான ஊர்களில் வரும் வாரமலர் புக் அட்ரஸ் தினமலர் வாரமலர். த பெ எண் 517,சென்னை 600008.



ஜோக் வெளியிட்டு சன்மானம் தருவதில் வாரமலர் நெமப்ர் ஒன் இடத்தில் உள்ளது. ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு, அது போக ஜாக்பாட் ஜோக் ஒன்றுக்கு வாரம் ரூ 1000 பரிசு.வேறு எந்த புக்கும் இவ்வளவு பரிசு தருவதில்லை.வாரம் 6 ஜோக்ஸ் பிரசுரம் ஆகிறது.ஆனால் எந்த அளவுக்கு பணம் அதிகமா தோணுதோ அந்த அளவு போட்டியும் அதிகம். தினம் 5000 ஜோக்குகள் வாரமலர் இதழ் அட்ரஸுக்கு சராசரியாக போகிறது. 8 கட்டமாக தேர்வு நடக்கிறது.அரசியல்,டாக்டர்,ஊழல் சம்பந்தப்பட்ட ஜோக்குகள் வரவேற்கப்படுகின்றன.வேறு பத்திரிக்கைகளில் வந்த ஜோக் அல்லது உல்டா ஜோக் அனுப்புவர்கள் வக்கீல் நோட்டீஸ் பெறுவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.படைப்புகளை (ஜோக்ஸ்) போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்ப வேண்டும்.ஒரு கார்டில் ஒரு ஜோக் மட்டும் எழுத வேண்டும்.படைப்பு அனுப்பி 2 மாதம் கழித்துத்தான் பிரசுரம் ஆகும்.பொறுமை மிக அவசியம்.

http://graphics8.nytimes.com/images/2007/05/30/business/30pen.600.jpg
கவிதை - இதற்கு ரூ 1250 பரிசு. 20 வரிகளில் இருக்க வேண்டும், காதல் கவிதைகள்,சமூக விழிப்புணர்வுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன,ஏ 4 ஷீட்டில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்.அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.தினமும் சராசரியாக 400 கவிதைகள் வருகின்றன.


சிறுகதை - 4 பக்கங்களில் (ஏ 4 ஷீட்) எழுத வேண்டும். சன்மானம் ரூ 1500. நகைச்சுவை,சோகம் செண்ட்டிமெண்ட் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்குப்போட்டி குறைவு. தினமும் சராசரி 200 கதைகள் வருகின்றன. வாரம் ஒரு கதை பிரசுரம் ஆகிறது.


இது உங்கள் இடம் - நமது அனுபவங்கள், நாம் சந்தித்த மனிதர்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் எது வேணாலும் எழுதி அனுப்பலாம்.

முதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1500 பரிசும் ,2வது பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1000 பிறகு ஆறுதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 500 பரிசு பெறுகிறது.


இது போக அர்ச்சனை என்ற பெயரில் வாசகர் கடிதம் ,கேள்வி பதில் அதற்கும் பரிசு உண்டு. ரூ 250, ரூ 500 என பரிசு உண்டு.

கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால பொண்ணு பாக்கறது மாதிரி எந்த பத்திரிக்கைக்கு எழுத விரும்பறமோ அந்த புக்க்கை வாங்கி அல்லது லைப்ரரில போய் ஒரு கிளான்ஸ் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்க்கும்.

அடுத்த வாரத்தில் ஆனந்த விகடன், குமுதம் பற்றி எழுதறேன்.

டிஸ்கி - இந்தப்பதிவு  மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா