நான் சின்னப்பையனா இருந்தப்போ அதாவது சுமார் 5 வருஷங்களுக்கு முன்னே லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ்ல இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மேன் , ஆர்ச்சி கதைகளை விரும்பிப்படிப்பேன்.. அதே ஸ்பைடர்மேனை திரைல பார்க்கறப்போ அதன் பிரம்மாண்டமோ, பிரமிப்போ கொஞ்சமும் குறையலை. ஒவ்வொரு பாகமும் ஒரு விதம்.. இதுவரை 3 பாகம் பார்த்தாச்சு.. ஆனா இந்தப்படத்துல ஹீரோவும், ஹீரோயினும் புதுசு..
ஹீரோ சின்ன வயசுலயே அம்மா , அப்பா இருந்தும் கூட அத்தையிடம் தான் வளர்றாரு.. அப்பாதான் அந்த ஏற்பாட்டை பண்ணிட்டு எங்கேயோ போயிடறாரு..ஹீரோ பெரிய ஆள் ஆகி படிக்கறப்ப கூட படிக்கற கிளாஸ்மேட் கிட்டே அப்பப்ப கடலை போடறாரு..தன் அப்பா , அம்மா எங்கே என்ற ஆராய்ச்சியில் ஈடுபடறாரு..
ஹீரோயின் அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர்.. ஒரு ஆராய்ச்சிக்கூடத்துல ஹீரோயினை பார்க்க வர்றப்போ ஹீரோவை ஒரு சிலந்தி கடிச்சுடுது.. அப்போ இருந்து ஹீரோ கிட்டே ஏகப்பட்ட மாற்றங்கள். அபூர்வ சக்திகள் கிடைக்குது..
பேஸ்கட் பால் கிரவுண்ட்ல விளையாடற ஒரு ரவுடி கும்பல் ஹீரோயின் கிட்டே வம்பு பண்ணுது.. ஹீரோ சும்மா விடுவாரா? பட்டாசை கிளப்பறாரு..
ஆராய்ச்சிக்கூடத்துல வில்லன் ஒரு ஆராய்ச்சி பண்றார்.. அதாவது பல்லிக்கு வால் அறுந்தா ஆட்டோமேடிக்கா அது வளருது இல்லையா? அந்த பல்லியோட டி என் ஏவை கால் உடைஞ்ச எலிக்கு சேர்த்து விட்டா காலும் வளருமா? இதுதான் ஆராய்ச்சி.. நல்ல வேளை கால் வளருமா?ன்னு பார்த்தாரு..
அந்த ஆராய்ச்சி எசகு பிசகா போயிடுது.. எலிக்கு பயங்கர சக்தி கிடைச்சு ஒரு மார்க்கமான எலி ஆகிடுது..
இப்படி இருக்கும்போது ஒரு நாள் ஹீரோ ஷாப்பிங்க் காம்பெள்க்ஸ் போறாரு.. அங்கே ஒரு திருடன்.. திருடிட்டு தப்பிக்கறப்போ எதிரில் வரும் ஹீரோவோட மாமாவை போட்டுத்தள்ளிடறான்.. அதாவது ஷூட் பண்ணிடறான்.. எஸ்கேப் ஆகிடறான்..
மாமாவை கொலை செஞ்ச அந்த திருடனை தேடி ஹீரோ கிளம்பறார்.. என்ன அடையாளம்னா அந்த திருடன் நயன் தாரா மாதிரி தோள் பட்டைலயோ, த்ரிஷா மாதிரி நெஞ்சுலயோ பச்சை ( டாட்டு) குத்தாம கை மணிக்கட்டுல பச்சை குத்தி இருக்கான்.. அதை வெச்சு ஹீரோ ஊர்ல இருக்கற ரவுடிகளை எல்லாம் ரவுண்ட் கட்டி பிடிச்சு பச்சை குத்தி இருக்கா?ன்னு பார்த்து அப்புறம் விட்டுடறார்..
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா என்ற கலக்கலான காமெடிப்படத்துல கமல் டபுள் ஆக்ட்.. அதுல ஒருத்தருக்கு ஒரு மச்சம் ஒரு முக்கியமான இடத்துல இருக்கும்.. ஆள் மாறாட்டமா?ன்னு செக் பண்றப்ப எல்லாம் அவர் மச்சம் காட்டி மனுஷனா மாறுவாரு.. அந்த மாதிரி ஹீரோ ரவுடிங்களை எல்லாம் மச்ச சாரி டாட்டூ அடையாளத்தை வெச்சு தேடறாரு.. நான் டைரக்டரா இருந்தா அந்த கொலை செய்யற ஆளை லேடி ரவுடியா காட்டி இருப்பேன்.. படம் பூரா ஒவ்வொரு லேடி ரவுடியா பிடிச்சு டாட்டு செக் பண்ணி இருக்கலாம்.. ஜிகிடிக்கு ஜிகிடி.. கிளு கிளுக்கு கிளு கிளு
மீடியாக்கள் மூலம் ஸ்பைடர்,மேன் ஹீரோ ஆகறார்.. போலீஸ் டிபார்ட்மெண்ட்க்கு இது பிடிக்கலை.. அவங்க ஒரு பக்கம் அவரை தேடறாங்க..
வில்லன் ஆராய்ச்சியின் உச்ச கட்டமா அந்த விநோத மருந்தை தன் உடம்பு மீதே செலுத்தி எதிர்பாராத விதமா டினோசர் ஆகறான்.. அதாவது நெஞ்சு வரைக்கும் ஹல்க் மேன் மாதிரி.. நெஞ்சுக்குக்கீழே டினோசர்.. வில்லன் அந்த ஊர் மக்களை ஏதோ ஒரு விஷ வாயுவை செலுத்தி அழிக்க திட்டம் போடறான்,, ஹீரோ அதை எப்படி முறியடிக்கறார்? என்பதே கதை..
ஹீரோ ரொம்ப சின்னப்பையன்.. இதுவரை வந்த ஸ்பைடர்மேன்ல இவர் தான் ரொம்ப ஒல்லி கம் யங்க்.. நல்ல ஜிம்னாஸ்டிக் பாடி போல .. நல்லா ஃபைட் போடறார்.. லவ்வறார்.. ஆக்ஷன் காட்சிகளில் முகத்தில் வீரம், கோபம் எல்லாம் கொஞ்சம் கம்மிதான்.. ஆனாலும் ஓக்கே..
ஹீரோயின் ரொம்ப சின்னப்பொண்ணு.. எல்லாமே சின்னது.. ஐ மீன் கண், காது , மூக்கு.. இப்படி.. 28 டைம் ஹீரோயினை உத்துப்பார்த்தும் அதுதான் தோணுச்சு.. ஹீரோ கூட 3 இடத்துல கிஸ் சீன் உண்டு.. 3 இடம்னா 3 வெவ்வேற இடத்துல அல்ல.. ஒவ்வொரு டைமும் உதட்டுல தான்.. ஆனா படத்துல வெவ்வேற இடத்துல..
வில்லனா வர்றவர் டைனோசரா மாறுனதும் முகத்துல காட்டற வெறுப்பு, கோபம் ஏ கிளாஸ்.. வில்லனுக்கு ஏன் ஜோடி இல்லைன்னு தெரியல..
மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை
1. என் பாய் ஃபிரண்ட் காரை ஃபோட்டோ எடுக்கனும், ஹெல்ப் பண்றீங்களா?
காரை..? ம் ம் .. முயற்சி பண்றேன்..
2. உன் பேரென்ன?
என் பேர் என்ன?ன்னு உனக்குத்தெரியாதா?
எனக்குத்தெரியும்.. இப்போ அடிபட்டுதே அதனால உனக்கு எந்த பாதிப்பும் இல்லையா? உன்னை முதல்ல உனக்கு அடையாளம் தெரியுதா?ன்னு செக் பண்ணேன்..
3. ஏய்.. நீ இங்கே என்ன பண்றே?
நான் இங்கே தான் வேலை செய்யறேன்னு பொய் சொல்லலாம்னு நினைச்சேன்,.., ஆனா பார்த்தா நீ இங்கே ஒர்க் பண்ற மாதிரி தெரியுது.. அதனால அப்படி சொல்ல முடியாது.. யோசிச்சுட்டு இருக்கேன்..
4. என்னையே ஃபாலோ பண்ற மாதிரி இருக்கு.. வீணா வீட்லயோ, வம்புலயோ மாட்டிக்காதே..
5. அவன் தண்ணி அடிச்சிருக்கானா?
ம் ம் ஏதோ தப்பு இருக்கு..
உன் சமையலை விரும்பி சாப்பிடறான்.. அது நல்லாருக்கு ன்னு வேற சொல்றான்.. அதுதான் எனக்கு டவுட்டா இருக்கு..
ஹலோ அப்புறம் என்ன இதுக்கோசரம் 37 வருஷமா என் சமையலை சாப்பிட்டுட்டு கஷ்டப்படறீங்க.. எவ நல்லா சமைக்கறாளோ அவ கிட்டே போகறதுதானே?
கூல் கூல்
6. உன்னை சஸ்பெண்ட் பண்ணீட்டாங்களா?
ச்சே. ச்சே.. ஒரு வாரம் ஸ்கூலை க்ளீன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க..
7. உங்கப்பா மாதிரி நீ சாயல்ல இருப்பது சந்தோஷம் , ஆனா உங்கப்பா ஒரு கட்டுப்பாட்டோட, நெறிமுறையோட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்..
நீங்க சொல்றது உண்மையா இருந்தா ஏன் என்னை பொறுப்பில்லாம உங்க கிட்டே விட்டுட்டு போய்ட்டார்.. ஏன் என்னை வளர்த்தலை..?
8. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸில் - இந்த சில்லறையை உன் பில்க்கு பத்தலைன்னு எல்லாம் எடுக்கக்கூடாது,.,. யார் வேணாலும் இதுல காசு போடலாம்.. ஆனா எடுக்கக்கூடாது..
9. எனக்கென்னமோ ஸ்பைடர் மேன் கிட்டே பெரிய பவர் எல்லாம் இருக்கற மாதிரி தெரியலை.. உடல் எடை + செயல் திறன் = அதீத தன்னம்பிக்கையை அவனுக்கு தருதுன்னு நினைக்கறேன்
10. நீ போலீஸா?
என்ன பார்த்தா போலீஸ் மாதிரி தெரியுதா? தொப்பி இல்லை.. தொப்பையும் இல்லை
11. போலீஸோட முக்கால் வாசி வேலையை நானே முடிச்சுடறேன்.. வந்து அள்ளிட்டு போறது மட்டும் தான் செய்யறாங்க..
12. ஏய்.. நீ எப்படி உள்ளே வந்தே?
செக்யூரிட்டி உள்ளே விடலை.. அதான் மாடி ஏறி வந்துட்டேன்..
என்னது>? 20 மாடி ஏறீயா? அவ்வ்வ்வ்வ்
13. ஹீரோ - நான் உன் கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்.. நான் மாறிக்கிட்டு வர்றேன்..
ஹீரோயின் - நானும் தான்
நீ சொல்றது மனசை.. நான் என் உடம்பை பற்றி சொல்றேன்
14.. எப்போ வந்தாலும் திருடன் மாதிரியே என்னை பார்க்க வர்றியே? ஒரு நாளாவது வாசல் வழியா வாயேன்..
15. ஹீரோயின் அப்பா - கோக் வேணுமா?
ஹீரோவுடன் ரூமில் இருக்கும் ஹீரோயின் அவனை மறைத்து - ம்ஹூம், வேணாம் டாடி..
போன வாரம் தான் கோக்னா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு அதுக்காக அம்மா கிட்டே சண்டை போட்டுட்டு இருந்தே??
அது போன வாரம்.. நான் சொன்னது இந்த வாரம் ஹி ஹி
16. நாம செய்யற ஒவ்வொரு காரியமும் நாம யார் என்பதை இந்த உலகத்துக்கு சொல்லும்..
17. இந்த உலகத்துல மொத்தமே 10 கதை தான் இருக்குன்னு சொல்வாங்க.. அது தப்பு,.. ஒரே ஒரு கதை தான்.. அது அவங்கவங்க கதை தான்.. அதாவது நாம யார்? என்ற கதை தான்
18. எங்கப்பா செத்தப்ப எல்லாரும் வந்தாங்க.. ஆனா நீ மட்டும் வர்லை..
இனி என்னை மறந்துடு..காரணம் கேட்காதே..
ஓ! இப்படி பேசச்சொல்லி சாகறப்ப எங்கப்பா உன் கிட்டே சத்தியம் வாங்கிட்டரா?
19. எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தில் திரைக்கதை ரொம்ப நீட்டாக , தெளிவாக இருப்பது முதல் பிளஸ்.. ஒரு இடத்தில் கூட ஃபிளாஸ் பேக் சீனோ, ஆடியன்சை குழப்புவது போல் காட்சியோ வர்லை..
2. ஓடும் ரயிலில் ஸ்பைடர் மேன் முதன் முதலில் தன்னை உணருகையில் அங்கே இருக்கும் லேடியின் மீது எதேச்சையாக கை வைக்க கை ஒட்டிக்குது.. அந்த லேடியோட கணவன் வலுக்கட்டாயமா கையை பிடிச்சு இழுக்க டாப் கழண்டு வருவது அப்ளாஸ் அள்ளுது ( நோ டென்ஷன் ப்ளீஸ்.. உள்ளாடை இருக்கு)
3. பேஸ்கட் பால் கிரவுண்டில் ஹீரோ ஹீரோயினிடம் வம்பிழுத்த ஆளை பட்டாசுக்கிளப்பும் ஃபைட் பார்த்து பபுள்கம் லேடி மிரளும் சீன்.. ( அப்படியே தமிழ்ப்படம் மாதிரியே இருக்கு.. காதல் கொண்டேன் படத்தை பார்த்து அடிச்சுட்டாங்களோ? )
4. ஸ்பைடர் மேன் ஸ்டெப் பை ஸ்டெப் தன்னோட பவரை உணரும் காட்சிகள் அழகு..
5. ஹீரோ 7 அடி தூரத்தில் தயங்கிச்செல்லும் ஹீரோயினை வலை வீசி இழுத்து கிஸ் செய்யும் சீன் செம கிளு கிளு.. 3 கமல் படம் பார்த்த மாதிரி.. செம ரொமான்ஸ்..
6. லைப்ரரில ஒரு ஆள் வாக் மேன்ல பாட்டு கேட்டுட்டே ஏதோ புக்கை தேட பின்னணியில் ஹீரோ, வில்லன் ரணகள ஃபைட் போடுவதும் அது எதுவும் தெரியாமல் கருமமே கண்ணாக அவர் இருப்பதும் செம கல கல
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. போலீஸ் எதுக்கு தேவை இல்லாம ஸ்பைடர் மேனை சுடனும்? அவர் தான் போலீஸ்க்கே உதவி பண்றவர் ஆச்சே?
2. உலகையே காக்கும், ரட்சிக்கும் ( 2ம் 1 தான் ) ஸ்பைடர்மேன் ஏன் தனக்கு மாப்ளையா வர வேணாம்னு போலீஸ் ஆஃபீசர் நினைக்கறார்? அதுக்கு என்ன காரணம்?னு சரியா சொல்லலையே? உலகை காக்க வேண்டியது உன் கடமைன்னு டயலாக் எல்லாம் சொல்றார்.. உலகையே காக்கும் விஷ்ணு, சிவன், பிரம்மா எல்லாம் ஆளாளுக்கு 2 பேரை மனைவியா வெச்சுக்கிட்டே பார்ட் டைம்ல உலகை ஆளலையா?
3. ஹீரோ வில்லனை அடையாளம் காட்டி அவனை விசாரிங்க என போலீஸ் ஆஃபீசர்ட்ட சொல்றப்போ அவங்க ஏன் அலட்சியம் காட்டனும்? அப்பவே லேபை சர்ச் பண்ணீ இருக்கலாமே? போலீஸ் ஆஃபீசர் தன் மகள் காலேஜ்ல சேர அவர் தான் உதவி பண்னாருன்னு சப்பை கட்டு கட்டறது ஏத்துக்க முடியலை..
4. ஒரு சீன்ல லேப்ல இருந்து வெளி வந்த ஏராளமான எலிகள் குட்டி டினோசரா நகர்ல பாதாள சாக்கடைல உலா வருவதை பார்க்கும் ஹீரோ அதை ஒரு ஆதாரமா போலீஸ்க்கு ஏன் காட்டலை?
5. ஸ்பைடர் மேன் டிரஸ் ஹீரோவா வடிவமைச்சது.. மாஸ்க் மக்கள் யாரும் அடையாளம் தெரியாம இருக்கவே.. சக்திக்கும் அந்த டிரஸ்சுக்கும் சம்பந்தம் இல்லை.. ஆனா வில்லன் கூட ஃபைட் போடறப்போ ஹீரோ மெனக்கெட்டு அந்த டிரஸ்ச ஏன் தேடிட்டு இருக்கார்?
6. அபாரமான சக்தி இருக்கற ஹீரோ பொடிப்பசங்க வில்லன்களை துவம்சம் பண்ணாம எதுக்கு ஓடி வந்துட்டு இருக்கார்.. சும்மா சேசிங்க் சீனை விறு விறுப்பாக்காட்டவா?
சி.பி கமெண்ட் - ஸ்பைடர்மேன் , காமிக்ஸ் ரசிகர்கள், பள்ளி , கல்லூரி மாணவ ,மாணவிகள் எல்லாரும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கலாம்././ ஆனா ஒரே ஒரு குறை கதைல புதுமை இல்லை.. ஆல்ரெடி வந்த, சொன்ன கதை தான்.. மற்ரபடி டைம் பாஸ் படம் . மொத்தம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுது.ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்