தினமலர் விமர்சனம்
கடந்தவாரம்
பேங் பேங், ஹைடர் படங்களின் ரிலீஸ்க்கு பிறகு, இந்தவாரம்
ரிலீஸாகியிருக்கும் படம் தான் எக்கீஸ் தாப்பன் கி சலாமி. ரவீந்திர கவுதம்
இயக்கத்தில், அனுராதா பிரசாத் மற்றும் அபினவ் சுக்லா தயாரிப்பில்
வெளிவந்துள்ள எக்கீஸ் தாப்பன் கி சலாமி ரசிகர்களை கவருமா என்று இனி
பார்ப்போம்...! இப்படத்தை நவ்தங்கி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தந்தை
ஒருவர், அவரது வாழ்க்கையில் எட்ட முடியாத இலக்குகள், கிடைக்காத
சந்தோஷங்களை எல்லாம், மகன்கள் இருவர் எப்படி நிறைவேற்றுகின்றனர் என்பதே
இப்படத்தின் கதை. நேர்மையான, நம்பிக்கைக்குரிய அரசு அலுவலர் புருஷோத்தமன்
நாராயண் ஜோசி எனும் அனுபம் கவுர். இவர் தன் வாழ்நாள் முழுக்க நேர்மையாகவே
வாழ்கிறார். ஆனால் அவரது நேர்மையை யாரும் மதிப்பதே கிடையாது. சராசரி
எளிமையான மனிதராக வாழும் புருசோஷத்தமன், தனக்கு தன் வாழ்வில் கிடைக்காத
சந்தோஷங்கள், எட்டமுடியாத இலக்குகள் எல்லாம் தன் மகன்களுக்காவது கிடைக்க
வேண்டும் என்று எண்ணுகிறார். அதனை அவரது இரு மகன்கள் சுபாஷ் ஜோசி(திவேந்து
சர்மா) மற்றும் சேகர் ஜோசி(மனு ரஷி) ஆகியோர் எப்படி நிறைவேற்றுகின்றனர்
என்பதை இப்படத்தின் மொத்த கதையும்...! சுபாஷ், சேகர் இருவரும் தங்களது
தந்தையின் மீது காட்டும் மரியாதையை பார்க்கும்போது இருவருக்கும் 21
துப்பாக்கி குண்டுகள் முழங்க ஒரு ராயல் சல்யூட் கொடுக்கலாம்!
தனது
முந்தைய படத்தை காட்டிலும் திவேந்து சர்மா இப்படத்தில் மிக அருமையாக
நடித்து இருக்கிறார். குறிப்பாக உணர்ச்சி வசப்படும் காட்சிகளிலும், காமெடி
காட்சிகளிலும் அவரது நடிப்பு பிரமாதம்.
அனுபம்
கெர், வழக்கம்போலவே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்து தான்
ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த படத்திலும் நிரூபித்துள்ளார்.
அதிதி
சர்மாவும் தனது அருமையான நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். குறிப்பாக
க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனக்காட்சிகள் சூப்பர்ப்...!
இவரைப்போலவே மனு ரிஷி, நேகா தூபியா ஆகியோரும் தங்களது கதாபாத்திரம் அறிந்து
சிறப்பாக நடித்துள்ளனர்.
அனைத்து தரப்பு
மக்களையும் கவரும் வகையில் படம் இயக்க வேண்டும் என்று எண்ணி அதில் சராசரி
மனிதனின் வாழ்க்கையை அப்படியே படமாக்கி அனைத்து தரப்பினரின் பாராட்டையும்
பெற்றுவிட்டார் இயக்குநர் ரவீந்திர கவுதம். இயக்குநரின் எண்ணங்களை அழகாக
படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால் எடிட்டிங் கொஞ்சம்
சொதப்பலாகியுள்ளது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என
தோன்றுகிறது. படத்தின் ப்ளஸ் என்று சொன்னால் திரைக்கதை தான். மிக
நேர்த்தியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வசனங்கள் ஓ.கே. என்ற அளவில்
மட்டுமே இருக்கிறது. வழக்கமான சினிமாவாக சொல்லாமல், முற்றிலும் புதிய
கதைகளத்துடன் இயக்குநர் கதை சொல்லி இருக்கிறார், குறிப்பாக சராசரி
மனிதனையும் ரசிக்க வைக்கும்படி படமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த கதையில் முன்னணி நடிகர்கள் யாராவது நடித்திருந்தார்கள் என்றால் எக்கீஸ் தாப்பன் கி சலாமி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், எக்கீஸ் தாப்பன் கி சலாமி - புதிய கதை, புதிய களம்!
ரேட்டிங் - 2.5/5
thanx - dinamalar