2016ல மலையாளத்துல மறுபூமியிலே ஆனா” அப்டினு காமெடி ஜர்னர்ல ஒரு ஹிட் படம் கொடுத்த கூட்டணீயான டைரக்டர் யு கே பிரகாஷ் & திரைக்கதை ஆசிரியர் ஒய் வி ராஜேஷ் மீண்டும் இணைந்து எடுத்த படம் இது.
முதல்ல எரிடா அல்லது எறிடா அப்டின்னா என்ன?னு பார்ப்போம். கிரேக்க மொழி வார்த்தை அது . காதலில் விழுந்த ஒரு பெண் தெய்வத்தைப்பற்றிய கதைனு அர்த்தம் . ஆனா ஏதோ வித்தியாசமா இருக்கட்டும்னு அந்த டைட்டிலை வெச்சுட்டாங்களே ஒழிய டைட்டிலுக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை
ஹீரோயினுக்கு வயசு 20 ஹீரோவுக்கு வயசு 60 இருவரும் தம்பதிகள் . ஹீரோயினோட அப்பா பெரிய கடன்ல சிக்கி இருக்கார் அந்த ஏழ்மையை பயன்படுத்தி பணத்தை வட்டியோட கட்டு அல்லது உன் பொண்ணை எனக்கு கட்டு அப்டினு கட் அண்ட் ரைட்டா மிரட்டி மேரேஜ் பண்ணிக்கறார்
ஹீரோ கிளப்ல சீட்டு விளையாடற ஆள் . ஒரு டைம் கிளப்ல சீட்டு விளையாடறப்போ நிறைய தோற்றுப்போறார் கடைசியா அவர் மனைவியை பணயமா வெச்சு ஆடறார். இது என்னடாது மகாபாரதம் சகுனி பாஞ்சாலி கதை எல்லாம் அட்லீ ஒர்க் பண்ணி இருக்காங்களே?னு நினைக்கறப்போ ஒரு ட்விஸ்ட்
ஹீரோ கோடிக்கணக்கில் ஜெயிக்கறார். அங்கே இருந்து எஸ் ஆகறார் . பணத்தை விட்டவங்களூக்கு எல்லாம் செம காண்டு . ஹீரோயினோட கிளாமரைக்காட்டி நம்மை ஏமாத்திட்டாருனு நினைக்கறாங்க .இழந்த பணத்தை மீட்கனும்னு திட்டம் போடறாங்க , அவரோட பங்களாவுக்குப்போறாங்க
அதே பங்களாவுக்கு ஒரு போலீஸ் டீம் கிளம்பது அதே பணத்தை மீட்க அல்லது கைப்பற்ற
இன்னொர் போலீஸ் ஆஃபீசர் இவர் தான் வில்லன் அதே பங்களாவுக்கு வர்றார். ஹீரோயின் கிட்டே நைசா பேச்சுக்கொடுத்து அந்தப்பணத்தை எடுத்துட்டு நாம ரெண்டு பேரும் ஓடிப்போய்டலாம்னு ஐடியா தர்றார்
பத்து வருசமா பழகி கூடவே பார்த்த ஆட்களையே நம்ப முடியாத இந்தக்காலகட்டத்துல பார்த்த பத்து நிமிசத்துலயே ஓடிப்போகக்கூப்பிடற வில்லனை ஹீரோயின் நம்பறா
இதுக்குப்பின் நடந்த திருப்பங்கள் தான் கதை
ஹீரோவா நாசர். குருதிப்புனல் , தேவர் மகன் மகளிர் மட்டும் மாதிரி பிரமாதமான படங்களில் கலக்கியவருக்கு இந்த கேரக்டர் எல்லாம் ஜூஜூபி மேட்டர் , அசால்ட்டா பண்ணி இருக்கார் \\
ஹீரோயினா சம்யுக்தா மேனன் . இவரு முக பாவத்தை வெச்சு கோபமா இருக்காரா? ஹேப்பியா இருக்காரா?னு கண்டுபிடிக்கவே மாமாங்கம் ஆகுது . ஆந்திரா ஹீரோ மகேஷ் மாதிரி ஃபிளாட் ஆன முகம் . எப்படியோ ஒப்பேத்தறார்
வில்லனா ஜி கிஷோர் குமார் ( நம்ம தமிழ் கிஷோர் அல்ல . ஜிம் பாடி மட்டுமே மூலதனம் இந்தப்படத்தைப்பொறுத்தவரை அதே போதும்தான்
நிழல்கள் ரவி கெஸ்ட் ரோலில் வர்றார்
ஒளிப்பதிவு இசை எடிட்டிங் எல்லாமே சராசரிக்கும் கீழேதான்
முதல் 30 நிமிடங்களுக்குப்பின் திரைக்கதை தடுமாறுது
ஹீரோ பங்களாவில் இல்லை , ஹீரோயின் தனியா இருக்கா , வில்லன் எண்ட்ரி எவ்ளோ பர பரப்பான சிச்சுவேஷன் ? ஆனா கிட்டத்தட்ட 2 மணி நேரபப்டத்துல முக்கால் மணி நேரம் வில்லன் - ஹீரோயின் வெச்சே ஓட்டிட்டாங்க
சபாஷ் டைரக்டர்
1 கொரோனா லாக் டவுன் டைமில் எடுத்த படம் என்பதால் மூன்றே முக்கிய கேரக்டர் ஒரே ஒரு பங்களா என கதையை முடித்த விதம் குட்
2 இடைவேளை ட்விஸ்ட் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என திருப்பங்கள் இருந்தாலும் இந்த மாதிரி கதைகள் ஒரு லட்சம் தடவை பார்த்தாச்சு
ரசித்த வசனங்கள் \
ரெண்டு மணி நேரப்படத்தில் ஒரு வசனம் கூட மனதில் நிற்கவில்லை . வசனமாடா முக்கியம் படத்தைப்பார்றா டைப் ஆள் போல இயக்குநர்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி மேல் அதிகமா நாட்டம் இல்லாதவராக காட்டிக்கொள்ளும் வில்லன் நாயகி யை மறைந்திருந்து ரசிப்பது ஏன் ?
2 செஸ் விளையாட்டில் வேணா கொஞ்சம் ஏமாந்தாலும் மூவ்மெண்ட் ராங்கா போய்டும், ஆனா சீட்டு விளையாட்டில் ஹீரோயின் கிளாமரைப்பார்த்து கேமில் கோட்டை விட்டுட்டோம் என நால்வரும் கூறுவது ஏத்துக்கற மாதிரி இல்லையே?
3 ஹீரோவின் பங்களாவுக்கு நள்ளிரவில் வரும் போலீஸ் அங்கே சத்தம் ஏதும் வர்லை ரிப்ளை வர்லைனு திரும்பிப்போவது செம காமெடி , எந்த போலீசாவது அப்படி தேமேனு இருப்பாங்களா?
4 அவ்ளோ பெரிய பங்களா வில் ஒரு வாட்ச் மேன், ஒரு சமையல்காரன் யாருமே இல்லாமல் எப்படி ? ரெண்டே ரெண்டு நாய்களை நம்பி ஹீரோ வெளியே போவது எப்படி ? நாய்க்கு மயக்க பிஸ்கெட் தர முடியாதா?|
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - அமேசான் பிரைம்ல கணக்கு வெச்சிருக்கறவங்க பொழுது போகலைன்னா பார்க்கலாம், இது மலையாளத்தில் ஃபெய்லியர் ஆன படம் தமிழ் டப்பிங்க்ல கிடைக்குது ரேட்டிங் 2 / 5