Showing posts with label ELA VEEZHA POONCHIRA (2022) (மலையாளம்) - திரை விமர்சனம். Show all posts
Showing posts with label ELA VEEZHA POONCHIRA (2022) (மலையாளம்) - திரை விமர்சனம். Show all posts

Wednesday, December 21, 2022

ELA VEEZHA POONCHIRA (2022) (மலையாளம்) - திரை விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)

 


இளவீழா  பூஞ்சிரா  என்பது  கோட்டயம்  மாவட்டத்தில்  உள்ள  மலை வாசஸ்தலம், இது ஒரு  சுற்றுலாத்தலமும்  கூட ,  இந்த  ஏரியாவில்  மழைக்காலங்களில்  இடி  விழும்  அபாயம்  இருக்கிறது. இதனால்  இந்த  ஹில் ஸ்டேஷனில்  ஒரு  ஒயர்லெக்ஸ் போலீஸ்  ஸ்டேஷன்  அமைக்கப்பட்டு  அங்கே  3   போலீஸ்கள்  பணிக்கு  அமர்த்தப்பட்டு  காவலுக்கு இருக்கிறார்கள் . அவர்கள்  பணி  அங்கே  வரும்  சுற்றுலாப்பயணிகளை  வர  விடாமல்  எச்சரித்து  அனுப்புவதே 

நாயகன்  அந்த  ஒயர்லெஸ்  போலீஸ்  ஸ்டேஷனில்  பணி செய்யும்  ஒரு  போலீஸ்..ட்யூட்டி  மாற்றி விட  இன்னொருவர்  வருவார். இருவரும்  மாறி  மாறி  ட்யூட்டி  பார்க்க  வேண்டும்


அந்த  போலீஸ்  ஸ்டேஷனில்  முன்பு  பணி  புரிந்த   ஒரு  போலீஸ்  கார்ரின்  மனைவி  தன்   வாரிசுகளுடன்  அங்கே  வ்ருகிறார். அப்பா  பணி  புரிந்த  இடத்தைப்பர்க்க  ஆசைப்பட்டு  அவரது  வாரிசுகள்  இருவர்  அங்கே  வந்திருக்கின்றனர் . அப்போது  மழை  பெய்து  இடி   இடித்ததில் ஒரு  மகன்  இறந்து  விடுகிறான்.அந்தப்பெண்ணும் , மற்ற  வாரிசும்  அனுப்பப்படுகின்றனர்


அடுத்த  நாள்  ஒரு  காதல்  ஜோடி  அங்கே  வருகின்றனர். சக  போலீஸ்   பைனாகுலர்  மூலம்  அவர்களை  நோட்டம்  பார்த்து  அவர்களை   ரசித்துக்கொண்டிருக்கிறான். இது  நாயகனுக்குப்பிடிக்கவில்லை . நாயகன்  அந்த  ஜோடியை அந்த இடத்தில்  இருந்து  அப்புறப்படுத்தி  விடுகிறான்


வாரம் ஒரு  முறை  ரொட்டீன்  செக்கிங்குக்காக  ஹையர்  ஆஃபீசர்  போலீஸ்  ஜீப்பில்  விசிட்  அடிப்பார் .  ஒரு  பெண்ணின்  இறந்து  கிடந்த  உடலின்  பாகங்கள்  அந்த  ஒயர் லெஸ்  ஸ்டேஷன்  ஏரியாவில்  ஆங்காங்கே  கிடைக்கிறது


ஒயர்லெஸ்  ஸ்டேஷனில்  பணி  புரியும்  போலீஸ்களில்  யாராவது  ஒருவருக்கு  இந்த  கொலையில் பங்கிருக்கலாம்  என  உயர்  அதிகாரி  சந்தேகப்படுகிறார்

இதற்குப்பின்  என்ன  நிகழ்ந்தது  என்பதே  திரைக்கதை



நாயகனாக சவுபின் சாஹிர்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். நம்ம  ஊர்  வடிவேலு  எப்படி  காமெடியிலும் கலக்கி  விட்டு  பொற்காலம், தேவர்  மகன்  ஆகிய  படங்களில்  குணச்சித்திர  வேடங்களிலும்  கலக்கினாரோ  அதே  போல  பேசிக்கலா  ஒரு  காமெடி  நடிகரான  இவர்  இதில்  குணச்சித்திர  வேடத்தில்    கதாநாயகனாக  பிரமோஷன். இது  வரை  காட்டாத  மாறுபட்ட  முகத்தைக்காட்டி  இருக்கிறார்  . 


ஓப்பனிங்  ஷாட்டில்  பஸ்சில்  பயணிக்கும்போது  அருகில்  ஒரு  கர்ப்பிணிப்பெண்  அமர  அது  பிடிக்காமல்  அவர்  விலகி  வேறு  ஒரு  சீட்டில்  அமரும்போதே   ஏதோ  குறியீடு  அந்த  சம்பவத்தில்  இருப்பது  தெரிந்தது.


கர்ப்பமான  தன்  மனைவி  தற்கொலை  செய்து  கொண்ட  தகவல்  கிடைத்ததும்  அவ்ர்  முகத்தில்  காட்டும்  அதிர்ச்சி   அருமை . 


வில்லனாக  சுதி  கோப்பா. இவர்  லேடி  போலீசிடம்  வ்ழிவது , இளம்  காதல்  ஜோடியை  வேடிக்கை  பார்ப்பது  என   தன்  பலவீனத்தை  வெளிப்படுத்தும்  காட்சியிலும்  சரி , நாயகன்  தன்னைக்கொல்லப்போகிறான்  என்பதை  அறிந்து  ஒயர்லெக்ஸ்  ஃபோனை  ஆஃப்  பண்ணி  போலீசை  வர  வைக்கும்போதும்  சரி  துடிப்பான  நடிப்பு 


படத்தின்  மிகப்பெரிய  பலம்  சவுண்ட்  டிசைனிங்  தான் . டால்பி விஷன் 4 கே  ஹெச் டி ஆர்  ஒலி  அமைப்பில்  வெளியாகும்  முதல்  மலையாளப்படம்  இது. மகேஷ்  மாதவன்  ஒளிப்பதிவில்  மழை  வரும்  காட்சிகள் , இடி  விழும்  காட்சிகள் பிரமாதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளது அனில்  ஜான்சன்  இசையில் பல  இடங்களில்  மர்மமாகவும்  சில  இடங்களில்  திகிலாகவும்  ஒலிக்கிறது 


ஷாஹி  கபீர்  தான்  இயக்குநர் .  முக  மெதுவாக  செல்லும்  படம்  இடைவேளைக்குப்பின்  க்ரைம் த்ரில்லராக  டோன்  அப்  ஆகிறது 


தன்  மனைவி  தனக்கு  துரோகம்  செய்து  விட்டாள்  என  உணர்ந்த  ஒரு  போலீஸ்  உயர்  அதிகாரி  அதே  போல  பிரச்சனையில் கொலை  செய்த  கொலைகாரனை  அடையாளம்  கண்டும் சரி  தப்பிப்போகட்டும்  என  விட்டு  விடுவது  மட்டும்  உறுத்துகிறது ., மற்றபடி  இது மாறுபட்ட  க்ரைம்  த்ரில்லர் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஒருவருக்கு  ஆண்மைக்குறைபாடு  இருக்கிறது  என்பது  19  வயதிலேயே  தெரிந்து  விடும். திருமணம்  ஆகி  சில  நாட்கள்  கழித்துத்தான்  அது  ஒருவருக்குத்தெரிய  வருகிறது  என  சொல்வது  நம்பும்படி  இல்லை 


2  திருமணம்  ஆன  ஒரு  பெண்  கள்ளக்காதலனுடன்  உறவில்  இருந்தால்  எச்சரிக்கையாக  இருப்பார்,  முதல்  மாதம் தேதி  தள்ளிப்போனதும்  உஷார்  ஆகி  கலைத்து  விடுவார். ஆனால்  ஒரு  பெண்  நான்கு  மாத  கர்ப்பிணி  ஆன  பின்  தான்  சுதாரிப்பது  நம்பும்படி  இல்லை 


3  எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  ரிலேஷன்ஷிப்பில்  இருக்கும்  ஒரு  திருமணமான  பெண்  எல்லாப்பின் விளைவுகளையும்  யோசித்துத்தான்  அதில்  இறங்குவார். கர்ப்பம்  ஆனதும்  பயந்து  போய்  தற்கொலை  செய்ய  முடிவு எடுப்பது  நம்பும்படி இல்லை. இத்த்னைக்கும்  கணவன்  விஷயம்  தெரிந்தும்  அவரை  ஏற்றுக்கொள்ளத்தயாராக  இருந்தும்  அப்படி  முடிவு  எடுப்பது  ஏனோ? 


4  இடி விழும்  ரிஸ்க்   ஆன  ஏரியாவில்   எதற்கு  ஆட்களை  வர  விட்டு  பின்  வர  வேண்டாம்  என  எச்சரிக்க  வேண்டும் ?  அடிவாரத்துலேயே  செக்  போஸ்ட்  போட்டுத்தடுக்கலாமே? 


5   கேரளாவில்  வருடா  வருடம்  ஜூன்  3  முதல்   டிசம்பர் 28  வரை  தினசரி  மழை  உண்டு. இது  தெரிந்தும்  அந்த  ஆபத்தான  ஏரியாவுக்கு  போலீசின்  மனைவி  தன்  வாரிசுகளுடன்  வருவது  ஏன் ?  வீணாக  ஒரு  உயிர்ப்பலி . ஜனவரி  முதல்  மே  வரை  வெய்யில்  காலத்தில்  வந்திருக்கலாமே?   


6   பெண்ணின்  உட;லை  துண்டு  துண்டாக  வெட்டி  தனக்கு  வேண்டாதவ்ர்  சென்று  வரும்  வழிகள்  எல்லாம்  அவற்றை  வீசி  விட்டு  வருவது  ரொம்ப   ரிஸ்க்.,  அதுக்குப்பதிலாக  டெட்  பாடியை  மொத்தமாக  அந்த  ஆள்  வீட்டில்  வைத்து  விட்டு  வந்திருக்கலாம் 


7  ஒரு  போலிஸ்  ஸ்டேஷனில்  பணியாற்றும்  சக  லேடி  போலீசிடம்  ஒரு  போலிஸ்  ஜொள்ளு  விடுவது  ஓக்கே , ஆனால்  உயர்  அதிகாரியுடன்  ஜீப்பில்  வரும்  லேடி  போலீசிடம்  வேறொரு  ஸ்டேஷன்  போலீஸ்  பம்முவது  நம்பும்படி  இல்லை , அவர்  மாட்டி  விட  மாட்டார்  என்பது  என்ன  நிச்சயம் ? 


8   ஒரு  போலீஸ்  உயர்  அதிகாரியின்  மனைவியைக்கூட்டிக்கொண்டு  ஒரு  டிரைவர்  ஓடி  விடும்  கிளைக்கதை  நம்பும்படி  இல்லை. ஒரு  முறை  தப்புப்பண்ண  வேணா  ஆண்கள்  ரிஸ்க்  எடுப்பார்கள், ஆனா  ஹையர்  ஆஃபிசர்  மனைவியை  காலம்  பூரா  வெச்சுக்காப்பாத்த  ஒரு  டிரைவர்  ரெடியாக  இருப்பாரா?  அவர்  நம்மை  முடிச்சுகட்டிடுவார்னு  தெரியாதா? 

 ( மெயின்  கதைக்கும்  இக்கிளைக்கதைக்கும்  சம்பந்தம்  இல்லை ) 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  முதல்   பாதி  மிக  மிக  மெதுவாகச்செல்லும்  படம் .  பின்  பாதியில்  தான்  விறுவிறுப்பு  இருக்கும். மலையாளப்படங்கள்  ரெகுலராகப்பார்ப்பவர்களுக்கும்  , மலையாளம்  புரிந்தவர்களுக்கும்  மட்டும்  தான்  திரைக்கதை   புரியும், சப்  டைட்டில்  இல்லாமல்  படம்  பார்த்தால்  புரியாது .  ரேட்டிங்  3 / 5 


Ela Veezha Poonchira
Ela Veezha Poonchira film poster.jpeg
Directed byShahi Kabir
Written byNidhish G
Shaji Maarad
Produced byVishnu Venu
Starring
CinematographyManesh Madhavan
Edited byKiran Das
Music byAnil Johnson
Production
company
Kadhaas Untold
Release date
  • 15 July 2022
CountryIndia
LanguageMalayalam