Showing posts with label Director 'Naveen'. Show all posts
Showing posts with label Director 'Naveen'. Show all posts

Monday, September 17, 2012

நெல்லை சந்திப்பு - சினிமா விமர்சனம்

-nellai-santhippu-movie-wallpapers-8.jpg (1024×724)தமிழ்நாட்ல சமீபத்தில் நடந்த போலீஸ் என்கவுண்ட்டர் பல போலி என்கவுண்ட்டரே என ஒரு டாக் இருந்துச்சு. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கூட  அதீஷாவின் கதைல அப்டி ஒரு படம் வந்துச்சு.. அதே மாதிரி போலீஸ் நடத்திய போலி என்கவுண்ட்டர் கதை தான் இது..


ஹீரோ ஃபேமிலி ஒரு அபார்ட்மெண்ட்ல குடி இருக்காங்க. அங்கே எதிர் வீட்ல சிவகாசி ஜெயலட்சுமி மாதிரி, சஹானா மாதிரி ஒரு உத்தம பத்தினி இருக்கு.அவங்க கிட்டே வரும் ரெகுலர் கஸ்டமர்ஸால இவங்களுக்கு அசூயை. அதாவது அசைவம் சாப்பிடறவங்களைப்பார்த்து சைவம் சாப்பிடறவங்க முகம் சுளிப்பது போல்


 ஹீரோவோட அக்கா போலீஸ்க்கு ஃபோன் பண்ணி புகார் தர்றா.உ பத்தினி கைது. வெளில வந்து அவ பயங்கர ரகளை வீட்டை காலி பண்ண வேண்டிய சூழல். அவசர அவசரமா வீடு பார்த்து புது வீடு குடி போறாங்க. அந்த வீட்ல ஆல்ரெடி 2 ரவுடிங்க தங்கி இருந்தாங்க.. ( சில காட்சிகளில் டெரரிஸ்ட்னும்  சில இடங்களில் ரவுடிஸ்னும் வசனம் வருது)

எப்பவுமே இந்த போலீஸ் குற்றவாளிங்களை விட்டுட்டு நல்லவங்களைத்தான் டார்ச்சர் பண்ணுவாங்க. என்கவுண்ட்டர் பண்றப்போ ரவுடினு நினைச்சு ஹீரோவை சுட்டுடறாங்க. அவங்க தப்பு தெரிஞ்சு ஹீரோவை ரவுடிமாதிரி  செட்டப் ஆதாரம்  எல்லாம் வைக்கறாங்க. 


 ஹீரோ சாகலை. உயிர் இருக்கு.செத்துட்டதா நினைச்ச போலீஸ்க்கு இது ஷாக். ஏன்னா அவங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே.. ஹீரோ குடும்பமே போலீஸால நாசம் ஆகுது. 


 பழி வாங்க எஸ் ஏ சந்திர சேகர் பட பாணில் ஹீரோ 3 போலீஸ் ஆபீசரை பழி வாங்கறதுதான் கதை.

16592638738.jpg (600×400)




 இயக்குநரிடம் பல கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்


1. இப்போ நான் சொன்ன மாதிரி சிம்ப்பிளா கதை சொல்லி இருந்தா நல்லாருந்திருக்கும். ஆனா நீங்க கதைக்குள்ளே வரும்போது இடைவேளை வந்துடுது. அப்புறம் அவசர அவசரமா அந்த பழி வாங்கல் சம்பவங்களை மூணே ஷாட்ல முடிச்சுட்டீங்க.. 


2. ஹீரோ அவருக்கு ஒரு லவ்வர், ஹீரோவின் அக்கா, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளை , அவங்க கொஞ்சல்ஸ், காதல், ஊடல் இதெல்லாம் இந்த கதைக்கு தேவை இல்லாதவை. முன் பாதி முழுக்க அதான் காட்டறீங்க..  ஒய் ?


3. போலீஸ்க்கு ஒரு இன்ஃபர்மேஷன் வருதுன்னா உடனே போலீஸ் அந்த வீட்டுக்குள்ளே புகுந்து சுடமாட்டாங்க.. மினிமம் 4 மணி நேரமாவது வாட்ச் பண்ணுவாங்க . ( குப்பி படம் பார்க்க ) ஆனா இந்தப்படத்துல போலீஸ் டகார்னு வீட்டுக்குள்ளே நுழையுது. 


4. போலீஸ் ஹீரோவை சுட்டதும் அவனுக்கு உயிர் இருக்கா? இல்லையா?ன்னு கூட செக் பண்ண மாட்டாங்களா? அதுவும் அது ராங்க் என் கவுண்ட்டர்னு தெரிஞ்சும்?அப்புறமா ஜி ஹெச் டாக்டர் சொல்லித்தான் தெரியுது.. அட ஆண்டவா .. 


5. ஹீரோ புது வீடு குடி போரார்னு சிம்ப்பிளா ஒரு ஷாட்ல சொல்ல வேண்டிய விஷயத்தை எதுக்கு தேவை இல்லாம 3 ரீல் இழுக்கனும்? அந்த உத்தம பத்தினி கேரக்டர் எதுக்கு? நான் கூட ஏதோ ஒரு டர்னிங்க் பாயிண்ட் க்ளைமாக்ஸ்ல இருக்கும்னு நினைச்சேன்.. 



6,. மனைவிக்கு முன்னால், காதலிக்கு முன்னால் சரக்கு அடிப்பவன் கூட தன் பெற்றோருக்கு முன்னாலோ, மகள் முன்னாலோ சரக்கு அடிக்க மாட்டான். மரியாதை.. கம்  பாசம்.. அக்கறை.. ஆனா ஹீரோயின் அப்பா தன்  மக முன்னால் சரக்கு அடிக்கறார். அம்மா ஊத்தி தருது.. அதைக்கூட தாங்கிக்கலாம். வயசுக்கு வந்த பொண்ணு கண் முன்னால சரி நீ தூங்கு நான் மேலே போறேன், அப்பா கூப்பிடறார்னு சொல்லி ஃபிரிட்ஜ் திறந்து 6 முழம் மல்லிகைப்ப்பூ வெச்சுட்டு போறா.. என்ன கொடுமை சார் இது?


16592761790.jpg (600×400)



7. ஹீரோ நெஞ்சுல புல்லட் பாய்ஞ்சிருக்கு. ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு அடுத்த சீன்ல டாப்லெஸ்ல ஐ மீன் ஹீரோ டாப்லெஸ்ல ஒரு ஷாட். அதுல தழும்பே இல்லை.. ஒண்ணா தழும்பு மேக்கப் போட்டிருக்கனும். அல்லது ஹீரோ சட்டை போட்டிருக்கனும்.. அவர் என்ன கமல் ஹாசனா? ஒரு சீனிலாவது பாடியை காட்டியே ஆகனும்னு அடம் பிடிக்க?


8. ஹீரோவின் அக்காவை பிராத்தல் கேஸ்ல பொய்யா போலீஸ் பிடிச்சுட்டு கோர்ட்டுக்கு போகுது. ஃபைன் கட்டிட்டு வெளீல வரும்போது போலீஸ் வில்லன் அவ கிட்டே இன்னைக்கு எல்லா பேப்பர்லயும் உன் ஃபோட்டோ தான் மானம் போச்சு என்கிறார். என்னய்யா ஸ்கிரிப்ட் இது? காலைல 10 மணிக்கு பிடிக்கறீங்க.. 11 மணிக்கு கோர்ட்ல சப்மிட்.. 11.30 மணிக்கு  அவ வெளீல வர்றா . அதுக்குள்ளே பேப்பர்ல ஃபோட்டோ நியுஸ் எப்படி வரும்?


9. ஹீரோவின் பழி வாங்கும் படலத்துல முதல் கொலை செம காமெடி.. ஒரு வெறி நாயை சாக்கு மூட்டைல சுமந்துட்டு போறாரு ஹீரோ.. வில்லனை பார்த்ததும் சாக்கை அவுத்து விட அது கரெக்டா வில்லனை கடிக்குது.. வெறிநாயை கூண்டுல அடைச்சு வெச்சிருந்து அந்த கூண்டுக்குள்ளே வில்லனை அனுப்பினார்னா ஓக்கே.. சாக்கு மூட்டைகுள்ளே நாயை தூக்கிட்டு போனா அது திமிறும், கடிக்கும்.. குலைக்கும், மக்கள் அது என்ன?னு கேள்வி கேட்கமட்டாங்களா? பழக்காத வெறி நாய் ஹீரோவை கடிச்சிடாதா?


10. மெஷினரி ஜிம்ல எப்பவும் செஸ்ட் எக்சசைஸ் பண்றப்ப நெஞ்சை  தொடாத மாதிரி லிமிட் லாக் வெச்சிருப்பாங்க.. அதாவது பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் பண்றப்போ அந்த ஒர்க் அவுட்ல தவறுதலா நாம கை விட்டாலும்  நம்ம மேல அது விழாது . ஆனா படத்துல வில்லன் அதை செய்யும்போது சைடுல சப்போர்ட்டுக்கு நிக்கும் 2 ஆள்ங்க வெயிட்டை விட்டதும் வில்லனை அது  நசுக்கி கொல்லுது.. அது எப்படி?இந்த சீனை மெஷினரி  ஜிம்ல எடுக்காம ஆர்டினரி மேனுவல் ஜிம்ல எடுத்திருந்தா சரியா இருந்திருக்கும்/./ 



11. க்ளைமாக்ஸ் காளி ஆட்டம் முடிஞ்சு  வில்லனை கொலை பண்றப்போ பொது மக்கள் கிட்டே எந்த ரீ ஆக்‌ஷனும் இல்லையே? அந்த சீன் முடிஞ்சு ஹீரோ மேக்கப்பை கலைத்து அழுவதும் செயற்கை


12. தீவிரவாதியோ,  என்கவுண்ட்டருக்கு குறிவைக்கப்படும் ரவுடியோ போலீஸ் கதவை தட்டுதுன்னு தெரிஞ்சா கதவை திறக்க மாட்டாங்க. பின் வாசல் வழியாத்தான் தப்பிப்பாங்க.. ஆனா போலீஸ் அந்த வீட்டை ரவுண்ட் அப் பண்ணாம என்னமோ  கேபிள் டி விக்கு மாச வாடகை கேட்கப்போறவங்க மாதிரி 2 பேர் மட்டும் போய் கதவைத்தட்டறது செம காமெடி..  


165927504.jpg (600×400)

 மனம் கவர்ந்த வசனங்கள்

1. மஞ்சு, என்ன சாப்பிடறே?

சந்தோஷ்க்கு என்ன பிடிக்குமோ அது..

 சர்வர், இந்த சந்தோஷ், மஞ்சு ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு காக்டெயில்..  கொண்டு வாங்க..



2. என்னடி? மச்சான் சிலிர்த்துக்கறாரு?

 பால் குடி மாறாத மறக்காத பையன் போல, பாவம் விட்டுடுடி



3. நான் பொம்பள ரவுடி டி, பால் குடுக்கவும் தெரியும், பால் தெளிக்கவும் தெரியும்..


4. எவ்ளவ் நேரம் தான் நாய் மாதிரி கத்திட்டு இருக்க? கண்டுக்கவே மாட்டேங்கறியே?


 அடடே, நீங்க தானா? நான் நாய் தான் கத்துதோன்னு அசால்ட்டா இருந்துட்டேன் ( திஸ் மொக்கை ஜோக் டேக்கன் ஃப்ரம் கிரேசி மோகன் டிராமா கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்)



5. குடை அங்கே காணோம்னு இங்கே இவ கிட்டே என்ன குடைஞ்சுட்டு இருக்கே?



6. நாட்டை குட்டிச்சுவர் பண்ணும் டெரரிஸ்ட்ஸ் ஏ சி ரூம்ல உக்காந்து டிஸ்கஸ் பண்றாங்க.. அவங்களைப்பிடிக்க வேண்டிய போலீஸ்  இந்த மாதிரி குட்டிச்சுவர்ல உக்காந்து பேசிட்டு இருக்கோம்..



7. மழைல நனையறதுன்னா உனக்குப்பிடிக்குமா?


 அட கேனமே, அதான் நனையறேனே, தெரில?




8. இந்த ஏரியாவில் இவ்ளவ் கம்மியான  வாடகைக்கு வேற எங்கேயும் வீடு கிடைக்காது

 அதான் இங்கே கிடைச்சிடுச்சே, அப்புறம் என்ன?


9. சந்தோஷைத்தேடித்தான் இங்கே வந்தியா?


 பின்னே உன்னைத்தேடி வருவேன்னு நினைச்சியா?

 நீ என்ன என் மாமா பொண்ணா? 


16592619464.jpg (600×400)


 இயக்குநர் பாராட்டு  பெறும் இடங்கள்


1. இடைவேளைக்குப்பிறகு படம் பார்த்தாலும் மொத்தப்படமும் புரியும்படி படத்தின் திரைக்கதையை அமைத்தது. ( முதல் பாதி வேஸ்ட்)


2.  படத்தில் 2 நாயகிகளையும் கண்ணியமாக காட்டியது.. கவர்ச்சியை நம்பாதது


3. க்ளைமாக்ஸ்சில் 3 பேரையும் 3 விதங்களில் பழி வாங்கும் ஐடியாக்கள், அதை படமாக்கிய விதம் திகில்..



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40



 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி.பி கமெண்ட் - டி வி யில் போட்டா பின் பாதியை மட்டும் பார்க்கலாம்.. லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன்

நெல்லை சந்திப்பு படத்தின் இயக்குநர் முன்னாள் ஜோக் ரைட்டர் பாபு.வசனகர்த்தா உங்கள் ஜூனியர் எம் ஜி கன்னியப்பன் # 1998 செட்