Showing posts with label Delhi gang-rape. Show all posts
Showing posts with label Delhi gang-rape. Show all posts

Saturday, December 29, 2012

டெல்லி பெண் இறப்பு சம்பவம் - வலுக்கும் போராட்டங்கள்



Victim of 
gang rape in India dies at hospital in Singapore
ஒரு மாணவிக்காக அல்ல... அத்தனை பெண்களுக்கான போராட்டம்!
ஒரு நல்ல அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது குடிமக்களின் பாதுகாப்பே!  


வலியான் வெல்கிறான்.மெலியான் ஒடுக்கப்படுகிறான்.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதற்கு கடவுள் எதற்கு? 
கொடூரமான மரணங்கள் ,அடிக்கடி நிகழும் விபத்துக்கள் கடவுள் இருப்பை மேன்மேலும் சந்தேகம் கொள்ள வைக்கிறது  
இந்தியாவில் இறந்தால் பிரச்சனை என சிங்கப்பூர் கொண்டுபோய் திசை திருப்பி இருக்க வாய்ப்பு இருக்கு # டெல்லி சம்பவம்  






லைநகர் டெல்லி பற்றி எரிகிறது. இந்தியாவைத் தலைகுனியவைத்த பாலியல் பலாத்காரத்தின் ஆக்ரோஷம் மக்கள் மத்தியில் இன்னும் அடங்கவில்லை. 



பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டு இருக்க... இந்தியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்களும் தெருவுக்கு வந்து பாதுகாப்பு கேட்டுப் போராடு கிறார்கள். ஒட்டுமொத்தப் போராட்டத்துக்கும் தூண்டுதலாக நிற்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள். லெனின், கலையரசன் என்ற இருவருமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள். சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து இன்றுவரை போராட்டக் களத்தில் ஆக்ரோஷம் குறையாமல் நிற்கிறார்கள்


லெனினைத் தொடர்புகொண்டு பேசினோம். ''ஆரம்பத்தில் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும்தான் போராட்டக் களத்தில் நின்றோம். இப்போது நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் திரண்டு விட்டனர். மக்களின் விழிப்பு உணர்வு மேலும் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் அமைதியான முறையில் எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். இதற்குமுன், டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் நாங்கள் போராடி இருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் எங்கள் போராட்டம் யாருடைய கவனத்தையும் ஈர்த்தது இல்லை.
இந்த முறை மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டதால், மீடியா வெளிச்சமும் அதிகமாக இருக்கிறது. இந் தியாவின் மெட்ரோ நகரங்களில் எல்லாம் அதிக அளவு பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என் றாலும் டெல்லியில் இது மிகஅதிகம். இந்த நிலை நீடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.



முதலாவது, டெல்லி நகர போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், நடந்த சம்பவத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு பதவி விலக வேண்டும். கற்பழிப்பு சம்பவம் நடந்த நேரத்தில், அந்த பஸ் ஐந்து செக் போஸ்ட், மூன்று போலீஸ் ஸ்டேஷன்களைக் கடந்து சென்றுள்ளது. அங்கெல்லாம் இருந்த போலீஸாரின் கவனக்குறைவுதான் இப்படி ஒரு நிலை ஏற்படுவதற்குக் காரணம். அதனால், அந்த சமயத்தில் பணியில் இருந்த அத்தனை போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பாலியல் சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளையும் அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். பணி இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல், வன்முறைக்கான மசோதா நாடாளுமன்றத்தில் இன்னமும் நிறைவேறாமல் இருக் கின்றன. அவற்றை சீக்கிரம் அமலுக்குக் கொண்டுவர வேண்டும். பாலியல் வன்முறை சம்பந்தமாக கொடுக்கப்படும்  அனைத்து புகார்களுக்கும் உடனே எஃப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவைதான் எங்கள் கோரிக்கைகள்.


பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துகிறார்கள், வரைமுறை மீறி லவ் செய்கிறார்கள் என்று சிலர் இந்த விஷயத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள். உடைதான் பிரச்னை என்றால், ஏன் ஐந்து வயதுகூட நிரம்பாத சின்னக் குழந்தைகள் மீதும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கிறதே... இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?


அதேபோல, பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வரக்கூடாது என்று சொல்வதும் அபத்தம். இன்றைய சூழலில் பெண்களால் வெளியே செல்லாமல் இருக்கவே முடியாது. படிப்பு, வேலை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காவது அவர்கள் போய்த்தான் தீர வேண்டும். அரசு எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண் களின் பாதுகாப்புக்கான இந்தக் கோரிக்கைகளை எல்லாம் ஏற்கவில்லை என்றால், டெல்லியில் தொடங் கிய எங்களது போராட்டம் அமைதியான முறையில் இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் தொடரும்'' என்று எச்சரித்தார்.



அடுத்துப் பேசினார் கலையரசன். ''இந்தியா என் னவோ புனிதமான நாடு மாதிரியும் இந்தக் கற்பழிப்பு சம்பவத்தால்தான் நம் நாட்டின் தூய்மைக்கே இழுக்கு வந்ததைப் போலவும் பேசுகிறார்கள். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பும் இந்தியாவின் நிலை இதுதான். ஹரியானாவில் ஒரு பெண்ணை நடு ரோட்டில் வைத்து எட்டுப் பேர் செக்ஸ் டார்ச்சர் செய்தனர். இதே டெல்லியில்தான் மூன்று வயதுக் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது. அதாவது இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு கற்பழிப்பு நடக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கிறார்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கிடையாது; சமூகப் பிரச்னை.


பெண்கள் இரவில் தனியாக வெளியில் செல்வது தவறு, ஒழுங்காக உடை அணிய வேண்டும், அடக்க ஒடுக்கமாக இருக்க வெண்டும் என்றெல்லாம் சொல்லி, பெண்களை மறுபடியும் கற்காலத்துக்கே கொண்டு போகாதீர்கள். இப்போதுதான் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தைரியமாக நுழைந்து வரத் தொடங்கியுள்ளனர். அவர்களை மறுபடியும் கட்டிப் போடாதீர்கள். எங்களுடைய இந்தப் போராட்டம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவிக்காக மட்டும் நடக்கும் போராட்டம் அல்ல. ஒட்டுமொத்தப் பெண்களும் இனி எப்போதும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான போராட்டம்'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.


- ஆ.அலெக்ஸ் பாண்டியன்


நன்றி - ஜூ வி 



சிங்கப்பூர்:டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.



கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.

இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.



இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.



உடல் உறுப்புக்கள் செயல் இழந்தன

மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.

முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் , அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மாணவி உடல் பிரேத பரிசோதனை

உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்‌கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எனவே மாணவியின் உடல் விரைவில் இந்தியா வர உள்ளது.

டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது.


 மக்கள் கருத்து 


 1. sandilyan கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதால், கற்பழிப்புகள் நின்றுவிடாது. அதிக போலிஸ் பாதுகாப்பு தேவை. மேலும் இரவு நேரங்களில் அதிக ரோந்துகள் தேவை. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பெண்கள் பாதுகாப்பாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அதற்காக தனியாக செல்ல கூடாது. கவர்ச்சி உடைகள் அணியக்கூடாது என்று மட்டரகமாக சொல்லவில்லை. பாதுக்காபிற்காக பெண்கள் செல் போனை எடுத்து செல்ல வேண்டும். இந்த நேரத்திற்குள் வந்துவிடுவேன் என்று முன்பே குடும்பத்தாருக்கு தெரிவிக்க வேண்டும். 



பாதுகாப்பிற்காக தற்காப்பு கலை கற்றுகொள்ளுதல், மிளகு ஸ்ப்ரே போன்ற பொருள்களை வைத்திருப்பது தனியே செல்லும் பெண்களுக்கு நல்லது. குற்றம் புரிந்தோருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை பத்தாது. ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கவேண்டும். அதற்காக மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்வது தவறு. பலர் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்கள். ஆனால் உயிரை எடுக்க ஆண்டவனுக்கு மட்டுமே உரிமை உண்டு. மனிதன் அந்த உரிமையை எடுத்துகொள்வது நாகரீக உலகுக்கு நல்லது அல்ல. பல சமயங்களில் உண்மையில் குற்றம் புரியாதவருக்கு உலகில் வளர்ந்த நாடுகளில் கூட இருபது ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கப்பட்டு பின்னர் வருந்தபட்டது. நம் நாட்டில் நமது போலிசின் லட்சணம் தெரிந்தும், மரண தண்டனை கேட்பது மகா முட்டாள்தனம். 



2. அமெரிக்காவிலோ சிங்கபோரிலோ நாட்டில் எந்த சாலையில் ஒரு விபத்து நடந்தாலும் அயிந்து அல்லது பத்து நிமிடங்களில் உதவி தேடிவந்து விடுகின்றது...ஆம்புலன்ஸ் அல்லது போலீஸ்.......இந்த மாத்ரி அரக்கத்தனமான கொலைகளை தடுக்க இயலாத அரசால் அல்லது நாட்டால் என்ன பயன் ? ...அதுவும் தலைநகரில் ?...நாடு kdiyavarkalukkaakaa thaan valarnthu kondirukiratha? 



3. எது நடக்க கூடாது என்று எதிர் பார்த்தோமோ அது நடத்து முடித்து விட்டது.பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் அனைவரும் நிம்மதியை இழந்து விட்டோம் . இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை தான் மற்ற காம வெறியர்களுக்கு பாடமாக அமையும்.தேர்தல் கலா வாக்குறுதி போல் இல்லாமல் உடன செயல் படுதும அரசும் அரசியல்வாதியும்.? 




4. முதற்கண் அந்த மாணவியின் பெற்றோருக்கு ஆண்டவன் அமைதியை வழங்கட்டும்............. இப்படியான நிகழ்வுகள் ஏற்படுவதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் பலவீனமும், காவல்த்துறை மற்றும் அதிகார மையங்களுக்குள் அரசியல்வாதிகளின் தலையீடுகளுமே முழுமுதற்காரணம். இறந்துபோன மாணவிக்கு ஆதரவாக இங்கு வாசகர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். நான் வேறு ஒருகோணத்திலும் பார்க்கலாம் என நினைக்கிறேன். 


அரசியல்வாதிகள் பணம்படைத்த அரசியல் செல்வாக்குள்ளவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் காவல்த்துறை / நீதித்துறை எப்படியான எதிர்வினையை காட்டுமோ அப்பேற்பட்ட எதிர்வினையை கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட இந்த அப்பாவி மாணவியின் விடயத்திலும் காட்டவேண்டும். உதாரணத்துக்கு இப்படியான அனர்த்தம் ஒன்று காங்கிரஸ் தலைவி சோனியாவின் மகள் பிரியங்காவின் குழந்தைக்கு ஏற்ப்பட்டிருந்தால் சட்டப்படி என்ன செய்திருப்பார்களோ அதை குறிப்பிட்ட மாணவி விடயத்தில் கைக்கொள்ளவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம். 





5.  பாலியில் வன்முறையில் பாதிக்கப்பட்ட இந்திய இளம் பெண் சிங்கப்பூரில் மரணமடைந்ததால் ,இப்பிரச்னை சர்வதேச அளவில் அனைவரின் பார்வைக்கும் சென்றுள்ளது...இந்தியாவில் ஏதோ பெண்களெல்லாம் மிக அதிகாரம் மிக்க பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருகிறார்கள் இங்கே பெண்கள் மிகுந்த முனேற்றம் அடைந்து விட்டார்கள் என்ற மாய தோற்றத்தை ,இப்பெண்ணின் மரணம் உடைத்துள்ளது .. இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த பெண்மணியாக உலக பத்திரிகைகளால் உருவாக படுத்தப்படும் சோனியா காந்தி, கடந்த பதினைந்து ஆண்டுகளாக டில்லி முதல்வராக பதவி வகிக்கும் ஷீலா டிஷிட் ,உலகின் மிகபெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் இருக்கு இடம் அதன் தலைவராக meera குமார் ,ஆகியோர் வசிக்கும் இந்திய தலை நகர் டில்லியிலேயே இப்படி ஒரு கொடூரம்,கேவலம் பெண்களுக்கு எதிராக இழைக்கபடுகிறது என்றால் நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் பெண்களின் நிலை குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை..



..பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் இன்ன பிற அனைத்து சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களுக்கு முக்கிய காரணம் சட்டங்களை கண்டு இதில் ஈடுபடும் நபர்கள் பயபடாமல் இருப்பதுதான்.சட்டம் செயல்படாமல் இருக்க காரணம் கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை புரையோடிபோயுள்ள ஊழல் மற்றும் லஞ்சம் தான்...முக்கியமாக இது போன்ற சட்டங்களை செயல்படுத்தும் முக்கிய இடத்தில உள்ள போலிஸ் ,அரசு இயந்தரம், நீதி துறை அனைத்துமே ஊழலால் முடங்கி போயுள்ளது..ஊழலை ஒழிக்க ஒரு கடுமையான சட்டம் உருவாக்கப்படதவரை இந்திய மாற போவதில்லை..இந்தியாவின் இந்த ஒரு நிலைக்கு சோனியா காந்தி போன்ற தலைவர்களும் ஒரு மறைமுக காரணமே..



6. இந்த கயவர்களை சுப்ரீம் கோர்ட் உடனடியாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். 2. அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும். 3. இந்த நிகழ்வை திசை திருப்பிய போலீஸ் காரர்களையும் கழுவில் ஏற்ற வேண்டும் 4. இதை பப்ளிக்காக நாற்சந்தியில் வைத்து செய்ய வேண்டும். 5. இதை லைவ் ஆக எல்லா சேனல்களிலும் ஒளிபரப்ப வேண்டும். 6. இந்த இந்தியன் தாத்தா ஸ்டைல் தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே இந்தியாவில் இதைப்போன்ற மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாது. மேலும் இந்த கையால் ஆகாத அரசாங்கம் மக்களிடம் பப்ளிக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் 7. இதை போல ஒரு நடவடிக்கை உடனடியாக எடுக்ககவிட்டால், மேலும் குற்றங்கள் பெருகிவிடும் மேலும் இதைபோன்ற கயவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பயமும் போய்விடும். எந்த வகை குற்றங்கள் செய்தாலும் தப்பித்து விடலாம் என்ற தைரியம் ஏற்படும். எனவே மீண்டும் முதல் வரியைப்படியுங்கள் 



7. இந்த பெண்ணின் மரணம் உலகையே உலுக்கிவிட்டிருக்கும்.இந்தியாவின் மானமே போய்விட்டிருக்கும்..எப்போதுமே ஆணாதிக்கம் நிறைந்த நாடு என்கிற கேவலம் இனி நம்மை இழிவு படுத்தும். என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? இரவில் வெளியே வந்தது குற்றமா? அதிலும் தனது நண்பனோடு..? ஆடை குறைப்பை செய்தாளா? இவருக்கு நேர்ந்த நிலையை ஆதரித்து கருத்துரைத்த மேதாவிகளே..இப்போது உங்களுக்கு "திருப்தியா" உடலெல்லாம் காயங்கள்..உள்ளுறுப்புகளில் கூட கொடுமையான காயங்கள்..மனிதர்களா? மிருகங்களா? அதனையும் ஆதரிக்கும் பாவிகளே...பெற்றவர்களின் துயர் பற்றி தெரியுமா? கொதித்தெழுந்த மாணவ செல்வங்களின் கோபத்தின் கொடூரத்தை அறிந்தீர்களா?



 இரட்டை அர்த்தம் தரும் வார்த்தை பிரயோகம் போன்ற செயல்கள்தான் இந்த கொடுமையான செயல்கள் நடக்க ஏதுவாயிற்று..சிங்கப்பூரின் மருத்துவத்தை நம்பித்தானே நாம் இறந்துவிடுவார் என்றும் அனுப்பினோம்..அதே சிங்கப்பூருக்கு "நியாயமான" நேர்மையான" நீதி கிடைக்க வேண்டும் என்றால்..அந்த ஆறு கயவர்களை "இங்கே" அனுப்புங்கள்..நான் வாழும் இந்த திருநாட்டில்தான் நிச்சயம் நேர்மையான நீதி கிடைக்கும்..அங்கே அவர்கள் நீதி விசாரணை என்கிற பெயரில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் நிம்மதியாய். மீளா துயரில் ஆழ்ந்திருக்கும் அணைத்து நல்ல உள்ளங்களின் அழுகையும்..கண்ணீரும்..சோகங்களும்.


.இறந்தபோன பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வைக்கும்..இவரோடு போகட்டும் பெண்ணடிமை..இந்த பெண்ணோடு ஒழியட்டும் ஆணாதிக்கம்..இந்த இந்தியாவில் சட்டங்கள் தர்மங்கள் நீதியும் மாற்றி அமைக்க இதுவே தருணமாக அமையட்டும்..கோழைகளின் ஆணாதிக்கம் இன்றோடு முற்றுபெறட்டும்.. 

 நன்றி - தினமலர்