Showing posts with label DHANUSH. Show all posts
Showing posts with label DHANUSH. Show all posts

Thursday, September 22, 2016

தொடரி - சினிமா விமர்சனம்

Image result for thodariபிரபு சாலமன் மைனா படம் மூலம் பலரது கவனத்தையும் கவர்ந்தாலும் அவரது கிராஃப் வித்தியாசமானது.சுந்தர் சி யிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தவர் 1999 ல்  கண்ணோடு காண்பதெல்லாம்  என்ற சுமார் ரகப்படம், 2001ல் உசிரே ( கன்னடம் - சேரனின் பாரதி கன்ண்ணம்மா ரீமேக்)  ஃபிளாப் ,2002 ல் விக்ரம் -நடித்த கிங் அட்டர் ஃபிளாப்,2006ல்  கரண் நடித்த கொக்கி ஹிட், 2007ல் சிபிராஜ் நடித்த லீ மீடியம் ஹிட்,2009 ல் லாடம் சுமார் ஹிட் , 2010ல் மைனா மெகா ஹிட்,2012 கும்கி ஹிட்,2014 காயல் ஃபிளாப் என ஏகப்பட்ட இறக்கங்களுடன்...

தென்னக புரூஸ்லீ என ரசிகர்களால் அழைக்கப்படும்  தனுஷ் ஹீரோவா நடிச்ச  தொடரி எப்டி இருக்கு?ன்னு பார்ப்போம்

ஹீரோ ஒரு ரயில்வே கேண்ட்டீன் ஊழியர்.ஹீரோயின் ஒரு சினிமா நடிகையின் டச் அப் கேர்ள். 2 பேரும் ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும்போது ஹீரோ மனசை டச் பண்ணிடறார் ஹீரோயின்.2 பேரும் லவ்ஸ் பண்றப்போ ரயில் கொள்ளையர்கள், ஒரு சைக்கோ மிலிட்ரி,மற்றும் சிலர் வில்லன்களாக வர எப்டி சமாளிக்கிறார்கள் என்பதே கதை


ஹீரோவா தனுஷ்.நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகருக்கு இந்த கேரக்டர் நமீதாப்பசிக்கு சோளப்பொறி.ஆனாலும் ஆங்காங்கே அப்ளாஸ்  வாங்குகிறார்.

ஹீரோயினா கீர்த்தி 
மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி இளசா இருந்தாலும் ஆர்த்தி சொகுசா தான் இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப  கீர்த்தி கிக் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் உடன் அமைந்த கெமிஸ்ட்ரி இல்லை


தம்பி ராமய்யா கெட்டப் நடிப்பு கன கச்சிதம் என்றாலும் போகப்போக அவர் போடும் மொக்கைகள் தாங்கல

அமைச்சராக வரும் ராதா ரவி குட்


கருணாகரன் எடுபடவில்லை

முதல் பாதி ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை மைனஸ், பாடல்கள் ஹிட்.ஒளிப்பதிவு , லொக்கேசன் செலக்சன் எல்லாம் பக்கா


கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தான் ஆகச்சிறந்த சொதப்பல்

இடைவேளைக்குப்பின் படம் சுதாரித்தாலும்  லாஜிக் ஓட்டைகள்  ஏராளம்.

டவுட் டேவிட்

1  ஒரு செண்ட்ரல் மினிஸ்டர்  பயணிகள் ரயிலில் வருவாரா?அதுவும் 2  வீரர் பாதுகாப்பு மட்டும்?

2  பழுதடைந்த பாலத்தை கடக்கும்போது 130 கிமீ வேகத்தில் ரயில் தறி கெட்டு ஓடியும் எதுவும் ஆகாதது எப்படி?

3  ரயில் கொள்ளையர்கள் லூசுங்க போல் ரயில் டாப்பில் அமர்ந்து கேமராவுக்கு முகம் காட்டுவது ஏன்?

4   க்ளைமாக்ஸ்  சீனில் ஹீரோ ரயிலின் டாப்பில் புகைக்கு நடுவே இருந்தும் ஃபேர் அண்ட் லவ்லி போட்ட பன் பேபி போல் கலரா இருப்பது எப்படி?



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


மாற்றான் தோட்டத்து மல்லிகையைக்கவரும் /நுகரும் வழக்கம் கொண்டவர் வாழ்வில் ,தொழிலில் தோற்க வாழ்த்து #,அட்டர் பிளாப்.மகிழ்ச்சி
2 வியாழக்கிழமை செண்ட்டிமெண்ட்.நமக்கும் ஒர்க் அவுட் ஆகிடாதா?ன்னு நிறைய பேரு முயற்சி பண்றாங்க.ஆனா ஜெயிக்க முடியறதில்ல

3 சார்.படத்தில் முதல் பாதி ல கதையே இல்லையாமே?


ஆமா.முன் பாதி யே எடுபடலைன்னா பின் பாதி மட்டும் எடுப்பாவா இருக்கப்போகுது?



4 அன்பே! நீ டைம் லைன் ல என்னிடம் பேசினால் கீர்த்தி அபிசியல்

டிஎம் மில் கடலை போட்டால் கீர்த்தி பர்சனல்



5 168 நிமிசம் தொடரி

6 தள்ளு தள்ளு# ஓப்பனிங் டயலாக்.தள்ளிட்டுப்போகப்போறார்.குறியீடு


7 ஹீரோ படம் பூரா செக்டு டிசைன் சர்ட் தான் போட்ருக்காரு.எதுனா குறியீடா?


கட்டம் கட்றதுல கண்ணன்.கரெக்ட் பண்றதுல மன்னன் னு அர்த்தமாம்

8 சிப்பிக்குள் முத்து கமல் டான்ஸ் ஸ்டெப் ட்ரை பண்றாப்டி.கமல் ரசிகர்கள் மன்னிப்பார்களாக#தொடரி


9 தொடரி- பிரபு சாலமன் தன் வெற்றிப்பாதையிலிருந்து விழுந்தார் இடறி


10 சார்.தமிழ் சினிமாவின் முதல் ரயில் படம் னு சொல்றாங்களே அது நிஜமா?


தெரில.ஆனா இது ஒரு பெயில் படம்.இது நிஜம்

சி.பி கமெண்ட்- தொடரி - முன் பாதி சி சென்ட்டர் ஆடியன்சுக்கான மொக்கை காமெடி.பின் பாதி விறுவிறுப்பு.லாஜிக் சொதப்பல்கள்.விகடன் -40,ரேட்டிங் = 2.5 / 5









Sunday, July 21, 2013

60 வது பிலிம்பேர் விருதுகள்

60வது பிலிம்பேர் விருதுகள் - தனுஷ், சமந்தாவுக்கு இரண்டு விருதுகள்! சிறந்த படம் - வழக்கு எண்

Dhanush-Samantha gets Two awards in 60th Filmfare award
தென்னிந்திய திரைப்பட விழாவில் ஒன்றான பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 60வது ஐடியா பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகர் மற்றும் பின்னணி பாடகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்தன. இதேப்போல் நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்காக இரண்டு விருதுகள் கிடைத்தன. தமிழில் சிறந்த படமாக தேசிய விருது பெற்ற ‘‘வழக்கு எண் 18/9‘‘ படம் பெற்றது.

60வது தென்னிந்திய திரைப்பட விருதுகளின் முழு விபரம்...

சிறந்த படம்

தமிழ் - வழக்கு எண் 18/9
தெலுங்கு - ஈகா
மலையாளம் - ஆயளும் நஞ்சனம் தம்மீழ்
கன்னடம் - கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா

சிறந்த நடிகர்

தமிழ் - தனுஷ் (3)
தெலுங்கு - பவன் கல்யாண் (கபார் சிங்)
மலையாளம் - பகத் பாசில் (22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - தர்ஷன் (கிராந்தி‌வீரா சங்கோலி ரயாணா)

சிறந்த நடிகை

தமிழ் - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சமந்தா (ஈகா)
மலையாளம் - ரீமா கல்லிங்கல் ((22 பீமேல் கோட்டயம்)
கன்னடம் - பிரியாமணி (சாருலதா)

சிறந்த டைரக்டர்

தமிழ் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
தெலுங்கு - ராஜமெளலி (ஈகா)
மலையாளம் - லால் ஜோஸ் (ஆயளும் நஞ்சனம் தம்மீழ்)
கன்னடம் - விஜயஒரசாத் (சித்திலிங்கு)

சிறந்த துணை நடிகர்

தமிழ் - தம்பிராமையா (கும்கி)
தெலுங்கு - சுதீப் (ஈகா)
மலையாளம் - பிஜூ மேனன் (ஆர்டினரி)
கன்னடம் - அதுல் குல்கர்னி (எதிகாரிகி)

சிறந்த துணை நடிகை

தமிழ் - சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)
தெலுங்கு - அமலா அக்கினி (லைப் இஸ் ப்யூட்டிபுல்)
மலையாளம் - கவுதம் நாயர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - சுமன் ரங்கநாதன் (சித்திலிங்கு)

சிறந்த இசை

தமிழ் - டி.இமான் (கும்கி)
தெலுங்கு - தேவிஸ்ரீ பிரசாத் (கபார் சிங்)
மலையாளம் - வித்யாசாகர் (டையமண்ட் நெக்ளஸ்)
கன்னடம் - வி.ஹரிகிருஷ்ணா (டிராமா)

சிறந்த பின்னணி பாடகர்

தமிழ் - தனுஷ் (3, கொலவெறிடி...)
தெலுங்கு - வேதபள்ளி ஸ்ரீனிவாஸ் (கபார் சிங்)
மலையாளம் - விஜய் ‌யேசுதாஸ் (ஸ்பிரிட்)
கன்னடம் - அவிநாஸ் செப்ரி (சித்திலிங்கு)

சிறந்த பின்னணி பாடகி

தமிழ் - என்.எஸ்.கே.ரம்யா (சற்று முன்பு பார்த்து... நீதானே என் பொன்வசந்தம்)
தெலுங்கு - சுஜித்ரா (பிஸினஸ்மேன்)
மலையாளம் - ஸ்வேதா (அரிகி)
கன்னடம் - இந்து நாகராஜ் (கோவிந்தயான்மகி)

சிறந்த புதுமுக விருதுகள்

நடிகர்

உதயநிதி ஸ்டாலின் - (ஒரு கல் ஒரு கண்ணாடி, தமிழ்)

தல்குர் சல்மான் - (செகண்ட் ஷோ, மலையாளம்)

நடிகை

லட்சுமி மேனன் - (சுந்தரபாண்டியன், தமிழ்)

ஸ்வேதா ஸ்ரீவட்சா - (சைபர் யுக‌தால் நவ யுகா, கன்னடம்)

வாழ்நாள் சாதனையாளர் விருது : வாணி ஜெயராம் மற்றும் பாபு

விழாவில் ஸ்ருதிஹாசன், நாவ்யா நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் நடனங்களும் இடம்பெற்றன.
 
 
thanx -dinamalar

Monday, July 01, 2013

அம்பிகாபதி - சினிமா விமர்சனம்

 

ஹீரோவுக்கு 6 வயசா இருக்கும்போதே 5 வயசான ஹீரோயினை லவ் பண்றாரு. யாரும் பயப்பட வேணாம். அது பப்பி லவ் தான். 5 நிமிஷம் தான் காட்டறாங்க . இப்போ ஹீரோ 10 வது படிக்கறாரு. ஹீரோயின் 9 வது படிக்கறா. லவ்வை சொல்றாரு. பளார்னு அறை வாங்கறாரு.ஆனா அண்ணன் அசரலையே? மீண்டும் மீண்டும் லவ் சொல்லி 15 தடவை அறை வாங்கறாரு. 16 வது தடவை ஹீரோயினுக்கு லவ் வந்துடுது ( நீதி - ஒரு பொண்ணு கிட்டே 15 தடவை உதை வாங்குனா போதும் லவ்விடலாம் )


2 பேரும் லவ் பண்ணிக்கும்போது ஹீரோ தன் காதலை நிரூபிக்க 4 டைம் தன் மணிக்கட்டை அறுக்கறாரு . ஹீரோயின்  ஒரு  டைம் அறுக்கறாரு . டைரக்டர் மட்டும் படம் பூரா அறுத்துட்டே இருக்காரு .

2 பேர் லவ்வும் 2 வீட்டுக்கும் தெரிஞ்சதும் வழக்கம் போல் பொண்ணு வீட்ல பொண்ணை வேற ஊருக்கு படிக்க அனுப்பிடறாங்க . இங்கே தான் கதைல பயங்கரமான ட்விஸ்ட் . ஹீரோயின் அங்கே போய் முறைப்படி ஹீரோவைத்தானே நினைச்சு ஏங்கனும்? தூங்கனும் , அல்லது தூக்கம் வராம தலையணையை கட்டிப்பிடிக்கனும்?




 ஆனா  இது பாரதி கண்ட புதுமைப்பெண்ணுக்கு அக்கா போல . அங்கே வேற ஒரு  பையனை பிராக்கெட் போடுது . அது கூட தேவைலை . 2 இஞ்சி மரப்பான் சாப்பிட்டு ஜீரணம் பண்ணிக்கலாம். அந்த கேவலமான கதையை ஹீரோ கிட்டே  அதாவது பழைய காதலன் கிட்டே ஸ்கூட்டர்ல பின்னால உக்காந்து  அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே பெருமையா சொல்லுது . 


 படம் பார்க்கறவங்களுக்கு டவுட் . ஹீரோயின் மெண்ட்டலா? படம் பார்த்துட்டு இருக்கும் நாம எல்லாம் கேனயன்களா? 

 இப்போ படத்துல ஒரு ட்விஸ்ட் . ஹீரோயினோட லேட்டஸ்ட் லவ்வர் திடீர்னு மண்டையைப்போட்டுடறான். அதுக்கு ஹீரோ தான் காரணம்னு ஹீரோயின் நினைக்குது . அந்த லேட்டஸ்ட் லவ்வர் காலேஜ் ல சேர்மேன் . கட்சி ஆரம்பிச்சு புரட்சி எல்லாம் பண்ணும் ஐடியா. ஹீரோயின்  அவர் லட்சியத்தை நிறைவேத்த  முயற்சி பண்றாரு. ஹீரோ அவளுக்கு உதவி பண்றாரு. 

 இந்த 2 கேனங்களும் வாழ்க்கைல இணைஞ்சாங்களா? இல்லையா? என்பதை தில் இருக்கறவங்க தியேட்டர்ல போயும் , டப் வேஸ்ட் பண்ண நினைக்காதவங்க டி வி லயும் பார்த்து தெரிஞ்சுக்கலாம் .


 ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியதா சொல்லப்பட்டு செல்வராகவன் இயக்கிய 3 படத்தின் 5  ரீல் அப்படியே முன் பாதி ல சுட்டுட்டாங்க . கே பாக்யராஜின்  டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க்  கொஞ்சம் , கமலின் மூன்றாம் பிறை கொஞ்சம் .ரங்க் தே பசந்தி கொஞ்சம் , பின் பாதில புதுப்பேட்டை பாதிப்பு என படம் ஒரு காக்டெயில் மாதிரி .




ஹீரோ தனுஷ் பிரமாதமான நடிப்பு . குறை சொல்லவே முடியாது . வழக்கமா சைக்கோ ஸ்பெஷலிஸ்ட்டா வரும் அவர் இதுல சாதா ஆளா வர்றதே திருப்தி . தனுஷ் கிட்டே என்ன ஸ்பெஷல்னா அவர் தாடி மீசை எடுத்தா ஸ்கூல் ஸ்டூடண்ட் . வெச்சா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஒரு தோற்றம் வந்துடறது தான் . பல இடங்களில் இவர் நடிப்பு பட்டாசு . வெல்டன் தனுஷ் 


 ஹீரோயின் சோனம் கபூர் . மாசு மருவே இல்லாத மொசைக் தரையில்  ஐஸ்க்ரீம் வழிய விட்ட மாதிரி ஒரு முகம் . ஆனா அவருக்கு எல்லாமே சின்னது . ஐ மீன் அவருக்கு கண் , காது , உதடு எல்லாம் ரொம்ப சின்னது . தமிழர்கள் குஷ்பூ , நமீதா , ஹன்சிகா , அஞ்சலி மாதிரி பிரம்மாண்டங்களை ரசிச்சுப்பழகினவங்க . அதனால பெருசா எடுபட மாட்டாங்கன்னு தோணுது. ஆனா அவர் நடிப்பு கலக்கல் .


சிரிப்பு , கோபம் , அழுகை என எல்லா காட்சிகளிலும் ஜொலிக்கிறார் ( அதாவது சோக சீனிலும்  பாப்பா  ஃபுல் மேக்கப் ) டிரஸ்சிங்க் சென்ஸ் பக்கா . பாடல் காட்சிகளில் அவர் முதுகு ஒரு  ஷங்கர் பட போஸ்டரே ஒட்டும் அளவு பிரம்மாண்டமா ஓப்பனா இருக்கு. குட் 



இன்னொரு ஹீரோவா  வரும் அபய்டியோல் ஆள் பர்சனாலிட்டிதான் . ஆனா அப்பாஸ் , ஷாம் மாதிரி மைதா மாவு கேஸ் . செல்லாது செல்லாது 


தனுஷ்-ன் தோழியாக வரும்  ஃபிகர் யாரு? நல்ல அழகு , நடிப்பு என கவனிக்க வைக்க்கிறார் ( நாம எந்த ஃபிகரை கவனிக்காம இருந்தோம் ? ) 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தின் முன் பாதி இளமைக்கலக்கல் . செம ஜாலியான திரைக்கதை . செம ஸ்பீடு . சின்ன சின்ன முக பாவனைகளில் ஹீரோ - ஹீரோயின் போட்டி போட்டுட்டு நடிச்சிருக்காங்க 


2. ஒளிப்பதிவு  ஹோலிப்பண்டிகை காட்சிகளில், காசி நகரின் அழகை அள்ளும் காட்சிகளில் அபாரம் . கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் 


 3 , இசை ஏ ஆர் ரஹ்மான். பிரம்மாண்டமான இசை .  பி ஜி எம் மில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். 2 பாட்டு ஹிட்டு . ஹிந்தி ராஞ்சனா வுக்கு மிகப்பெரிய ஓப்பனிங்க் வர ஒரே காரணம் ஏ ஆர் ஆர் தான் 


4 ஹீரோயின் , ஹிரோவின் தோழி மற்றும் பெண் கதாப்பாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பு , உடை உடுத்திய விதம் எல்லாம் அருமை . பிரம்மாண்டம் , கலை நயம் 


5. அப்ளாசை அள்ளும் தனுஷ் நடிப்பு 3 இடங்களில் பின்னிப்பெடல் எடுத்து விட்டார் . 1. இனி உன்னைப்பார்க்க வந்தேன் நான் ஒரு அப்பனுக்கு பொறக்கலை  என அவரிடம் பல்லைக்கடித்து பேசும் இடம்  2. பின் பாதியில் ஹீரோயினைப்பார்க்க காலேஜில் காம்பவுண்ட் ஏறிக்குதிக்கையில் மாட்டி யார் என விசாரிக்கப்படுகையில் தான் ஒரு திருடன் என சமாளிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடிக்காட்சிகளும் தமிழுக்கு புதுசு  3 . அருமையான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பிரமாதமான ஜாலியான எப்பிசோடாக வரும் முன் பாதி திரைக்கதைக்கும், பின் பாதி குழப்படி திரைக்கதைக்கும் சமப்ந்தமே இல்லை . ஏன் இந்த தேவை இல்லாத வேலை ? 


2. காலேஜ் சேர்மேனாக வருபவர் எப்படி தொகுதி மக்களைக்கவர்ந்து கட்சி ஆரம்பிக்கும் அளவு பெரிய ஆளாக முடியும் ? 


3. தனுஷ் எப்படி திடீர் என  கட்சியில் செல்வாக்கு பெறுகிறார்? அவர் என்ன நாஞ்சில் சம்பத்தா? பரிதி இளம் வழுதியா? 



4. ஹீரோயின் ஹீரோ கிட்டே “ நீ ஜெயிச்சுட்டா உனக்கு உன் கன்னத்துல  முத கிஸ் தர்றேன் கறா . ஆனா ஆல்ரெடி அவ 2 டைம் குடுத்திருக்கா ( நான் எண்ணிட்டே இருந்தேன் ) அது எப்படி? 



5. ஹோலிப்பண்டிகை கொண்டாட்ட காட்சியில் ஊரே முகத்தில் கலர்ப்பொடியோட இருக்கு, ஹீரோயின் மட்டும் படுக்ளினா  இருக்கே? எப்படி? கூட்டத்துக்கு நடுவே தான் நிக்குது 



6. ஹீரோ “ டூயட் பட வசனமான சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் அப்டினு வைரமுத்து கவிதையை வாசிக்கும் சீனில் பேப்பர்ல ஹிந்தி எழுத்து. ஒண்ணா அதை கட் பண்ணி இருக்கனும், அல்லது  தமிழ்ப்பேப்பர் வெச்சு ஒரு ஷாட் எடுத்திருக்கனும் 



7. ஹீரோயினின் 2 வது காதலன் முஸ்லீம் அல்ல என்பதை ஹீரோதான் கண்டு பிடிக்கனுமா?  ஹீரோயின் பெற்றோர் ஏன் விசாரிக்கலை? இத்தனைக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுது . வீட்டுக்கு போக வர இருந்திருப்பாங்களே? 




8. ஹீரோயினின் 2 வது காதலன் இறந்ததை நேரில் பார்க்கும் ஹீரோ   ஏன் வாமிட் எடுக்கறாரு? முறைப்படி வருத்தப்பட வேண்டிய ஹீரோயினே பெருசா அலட்டிக்கலை. இவரு ஏன் ஓவரா ஃபீல் ஆகறாரு? 



9. ஹீரோயின் ஹீரோ மேல உண்மையான காதலே வைக்கலை. ஹீரோவோட காதலை யூஸ் பண்ணிக்கறாரு. அதனாலேயே ஆடியன்சால அவங்க காதல் கதைல லயிப்பு வர்லை 



10. கூட்டத்தில் நடக்கும் வெடிகுண்டு காட்சிகள் , பெரிய அரசியல் தலைவி ஹீரோயினுடன் பேச வருவது எல்லாம் படு செயற்கை 





மனம் கவர்ந்த வசனங்கள்


1. இந்த உலகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் சமம் கிடையாது


2. என்னைக்கு தான் லவ் பண்ற பொண்ணு இன்னொருத்தனை ல்வ் பண்ணுதோ அப்பவே அவனோட லவ் செத்துடும்


3. இதுவரை எந்த ஆணும் உணர வைக்காத புது உணர்வை எனக்கு உணர வெச்சான்.அதை அவனுக்கு உணர வைக்கனும் னு நினைக்கறேன்


4. புதுசா எது வந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு அது பின்னால ஓடறதுதான் நம்ம பழக்கம்


5. நான் ரத்தம் சிந்தறேன்.நீ கண்ணீர் சிந்தறே.ஆனா நமக்குள்ளே காதல் நடக்கவே இல்லை.விசித்திரமா இல்ல?


6.  பிகரை கரெக்ட் பண்ண 2 வழி 


.1.கடின உழைப்பு.விடாம அவ பின் சுத்துவது

 2 அவளை பயமுறுத்துவது


7. தொழுது கொண்டிருப்பது என்னவோ நீ தான்.ஆனால் இறைவன் வரம் கொடுத்தது என்னவோ எனக்குத்தான்



8. ஒரு பொண்ணாலயும் ஒரு ராக்கெட்டாலயும் தான் நம்மை எந்த உயரத்துக்கும் கூட்டிட்டுபோக முடியும்



9.ஏய்.. உன் பேரையாவது சொல்லிட்டுப்போ .


 நாளைக்கு எப்படியும் என் கிட்டே அறை வாங்க வருவே தானே? அப்போ சொல்றேன் 

10  அது லவ்வே இல்லைடா, நான் அப்போ டென் த் படிச்சுட்டு இருந்தேன் 


 நான் மட்டும் லா காலேஜ்லயா படிச்சேன்? 




11. உன்னைப்பார்த்தாலே அந்தப்பொண்ணு சிரிக்குதே ..  ஏன்?


வெட்கம் , சந்தோஷம் 



12.  ஒரு பெண்ணை சராசரி கல்யாணப்பொண்ணா  தயார் பண்ற வீடாத்தான் என் அத்தை  வீடு இருந்தது 



13.  இவன் வீட்ல இல்லைன்னா  வேற எங்கேயும் தேட வேண்டாம் . நேரா ஹாஸ்பிடல் வந்துடுங்க . அங்கே தான் இருப்பான். அடிக்கடி தற்கொலை முயற்சி பண்ணிக்குவான் 


14. என் மேல தப்பு இருந்தப்பவே  எங்க அப்பா கிட்டே கூட சாரி கேட்டதில்லை. இப்போ என் மேல தப்பும் இல்லை, நீ என் அப்பாவும் இல்லை , உன் கிட்டே ஏன் நான் சாரி கேட்கனும் ? 



15. இப்போ இருப்பது 2 வகை அரசியல் தான் 

1. இருக்கும் ஆட்சியை சதி பண்ணி கவுத்துட்டு புது கட்சி ஆட்சி அமைப்பது 


2. புது அரசியல் கட்சி ஆரம்பிப்பது 



16. சவால்களை எல்லாம் தாண்டி ஜெயிப்பவனே தலைவன் 



17. நான் வாழ்க்கைல கத்துக்கிட்ட பாடம் - பொண்ணுங்களை நம்பி எப்பவும் எந்தக்காரியத்திலும் இறங்கக்கூடாது


18. கரைல நின்னுக்கிட்டே முத்தை எடுக்க முடியாது 


19. இங்கே இருக்கும் சாமியார்கள் எல்லாரும் பாவிகள் . ஏதாவது தப்பைப்பண்ணிட்டு வந்து இங்கே ( காசியில் ) ஒளிஞ்சிக்கறாங்க 



20. நாம செஞ்ச பாவத்தை கங்கையாலயோ , கண்ணீராலயோ கழுவிட முடியாது



21.  தம்பி, நீ யாரு? இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? 


 நான் ஒரு திருடன் , திருட வந்திருக்கேன் 


22.  இந்த தேசத்துல தலைவருக்கு பஞ்சம் ,ம் என்னை மாதிரி மாக்கான் சொல்றதையே ஜனங்க கேட்கறாங்கன்னா...  





 படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ்

அம்பிகாபதி - முன் பாதி காதல் கலாட்டா,பின் பாதி அய்யய்யோ நான் கிளம்பட்டா?

 ஒரு படத்தை உல்டா அடிச்சா ரீ மேக். பல படங்கள் ல இருந்து உருவி கதம்பமாக்குனா ஓன்மேக் # சினிமா விதி

40% 3 , 30% டார்லிங் டார்லிங் டார்லிங். 30 % புதுப்பேட்டை = அம்பிகாபதி ( ரங்க் தே பசந்தி , மூன்றாம் பிறை ஆங்காங்கே )

ராஞ்ச்சனா ஹிந்தியில் ஹிட் ஆனதில் ஆச்சரியமே இல்லை.ஆனால் தமிழில் அம்பிகாபதி ஹிட் ஆக வாய்ப்பே இல்லை # அவதானிப்பு

ஏ ஆர் ஆர் துள்ளாட்ட இசை பி ஜி எம் பின்றாரு





-ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =40,

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - படம் பார்த்தே ஆகனும்னு அடம் பிடிப்பவங்க இடை வேளை வரை பார்த்துட்டு ஓடியாந்துடுங்க . ஏ ஆர் ஆர்ன் தீவிர ரசிகர்கள் மட்டும் முழுசா பாருங்க  . முன் பாதி ரதி , பின் பாதி பேதி . ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன். 1300 பேர் அமரும் தியேட்டரில் 278 பேர் இருந்தாங்க



a




 




Friday, April 08, 2011

மாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினிமா விமர்சனம்

http://www.indianews365.com/wp-content/uploads/2011/03/DhanushMappillaiMoviewallpapers.jpg


படம் போட்டு முதல் 40 நிமிஷம் விவேக் காமெடி களை கட்டுதுன்னா அதுக்கு இயக்குநரோட பங்களிப்பு மட்டும் அல்ல தனுஷின் விட்டுக்குடுத்தலும் ஒரு முக்கியக்காரணம்...சமீப காலத்துல எந்த ஹீரோவும் இப்படி ஓப்பனிங்க்ல டம்மி ஆனதில்லை....விவேக்கோட டாமினேஷன் தூக்கலாவே இருக்கு... 

படத்தோட கதை என்னன்னு ரஜினியோட மாப்பிள்ளை பார்த்தவங்களுக்கு நல்லாவே தெரியும் என்றாலும்... சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கே... கோடீஸ்வர மாமியார் VS கேடி மாப்ளை ரெண்டு பேரும் விட்டுக்கற சவால்.. சபதம் ,இத்யாதிகள் தான் கதை.. அப்படியே நாடகம் பார்க்கற மாதிரி இருக்கு.

எந்திரன் ரஜினியின் ரோபோ கெட்டப்பில் விவேக்கின் காமெடி செம கலக்கல்.. ஆனால் அவர் தமிழை கடித்துத்துப்புவது கேப்டனின் மேடைப்பேச்சு போல் மகா மட்டம்.

ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியை பற்றி ஒரு பேரா வர்ணிச்சர்லாம்... (எதுக்கு?) ஒரு மொக்கைப்படத்தை 240 லைன் கஷ்டப்பட்டு டைப் பண்றப்ப  ஒரு நல்ல ஃபிகரை 20 லைன் வர்ணிக்கறது தப்பில்லைன்னு ஜொள்ளாயணம் எனும் இதிகாசத்துல இருக்கு...

http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-News/Hansiha-Motwani-at-Mappillai2011-Stills-Mp3-Songs-Release-Date-wallpaper-Mappillai-Movie-Review-Release-Date.jpg
வகையாக வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, வார்ணீஷ் அடிக்கப்பட்ட வருஷம் 16 குஷ்பூவைப்போல முகச்சாயலும்,கனகாம்பரப்பூக்களை அரைத்து எடுக்கப்பட்ட சாற்றில் ஊற வைத்து எடுக்கப்பட்ட கொடை ஆரஞ்சுப்பழ சுளைகளைப்போன்ற உதடுகளும்,வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற உடல் அமைப்பும்,பருத்திப்பஞ்சும்,பஞ்சு மிட்டாய்யும் சேர்ந்தால் வரும் மென்மையைக்கொண்ட கன்னமும்,இரண்டு அடைப்புக்குறிகளை (மேத்ஸ் ஸ்டூடண்ட்டாக்கும்) ஆப்போசிட் டைரக்‌ஷனில் ஃபிட் பண்ணியது போன்ற இடை அழகும் கொண்டவர்.. ( அந்த கர்ச்சீஃப் எடப்பா..)

இந்த மாதிரி அழகு பொம்மையை பார்த்தமா? ரசிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கனும்.. அதை விட்டுட்டு பாப்பாவுக்கு நடிப்பு வருதா? என கேனத்தனமாக கேள்வி கேட்பது  தி மு க , அதிமுக போன்ற திராவிடக்கட்சிகளிடம் நேர்மையான ஆட்சியை எதிர்பார்ப்பது போல... 

ஹன்சிகா மினிமம் 5 வருஷம் மார்க்கட் பிடிச்சிடுவார் என “ தாராளமா “ எதிர்பார்க்கலாம்.. ஆனால் அவர் பாடல் காட்சிகளில் லோ ஹிப் காட்டும் சீன்கள் அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிய தேவை இல்லை.. 

ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சி என்பது தி மு கவின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் மாதிரி கமுக்கமா இருக்கனும்.. ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் ஜெயாவின் ஊழல் மாதிரி ரொம்ப பட்டவர்த்த்னமாய் எக்ஸ்போஸ் செய்வது அழகியல் ரசனையை மலிவாக்கி விடுகிறது..


சரி.. அடுத்த கட்டத்துக்கு போலாம்.. மணீஷா கொய்ராலா... மாமியாராக ஸ்ரீவித்யா காட்டிய கம்பீரம்,ஆணவம்,மிடுக்கு இவற்றில் 25% கூட இவர் காட்டவில்லை.. கழுத்துக்கு மேலே திறமையை காட்டுங்க என இயக்குநர் சொன்னால் இவர் உல்டாவாக ........ 
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/01/manisha-koirala06.jpg
இவருக்குப்போடப்பட்ட அதீத மேக்கப் இவரது முதுமையை மறைத்து விடும் என ஒப்பனை அலங்கார நிபுணரோ,ஒளிப்பதிவாளரோ நினைத்தால் அது அறிவீனம்,,

தனுஷின் நடிப்பு எப்பவும் போல் கன கச்சிதம்.. கடவுள் பக்தி மிக்கவராக பம்மும்போதும் சரி.. ரவுடியாக வந்து அலப்பறை பண்ணும்போதும் சரி கலக்கலான நடிப்பு... 

காமெடியில் களை கட்டிய வசனங்கள்

1. விவேக் - இவ்வளவு பேர் அடிக்க வருவாங்கன்னு சொல்லவே இல்ல..?

பாஸ்.. சொன்னா நீங்க ஓடிடுவீங்களே..?

2. விவேக் - அடியாளுங்க எல்லாம் ஷகீலா  கை  சைஸ்க்கு இருப்பாங்கன்னு பார்த்தா ஷகீலா சைஸ்க்கே இருக்கானுங்களே..?

3. விவேக் - நான் பஞ்ச் டயலாக் பேசக்கூடாதா? ஏண்டா..?

பாஸ்.. அடி கொடுக்கிறவன் தான் பஞ்ச் டயலாக் பேசனும்.. அடி வாங்கறவன் பேசக்கூடாது...

விவேக் - எனக்கு எதிரிங்க வெளில எங்கேயும் இல்லடா.. கூடவே தான் இருக்காங்க.

4.  பாஸ்.. வாங்க ஓடிடலாம்..

விவேக் - டேய்.. ஓடுனா துரத்தி துரத்தி அடிப்பாங்க..அதனால நின்னு அடி வாங்கிக்கலாம்.. அவனுங்க அடிச்சு களைச்சுப்போன பின்னாடி நைஸா ஓடிடலாம்.. 



http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/03/mappillai-film-hansika-motwani-cute-photos.jpg
5. விவேக் - பெத்த பையன் அடி வாங்கிட்டு வந்து நிக்கறான்.. காப்பாத்தாம பார்த்துட்டு இருக்கியே .. நீ எல்லாம் ஒரு அப்பனா?

அன்னைக்கு ஒரு நாள் நீ 10 வயசுப்பொடியன் கிட்டே அடி வாங்கிட்டு வந்து நின்னப்ப.. உன் கூட வந்து அவனை அடிச்சப்போ அவனோட அப்பா என்னை துவைச்சு எடுத்தானே.. அதை நீ வேடிக்கைதானே பார்த்துட்டு இருந்தே..?

6.  ச்சே... நீ எனக்குப்பிறந்தவந்தானா..?

விவேக் - டாடி.. அதே டவுட் மைல்டா எனக்கும் இருக்கு.. 

7. பாஸ்... அந்த சேட்டு வீட்டு ஃபிகர் செமயா இருக்கே.. கணக்கு பண்ணிடலாமா?

விவேக் - உனக்கு பானி பூரி வேணும்கறதுக்காக பாழடைஞ்ச பூமியை என்  தலைல கட்டப்பார்க்குறியாடா.. அடப்பாவி... 


8. பாஸ். அதோ வர்றாளே.. ரேகா.. அவ எப்படி..?

விவேக்- டென்னிஸ் கோர்ட்டுடா.. பாவம் ரொம்ப வீக்கா இருக்காடா.. 


9. விவேக் -டேய்.. திடீர்னு தென்றல் காத்து ஸ்பீடா அடிக்குது.. மழை வர்ற மாதிரி இருக்கு.. பூக்கள் எல்லாம் அப்பிடிக்கா,இப்படிக்கா பறக்குது.. இந்த சமிக்ஞைகள் எல்லாம் என்னடா சொல்லுது..? ஹீரோயின் இப்போ வரப்போறான்னு சொல்லுதுடா... 

10.  பாஸ்.. அந்த ஃபிகரைப்பார்க்க  நாங்களும் கூட வந்தா உங்களுக்கு போட்டி ஆகிடுவமே..?

விவேக் - அப்படி யாரும் போட்டிக்கு வந்துடக்கூடாதுன்னு தாண்டா உங்களைக்கூட வெச்சிருக்கேன்.. 

11. டேய்.. தண்டச்சோறு.. இந்த ஸ்கூட்டரை சர்வீஸ்க்கு விட்டுட்டு வாடா..

விவேக் - டாடி.. இந்த வண்டியை சர்வீஸ்க்கு விட முடியாது,..சமாதில வேணா விடலாம்.. 

12.  இந்தத்தம்பியை ஒரு நாள் கூட குளிக்காம பார்த்ததே இல்லை..உன்னை..? ஒரு நாள் கூட குளிச்சுப்பார்த்ததே இல்லை.. 

13.விவேக் -   நான் மனித வெடி குண்டா மாறப்போறேன்.

முதல்ல மனுஷனா மாறுங்கடா.. 

14.  அண்ணா.. 

விவேக் - டேய்.. நான் யூத் தான்.. பேர் சொல்லியே கூப்பிடலாம்.. 

15. விவேக் - எனக்கு என்ன வருத்தம்னா நம்மைப்பெத்தவங்கதான் மதிக்கலைன்னா ,மத்ததுங்களும் மதிக்கலையேன்னுதான்...

16.  விவேக் - ஹூம்.. அடிக்கு அடி.. ரத்தத்துக்கு ரத்தம்...

அடுத்த லைன் பித்தத்துக்கு பித்தமா பாஸ்... ?

17.  விவேக் - பணக்காரப்பெண்ணை லவ் பண்ண நான் என்ன பண்ணனும்? என் லைஃப் ஸ்டைலை மாத்தனுமா?

முதல்ல உன் ஹேர் ஸ்டைலை மாத்து... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/hansika.jpg

--
18.  இந்தப்பொண்ணு எப்படி இருக்கு..? பேரு ரீட்டா..

விவேக் - இப்படி கும்முன்னு இருக்கே..? அவங்கப்பன் சேட்டா..?

19. விவேக் -  இந்த லவ் லெட்டரை அந்த பொண்ணு கிட்டே போய் குடு... 

இதை நீங்களே கொண்டு போய் கொடுக்க வேண்டியதுதானே..? 

அந்த அளவு தைரியம் இருந்தா அவர் ஏன் உன்னை கெஞ்சிட்டு இருக்காரு..?

20..விவேக் -  அய்யய்யோ.. அது யார்டா.. சரவணன் சைடுல 4 பேர் சரவண பவன் மேனேஜர் சைஸ்க்கு வர்றானுங்களே....

21. விவேக் -  என்னை மாதிரி ஒரு டீசண்ட்டான பையனை ஒரு பொண்ணு சுத்தறதுல என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என்ன முறைக்கறீங்க..? சரி .. சுமாரான பையனை.... 

22.  இங்கே பாருங்க.. என்னை கம்ப்பெல் பண்ணாதீங்க.. உங்களை எனக்கு பிடிக்கலை.. ஒரு பொண்ணை பார்த்ததுமே பிடிக்கனும்.. பார்க்க பார்க்க பிடிக்கக்கூடாது.. 

23. விவேக் -  இன்னைக்கு வேணும்னா  அவன் அவ மனசை கவர்ந்திருக்கலாம்.. ஆனா நாளைக்கு அவ என்னோட ஆளாத்தாண்டா இருப்பா... 

பாஸ்.. அப்போ நாளான்னைக்கு..? 

விவேக் -  நக்கலு..?


24.  நிறுத்துங்க.. அடிச்சது போதும்.. லெட்டர் குடுத்த எனக்கே இவ்வளவு அடின்னா லெட்டரை குடுக்க சொன்னவர் கைல கிடைச்சா என்ன பண்ணு வீங்களோ..?

25.. பொதுவா பசங்களைப்பார்த்தா நல்லவனுங்க மாதிரிதான் தோணும்.. ஆனா பழகிப்பார்த்தாதான்.. கெட்டவங்கன்னு தெரியும்.. 

26. விவேக் -  தயவு செய்து பாடித்தொலைச்சுடாதே.. பொண்ணு பாடி (BODY)ஆகிடும்.
27.  கடவுள் இருக்கார்.. எங்க காதலை அவர் சேர்த்து வைப்பார்..

விவேக் - ஏண்டா.. கடவுளுக்கு வேற வேலை இல்லையாடா.. அப்படி காப்பாத்தப்போறதா உனக்கு எஸ் எம் எஸ் பண்ணுனாராடா..?

28. என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு..

 என்னடா பாட்ஷா பில்டப்பாடா.. எத்தனை பேர் வேணும்னாலும் வெச்சுக்கோடா..


http://buzz.faabo.com/wp-content/uploads/hansika-motwani-boobs.jpg
29.  பாஸ்.. அப்புறம்?

விவேக் -ம்.. விடிஞ்சுது..

கிழிஞ்சுது.. 

30.  நீங்க பார்க்க கேவலமானவரா இருந்தாலும் உங்க காதல் கேவலமானதா இல்லை.. 

31.விவேக் -  என்னது? பேபி ஃபார்ம் ஆகிடுச்சா..? என்னடா சைக்ளோன் ஃபார்ம் ஆன மாதிரி சொல்றே?நேத்து நைட் தானேடா அவளை ரேப் பண்னுனே.. அதுக்குள்ள உண்டாளாகிட்டாளாடா?

ஆமா.. அதுவும் ட்வின்ஸ்..

32..விவேக் -  டாடி.. நீ ரொம்ப கெட்டவன்.. நேத்து எதுக்கு மம்மி ரூம்க்கு போனே..?

டேய்.. புக்கை மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்.. அதை எடுக்கப்போனேன்.. 

விவேக் - நான் அதைக்கேட்கலை டாட்.. மம்மியோட மம்மி வீட்டுக்கு எதுக்குப்போனே..?

33. விவேக் -  வாடா.. கறுப்பு சிவாஜி... 

34. ஹீரோயின் - டியர்.. பேசலாம் கொஞ்ச நேரம்.. 

இது என்ன பட்டி மன்றமா?ஃபர்ஸ்ட் நைட் ரூமா..? ஏம்மா..

35..விவேக் -  என் கைல பேலன்சே இல்லை.. பேலஸா?

36. விவேக் - ஹா ஹா.. நாங்க எல்லாம் பாய்சன் கிடைச்சாலே அதை பாயாசம் மாதிரி குடிக்கற ஆளுங்க.. பாயாசம் கிடைச்சா கேட்கனுமா?

37. மனோபாலா - நான் சாமியார்,, சினிமா படம் பார்க்கறதில்லை... 

பரவால்லை.. இது சீன் படம் தான்.. பார்க்கலாம்.. அதுவும் நீ நடிச்சதுதான்.. 

38. விவேக் -  என் கூட சம்பந்தம் வெச்சுக்க ஒரே சிங்க்கிற்கு மட்டும் தான் தகுதி இருக்கு.. 

யார் அது? ஹர்பஜன் சிங்கா?

விவேக் - ம்ஹூம்.. மன்மோகன் சிங்க்.. 


39. விவேக் - ஓடற பஸ்ல ஒன் ருப்பி காய்ன் விழுந்தாலே நாங்க ஓடிப்போய் எடுப்போம். 1000 ரூபா மிஸ் ஆச்சுன்னா சும்மா இருந்துடுவோமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid6caEENcOFYbq1WxaTdxg7kexpsZDSw6-tAiDfjDMzEC8gwgvk9AqoxQxoIhF4trFhgB8p98qTcO7HMBoRawdRiHubMgNJJB8C2gqJ4QYIV1jyfqcssYIphlx8r6MU5odOk0qz57XZcWx/
மணீஷா கொய்ராலா பேசும் பஞ்ச் டயலாக்ஸ்

1.  என் முன்னால காலை ஆட்ற மாப்ளையை விட என் பின்னால கையை கட்டி நிக்கற மாப்ளையைத்தான் எனக்கு பிடிக்கும்.. ( அய்யய்யோ..அப்போ குடித்தனம் பண்ணப்போறது உங்க பொண்ணு இல்ல்லையா?)

2. சுகர் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படறதும், வீட்டோட இருக்கற மாப்ளை மரியாதையை எதிர்பார்க்கரதும் ஒண்ணுதான்... 

3. ஆள்றவன் மாப்ளையா வரக்கூடாது.. அடங்கறவன் தான் மாப்ளையா வரனும்.. ( அப்போ சுடுகாட்டுக்குத்தான் நீ போகனும்.. அங்கே தான் அடங்குனவன் அடக்கமானவன் இருப்பான்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4t6ob28a-cR988arox4CD5oJjDJz0b7364LUTbB8XfYGkS9L_DSrJ1XkbWWnlq0NnYPOtDyMos06fAPzc1IM8ZUzxahs7Sxg_dRxisvecRdhPvh4w0JO_VwCMo0q3TYelQvjII5xMmi4/s320/Hansika+cute+in+pink+and+blue.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள்

1. லாஜிக் லாஜிக்னு சொல்வாங்களே.. அதை எல்லாம் நீங்க கண்டுக்கவே மாட்டீங்களா?

2. கோயில் சிலை மாதிரி இருக்கற ஃபிகரு குப்பை அள்ளறவன் மாதிரி இருக்கறவனை  துரத்தி துரத்தி லவ் பண்ணுவாளா?

3.மனைவின்னு நினைச்சு மாமியாரை மாப்பிள்ளை கட்டி அணைத்து தூக்குவது காமெடியா?

4. ஓப்பனிங்க் சாங்க்ல என்னதான் டான்ஸ்னாலும் இந்து தெய்வங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு அப்படி ஸ்டெப் போட்டு கேவலப்படுத்தலாமா?

5. கிட்டத்தட்ட 50 வயசான மாமியார் இப்படித்தான் சேலை, ஜாக்கெட் போடுவாங்களா? (இதுல ரொம்ப லோ யு நெக் வேற)

6. கல்யாணமான புதுப்பொண்ணு எப்பவும் பிரா மாதிரி மாடல்ல கை இல்லாத ஜாக்கட்தான் போடுவாங்களா?

7.அவ்வளவு பெரிய கோடீஸ்வரி லூஸ்தனமா ஏமாறுவாளா?

விவேக் ஆரம்ப காட்சிகளில் இடது காலில் ஒரு கலரிலும், வலது காலில் இன்னொரு கலரிலும் ஷூ போட்டு வரும் சீன் செம காமெடி.. அதே போல் அவர் ஹீரோயினைப்பார்த்ததும் “ உன் மேல ஆசைதான்” பாட்டு பேக் டிராப்பில் பாடுவதும் செம.. 

ஆடுபுலி ஆட்டம் ஆடிப்பார்ப்போம் பாட்டு ,ஆத்தாடி அட்றாங்கொய்யால, போன்ற இலக்கிய நயம் மிகுந்த பாடல் வரிகள் அய்யகோ... 

படம் ஏ செண்ட்டரில் ஓடாது.. 25 நாட்கள் ஓடலாம். பி  செண்ட்டரில் 30 நாட்கள். சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே

ஈரோட்டில் அபிராமி தியேட்டரில் பார்த்தேன். இது போக ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரனி தியேட்டரிலும் ஓடுது..

Friday, February 25, 2011

தனுஷ் -ன் சீடன் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVfbRMqgWj9xD4MDhVY1Mpzroyqxfa-ixeM80n9B_RSWyhlenXMLbyhyXAyYu0GzerFfbL3v8sJn1bX51lPuyhpoBWRQ_UytDvnXsFl2T2l0gp7cr7YFNv4vrlUwSLeTV2RcISk0VyNAk/s400/seedan_movie_posters_wallpapers.jpg
திருடா திருடி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் சுப்ரமண்யம் சிவா,தொடர்ந்து 5 படங்கள் ஹிட் கொடுத்த தனுஷ்,தனது 50 வது படம் என்ற லேபிளுடன் ஆர்வமாக இசை அமைத்த தினா என ஓரளவு எதிர்பார்ப்புடன் சென்றால்.......

லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு ஹீரோவுக்கு வீட்டு வேலைக்காரி மேல் லவ்.அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கும்போது ,ஹீரோ - ஹீரோயின் இருவரையும் சேர்த்து வைக்கும் மாமா... சாரி மாமாங்கம் மாமாங்கமாய்  தமிழ் சினிமா ஹீரோக்கள் ஏற்று  நடித்த பூந்தோட்ட காவல்காரனாக தனுஷ் அந்த வேலையை கச்சிதமாக முடிக்க...ஸ் ஸ் அப்பாடா என ரசிகர்கள் எஸ்கேப்...


நான் தெரியாமதான் கேட்கறேன் எந்த ஊர்ல இவ்வளவு அழகா ,சூப்பர் ஃபிகரா வேலைக்காரி இருக்கா? ( சும்மா ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கத்தான் கேட்கறேன்)கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்க்கும் ஹீரோ லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என வேலைக்காரி பின்னால் அலைவது நம்பும்படி இல்லை.அதே போல் ஹீரோயின் கனவில் கண்ட ஆதர்ஷ கணவன் ஹீரோ போலவே இருப்பதால் அவரும் லவ்வுகிறார்.இவர்கள் இருவரும் லவ்வுவதைப்பார்த்து எனக்கு காதல் மீது இருக்கும் மரியாதையே போயிடுச்சு போங்க.

புதுமுகம் ஜெய் கிருஷ்ணா சுத்த வேஸ்ட்.லவ் பண்ணுவாராம்,கையைப்பிடிப்பாராம். அம்மா கிட்டே மட்டும் சொல்ல மாட்டாராம்.அம்மா தாதாவோ,கொடுமைக்காரியோ இல்லை. லாஜிக் ஓட்டை இல்லை லாஜிக் பள்ளமே விழுதே...அவரது நடிப்பு கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பு சரி இல்லாததால் எடுபடவில்லை.

http://mimg.sulekha.com/tamil/seedan/events/seedan-trailer-launch/seedan-trailer-launch-movie-events-stills-pictures00240.jpg
ஹீரோயின்  அனன்யா...குழந்தைத்தனமான முகம்.பாடல் காட்சிகளில் பாவனா +ஜோதிகா .காதல் காட்சிகளில் தேவயானி . பார்ட்டி கிட்டே சொந்த சரக்கு லேது. இயக்குநர்கள் செய்யும் தப்பு என்னன்னா ஒரு பாட்டு சீன் எடுக்கும்போது இப்படி நடிங்கன்னு சொல்லிக்காட்டறதில்லை. இந்தாம்மா குஷி பட டி வி டி, ஜெயம் கொண்டான் பட டி வி டி, இது மாதிரியே டான்ஸ் ஆடனும் என்கிறார்கள். ஹீரோயின்ஸ் என்ன பண்றாங்க ?அதை நெட்டுரு போட்டு வந்து அப்படியே நடிச்சுடறாஙக். அதான் எடுபடறதில்லை.


படத்துல பாராட்டற மாதிரி ரெண்டே அம்சம். 1. டைட்டில் போடறப்ப மெலோடி மியூசிக்கும் அந்த ஓவியம் டிசைன் ஐடியாவும். 2. ஹீரோயின் வெள்ளைப்புடவைல இருக்கறப்ப தனுஷ் மயில் தோகை கொத்தை அவர் மீது வீச அது அப்படியே பரவி தோகை டிசைனாக புடவையில் தங்குவது.கிராஃபிக்ஸ் காட்சிகளில் கூட அழகியல் ரசனையை சிம்ப்பிளாக ஏற்படுத்த முடியும் என நிரூபித்ததற்காக ஒரு சபாஷ் போடலாம்.

முன் பனிக்காலம் பாடல் காட்சியில் ஒளீப்பதிவாளர் உள்ளேன் ஐயா சொல்கிறார். படத்தில். திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதால் முற்பாதியில் 15 நிமிடங்களுக்கு ஒரு பாடல் என கன கச்சிதமாக கணக்கு போட்டு 4 பாடல்கலை போட்டதற்கு ஒரு சபாஷ். ( அப்பாடான்னு ரசிகர்கள் எஸ்கேப்) 


போலிச்சாமியாராக வரும் விவேக் 4 காட்சிகளில் மட்டும் வந்து ஒரே ஒரு காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். இப்படியே போனால் சந்தானம் ரொம்ப சீக்கிரமாக ஓவர் டேக் பண்ணி போயிடுவார் என்பதை விவேக் உணர வேண்டும்.


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/seedan-ananya-2.jpg--

மயில்சாமியின் செல்ஃபோனை லபக்கும் விவேக்  அதை மறைக்க படாத பாடு படும் சீன் மட்டும்தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி.தனுஷ் பாவம் டம்மி கதையில் ஏற்று நடித்த டம்மி கேரக்டர். பாவம் அவர் தான் என்ன பண்ணு வார்?

தனுஷ் வந்து பெரிதாக அந்த குடும்பத்தில் ஏதோ ட்சாதிக்கபோகிறார் என்று பார்த்தால் கோபாலா கோபாலா பட ஆர் பாண்டியராஜன் மாதிரி சமையல் சித்து வேலை செய்து புஷ் ஆகிறார்.

படத்தில் சண்டைக்காட்சிகள், பில்டப் சீன்கள் இல்லை.. அவ்வளவு ஏன் நம்பும்படி கதையோ, சுவராஸ்யமான திரைக்கதையோ இல்லை.

சுஹாசினி ஹீரோவுக்கு அம்மாவாக வருகிறார். ஓவர் மேக்கப்.செயற்கையான சிரிப்பு.( டி வி ரியாலிட்டி ஷோக்களில்  பங்கேற்று  பங்கேற்று அவரது நளினம் காணாமல் போய் செயற்கை வந்து ஒட்டிக்கொண்டது.)
http://www.filmmy.com/images/seedan7.jpg
வசனகர்த்தா மனதை   திருடிய இடங்கள்

1. நாம என்னதான் பக்குவமா சமைச்சாலும் கோயில் பிரசாதம் டேஸ்ட் வர்றதில்லையே.. ஏன்?  ( ஓசி ல சாப்பிட்டதாலயோ?)

2. அம்மாவுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் எந்த இடத்துலயும் நான் செய்ய மாட்டேன் ( கேப்டன் ஜெ பற்றி பேசற மாதிரியே இருக்குப்பா)

3. ஏய்.. ஏன் திடீர்னு தாவணி போட்டுக்கிட்டே..?

ஆம்பளைங்க இருக்கற வீட்ல அடக்க ஒடுக்கமா இருக்கனும்னு தாத்தா சொன்னாரு.. ( அடடா.. இந்த தாத்தாக்களால நமக்கு எவ்வளவு இடஞ்சல்?)

4.   ஏய்....1   4  3   அப்படின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா?

ம் ம் .. வேலை வெட்டி இல்லாத ஆம்பளைங்க பொண்ணுங்களைப்பார்த்தா அப்படி சொல்வாங்களாம்.  ( ஹி ஹி எங்க பார்ட் டைம் ஜாப்பே அதானே...)

5. வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா., அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்.. ( ந்நோ கமெண்ட்ஸ்.. செண்ட்டிமெண்ட் வசனம்)

6. இனி  உன் சோகம் எல்லாம் என்னுடையது..  என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது... ( ஹீரோ அழகா ஒப்பிச்சாருப்பா.. )

7.  சாமி.. கும்பிடறேங்க....

விவேக் - அப்பீட்டாயிக்க நமக....

8.   குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?
9. விவேக்  - டேய்.. ஒரு போலிச்சாமியாரை எவ்வளவுதாண்டா டார்ச்சர் பண்ணூவீங்க..?

10. இன்னும் கொஞ்ச நேரத்துல பாட்டி உங்களைக்கூப்பிடுவா...

என்னது.. பாட்டியா..? ச்சீ

அடச்சே.. ஜோசியம் கேட்க.....

11. பெரிய வாழ்க்கையைக்கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு...

12. நீ சமையல் காரனா? மருத்துவனா?

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

13. எந்த ஒரு பொருளுக்கும் அதனோட ஃஅழகை எடுத்துக்காட்ட ஒரு மாடல்தேவை.

படம் முடியும்போது ஹீரோயின் பாடும் அந்த சோகப்பாட்டைக்கூட சகித்துக்கொள்ளலாம், படம் நெடுக நாடகத்தனமாக நகரும் காட்சிகளைக்கூட மன்னித்து விடலாம்...ஆனால் படம் முடியும்போது தனுஷ் மனிதர் இல்லை பழநி மலை முருகன் என அவரை அவதார புருஷன் ஆக்கும்போதுதான்....


இந்தப்படம் ஏ,  பி,  சி.. ஆகிய 3 செண்ட்டர்களிலும் முறையே  15,  10  , 7  நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37