படம் போட்டு முதல் 40 நிமிஷம் விவேக் காமெடி களை கட்டுதுன்னா அதுக்கு இயக்குநரோட பங்களிப்பு மட்டும் அல்ல தனுஷின் விட்டுக்குடுத்தலும் ஒரு முக்கியக்காரணம்...சமீப காலத்துல எந்த ஹீரோவும் இப்படி ஓப்பனிங்க்ல டம்மி ஆனதில்லை....விவேக்கோட டாமினேஷன் தூக்கலாவே இருக்கு...
படத்தோட கதை என்னன்னு ரஜினியோட மாப்பிள்ளை பார்த்தவங்களுக்கு நல்லாவே தெரியும் என்றாலும்... சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கே... கோடீஸ்வர மாமியார் VS கேடி மாப்ளை ரெண்டு பேரும் விட்டுக்கற சவால்.. சபதம் ,இத்யாதிகள் தான் கதை.. அப்படியே நாடகம் பார்க்கற மாதிரி இருக்கு.
எந்திரன் ரஜினியின் ரோபோ கெட்டப்பில் விவேக்கின் காமெடி செம கலக்கல்.. ஆனால் அவர் தமிழை கடித்துத்துப்புவது கேப்டனின் மேடைப்பேச்சு போல் மகா மட்டம்.
ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியை பற்றி ஒரு பேரா வர்ணிச்சர்லாம்... (எதுக்கு?) ஒரு மொக்கைப்படத்தை 240 லைன் கஷ்டப்பட்டு டைப் பண்றப்ப ஒரு நல்ல ஃபிகரை 20 லைன் வர்ணிக்கறது தப்பில்லைன்னு ஜொள்ளாயணம் எனும் இதிகாசத்துல இருக்கு...
வகையாக வாட்டர் வாஷ் செய்யப்பட்டு, வார்ணீஷ் அடிக்கப்பட்ட வருஷம் 16 குஷ்பூவைப்போல முகச்சாயலும்,கனகாம்பரப்பூக்களை அரைத்து எடுக்கப்பட்ட சாற்றில் ஊற வைத்து எடுக்கப்பட்ட கொடை ஆரஞ்சுப்பழ சுளைகளைப்போன்ற உதடுகளும்,வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற உடல் அமைப்பும்,பருத்திப்பஞ்சும்,பஞ்சு மிட்டாய்யும் சேர்ந்தால் வரும் மென்மையைக்கொண்ட கன்னமும்,இரண்டு அடைப்புக்குறிகளை (மேத்ஸ் ஸ்டூடண்ட்டாக்கும்) ஆப்போசிட் டைரக்ஷனில் ஃபிட் பண்ணியது போன்ற இடை அழகும் கொண்டவர்.. ( அந்த கர்ச்சீஃப் எடப்பா..)
இந்த மாதிரி அழகு பொம்மையை பார்த்தமா? ரசிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கனும்.. அதை விட்டுட்டு பாப்பாவுக்கு நடிப்பு வருதா? என கேனத்தனமாக கேள்வி கேட்பது தி மு க , அதிமுக போன்ற திராவிடக்கட்சிகளிடம் நேர்மையான ஆட்சியை எதிர்பார்ப்பது போல...
ஹன்சிகா மினிமம் 5 வருஷம் மார்க்கட் பிடிச்சிடுவார் என “ தாராளமா “ எதிர்பார்க்கலாம்.. ஆனால் அவர் பாடல் காட்சிகளில் லோ ஹிப் காட்டும் சீன்கள் அவ்வளவு பட்டவர்த்தனமாய் தெரிய தேவை இல்லை..
ஹீரோயின்கள் காட்டும் கவர்ச்சி என்பது தி மு கவின் விஞ்ஞானப்பூர்வ ஊழல் மாதிரி கமுக்கமா இருக்கனும்.. ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் ஜெயாவின் ஊழல் மாதிரி ரொம்ப பட்டவர்த்த்னமாய் எக்ஸ்போஸ் செய்வது அழகியல் ரசனையை மலிவாக்கி விடுகிறது..
சரி.. அடுத்த கட்டத்துக்கு போலாம்.. மணீஷா கொய்ராலா... மாமியாராக ஸ்ரீவித்யா காட்டிய கம்பீரம்,ஆணவம்,மிடுக்கு இவற்றில் 25% கூட இவர் காட்டவில்லை.. கழுத்துக்கு மேலே திறமையை காட்டுங்க என இயக்குநர் சொன்னால் இவர் உல்டாவாக ........
இவருக்குப்போடப்பட்ட அதீத மேக்கப் இவரது முதுமையை மறைத்து விடும் என ஒப்பனை அலங்கார நிபுணரோ,ஒளிப்பதிவாளரோ நினைத்தால் அது அறிவீனம்,,
தனுஷின் நடிப்பு எப்பவும் போல் கன கச்சிதம்.. கடவுள் பக்தி மிக்கவராக பம்மும்போதும் சரி.. ரவுடியாக வந்து அலப்பறை பண்ணும்போதும் சரி கலக்கலான நடிப்பு...
காமெடியில் களை கட்டிய வசனங்கள்
1. விவேக் - இவ்வளவு பேர் அடிக்க வருவாங்கன்னு சொல்லவே இல்ல..?
பாஸ்.. சொன்னா நீங்க ஓடிடுவீங்களே..?
2. விவேக் - அடியாளுங்க எல்லாம் ஷகீலா கை சைஸ்க்கு இருப்பாங்கன்னு பார்த்தா ஷகீலா சைஸ்க்கே இருக்கானுங்களே..?
3. விவேக் - நான் பஞ்ச் டயலாக் பேசக்கூடாதா? ஏண்டா..?
பாஸ்.. அடி கொடுக்கிறவன் தான் பஞ்ச் டயலாக் பேசனும்.. அடி வாங்கறவன் பேசக்கூடாது...
விவேக் - எனக்கு எதிரிங்க வெளில எங்கேயும் இல்லடா.. கூடவே தான் இருக்காங்க.
4. பாஸ்.. வாங்க ஓடிடலாம்..
விவேக் - டேய்.. ஓடுனா துரத்தி துரத்தி அடிப்பாங்க..அதனால நின்னு அடி வாங்கிக்கலாம்.. அவனுங்க அடிச்சு களைச்சுப்போன பின்னாடி நைஸா ஓடிடலாம்..
5. விவேக் - பெத்த பையன் அடி வாங்கிட்டு வந்து நிக்கறான்.. காப்பாத்தாம பார்த்துட்டு இருக்கியே .. நீ எல்லாம் ஒரு அப்பனா?
அன்னைக்கு ஒரு நாள் நீ 10 வயசுப்பொடியன் கிட்டே அடி வாங்கிட்டு வந்து நின்னப்ப.. உன் கூட வந்து அவனை அடிச்சப்போ அவனோட அப்பா என்னை துவைச்சு எடுத்தானே.. அதை நீ வேடிக்கைதானே பார்த்துட்டு இருந்தே..?
6. ச்சே... நீ எனக்குப்பிறந்தவந்தானா..?
விவேக் - டாடி.. அதே டவுட் மைல்டா எனக்கும் இருக்கு..
7. பாஸ்... அந்த சேட்டு வீட்டு ஃபிகர் செமயா இருக்கே.. கணக்கு பண்ணிடலாமா?
விவேக் - உனக்கு பானி பூரி வேணும்கறதுக்காக பாழடைஞ்ச பூமியை என் தலைல கட்டப்பார்க்குறியாடா.. அடப்பாவி...
8. பாஸ். அதோ வர்றாளே.. ரேகா.. அவ எப்படி..?
விவேக்- டென்னிஸ் கோர்ட்டுடா.. பாவம் ரொம்ப வீக்கா இருக்காடா..
9. விவேக் -டேய்.. திடீர்னு தென்றல் காத்து ஸ்பீடா அடிக்குது.. மழை வர்ற மாதிரி இருக்கு.. பூக்கள் எல்லாம் அப்பிடிக்கா,இப்படிக்கா பறக்குது.. இந்த சமிக்ஞைகள் எல்லாம் என்னடா சொல்லுது..? ஹீரோயின் இப்போ வரப்போறான்னு சொல்லுதுடா...
10. பாஸ்.. அந்த ஃபிகரைப்பார்க்க நாங்களும் கூட வந்தா உங்களுக்கு போட்டி ஆகிடுவமே..?
விவேக் - அப்படி யாரும் போட்டிக்கு வந்துடக்கூடாதுன்னு தாண்டா உங்களைக்கூட வெச்சிருக்கேன்..
11. டேய்.. தண்டச்சோறு.. இந்த ஸ்கூட்டரை சர்வீஸ்க்கு விட்டுட்டு வாடா..
விவேக் - டாடி.. இந்த வண்டியை சர்வீஸ்க்கு விட முடியாது,..சமாதில வேணா விடலாம்..
12. இந்தத்தம்பியை ஒரு நாள் கூட குளிக்காம பார்த்ததே இல்லை..உன்னை..? ஒரு நாள் கூட குளிச்சுப்பார்த்ததே இல்லை..
13.விவேக் - நான் மனித வெடி குண்டா மாறப்போறேன்.
முதல்ல மனுஷனா மாறுங்கடா..
14. அண்ணா..
விவேக் - டேய்.. நான் யூத் தான்.. பேர் சொல்லியே கூப்பிடலாம்..
15. விவேக் - எனக்கு என்ன வருத்தம்னா நம்மைப்பெத்தவங்கதான் மதிக்கலைன்னா ,மத்ததுங்களும் மதிக்கலையேன்னுதான்...
16. விவேக் - ஹூம்.. அடிக்கு அடி.. ரத்தத்துக்கு ரத்தம்...
அடுத்த லைன் பித்தத்துக்கு பித்தமா பாஸ்... ?
17. விவேக் - பணக்காரப்பெண்ணை லவ் பண்ண நான் என்ன பண்ணனும்? என் லைஃப் ஸ்டைலை மாத்தனுமா?
முதல்ல உன் ஹேர் ஸ்டைலை மாத்து...
-- 18. இந்தப்பொண்ணு எப்படி இருக்கு..? பேரு ரீட்டா..
விவேக் - இப்படி கும்முன்னு இருக்கே..? அவங்கப்பன் சேட்டா..?
19. விவேக் - இந்த லவ் லெட்டரை அந்த பொண்ணு கிட்டே போய் குடு...
இதை நீங்களே கொண்டு போய் கொடுக்க வேண்டியதுதானே..?
அந்த அளவு தைரியம் இருந்தா அவர் ஏன் உன்னை கெஞ்சிட்டு இருக்காரு..?
20..விவேக் - அய்யய்யோ.. அது யார்டா.. சரவணன் சைடுல 4 பேர் சரவண பவன் மேனேஜர் சைஸ்க்கு வர்றானுங்களே....
21. விவேக் - என்னை மாதிரி ஒரு டீசண்ட்டான பையனை ஒரு பொண்ணு சுத்தறதுல என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என்ன முறைக்கறீங்க..? சரி .. சுமாரான பையனை....
22. இங்கே பாருங்க.. என்னை கம்ப்பெல் பண்ணாதீங்க.. உங்களை எனக்கு பிடிக்கலை.. ஒரு பொண்ணை பார்த்ததுமே பிடிக்கனும்.. பார்க்க பார்க்க பிடிக்கக்கூடாது..
23. விவேக் - இன்னைக்கு வேணும்னா அவன் அவ மனசை கவர்ந்திருக்கலாம்.. ஆனா நாளைக்கு அவ என்னோட ஆளாத்தாண்டா இருப்பா...
பாஸ்.. அப்போ நாளான்னைக்கு..?
விவேக் - நக்கலு..?
24. நிறுத்துங்க.. அடிச்சது போதும்.. லெட்டர் குடுத்த எனக்கே இவ்வளவு அடின்னா லெட்டரை குடுக்க சொன்னவர் கைல கிடைச்சா என்ன பண்ணு வீங்களோ..?
25.. பொதுவா பசங்களைப்பார்த்தா நல்லவனுங்க மாதிரிதான் தோணும்.. ஆனா பழகிப்பார்த்தாதான்.. கெட்டவங்கன்னு தெரியும்..
26. விவேக் - தயவு செய்து பாடித்தொலைச்சுடாதே.. பொண்ணு பாடி (BODY)ஆகிடும்.
27. கடவுள் இருக்கார்.. எங்க காதலை அவர் சேர்த்து வைப்பார்..
விவேக் - ஏண்டா.. கடவுளுக்கு வேற வேலை இல்லையாடா.. அப்படி காப்பாத்தப்போறதா உனக்கு எஸ் எம் எஸ் பண்ணுனாராடா..?
28. என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேர் இருக்கு..
என்னடா பாட்ஷா பில்டப்பாடா.. எத்தனை பேர் வேணும்னாலும் வெச்சுக்கோடா..
29. பாஸ்.. அப்புறம்?
விவேக் -ம்.. விடிஞ்சுது..
கிழிஞ்சுது..
30. நீங்க பார்க்க கேவலமானவரா இருந்தாலும் உங்க காதல் கேவலமானதா இல்லை..
31.விவேக் - என்னது? பேபி ஃபார்ம் ஆகிடுச்சா..? என்னடா சைக்ளோன் ஃபார்ம் ஆன மாதிரி சொல்றே?நேத்து நைட் தானேடா அவளை ரேப் பண்னுனே.. அதுக்குள்ள உண்டாளாகிட்டாளாடா?
ஆமா.. அதுவும் ட்வின்ஸ்..
32..விவேக் - டாடி.. நீ ரொம்ப கெட்டவன்.. நேத்து எதுக்கு மம்மி ரூம்க்கு போனே..?
டேய்.. புக்கை மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்.. அதை எடுக்கப்போனேன்..
விவேக் - நான் அதைக்கேட்கலை டாட்.. மம்மியோட மம்மி வீட்டுக்கு எதுக்குப்போனே..?
33. விவேக் - வாடா.. கறுப்பு சிவாஜி...
34. ஹீரோயின் - டியர்.. பேசலாம் கொஞ்ச நேரம்..
இது என்ன பட்டி மன்றமா?ஃபர்ஸ்ட் நைட் ரூமா..? ஏம்மா..
35..விவேக் - என் கைல பேலன்சே இல்லை.. பேலஸா?
36. விவேக் - ஹா ஹா.. நாங்க எல்லாம் பாய்சன் கிடைச்சாலே அதை பாயாசம் மாதிரி குடிக்கற ஆளுங்க.. பாயாசம் கிடைச்சா கேட்கனுமா?
37. மனோபாலா - நான் சாமியார்,, சினிமா படம் பார்க்கறதில்லை...
பரவால்லை.. இது சீன் படம் தான்.. பார்க்கலாம்.. அதுவும் நீ நடிச்சதுதான்..
38. விவேக் - என் கூட சம்பந்தம் வெச்சுக்க ஒரே சிங்க்கிற்கு மட்டும் தான் தகுதி இருக்கு..
யார் அது? ஹர்பஜன் சிங்கா?
விவேக் - ம்ஹூம்.. மன்மோகன் சிங்க்..
39. விவேக் - ஓடற பஸ்ல ஒன் ருப்பி காய்ன் விழுந்தாலே நாங்க ஓடிப்போய் எடுப்போம். 1000 ரூபா மிஸ் ஆச்சுன்னா சும்மா இருந்துடுவோமா?
மணீஷா கொய்ராலா பேசும் பஞ்ச் டயலாக்ஸ்
1. என் முன்னால காலை ஆட்ற மாப்ளையை விட என் பின்னால கையை கட்டி நிக்கற மாப்ளையைத்தான் எனக்கு பிடிக்கும்.. ( அய்யய்யோ..அப்போ குடித்தனம் பண்ணப்போறது உங்க பொண்ணு இல்ல்லையா?)
2. சுகர் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படறதும், வீட்டோட இருக்கற மாப்ளை மரியாதையை எதிர்பார்க்கரதும் ஒண்ணுதான்...
3. ஆள்றவன் மாப்ளையா வரக்கூடாது.. அடங்கறவன் தான் மாப்ளையா வரனும்.. ( அப்போ சுடுகாட்டுக்குத்தான் நீ போகனும்.. அங்கே தான் அடங்குனவன் அடக்கமானவன் இருப்பான்)
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. லாஜிக் லாஜிக்னு சொல்வாங்களே.. அதை எல்லாம் நீங்க கண்டுக்கவே மாட்டீங்களா?
2. கோயில் சிலை மாதிரி இருக்கற ஃபிகரு குப்பை அள்ளறவன் மாதிரி இருக்கறவனை துரத்தி துரத்தி லவ் பண்ணுவாளா?
3.மனைவின்னு நினைச்சு மாமியாரை மாப்பிள்ளை கட்டி அணைத்து தூக்குவது காமெடியா?
4. ஓப்பனிங்க் சாங்க்ல என்னதான் டான்ஸ்னாலும் இந்து தெய்வங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு அப்படி ஸ்டெப் போட்டு கேவலப்படுத்தலாமா?
5. கிட்டத்தட்ட 50 வயசான மாமியார் இப்படித்தான் சேலை, ஜாக்கெட் போடுவாங்களா? (இதுல ரொம்ப லோ யு நெக் வேற)
6. கல்யாணமான புதுப்பொண்ணு எப்பவும் பிரா மாதிரி மாடல்ல கை இல்லாத ஜாக்கட்தான் போடுவாங்களா?
7.அவ்வளவு பெரிய கோடீஸ்வரி லூஸ்தனமா ஏமாறுவாளா?
விவேக் ஆரம்ப காட்சிகளில் இடது காலில் ஒரு கலரிலும், வலது காலில் இன்னொரு கலரிலும் ஷூ போட்டு வரும் சீன் செம காமெடி.. அதே போல் அவர் ஹீரோயினைப்பார்த்ததும் “ உன் மேல ஆசைதான்” பாட்டு பேக் டிராப்பில் பாடுவதும் செம..
ஆடுபுலி ஆட்டம் ஆடிப்பார்ப்போம் பாட்டு ,ஆத்தாடி அட்றாங்கொய்யால, போன்ற இலக்கிய நயம் மிகுந்த பாடல் வரிகள் அய்யகோ...
படம் ஏ செண்ட்டரில் ஓடாது.. 25 நாட்கள் ஓடலாம். பி செண்ட்டரில் 30 நாட்கள். சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடும்.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே
ஈரோட்டில் அபிராமி தியேட்டரில் பார்த்தேன். இது போக ஆனூர்,ஸ்ரீனிவசா,அன்னபூரனி தியேட்டரிலும் ஓடுது..