ஸ்பாய்லர் அல்ர்ட்
நாயகனின் அப்பா பெரிய தொழில் அதிபர் கம் கோடீஸ்வரர். ஆனால் அவருக்கு ஒரு தீர்க்க முடியாத வியாதி இருக்கிறது. அவர் இன்னும் இரண்டு மாதங்களில் இறக்கப்போகிறார். அவருக்குப்பிற்கு அவரது ஒரே மகனான நாயகன் தான் கம்பெனிக்கு தலைமைப்பொறுப்பு ஏற்க இருக்கிறார். நாயகனின் அப்பா தன் பிறந்த நாள் விழாவில் இந்த கம்பெனியின் பங்குகள் சரி சமமாக தொழிலாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என அறிவிக்கிறார். அதன்படி அனைத்து தொழிலாளர்களும் முதலாளளிகள்
வில்லன் ஒரு தொழில் அதிபர், அவருக்கும் ஒரு மகன் . வில்லனுக்கு நாயகனின் கம்பெனியை அபகரிக்க திட்டம் போடுகிறார். தன் பெயருக்கு கம்பெனியை எழுதி வைக்கும்படி மிரட்டுகிறார்
நாயகி ஒரு வேலை இல்லாத இளைஞனைக்கண்டதும் காதல் வசப்படுகிறார், நாயகியின் அப்பா தன் மகளுக்கு ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளையை வரன் பார்த்து வைத்திருக்கிறார். நாயகியை அழைத்து அவனை அறிமுகப்படுத்துகிறார். பார்த்தால் உருவ அமைப்பில் நாயகி காதலித்த நபரும் , அப்பா காட்டிய மாப்பிள்ளையும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் ., ஒருவர் தொழில் அதிபர் , இன்னிருவர் ஏழை . இந்த விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்கிறார். நாயகியின் அம்மாவோ நி இருவரிடமும் பழகிப்பார். யரைப்பிடிக்கிறதோ அவரை திருமணம் செய்து கொள் என்கிறார்
இதற்குப்பின் நாயகி என்ன முடிவு எடுத்தார்? வில்லனின் ஆசை நிறைவேறியதா? என்பதை திரையில் காண்க
நாயகனாக மாஸ் மசாலா ஹீரோ ர்வி தேஜா. இரு வித கெட்டப்பிலு,ம் அசத்துகிறார். ஆக்சன் காட்சிகளில் அநியாயத்துக்கு ஓவர் சாகசம் பண்ணுகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு மசாலா விருந்து படைக்கிறார்
நாயகியாக ஸ்ரீ லீலா அழகிய முகம் , துள்ளும் இளமை , காண்பவரை வசீக்ரிக்கும் புன்னகை என வந்து 4 டூயட்டுக்கு டான்ஸ் ஆடி விட்டு செல்கிறார்
வில்லனாக ஜெயராம் .,இவரை இதுவரை காமெடியனாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பார்த்து பழக்கப்பட்ட நமக்கு வில்லன் ரோலில் பார்க்க புதுசாக இருக்கிறது
நாயகனின் நிஜ பெற்றோர் , வளர்ப்புப்பெற்றோர் அனைவரின் செண்ட்டிமெண்ட் காட்சிகளும் கச்சிதம்
பீம்ஸ் இன் இசையில் 4 டப்பாங்குத்துப்பாடல்கள் ஹிட் அடித்து இருக்கின்றன. எல்லாமே தரை லோக்கல் பாடல்கள் , கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்குக்குளுமை . 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடும் இந்தபடத்தை பிரவின் புடி எடிட் செய்து இருக்கிறார்
ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் எதுவுல் இல்லாமல் நேரடியாக கதை சொல்லி இருக்கிறார்கள் . இது போல ஏகப்பட்ட ஆக்சன் மசாலாப்படங்கள் நாம் பார்த்து விட்டோம், பத்தோடு பதினொன்று , அத்தோடு இதுவும் ஒன்று
2022 டிசம்பர் மாதம் 25 ல் கிறிஸ்துமஸ்க்கு தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது நெட் ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது .
ரசித்த வசனங்கள்
1 மரத்தின் வேர்கள் எந்த அளவு ஆழமா உன்றி இருக்கோ அந்த அளவுக்கு பலமா இருக்கும் , நம் கிரவுண்ட் ஒர்க் எந்த அளவு நல்லா பண்ணி இருக்கோமோ அந்த அளவு வெற்றி இருக்கும்\
2 தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடியாதவன் அரசனாக இருக்க முடியாது
3 ஏழையா இருக்க்றவன் பணத்தேவை இருக்கும், பணக்காரனுக்கு பவர் தேவைப்படும் , இந்த உலகமே பவரை நோக்கித்தான் பயணத்தை ஆரம்பிச்சிருக்கு
4 பேசிக்கிட்டு இருக்கும்போதே எதுக்கு மேன் அவனை அடிச்சே?
அவன் கிட்டே ஒரு வில்லனை பார்த்தேன். எதிராளி கிட்டே வில்லத்தனத்தை பார்த்தா என் கிட்டே ஹீரோயிசம் நீங்க பார்க்க வேண்டி வரும்
5 பலவீனமா இருக்கும் சிங்கத்தின் அமைதியைப்பார்த்து அது வீக்னெஸ்னு நினைக்காதீங்க, அது வயலண்ட்டா மாறுனா தாங்க மாட்டீங்க
6 சிங்கம் பசியா இருக்கும்போது அது வேட்டையை ஆரம்பிக்கும், இது கானக விதி
7 ப்ரப்போஸ் பண்ற பையனுக்கு ஓகே சொல்ல லேட்டானா பரவால்லை, ஆனா நோ அப்படினு சொல்ல லேட் பண்ணக்கூடாது , ஏன்னா நிராகரிப்பின் வலி பல மடங்கு பெரியது
8 இது ஹவுசா? பிக் பாஸ் ஹவுசா? இவ்ளோ ட்ராமா போகுது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 நாயகன் சொந்தப்பெற்றோருடன் ஒரு நாள் , வளர்ப்புப்பெற்றோருடன் ஒரு நாள் என வசிக்கிறார், எதுக்கு அலைச்சல்? ஒரே பங்களாவில் இரு பெற்றோரையும் தங்க வைக்கலாமே?
2 நாயகன் புகழ் பெற்ற தொழில் அதிபர்., மீடியாவில் அவர் ஃபோட்டோ எல்லாம் ஷேர் ஆகி இருக்கும் . அப்படி இருக்கும்போது அதே கெட்டப்பில் வேறு கம்பெனியில் வேலைக்கு போகும்போது அந்த எம் டி க்கு அது தெரியாதா?
3 நாயகனின் அப்பா பெரிய தொழில் அதிபர் . வில்லன் அடிக்கடி மிரட்டுகிறான். போலிசில் புகார் தர மாட்டாரா? படம் முழுக்க ஒரு சீனில் கூட போலீஸே இல்லை
4 வில்லனின் அடியாட்கள் கேஜிஎஃப் ல வர்ற ஹீரோ கைல வெச்சிருக்கும் மெகா சுத்தியல்களோடு அடிக்கிறார்கள் , ஹீரோ ஒரே ஒரு பைக் சைலன்சரை வெச்சு எல்லாரையும் பிளந்து கட்டுகிறார்
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - நல்ல சினிமா பார்க்கும் ரசனை உள்ளவர்கள் தவிர்க்கவும் . மாமூல் மசாலாப்படம்னா பார்ப்பேன் என அடம் பிடிப்பவர்கள் பார்க்கலாம், ரேட்டிங் 2 / 5
Dhamaka | |
---|---|
Directed by | Trinadha Rao Nakkina |
Written by | Prasanna Kumar Bezawada |
Produced by | Abhishek Agarwal T. G. Vishwa Prasad |
Starring | |
Cinematography | Karthik Ghattamaneni |
Edited by | Prawin Pudi |
Music by | Bheems Ceciroleo |
Production companies | People Media Factory Abhishek Agarwal Arts |
Release date | 23 December 2022 |
Running time | 139 minutes |
Country | India |
Language | Telugu |
Budget | ₹40 crore[1] |
Box office | ₹100 crore[2] |