கவித்துவமான டைட்டில்,கல்லூரி கட்டிளங்காளைகளை,கட் அடிக்கும் கன்னிகளை சுண்டி இழுக்கும் போஸ்டர் டிசைன், சப் டைட்டிலாக “இந்தப்படம் பார்த்தாத்தான் நீங்க உங்க காதலியை நிம்மதியா கிஸ் பண்ன முடியும்” எனும் வசீகர வாசகம் இதெல்லாம் தியேட்டரில் ரொம்ப ஈசியாக கூட்டத்தை வர வழைக்கும் டெக்னிக் தான்.. ஆனா.........!!!!!!!
காதலில் சொதப்புவது எப்படி? படத்துல நாகரீகமா, கண்ணியமா சொன்ன அதே ஊடல், காதல் கொண்டாடல், அல்லாடல் மேட்டரை கொஞ்சம் இறங்கி வந்து தரை டிக்கெட் ரேஞ்சுக்கு லோக்கலா சொல்லி இருக்காங்க.. ஐ மீன் சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க..
எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோவும், ஹீரோயினும் ஒரு பஸ்ல பயணம் பண்றாங்க.. ஹீரோ ரொம்ப சுமாரான பையன்.. ஹீரோயின் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் வாங்கற ரொம்ப சுமார் ஃபிகர்.. பார்த்ததும் பத்திக்குச்சு..
2 பேரும் 4 ரீல் லவ் பண்ற நேரத்தை விட கில்மா பண்றதுக்குத்தான் பிளான் போடறாங்க.. ஹீரோயின் வீட்ல மேரேஜ்க்கு ரெடி பண்றாங்க.. வழக்கம் போல 2 பேரும் ஊரை விட்டு எஸ்.. லிவிங்க் டுகெதரா ஒரே வீட்ல வாழ்றாங்க...
2 பேருக்கும் ஏகப்பட்ட கருத்து மோதல்கள்.. சண்டைகள்.. அந்த லவ் ஜோடிங்க பிரபுதேவா - ரம்லத் மாதிரி சேர்ந்தாங்களா? அல்லது பிரபுதேவா -நயன் தாரா மாதிரி புட்டுக்கிட்டாங்களா? என்பது க்ளைமாக்ஸ்.. தில் இருக்கறவங்க கடைசி வரை உக்காந்து பாருங்க..
ஹீரோ ஓரளவு பரவாயில்லை.. சண்டைக்காட்சில அதாவது ஹீரோயின் கூட போடற ஃபைட் சீன்ல நல்லாவே வெறுப்பை காட்றாரு.. ஹீரோயின் எதையும் காட்டலைன்னாலும் ஐ மீன் எந்த உணர்ச்சியையும் காட்டலைன்னாலும் டைரக்டரோட சிச்சுவேஷன் சீன் செட்டிங்கால எஸ்கேப் ஆகிடறார்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. க்ளைமாக்ஸ்-ன் கடைசி 15 நிமிடங்கள் நீட்டாக எடுத்தது
2. டாக்டர் ஷாலினியுடனான காதலர்களின் டிஸ்கஷனில் காதல் வாழ்க்கை தத்துவத்தை எடுத்து சொன்னது
3. கிஸ்சுக்கு ரேஷன் வைத்த ஹீரோயின் பின் அவரே அதை மீற டி வியில் வரும் நியூஸ் வாசிக்கும் சீனில் ஒவ்வொரு சாதா நியூஸ்க்கும் ஒரு கிஸ் வீதம் ஹீரோவுக்கு குடுப்பது
4. படத்தை இடைவேளை வரை இளமையாக கொண்டு போக முயற்சித்தது
5. உன் பேரென்ன தெரியாது, தீண்டாத தீண்டல் அவள் என்னை தீண்டச்சொன்னாளே, பாலோடு தேன் சேர ( கில்மா பாட்டு) என 3 பாடல்களை கேட்கும் விதமாக எடுத்தது
இயக்குநரிடம் கோபமாக சில கேள்விகள்
1. காதலர்கள் லிவ்விங்க் டுகெதர் வாழ்வு வாழ்ந்து பின் மேரேஜ் பண்ணிக்கனும்கற உங்க எண்ணம் நம்ம கலாச்சாரத்துக்கு ஒத்து வராது.. 6 மாசம் ஜோடியா “ஒண்ணா” இருந்துட்டு அப்புரம் பிடிச்சா மேரேஜ் பண்ணிக்கலாம்னா ஊர்ல ஒரு பய மேரேஜே பண்ண மாட்டான்.. 6 மாசத்துக்கு ஒரு தடவை சிம்பு மாதிரி ஆளை மாத்திகிட்டே ரவுண்ட் அடிப்பான்./.
2. சுய எள்ளல் என்பது வடிவேல் மாதிரி காமெடியன்ஸ் பண்ணிக்கலாம்.. ஒரு சொதப்பலான திரைக்கதை வெச்சிருக்கற இயக்குநர் அங்கங்கே தன்னை சுய எள்ளல் பண்ணீக்கிட்டா இருக்கற கொஞ்ச நஞ்ச மதிப்பும் இல்லாம போயிடும்..
3. ஹீரோவும்,ஹீரோயினும் ராத்திரி 9 மணிக்கு அவங்க வீட்டுக்குள்ள ஃபைட்டிங்க்.. அப்போ எப்படி ஹீரோயினோட புராஜக்ட் டேமேஜர் டக்னு உள்ளே வர்றார்? ஒரு காலிங்க் பெல் நோ? ஒரு ஹலோ நோ? திறந்த வீட்ல ராஜபக்சே மாதிரி வர்றாரே? எப்படி?
4. அப்புறம் ஆண்கள் குடிக்கக்கூடாது என்ற உங்க உயர்ந்த நோக்கத்தை பாராட்டறேன்.. ஆனா திருமணங்கள் தோல்விக்கு காரணம் ஆண்கள் குடிப்பதுதான் என்ற வாதத்தை நீங்கள் முன் வைத்த விதம் ரொம்ப தப்பு.. இந்தக்காலத்துல புருஷனுக்கு ஊத்திக்கொடுத்து தக்க வெச்சுக்கற தமிழச்சிங்க இருக்கற நாட்டுல ஹீரோ சரக்கு அடிச்சுட்டாங்கறதுக்காக ஹீரோயின் பிரியற மாதிரி காட்டறது செம தமாஷ்..
5. பொதுவா காதல் மனைவி பிரியற மாதிரி காட்டனும்னா வேறொரு பெண்ணுடன் தொடர்பு,ஈகோ,சந்தேக புத்தி இப்படி ஏதாவது ஸ்ட்ராங்கான ரீசன் வைக்கனும்
6. ஹீரோவும், ஹீரோயினும் ஜாலியா கில்மா பண்ணிட்டாங்க அப்டிங்கற போதே படம் முடிஞ்சுடுதே. இனி அவங்க சேர்ந்தா என்ன? சேரலைன்னா என்ன? ( இதே மாதிரி சீனை செல்வராகவன் 7ஜி ரெயின் போ காலனி-ல க்ளைமாக்ஸ்ல வெச்சார்..நீங்க 7 வது ரீல்லயே வெச்சுட்டீங்க..)
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஏய். வாடி.. காரைக்கால் பீச் ரோட்ல கில்மா டிவிடி இருக்காம்.. போய் அள்ளிக்கிட்டு வந்துடலாம்.. ( அரிய தகவல் ஹி ஹி )
2. ஏண்டி.. பொண்ணுங்க பி எஃப் பார்க்கறது தப்பில்லை?
இதுவரை பார்க்காம இருந்ததுதாண்டி தப்பு
3. நமக்கு கல்யாணம் ஆகி போனா 20 வருஷமா என்னத்தை வளர்த்தி வெச்சிருக்காங்கன்னு மாமனார் வீட்ல கிண்டல் பண்ணுவாங்க.. எதுவுமே தெரியாம இருந்திடக்கூடாது ( ஆஹா நல்ல கொள்கை உலகம் விளங்கிடும்)
4. முத்தம் குடுக்கறதுல இவ்வளவு சுகம் இருக்கறது தெரியாம போச்சுடா.. தெரிஞ்சுருந்தா முதல்லியே நிறையா குடுத்திருப்பேன்
5. சீர் வரிசை வாங்கி பொண்ணு கட்டுனது அந்தக்காலம்.. சீர் வரிசை குடுத்து பொண்ணு கட்டுறது இந்தக்காலம்..
6. இந்த வருஷம் பிளஸ் டூ பாஸ் பண்ணலைன்னா இந்த ஊரை விட்டே ம்ஹும் இந்த உலகத்தை விட்டே ஓடிப்போயிடலாம் ஓக்கே?
7. என்னடா இந்த பொண்ணு இவ்ளவ் டேமேஜா இருக்கு?
டேய்.. சொந்தக்கார்னா சீட் எல்லாம் ஃபிரெஷ்ஷா ஜம்னு இருக்கும்.. வாடகைக்கார்னா கொஞ்சம் கிழிஞ்சுதான் இருக்கும்
8. பொண்ணுங்க வயசுக்கு வந்தா ஊர் கூட்டி ஃபங்க்ஷன் வைக்கறாங்க.. ஆனா பசங்க வயசுக்கு வந்தா கமுக்கமா மறைக்கறாங்க .. ஏன்னா ஊர் கண்ணு பட்டுடக்கூடாதுன்னு தான்
9. ஏய்.. உனக்கு தெரியாதா? லவ்வர்ஸ் இனிமே லிப் டூ லிப் கிஸ் மட்டும் தான் அடிக்கனுமாம்.. கவர்மெண்ட் ஆர்டர் போட்டாச்சு
10. ஏண்டி.. இப்போ பக்கோடா, மிக்சர்ரா சாப்பிடப்போறே? இப்படி வாய திறக்கறே? கிஸ் மூடே போச்..
11. முன் பின் அறிமுகமே இல்லாத 2 பேருக்கு பார்த்த உடனே லவ் வருதுன்னா அவங்க பரஸ்பரம் அதே சாயல்ல ஒருவரை ஆல்ரெடி பார்த்திருப்பாங்க.. பழகி இருப்பாங்க..
12. ஒரு முக்கியமான கண்டிஷன்.. ஒரு வாய்க்கு சாரி ஒரு நாலைக்கு ஒரு கிஸ் தான்
சாரி.. என் வாய்க்கு அது பத்தாதுடி
13. ஏண்டி பல் துலக்கலை?
பல் துலக்காம காபி குடிச்சாத்தான் பொண்ணுங்க அழகா இருப்பாங்க..
14. இந்த எருமைக்கு ஓப்பனிங்க் சாங்கா? இதுக்கு நான் ரயில் தண்டவாளத்துல போய் தலையை குடுத்துக்கலாம்..
15. கிச்சன் ரூம்ல போய் ஏண்டி கதவை சாத்தறே?
சமையல் அறைக்கதவை திறந்து வெச்சு சமையல் செஞ்சா ஊர்க்கண்ணு பாடுடும்.. வாசம் போயிடும்
16. உன் ஆள் எப்படிப்பட்ட கேரக்டர்னு கண்டு பிடிக்க அவன் கிட்டே ஹோட்டல்ல்ல வாங்குன இட்லி பார்சலை குடு
1. காரச்சட்னி, கெட்டிச்சட்னி, சாம்பார்னு எல்லாத்தையும் தொட்டு ப்பொறுமையா சாப்பிட்டான்னா அவ்ளவ் தான்.. அவன் கில்மா பண்றதுக்குள்ள விடிஞ்சுடும்
2. காரச்சட்னியை அதிகமா தொட்டு சாப்பிட்டான்னா அவன் ரொம்ப டேஞ்சர்.. நம்மை புரட்டி எடுத்துடுவான்
3. தொடறதை பற்றி அதிகம் கவலைப்படாம இட்லியை காலி பண்றவன் தான் பெஸ்ட்..
17. செம்பருத்திப்பூவில் மகரந்தச்சேர்க்கை எப்படி நடக்கிறது?
ஹி ஹி நடந்தா கும்முன்னு கலர் சேஞ்ச் வரும்.. நடக்கலைன்னா டல் அடிச்சு இருக்கும்..
18. எந்தக்காதலும் தோக்கக்கூடாது....
19. காதலர்கள் 5 டி பற்றி தெரிஞ்சுக்கனும்
TRUST - ஒருவரை ஒருவர் நம்பனும்
TRUTH - உண்மையா நடந்துக்கனும்
TOLERANCE - சகிப்புத்தன்மை வளர்த்துக்கனும்
TASTE - ரசனை மாறினாலும் ரசிக்க கத்துக்கனும்
TALK - மனம் விட்டுப்பேசனும்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - 1000 அனர்த்தங்களுடன் தலைவலி !!அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்
டிஸ்கி -1 தியேட்டர்ல மொத்தம் 233 காதல் ஜோடிங்க வந்திருந்தாங்க.. அடங்கொய்யால ஊர்ல இத்தனை லவ் ஜோடியா? அதுல பாதி ஃபிகருங்க ஜாதி மல்லிப்பூ தலா 7 முழம் ... விளங்கிடும்யா நாடு ... இந்த எண்ணிக்கயை எப்படி கண்டு பிடிச்சேன்னா மொத்த சீட்டே 522 சீட்ஸ் தான் .. தனியா வந்தவங்களை முதல்ல் எண்ணி டோட்டல் நெம்பர்ல கழிச்சுக்கிட்டேன்
டிஸ்கி 2 - எனக்கு முன் வரிசைல உக்காந்திருந்த ஒரு காதல் ஜோடி 4 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள ஷால் ( குட்டி பெட்ஷீட்) 2 பேரும் போர்த்திக்கிட்டாங்க அடேய் அடேய்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்