Showing posts with label DETECTIVE (MALAYALAM)2007 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) ( எ ஜீத்து ஜோசஃப் ஃபிலிம்). Show all posts
Showing posts with label DETECTIVE (MALAYALAM)2007 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) ( எ ஜீத்து ஜோசஃப் ஃபிலிம்). Show all posts

Friday, October 16, 2020

DETECTIVE (MALAYALAM)2007 - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) ( எ ஜீத்து ஜோசஃப் ஃபிலிம்)


சம்பவம் 1 -  அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக்  இருவரும்   ஒரே  முகச்சாயல்ல  இருந்தா  எப்படி  இருக்கும்? அதான்  இந்தப்பட  ஹீரோக்கள்  இருவரும், அதாவது அப்பாவோட  முதல்  தாரத்துக்குப்பிறந்தவர்  ஒரு டிடெக்டிவ்.  2  வது  அன் அஃபிசியல் தாரத்துக்குப்பிறந்தவர்  ஒரு அரசியல்வாதி . 2  பேருக்கும்  ஆரம்பத்தில் இருந்தே ஆகாது.. இக்ககட்டான  தருணத்தில்  மாட்டிக்கிட்ட  அரசியல்வாதி. டிடெக்டிவ்   அவரை  காப்பாத்துனாரா?  காலை  வாரி விட்டாரா? என்பதுதான்  கதையின்  ஒன் லைன் ஸ்டோரி

சம்பவம் -2 வில்லி   ஒருத்தனை  லவ் பண்றா.  அவன்  சின்சியராதான்  வில்லியை  லவ் பண்றான். ஆனா  வில்லி  எமகாதகி . வருங்காலத்துல  அமைச்சர்  ஆக வாய்ப்பு  உள்ள  ஒருத்தனை  நைசா  லவ் மேரேஜ்  பண்ணிக்கறா. ஆனா  காதலன்  கிட்டே  உண்மையைச்சொல்லலை . வீட்ல வலுக்கட்டாயமா  ஒரு இடத்துல  மாப்ளை  பார்த்துட்டாங்க  , வேற வழி இல்லை  , சாரி  அப்டினு சொல்லிடறா.. 


சம்பவம் 3 -  ஒரு  பங்களா. அங்கே  பெட்ரூம்ல  கதவு உள்  பக்கம்  தாழ்  போடப்பட்டிருக்கு . உள்ளே மேரேஜ்  ஆன  ஒரு லேடி  எலி விஷம்   சாப்ட்டு  இறந்து  கிடக்கு .  அது   தற்கொலைன்னா என்ன  காரணத்துக்காக  அவ அந்த  முடிவை எடுத்தா? கொலைன்னா யார்  எதுக்காக  அதைப்பண்ணி  இருப்பாங்க ?  இந்த  கேசை  டீல்  பண்ண  ஸ்பெஷல்  ஆஃபீசர்  வர்றார்


 மேலே  சொன்ன  3  சம்பவங்களும்  வெவ்வேற  மாதிரி  தெரிஞ்சாலும்  கடைசில  இந்த  3  சம்பவங்களும் எப்படி  ஒரு நேர்கோட்டில்   இணையுது  என்பதுதான்  இந்தப்படத்தின்  திரைக்கதை


ஹீரோவா  டூயல்  ரோல்ல சுரேஷ்  கோபி . நேர்மையான  அரசியல்வாதியா  இவர்  நடிப்பு  கனகச்சிதம். தனக்கு  பதவி  தேடி  வரும்போது  கூட கட்சில  சீனியர்ஸ்  இருக்காங்க  என்று  விலகுவது  அருமை 


டிடெக்டிவாக  வரும்  சுரேஷ் கோபி  தன்  அதிபுத்திசாலித்தனத்தை  அடிக்கடி  துப்பறியும்  வழிகளில்  நிரூபிச்சு  கை தட்டல்  வாங்கறார்


சிந்துமேனன்  இன்னும்  பிரமாதமா  பர்ஃபார்ம் பண்ணி  இருக்கலாம். சுமாராத்தான்  அவுட் புட்  வந்திருக்கு . இவருக்கான  காட்சிகள்  குறைவு


வில்லனாக  வருபவர்  தெரிந்த  முகமாக  பிரபலமான  ஹீரோவாக  இருந்தால்  இன்னும்  கெத்தாக  இருந்திருக்கும் 



சபாஷ்  டைரக்டர்


1    தாழிடப்பட்ட  பெட்ரூம்ல  டெட் பாடியைப்பார்த்ததும்  ஹீரோ சொல்லும்  தியரி  அருமை    வில்லன்  பெட்ரூம்ல  பெண்ணைக்கொன்னுட்டு   கட்டில்;  அடியே  காத்திருக்கான். அடுத்த  நாள்  வேலையாட்கள்  கதவை  உடைச்சு  உள்ளே  வந்து   டெட் பாடியைப்பார்த்து  பதறி  ஓடுனதும்    டக்னு  கேப் ல  வில்லன் கட்டில் அடியே இருந்து  எழுந்து  ஓடி இருக்கலாம்  என்ற டவுட் .  ஆக்சுவலா  வில்லன்  கொலை  செய்யும்  யுக்தியை  விட  இந்த  கான்செப்ட்  பிரமாதமா  இருக்க் 


2   ஹீரோவும் , வில்லனும்  ஒரு சீன்ல  கூட சந்தித்ததே  இல்லை  என்ற  கான்செப்ட்  குட் 


3   டூயல்  ஹீரோ  ரோலில்  பெரிய  வித்தியாசம்  எல்லாம்  மெனக்கெட்டு  காட்ட்லை  என்றாலும் பாடி  லேங்க்வேஜில்  அசால்ட்டா  நுணுக்கமான  மாற்றம்  காட்டி இருக்காங்க  


நச்  வசனங்கள்


1   எங்கப்பாவோட பணம்  வேணும். அவர் கிட்டே  நேரடியா  கேட்க  மாட்டீங்க . ஈகோ தடுக்குது , ஆனா  அவர்  போட்ட  நகைகள்  மட்டும்  நான்  கழட்டித்தரனுமா? 


2  தற்கொலை  பண்றவங்க  சுய  விளக்க கடிதத்தை  4  பேர்  பார்க்கற  மாதிரி  பொதுவான  இடத்தில்  தான்  வைப்பாங்க , இப்படி டிராயருக்குள்லே  வைப்பாங்களா? 


3   எலி மருந்தில்   5 கிராம்   ஜிங்க் பாஸ்பேட்  கலந்திருக்கு , ஒரு ஆள்  சாக இந்த அளவே  போதும், ஆனா  செத்த  நபர்  10 கிராம் ஜிங்க்  பாஸ்பேட்   சாப்பிட்டிருப்பதா  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்  சொல்லுது


4  தூங்கிட்டு  இருக்கற  ஒரு ஆள்  வாய்ல  விஷம்  ஊத்துனா  அனிச்சையா  அவங்க  எந்திரிச்சுட மாட்டாங்களா>


 எஸ், ஆனா  ஸ்லீப்பிங்  டோஸ்  எடுத்துக்கிட்ட  நபர்  எழ  வாய்ப்பில்லை , ஏன்னா  தூக்க  மாத்திரை  நாடி நரம்பை  தளர்ச்சியாக்கி  வெச்சிருக்கும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1  காதல்  நிறைவேறலை , காதலி  ஏமாத்திட்டா , அவளைல்க்கொலை  செய்யனும்னு ரெண்டரை  வருசமா  பொறுமையா  திட்டம்  போடும்  வில்லன் வாய்ப்பு கிடைச்சும்  காதலியை  அடைய  நினைக்கலை . இது  எப்படி? லாஜிக்  இடிக்குதே? உண்ர்ச்சிவசப்பட்டு  கோபத்துல  கொலை  பண்ணி  இருந்தா  ஓக்கே  டைம் கிடைக்கலைனு விடலாம் , ஆனா ரெண்டரை   வருசமா  பிளான்  போடறவன்  நகை, பணம், உடல்  இப்டி  எது மேலயும் ஆசைப்படலைங்கறது  ஆச்சரியமா  இருக்கு 


2  வில்லன்  கொலை  செய்யும்  காட்சி  அபூர்வ  சகோதரர்கள்  குள்ள  அப்பு செய்யும்  சர்க்கஸ்  காட்சி போல்  இருக்கு   அது சரியான  ஐடியாவா தோணலை 


3    வில்லன்   தன்  முன்னாள்  காதலிக்கு  ஃபோன்   பண்ணி  பிளாக்  மெயில்  பண்ணி இருக்கலாம்,  வாய்ப்பு இருந்தும்  பண்னலை .  அவ்ளை  டார்ச்சர்  பண்ணி  இருக்கலாமே?


 சி.பி ஃபைனல்  கமெண்ட் -    க்ரைம் இன்வெச்டிகேஷன்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு   பிடித்தமான  படம்,  ஹீரோ  சுரேஷ்  கோபி  என்பதால்  டிஷ்யூம்  டிஷ்யூம்   இருக்குமா? என  எதிர்பார்ப்பவர்கள்  இயக்குநர்  பெயர்  என்ன? என்பதை  கவனிக்கவும் . ரேட்டிங்  2.75 / 5 



Detective
Detective Malayalam film.jpg
Theatrical release poster
Directed byJeethu Joseph
Produced byMahi
Written byJeethu Joseph
StarringSuresh Gopi
Sindhu Menon
Prajod Kalabhavan
Madhupal
Jagathy Sreekumar
Baiju Santhosh
Saikumar
Music byRajamani
CinematographyAnandakuttan
Edited byP. C. Mohanan
Distributed bySuper Release
Release date
  • 16 February 2007
Running time
134 minutes
CountryIndia
LanguageMalayalam