ஏதோ ஒரு வைரஸ் தாக்குதலால் உலகில் மனித இனமே மண்ணோடு மண்ணா போயிடுது . அங்கே இங்கே கொஞ்சம் நஞ்சம் மிச்சம் மீதி மனுஷங்க இருக்காங்க . கானகத்தில் ஏப்ஸ் எனப்படும் மனித கொரில்லாக்கூட்டம் இருக்கு .
தப்பிப்பிழைச்ச மனிதர்கள் பழைய வாழ்க்கையை வாழ மின்சாரம் உற்பத்தி பண்ண ஒரு அணைக்கட்டுக்கு வர்றாங்க . ஆனா அது இப்போ ஏப்ஸ் ஓட சொந்த இடம் .
இப்போ எப்படி கச்சத்தீவுக்காக கலைஞர் , ஜெ , இருவரும் மாறி மாறி அறிக்கைப்போர் நடத்தறாங்களோ அப்படி மனித இனத்துக்கும் , ஏப்ஸ்க்கும் போர் நடக்குது.
நக்கீரன் கோபால் எப்படி ராஜ் குமாரை மீட்க பேச்சுவார்த்தைக்கு வீரப்பன் காட்டுக்குப்போனாரோ அப்படி ஹீரோ கொரில்லா விடம் பேச்சு வார்த்தை நடத்தப்போறார் .
இப்போ கொரில்லாக்கூட்டம் காங்க் கோஷ்டி\ மாதிரி 2 பிரிவா மாறி அடிச்சுக்குதுங்க .
மனித இனம் வென்றதா> ஏப்ஸ் ஜெயிச்சுதா ? என்பது மிச்ச மீதிக்கதை
இதை 3 விதமா பார்க்கலாம்
ராமநாராயணன் டைப் விலங்குகள் படம்
குழந்தைகள் கண்டு மகிழ ஒரு ஜாலி படம்
ஈழப்போராட்டத்தில் தமிழர்கள் தங்கள் உரிமைக்கு எப்படிப்போராடுனாங்க்ளோ அப்படி ஒரு இனம் தங்கள் இருப்பிட்த்துக்குப்போராடுன மாதிரி
எப்படிப்பார்த்தாலும் படம் நல்லா தான் இருக்கு .
கிரஃபிக்ஸ் காட்சிகள் கலக்கல்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 குரங்கு சாரி கொரில்லாக்களின் முக பாவனைகளை தத்ரூபமாக படம் பிடித்தது
2 மனித நேயத்தை தூண்டும் உணர்ச்சி மிக்க காட்சி அமைப்புகள்
3 பிரமாதமான இயற்கைவளம் மிக்க கானகப்பகுதிகளில் படப்பிடிப்பு , ஒளிப்பதிவு அபாரம் .
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 . என்ன தான் ஏப்ஸ் புத்திசாலி என்றாலும் எந்த முன் அனுபவ்மும் இல்லாமல் மிஷின் கன் எல்லாம் உபயோகிப்பது ஓவர்
2 ஏப்ஸ் -ன் தலைவன் குங்குமம் வெச்சிருக்காரு . ஏன் சந்தனம் , விபூதி எல்லாம் வைக்கலை ? ஆஞ்சநேயர் கோவிச்சுக்குவாரா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. மனிதன் விலங்கிடமிருந்து கோபத்தையும் ,வெறுப்பையும் மட்டுமே கத்துக்கிட்டான்.வேற எதையும் கத்துக்கலை # D O T P O A
2 மனித இனத்தில் மட்டும் அல்ல.எல்லா இனங்களிலும் அந்தந்த கால கட்டத்தில் துரோகிகள் உருவாகிட்டு தான் இருக்காங்க.# DOTPOTA
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. கொரில்லாக்குரங்கு நெத்தி ல குங்குமம் வெச்சிருக்கு.என்ன கொடுமை சார் இது?
நல்ல வேளை ஜிமிக்கி போடலை # DAWN OF THE PLANET OF THE APES
2 இப்பத்தான்யா ஹீரோ கொரில்லா ஓப்பனிங் சீனே முடிஞ்சிருக்கு.அடுத்து ஹீரோயின் கொரில்லா குளிக்கும் போல @ChatWithSR:படம் எப்படி இருக்கு?
3 80 கொரில்லாக்கள் 40 குதிரை ல டபுள்ஸ் வந்து மனிதர்களை எச்சரிக்குது! எங்க
ஏரியாப்பக்கம் இனி வந்தா நடக்கறதே வேற #,பாட்ஷாடயலாக் ஆச்சே!
4 டாடி.குரங்குக எல்லாம் எப்போப்பா சண்டை போடும்?
பொசுக் பொசுக் னு சண்டை போட அது என்ன மேரேஜ் ஆன பொண்ணா? பொறும்மா
5 இயற்கை ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்.ஒளிப்பதிவு ,லொக்கேஷன் செலக்சன் பிரமாதம் # D O T P O T A
6 கொரில்லாக்கள் 2 க்ரூப்பா பிரிஞ்சு காங் கோஷ்டி மாதிரி அடிச்சுக்குதுங்க.
7 ஒரு கொரில்லா சரக்கு அடிக்குது.மனிதன் கிட்டே இருந்து பாட்டிலைப்பிடுங்கி.அடுத்து "வேணாம்.மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு"பாடுமோ?
சி பி கமெண்ட் -DAWN OF THE PLANET OF THE APES = குழந்தைகளுக்கான 2 மணி நேரப்படம்.முன் பாதி சுமார் பின் பாதி டமார் .ரேட்டிங் = 2.5/5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = / 5
புதுக்கோட்டை RKP A/C DTS குட் குவாலிட்டி.பால்கனி 80 ரூபா
1