நான் ஈ ( ஈகா) படம் மூலம் அனைத்து ர்சிகர்களின் மனம் கவர்ந்தவர் நானி. நேச்சுரல் ஆக்டர் என டைட்டிலில் பட்டப்பெயர் போடும் அளவுக்கு வளர்ந்தவர். எல்லா நல்ல நடிகர்களுக்கும் ஒரு சறுக்கல் படம் அமையும், அப்படிப்பட்ட ஒரு சறுக்கல் தான் இந்தப்படம் . 65 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் வார வசூல் மட்டும் 115 கோடி வசூலித்தது .30/3/2023 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் 27/4/2023 அன்று நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நண்பனுக்காக எதையும் விட்டுக்கொடுக்கத்தயார் ஆக இருக்கும் நாயகன் சின்னப்பையனா இருக்கும்போது சக மாணவியைக்காதலிக்கிறான். அந்த மாணவிக்கு லவ் லெட்டரும் புக்கில் வைக்கிறான், ஆனால் தன் நண்பன் அதே பெண்ணைக்காதலிப்பது அறிந்ததும் தன் காதலை வெளிப்படுத்தாமல் மறைக்கிறான்.
ஃபிளாஸ்பேக் முடிந்து இப்போ எல்லோருக்கும் திருமண வயது. நாயகனின் நண்பனுக்கும், நாயகிக்கும் திருமணம் ஆகிறது. அதே பகுதியில் வசிக்கும் வில்லன் ஒரு பெண் பித்தன். 13 வருடங்களாக நாயகியை ஒரு தலையாய் காதலித்து வரும் தறுதலை. அவன் நாயகனின் நண்பனைக்கொலை செய்து விடுகிறான்
நாயகியை அடைய வில்லன் போடும் திட்டத்தை நாயகன் முறியடித்து நாயகியைக்கரம் பிடிப்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக நானி . பரட்டைத்தலை , தாடி அழுக்கு உடை என ஆளே மாறி விட்டார் . அவர் மெனக்கெட்ட ஆளவுக்கு இயக்குநர் திரைக்கதையில் மெனக்கெடவில்லை
நாயகியாக கீர்த்தி சுரெஷ். டல் மேக்கப்பில் சில கோணங்களில் நந்திதா தாஸ் போலவும் சில கோணங்களில் அ[பிராமி போலவும் இருக்கிறார். நடிக்க நல்ல வாய்ப்பு
நண்பனாக தீக்ஷித் ஷெட்டி பிரமாதமாக நடித்திருக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கலக்கி இருக்கிறார். அனால் அவரது கேரக்டர் டிசைன் சரியாக வடிவமைக்கப்படவில்லை
சமுத்திரக்கனி மாறுபட்ட கெட்டப்பில் ஆளே அடையாளம் தெரியாத கல்யாண ராமனாக வில்லனின் அப்பா ரோலில் வருகிறார்
ஊர் பெரிய மனிதராக சாய் குமார் கச்சிதமான நடிப்பு வில்லனின் மனைவியாக வரும் பூர்ணா அழகு
சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவில் தசரா விழாக்காட்சிகளும் , ரயில் காட்சிகளும் அருமை சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் 2 பாட்டு செம ஹிட்டு , கபாலி பிஜிஎம் மை ஆங்காங்கே உருவி இருக்கிறார்
சில்க் ஸ்மிதா பெயிண்ட்டிங் கட் அவுட் காட்சியில் ஆர்ட் டைரக்டர் உள்ளேன் ஐயா என்கிறார்
நவீன் நூலியின் எடிட்டிங்கில் 156 நிமிடங்களில் கட் செய்து ட்ரிம் பண்ணி இருக்கிறார்கள்
நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 மாறுபட்ட வெடங்களில் தொடர்ந்து நடித்து வரும் ம்லையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ வின் கேரக்டரி டிசைன் மாங்கா மடையன் போல டிசைன் செய்யப்பட்டு இருந்தாலும் சாமார்த்தியமாக அவரை நடிக்க ஒப்புக்கொள்ள வைத்தது
2 கவுரவமான , கண்ணியமான படங்களில் நடித்து வந்த நானியை மசாலாக்குப்பைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ள வைத்தது
3 அழகாக இருக்கும் நாயகி கீர்த்தி சுரேஷை டல் ,மேக்கப் போட்டால் எங்கேயோ போய்டுவீங்க என நம்ப வைத்து அவரைக்கண்டம் பண்ணியது
4 மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கேரக்டரை வலுக்கட்டாயமாக திணித்து நீங்கதான் படத்துல டர்னிங் பாயிண்ட் என நம்பவைத்து சாய் குமாரை புக் பண்ணியது
செம ஹிட் சாங்க்ஸ்
1 போட்டா வைகுந்தம், போடாட்டி அசமஞ்சம்... பறையைக்கொட்டு பறையைகொட்டு - தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேட்டு
2 தீக்காரி , தீய வெச்சுப்பார்க்கறியாடி
3 ரா ராரிராரோ பிஞ்சு மனசா பறந்து போனோம், நெஞ்சில் கனவு நிறைஞ்சு போனோம்
4 மைனரு வேட்டிக்கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான்
ரசித்த வசனங்கள்
1 எங்க ஊரில் காத்துக்கூட கறுப்பாதான் வீசும்
2 எல்லாரும் குடிப்பது ஒரே சரக்கு என்றாலும் யார் வெளில குடிக்கனும் ? யார் உள்ளே குடிக்கனும்? என்பதை அவங்க சாதிதான் தீர்மானிக்கும்
3 பாட்டி, நீ ஏன் எப்போப்பாரு சரக்கு அடிச்சுக்கிட்டே இருக்கே?
ஒரு தெகிரியம் ( தைரியம் ) வேணும்னு தான்
4 ஒருத்தனுக்கு நல்லது பண்ணினா நல்லவன்பாங்க , ஊருக்கே நல்லது பண்ணினா தலைவன்பாங்க
5 குடிச்சுட்டு மறந்து போறது தப்பில்லை , தப்பு பண்ணிட்டு அதை மறந்து போறது தப்பு
6 தட்டிகேட்க அவன் ராமனும் இல்லை , கட்டிக்கொள்ள அவள் சீதையும் இல்லை , ஆனா நான் ராவணன் தான்
7 அரசியல்ல இருந்தாலும் தப்பு பண்ணி இருக்கேனே தவிர பாவம் செஞ்சதில்லை
8 பெண் மேல ஆசைப்பட்டு பத்து தல இருந்தும் ஒத்தைத்தலை இருக்கறவனால உயிரை இழந்தான் ராவணன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் சின்னப்பையனா இருக்கும்போது சின்னப்பொண்ணா இருக்கும் நாயகி முள் குத்திடுச்சா?னு கேக்குது , ஆமானு பையன் சொன்னதும் க்ளோசப்ல உள்ளங்கையைக்காமிக்கறாங்க. பெரிய ஆணியை வெச்சுக்கீறி விட்ட மாதிரி அவ்ளோ பெரிய காயம். எம்ப்பா முள் குத்துனா எந்த ஊருல இவ்ளோ பெரிய காயம் ஆகும் ?
2 நாயகி படிக்கும் புக்கில் லவ் லெட்டர் வைத்த நாயகன் தன் நண்பன் நாயகியை லவ்வுவதாகச்சொன்னதும் பதறி ஓடி வந்து நாயகி புக்கைப்பிடுக்கி தாறு மாறா கிழிக்கறாரு. ஏன் புக்கை வேஸ்ட் பண்ணனும், பிடுங்கி ஓடிப்போய் மறைவிடதில் லெட்ட்ரை மட்டும் எடுத்துட்டு புக்கை திருப்பித்தந்திருக்கலாமே?
3 ரயிலில் வரும் கருங்கற்களை ஒரு சாக்குப்பைல போட்டுக்கட்டி இணையாக வரும் வேன்ல இருக்கற தன் ஆளுக்கு வீச் அவன் என்னமோ கிரிக்கெட் பாலை கேட்ச் பண்ற மாதிரி 25 கிலோ கல் மூட்டையை அசால்ட்டாப்பிடிக்கறான்
4 தூம் தாம் கூத்து உனக்கும் எனக்கும் வேட்டு பாட்டை ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டுபாட்டு ஸ்டைலில் எடுத்திருக்காங்க . சொந்தமா யோசிச்சு வேற கொரியோ கிராஃபில பண்ணி இருக்கலாம், அந்தப்பாட்டு முடியறப்ப ஒருபோலீஸ் கான்ஸ்ட்பிளை பளார்னு அடிக்கறார் ஹீரோ. எதுக்குனு தெரியல , போலீஸை அடிச்சா என்ன ஆகும்/ஆனா ஒண்ணும் ஆகலை
5 எந்த ஊர்ல கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது பேட்ஸ்மேன் கூலிங்க் கிளாஸ் போட்டுகறாரு? ஒவ்வொரு ஷாட் அடிச்சதும் அதே கிரவுண்ட்ல தண்டால் எல்லாம் எடுக்கறாரு? என்னதான் மசாலாப்படம்னாலும் மன்சாட்சி வேண்டாமா?
6 படம் பூரா ஹீரோ , வில்லன் எல்லாருமே கேன்சர் பேஷண்ட் மாதிரி , கல்லீரல் டேமேஜ் பார்ட்டிங்க மாதிரி தம், சரக்கு அடிச்சுக்கிட்டே இருக்காங்க , கஷ்ட காலம்
7 மது விலக்கு அமல்படுத்த்றேன்னு வாக்கு கொடுத்து தேர்தலில் ஜெயிக்கும் சாய் குமார் நன்றி அறிவிப்புக்கு மக்களிடம் வரும்போது தம் அடிச்சுக்கிட்டே வர்றாரு
8கொலைக்கு பயன்பட்ட ஆயுதமான அரிவாளைக்கைப்பற்ற ஹீரோ நடு ராத்திரில கிணத்துக்குள்ளே குதிக்கறாரு. அந்த நடு ராத்திரில கிணத்தடில 20 அடி ஆழத்துல பிரமாதமான வெளிச்சமா இருக்கே ? எப்படி ? பவுர்ணமினு சமாளிச்சாலும் நிலா ஒளி 20 அடி ஆழம் ஊடுருவுமா?
9 அரிவாளைக்கைப்பற்றும் ஹீரோ கைப்பிடியைப்பிடிச்சு எடுக்கறாரு. கொலைகாரன் ரேகை எப்படி கண்டு பிடிக்க முடியும் ?
10 வில்லன் பண பலம் மிக்கவன், அரசியல் செல்வாக்கு உள்ளவன்,அவன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருக்கும் நாயகியை அவன் பலவந்தமா அ டைய நினைச்சா ஈசியா அடைந்திருக்கலாம், அதை விட்டுட்டு நாயகியின் கணவனை, கணவனின் ந்ண்பர்கள் நான்கு பேரை கொலை செய்வது எல்லாம் தேவை இல்லாத ஆணி
11 பாலகம் தெலுங்குப்படத்தில் வரும் காக்கா படையல் சாப்பாடு சாப்பிடாத காட்சியை சுட்டிருக்காங்க
12 தாலி இழந்த நாயகிக்கு நாயகன் தாலி கட்டும்போது வேடிக்கை பார்த்துட்டு பின் அவன் கை கோர்த்து வீட்டுக்கு அழைக்கும்போது கூடவே போய்ட்டு 10 நாட்கள் கழிச்சு சாவகாசமா நாயகி கேட்குது “ என் சம்மதம் இல்லாம எதுக்குடா எனக்கு தாலி கட்டுனே?
13 நாயகியை சைக்கிளில் அழைத்து வரும் நாயகன் கேனம் மாதிரி குட்டைக்குள் சைக்கிளை விட்டு ஏன் கீழே விழறாரு. சுத்தி அவ்ளோ இடம் இருக்கே? ஒதுங்கிப்போலாமில்ல?
14 தாலி இறங்கின பின் 11 நாள் ஆகட்டும்னு காத்திருந்தேன்னு வில்லன் நாயகி கிட்டே க்ளைமாக்ஸ்ல சொல்ர்றான். இவன் என்ன தெய்வீகக்காதலா பண்றான் ? பண்ணப்போறது ரேப்பு . இதுல சாஸ்திர சம்பிரதாயம் எல்ல்லாம் எதுக்கு மாப்பு ?
15 வில்லன் நாயகி கிட்டே 12 வருசமா உன்னை அடையனும்னு காத்திருந்தேன்னு ட்யலாக் பேசறான். ஆனா தண்டமா எதுக்கு காத்திருந்தான்னு சொல்லலை
16 வில்லன் வந்தமா நாயகியை ரேப் பண்ணுனமா?னு இல்லாம நாயகி கிட்டே நாயகனோட புகழ் பாடிட்டு இருக்கான், அந்தக்கால் எம் ஜி ஆர் படங்களில் இப்படித்தான் நம்பியார் , பிஎஸ் வீரப்பா வகையறாக்கள் அவ்ரை புகழ்வாங்க
17 நாயகன் க்ளைமாக்ஸ்ல அரிவாளை பல்லால கடிச்சுக்கிட்டே தன் கையை அரிவாளால் கீறி தன் நெத்தில ரத்தத்திலகம் வைக்கறாரு , பக்கத்துலயே பத்து ரூபாக்கு குங்குமம் வித்திட்டு வியாபாரி இருக்காரு , அதை வாங்கி திலகம் வெச்சிருந்தா சேதாரம் இல்லை
18 முதுகில் கத்தியால் அரைஅடி ஆழம் குத்தப்பட்ட ஹீரோ க்ளைமாக்ஸ்ல அரிவாளுடன் வரும் 126 பேர் கூட ஃபைட் போட்டு எல்லாரையும் கொல்றாரு , கின்னஸ் ரெக்கார்டு இது
19 க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஆவேசமா அத்தனை பேரை வெட்றதைப்பார்த்து வில்லன் எஸ் ஆகி இருக்கலாம், கிறுக்கன் மாதிரி ஒரு சேர் எடுத்து நடுவில் போட்டு உக்காந்து போஸ் கொடுத்து மாட்டிக்கறான்
20 ஹீரோ ஆகாயத்தில் 1 கிமீ உயரத்தில் இருந்து பறந்து வந்து வெட்டும் வரை வில்லன் வாயைப்பிளந்து ஆ -னு பார்த்துட்டே இருக்கான், ஓடிப்போலாமில்ல?
21 க்ளைமாக்சில் 125 பேரைக்கொலை செய்த நாயகனுக்கு 7 வருடம் தான் சிறை தண்டனையா? என்ன கொடுமை சார் இது ?
22 சிறைக்கதைகளுக்கு க்ளோஸ் கட்டிங் மாதா மாதம் பண்ணி விடுவார்கள். இதை அறிய மகாநதி படம் பார்க்கவும், க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகும் போது புட்டபர்த்தி பாபா மாதிரி பரடைத்தலையோட வர்றாரு .
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஏ படம்னு சென்சார் சர்ட்டிஃபிகேட், அது வன்முறைக்காக
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நானி மேல் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கும் ரசிகர்கள் இந்த டப்பாப்படத்தைப்பார்க்காமல் தவிர்க்கவும் . இது போன்ற் ப்டஙகள் சுமாராக ஓடினால் கூட அது ஆரோக்யமான சினிமாக்களுக்கு ஆபத்து . ரேட்டிங் 1.5 / 5
Dasara | |
---|---|
Directed by | Srikanth Odela |
Written by |
|
Produced by | Sudhakar Cherukuri |
Starring | |
Cinematography | Sathyan Sooryan |
Edited by | Naveen Nooli |
Music by | Santhosh Narayanan |
Production company | Sri Lakshmi Venkateswara Cinemas |
Distributed by | |
Release date |
|
Running time | 156 minutes |
Country | India |
Language | Telugu |
Budget | ₹65 crore[a][2] |
Box office | est. ₹115.5 crore[3] |