Showing posts with label D BLOCK - டி பிளாக் ( 2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label D BLOCK - டி பிளாக் ( 2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Sunday, September 11, 2022

D BLOCK - டி பிளாக் ( 2022) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்


 அந்தக்காலத்துல  ஒரு  வீணாப்போன  பழமொழி  சொல்வாங்க . கூந்தல்  நீளமா  இருக்கும்  பெண்கள்  குடும்பத்துக்கு  ஆகாதுனு.. அப்போ   தோகை  நீளமா  இருக்கும்  மயில்கள்  கானகத்துக்கு  ஆகாதா? அப்டினு  அப்பவே  கேப்போம் .இந்த  சைக்கோ  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கும்  இந்தப்பழமொழிக்கும்  என்ன  சம்பந்தம் ? என்பதை  படம்  கண்டு  உணர்க 

ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஒரு  இஞ்சினியர்  காலேஜ்  கேண்ட்டின்ல  ஒரு  பஜ்ஜிக்கடை . அதுல  பிரமாதமான  பஜ்ஜி  போடுவாங்க . அதை  வாங்க  செம  கூட்டம். அந்த  கூட்டத்துல  ஒரு  பொண்ணு  அசால்ட்டா  பஜ்ஜி  வாங்கிடறா , எப்படி  ஹீரோயின்  ஓப்பனிங்  சீன்?  ஒலிம்பிக்ல  கோல்டு  மெடல்  வாங்குன  பி டி  உஷா  கூட  அவ்ளோ எக்ஸ்பிரஷன்  காட்ட்லை .  அந்த  கேவலமான  ஆயில் ஊறிய கொலஸ்ட்ரால்  ஏத்தக்கூடிய பஜ்ஜியை  வாங்கினது ல  ஹீரோயின்  முகத்துல  அவ்ளோ  குதூகலம் , பெருமை 


 அடுத்த  நாள்  ஹீரோயின் வருவதற்கு  முன்பாகவே  ஹீரோயினுக்காக  ஹீரோ  அந்த  பஜ்ஜியை  வாங்கி  தயாரா  நிக்கறாரு  அந்த  பஜ்ஜியை  ஹீரோ  கிட்டே  வாங்கிய  ஹீரோயின்  தாங்க்ஸ்  அப்டீங்கறா


   ரெண்டு  பேருக்கும்  அந்த  பஜ்ஜி  மூலமா  காதல்  மலருது 

 யாரும்  பயப்பட  வேண்டாம்  இது  காதல்  கதை  அல்ல  சும்மா  ஓபனிங்ல  எதுனா  காட்டி  சமாளிக்கனும்  இல்ல ? 


 அடுத்ததா  காமெடியன்  இண்ட்ரோ,  சின்னத்திரைல  மொக்கை  போட்டுட்டு  இருக்கறவங்களை  பெரிய  திரைக்குக்கூட்டிட்டு  வந்தா  பெருசா  மொக்கை  போடுவாங்க  இதுக்கு  உதாரணம்  ஈரோடு  மகேஷ்  . இந்தப்படத்துல்  ஆதித்யா சேனல்ல  மொக்கைக்காமெடி  பண்ணிட்டு  இருந்த ஆதித்யா  கதிர்  இதுல  என்னமோ  வாய்க்கு  வந்ததை  உலறிட்டு  அவரே  சிரிச்சுக்கறார் ., அனேகமா  அதைக்காமெடினு  அவரே   நினைச்சுக்கிட்டார்  போல 


தினத்தந்தி  குடும்ப  மலர்ல  வந்த  படு  மொக்கையான  ஜோக்கை  யாராவது  சொன்னாக்கூட  விழுந்து  விழுந்து  சிரிக்கும் உமா  ரியாஸ் கான்  இதுல  கண்டிப்பும்  கறாருமான  ஹாஸ்டல்  வார்டன் . எதுக்கு  இவ்ளோ  மேக்கப்னு  தெரியல 


முதல்  40  நிமிட்ங்கள்  காலேஜ்  காதல்  கலாட்டானு  படம்  ஜாலியாப்போகுது . அப்போ  காலேஜ்  ஹாஸ்டல்ல  ஒரு  கொலை  நடக்குது , ஒரு  பெண்  கொலை செய்யபப்டறா . சிறுத்தை  தான்  அடிச்சுப்போட்டுச்சுனு  ஊரே  சொல்லுது 


 எந்த  சிறுத்தையாவது   மாடிப்படி  ஏறி  வந்து  மொட்டை  மாடில  கொலை  பண்ண்ட்டு  லிஃப்ட்  வழியா  மறுபடி  க்ரவுன்ட்  ஃப்ளோர்  வந்து  கானகத்துக்குள்ளே  போய் இருக்குமா?னு  ஒரு  பய  கேட்கல 


தொடர்ந்து  கொலைகள்  நடக்குது . அந்த  சைக்கோக்கொலையாளியை  ஹீரோ  எப்படி  பிடிச்சாரு ? இதுதான்  கதை 


 ஹீரோவா  அருள் நிதி . அரசியலுக்கு  அப்பாற்பட்டு  இவரை  பாராட்ட  முக்கியமான  அம்சம்  இவர்  தொடர்ந்து  மாறுபட்ட  த்ரில்லர்  ப்டங்களை  தருவதும்  ஓவர்  ஹீரோயிசம்  கொண்ட  காட்சிகளில்  நடிக்காததும் . இதுலயும்  இவர்  நல்லா  பண்ணி  இருக்கார் 


  வில்லனா  சைக்கோ  கொலையாளியா   சரண்  தீப் .  பார்வை  ஒன்றே  போதுமே  டைப் .  பாடி  பில்டிங்  வேற . கழுகு  படத்தில்  ரஜினி  மோதும்  வில்லனை  முன்  மாதிரியா  வெச்சு  கேரக்டர்  டிசைன்  பண்ணி  இருக்காங்க


ஹீரோயினா  அவந்திகா   சிரிச்ச  முகம்  அமுல்பேபி  மாதிரி  இருக்கார்  ., நடிப்பே  வர்லை .,  அவர்  கூட   இருக்கும்  தோழிகள்  4  பேரும்  அவ்ரை   விட  நல்லாருக்காங்க 


 ரமேஷ்  கண்ணா  வாட்ச்,மேனா  வர்றார்.  ஃபிளாஸ் பேக்  காட்சிகளில்  நல்ல  நடிப்பு 


தலைவாசல்  விஜய்  காலேஜ்  பிரின்சி[பாலாக  வர்றார். இயக்குநர்  கரு  ப்ழனியப்பன்  காலேஜ்  ஓனரா  வர்றார். எல்லாருக்குமே  அதிக  வாய்ப்பில்லை 


சைக்கோ  வில்லனின்  ஃபிளாஸ்பேக்    காட்சிகள் ஆளவந்தான்  கார்ட்டூன்  பாதிப்பில்  ஓவிய  வடிவில்  சொல்லப்ப்ட்டதால்;  உயிரோட்டமாய்  மனதில்  பதியலை 


இசை  ஒளிப்பதிவு  எடிட்டிங்  எல்லாம்  பக்கா 


 சபாஷ்  டைரக்டர்


1   படத்தின்  முதல்  பாதி  காமெடி  யாக  ஜாலியாக  கொண்டு  போய்  பின்  பாதி  த்ரில்லிங்கா  காட்ட  முயற்சி  செஞ்சது 


2   சைக்கோ  வில்லனின்  கேரக்டர்    டிசைன்  அவரது  உருவ  அமைப்பு  




ரசித்த  வசனங்கள்


1   நான்  தான்  உங்களுக்கு சீனியர் 


நிஜமாவா நம்பவே  முடியலயே?


ஆமா, அதுக்கு  என்  யங் லுக் தான்  காரணம்


 அவன்  உங்களுக்கு  மட்டும்  சீனியர்  இல்லை , லெக்சரர்  எனக்கே  சீனியர்



2  நாம  காலேஜ்ல  படிக்கும்போது  நம்மை  விட  சீனியர்  பொண்ணுங்க  சூப்பரா  இருப்பாங்க,   ஜூனியா  பொண்ணுங்களும்  அழகா  இருப்பாங்க, ஆனா  நம்ம கூடப்படிக்கிற  பொண்ணுங்க  மட்டும்  அட்டு  ஃபிகரா  இருப்பாங்க  , இதுதான்  நம்ம  தலை  எழுத்து 


3  அதோ  அந்த  காட்டுக்குள்ளே  புலி  கரடி  யானை  இப்டி  எல்லா  விலங்குகளும்  இருக்கும், ஆனா  சிங்கம்  மட்டும்  இருக்காது 


 ஏன் ?


 ஏன்னா  அதான்  சிங்கம்  மாதிரி  நான்  இங்கே  இருக்கேனே ? 


4  என்னது ? உன்  பேரு  மைலோவா? 


 ஆமாபா  மயில்சாமிதான்  ஸ்டைலா  மாத்திக்கிட்டேன் 


5   ஏம்ப்பா, இது  ரேக்கிங்க்பா.. அதோ  ஒரு  பொண்ணு  வருது பாரு  அது  கிட்டே  நீ  ஒரே  ஒரு  வார்த்தைதான்  சொல்லனும், ஆனா  அது  கெட்ட  வார்த்தையா  இருக்கக்கூடாது  , ஆனா  அதைக்கேட்டதும்  பொண்ணு  அழனும் 


இவ்ளோ  தானே  இப்போப்பாரு .ஹாய்  ஆண்ட்டி 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  சிறுத்தை    அடிச்சுதா? இரும்பு ராடு  கீறுச்சா?னு  தெரியாதா? 


2   கொலை  செய்யப்பட்ட  அந்த  மாணவியின்  பெற்றோர்  வந்து  கதறி அழுவாங்கனு  பார்த்தா  சரி  சரி  என்  பொண்ணுதான்  அப்டி  ஆகிட்டா  நீங்களாவது  ஜாக்கிரதையா  இருங்க  என  கூறுவது  செம  காமெடி .,  சார்  அது  செண்ட்டிமெண்ட்  சீன்  சார்  


3  க்ளைமாக்ஸ்  ல  சைக்கோ  வில்லனின்    உடம்பை  பலரும்  அடிச்சு  யூஸ்  இல்லைனு  உணர்கிறார்கள் . ஏன்  யாருமே  வில்லன்  தலைல  தாக்கலை ?


 4  உமா  ரியாஸ்கான்  இரும்புக்கம்பியால   வில்லனை  ஒரு  அடி  அடிச்ட்டு  ஒரு  பக்கத்துக்கு  வசனம்  பேசிட்டு  நிக்கறாரு . ஒரு  நாலு  அடி  மண்டைல  யே  போடம்மானு  கத்தத்தோணுது 


5  பரத  நாட்டியக்கலைஞர்களா  பார்த்து  கொலை  பண்றானா? வில்லன்  என    கேள்வி  எழும்போது  ஒரு  பர  பரப்பு  தொத்திக்குது


6  ஸ்டோரி  டிஸ்கஷன்ல  டைரக்ட்ரை  ஆளாளுக்கு  ஐடியா  கொடுத்துக்குழப்பி  விட்டிருக்காங்க  போல 


7  வில்லன்  செப்பல்  ஷூ  எதும்  போடறது  இல்லை  வெறும்  காலோடதான்  ஹாஸ்டல்  வர்றான். வழில  முள்ளோ  ஆணியோ  போட்டு  வெச்சா  வேலை  முடிஞ்சுது  அதை  யாரும்  செய்யலை ந்


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   இணையவாசிகள்  கழுவி  ஊத்துன  அளவுக்கு  படம்  மொக்கை  எல்லாம்  இல்லை  , சுமாரா  தான்  இருக்கு  பார்க்கலாம் . ரேட்டிங்  2.25  / 5