ஜெயில்ல இருந்து ஹீரோவும், அவரோட சிறைத்தோழரும் எஸ் ஆகி நகரத்துக்குள்ளே வர்றாங்க.. 2 பேருக்கும் இன்னா டீலிங்க்னா எஸ் ஆகி அவரவர் ரூட்ல போய்க்கலாம்.. ஜெயில்ல இருந்து எஸ் ஆகற வரை தான் கூட்டணி.. அதாவது நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி..
பூவாவுக்கு என்ன பண்றது? செம பசி.. ஒரு வீட்டுக்குள்ளே நுழையறாங்க . அங்கே ஒரு ஆண்ட்டி வித் 2 குட்டீஸ்.. நியாயமா ஜெயில்ல காஞ்சு போய் இருந்தவங்க பொண்ணை பார்த்ததும் இன்னா பண்ணனுமோ அதை பண்ணலை.. ஏன்னா இது ஏ படம் இல்லை.. ஏ கிளாஸ் படம்.. அதனால சாப்பிட்டுட்டு பணயக்கைதியா பொடியனை கூட்டிக்கறாங்க . ( நானா இருந்தா ஐ மீன் நான் டைரக்டரா இருந்தா அந்த ஆண்ட்டியை பணயக்கைதி ஆக்கி இருப்பேன்.. செக்யூரிட்டிக்கு செக்யூரிட்டி, படத்துல கிளாமருக்கு கிளாமர்.. )
ஜெயில்ல இருந்து தப்பிச்சதால ஒரு போலீஸ் கேங்க் அவங்களை தேடிட்டு வருது.. டெக்சாஸ் பார்டரை அவங்க கிராஸ் பண்றதுக்குள்ளே கைதிகளை கேட்ச் பிடிச்சுடனும் ( கேட்ச்னா என்ன? பிடிச்சுடனும்னா என்ன?)அவங்க கிட்டே இருந்து எஸ் ஆகத்தான் பணயக்கைதியா அந்தப்பையன். ஆன் த வே 2 ஃபிட்ரண்ட்சுக்கும் சண்டை வந்துடுது.. ஒருத்தரை ஒருத்தர் முடிச்சுக்கட்ட கங்கணம் கட்டிட்டு இருக்காங்க.. ( கங்கனா ரனவத் அல்ல )
கேப்டனும் , ஜெயும் மாதிரி முறைச்சுக்கிட்டு இருந்தவங்க சான்ஸ் கிடைச்சதும் ஹீரோ அவர் ஜெயில் கைதியை சுட்டு கொன்னுடறாரு.. அந்த சின்னப்பையனும், ஹீரோவும் மட்டும் இப்போ.. அந்தப்பையனும், ஹீரோவும் மட்டும் இப்போ
ஹீரோ தன் ஃபிளாஸ்பேக் கதையை சொல்றான்.ஹீரோவுக்கு அம்மா.. அவங்களை தப்பா பேசுன ஒருத்தனை கொன்னுடறான்.. ஹீரோவோட அப்பா பிரபுதேவா மாதிரி.. ஹீரோவோட அம்மாவை கழட்டி விட்டுட்டு ஓடிடறான்.. ரத்தினச்சுருக்கமா ஹீரோ தன் ஃபிளாஸ் பேக்கை சொல்லி முடிச்சதும் அந்த 8 வயசுப்பையனுக்கு ஹீரோ மேல ஒரு பிடிப்பு வந்துடுது.. 2 பேரும் ஃபிரண்ட்ஸ் ஆகிடறாங்க..
அஞ்சாதே படத்துல க்ளைமாக்ஸ்ல ஒரு புல்வெளி காடு காட்டுவாங்களே அந்த மாதிரி ஒரு இடத்துல போலீஸ் அவங்களை ரவுண்டப் பண்ணிடுது. அதுக்குப்பிறகு என்ன நடக்குதுங்கறது சஸ்பென்ஸ்.. அது போக படத்துல இன்னும் 2 சஸ்பென்ஸ் இருக்கு. 1993 ல ரிலீஸ் ஆன படம்.. கதை நடக்கும் கால கட்டம் 1963.. கதைக்களன் டெக்சாஸ்.. நம்ம ஊரு பூவே பூச்சூடவா டைப்ல 2 கேரக்டர்கள், அவங்களுக்கிடையேயான பாசம், செண்ட்டிமென்ட் தான் படம்.. அனைவரும் பார்க்கும் விதம் கண்ணியமாக இயக்கி இருக்கார் இயக்குநர்
படத்துல அந்தப்பையன் நடிப்பு டாப் லெவல்.. ஹீரோவையே சில சமயம் தூக்காம சாப்பிட்டுடறான்.. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் மைக்ல அழைக்கையில், அம்மா கூப்பிட்டும் மீண்டும் ஹீரோவிடம் போகும் காட்சி கண்ணீர்க்கவிதை.
ஹீரோ அசால்ட்டான நடிப்பு,.. ஆக்ஷன் காட்சிகளில் அவர் ஜொலித்ததை விட செண்ட்டிமெண்ட் காட்சியில் கலக்கறார்.. படத்துல மெயின் இவங்க 2 பேரும் தான்.. ஜெயில் சக கைதியா நடிச்சவர் வில்லத்தனமான நடிப்பும் ஓக்கே.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. தெளிவான திரைக்கதை இந்தப்படத்தின் முதல் பிளஸ்.. ஃபிளாஸ்பேக் உத்தி லொட்டு லொசுக்கு எல்லாம் இல்லாம கதை ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரை ஒரே சீரா நீட்டா போய்ட்டிருக்கு
2. ஒளிப்பதிவு ரொம்ப இயல்பா இருக்கு.. பெரும்பாலான காட்சிகள் வெட்ட வெளில சூர்ய வெளிச்சத்துல எடுக்கப்பட்டிருபதால் செயற்கைத்தன்மை என்பதே இல்லை.. நேரில் நிகழ்வுகளை பார்ப்பது போல் இருக்கு..
3. ஹீரோ, அந்த பொடியன், வில்லன் 3 பேர் நடிப்பும் கன கச்சிதம்.. யாரும் ஓவர் ஆக்டிங்கே பண்ணலை..
4. க்ளைமாக்ஸின் கடைசி சஸ்பென்ஸ் காட்சி கன கச்சிதம்.. ஹீரோவை சுட்டு விடும் போலீசை போலீஸ் ஆஃபீசர்கள் இருவரே அடிக்கும் சீன் நச்..
5. லேடி போலீஸ் ஆஃபீசர் பேசும் வசனங்கள் அநியாயத்துக்கு பெண்ணியம் வீசினாலும் அவரது அல்டாப்பை ரசிக்க முடிகிறது..
இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. ஹீரோ, வில்லன், சின்னபையன் 3 பேரும் கார்ல.. ஒரு ஷாப்பிங்க் செண்ட்டர் ட்ட கார் நிக்குது.. ஹீரோ எந்த நம்பிக்கைல அந்த 8 வயசுப்பையன் கிட்டே ரிவால்வர் குடுத்து துப்பாக்கி முனைல வில்லனை உக்கார வெச்சு கடைக்கு போறார்? எவ்ளவ் டேஞ்சர்? அதுக்கு பேசாம அந்த பையனை பர்ச்சேஸ்க்கு அனுப்பலாமே?முன்னே பின்னே கன் யூஸ் பண்ணாத பையன் கிட்டே கன்னை குடுத்து வில்லனை அசையாம பார்த்துக்கோன்னு சொல்றது நம்பற மாதிரியே இல்லை..
2. ஹீரோ அந்த வீட்ல புகுந்து பிணையக்கைதியா சின்னப்பையனை கூட்டிட்டு போக ஏன் முடிவு எடுக்கறார்?ங்கறதுக்கு தெளிவான காரணம் இல்லை.. ஏன்னா சின்னபபசங்களை வெச்சு மேய்ப்பது கடினம்.. அவன் பாட்டுக்கு அம்மா வேணும்னு அழ ஆரம்பிச்சா அவனை சமாளிக்கறது சிரமம். அதுக்குப்பதிலா அந்தப்பையனோட அம்மாவையோ அக்காவையோ கடத்தி இருந்தா ஹீரோ வில்லனை கொலை பண்றப்போ சரியான நியாயம் காட்டி இருக்கலாம்.. திரைக்கதைல சுவராஸ்யம் ஜாஸ்தியா இருந்திருக்கும்
3. லேடி போலீஸ் ஆஃபீசர் பெண்ணிய வாதங்கள் இந்தக்கதைக்கு எந்த அளவில் யூஸ் ஆகுது? தேவையே இல்லாத பகுதி.
4. ஹீரோவால அந்த சின்னப்பையன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது போலீஸ் உட்பட எல்லாருக்கும் தெரிஞ்சுடுது.. அதனால ஹீரோ அந்த பையனுக்கு ஏதோ கொடுக்க பாக்கெட்ல கை விடறப்போ அது துப்பாக்கின்னு தப்பா நினைச்சு ஹீரோ அந்த பையனை கொல்லப்போறார்னு பயந்து போலீஸ் ஹீரோவை சுடும் சீனை ஏற்க முடியலை
5.ஹீரோ அந்த பையன் கிட்டே தான் இதுவரை 2 கொலைகள் மட்டும் தான் செஞ்சதா சொல்றார்/ 1. அவரோட அம்மாவை தப்பா பேசுனவனை 2. இப்போ அந்த சின்னப்பையனை கொல்ல முயன்ற வில்லனை.. ஆனா போலீஸ் ஆஃபீசர் ஹீரோ கேஸ் பற்றி டிஸ்கஸ் பண்றப்போ ஹீரோ தன் அப்பாவை கொன்னுட்டார். அப்டினு ஒரு டயலாக் வருது..
6. ஹீரோவிடம் சிக்கி இருக்கும் சின்னப்பையன் ஹீரோ கூட நல்லா நினேகம் ஆகிடறான் , ஹீரோவும் அவன் கேட்பதெல்லாம் வாங்கித்தர்றார்.. ஆனா அந்த ப்பையன் ஒரு சீன்ல கூட எங்கம்மா கூட அட்லீஸ்ட் ஃபோன்லயாவது பேசறேன், நான் நலம் என்பதை அம்மா கிடே சொல்லிடறேன் அப்டினு டிமாண்ட் பண்ணவே இல்லையே?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. பெருசு, போய்ட்டு வர்றோம்..
பார்த்து.. பத்திரமா போய்ட்டு வாங்க..
நாங்க என்ன டூரா போகப்போறோம்? ஜெயில்ல இருந்து தப்பிக்கப்போறோம்
2. கவர்னர்ட்ட நானே பேசிப்பார்க்கவா?
அவர் பேசறதை எல்லாம் யார் கேட்கறா?
3. ஹாய்.. மிஸ்.. வெளி இடத்துல காபி சாப்பிடற பழக்கம் உங்களுக்கு இருக்காதே..?
ஏன் கேட்கறீங்க?
ஹி ஹி , உங்களுக்குத்தர ஏதும் இல்லை, எங்களுக்கே இங்கே டெயிலி 2 டைம் தான் காபி தர்றாங்க..
4. அவர் ஏன் போறப்ப கார் சாவியையும் எடுத்துட்டு போறாரு?
அப்போத்தானே அவரை விட்டுட்டு போக மாட்டோம்?
ஓ! விட்டுட்டுப்போய்டுவீங்களா?
தாராளமா!
5. இன்னொரு வாட்டி என்னை இப்படி அடிச்சுடாதே..
ஏன்? அடிச்சா அழுதுடுவியா?
6. லேடி போலீஸ் ஆஃபீசர் - டீம் ஒர்க்னா என்னன்னு தெரியாம மஞ்சள் பையை எடுத்துட்டு ஊர்ல இருந்து வந்தேன்னு என்னை நினைக்கறீங்களா?
7. திமிரு ஒருத்தனுக்கு எப்போ வரும் தெரியுமா? பொறுப்பு அதிகம் ஆகறப்போ !
8. உண்மையை சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட ஆள்?
என்னை புரிஞ்சுக்கிட்டவங்களுக்கு நான் நல்லவன்
புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா?
9. எனக்கு ஒரு டவுட்..
உனக்கு டவுட் எப்போதெல்லாம் வரும்?எப்பவும் வருமா? எப்போதாவது வருமா?
சந்தேகமானவங்களை பார்த்தா வரும்
10. உன் கூட நான் ஜாலியா பேசறேன்.. ஆனா இந்த மாதிரி எங்கப்பா என் கிட்டே பேசுனதில்லை
11. லோக்கல் போலீஸ் ஃபோன்ல “ அவனைப்பார்த்தா ஷூட் பண்ணிடவா?ன்னு கேட்கறாங்க. ஆர்டர் குடுக்கவா?
வேணாம்.. ஆர்வக்கோளாறுல அந்தப்பையனை சுட்டுடப்போறாங்க..
12. சின்ன வயசுலயே திருடுனா நீ உருப்படவா போறே..?
ஓவரா வாய் பேசுறவங்களும் உருப்பட மாட்டாங்க ..
13. திருடறது தப்பு.. ஆனா நாம ஒண்ணு கேட்டு அது நமக்கு கிடைக்கலைன்னா திருடறதுல தப்பு இல்லை ,கேட்டது கிடைச்சுட்டா ஏன் திருடறோம்?
14. அந்த எல்லையை தாண்டி அவனால போக முடியாது
ஏன்?
கவர்மென்ட் ரோடு போடலையே?
15. இவ்ளவ் விபரம் சொல்ற நீங்க கொலையாளி எங்கே இருப்பான்னும் சொல்லிட்டா எங்களுக்கு வசதியா இருக்குமே?
அப்புறம் நீங்க எதுக்கு டியூட்டி பார்க்கறீங்க?சம்பளம் வாங்கறீங்க?
16. இருபது வருஷம் முன்னால இங்கே போட ஆரம்பிச்ச ரோடு இன்னும் போட்டுட்டே இருக்காங்க..
17. நம்மைத்தவிர இந்த உலகத்துல யாரையும் நம்பக்கூடாது
18. ஒரு உண்மையைச்சொல்லவா? என் ஒரே நண்பன் நீதான்..
சி.பி கமெண்ட் - பர பர ஆக்ஷன் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லைன்னாலும் இது ஒரு வித்தியாசமான சைக்காலிஜிகல் அப்ரோச்சிங்க் ஃபிலிமே.. வித்தியாசமான சினிமா ரசிகர்கள் பார்க்கலாம்
தொழில் நுட்பக்கலைஞர்கள் விபரங்கள்
Directed by | Clint Eastwood |
---|---|
Produced by | Mark Johnson David Valdes |
Written by | John Lee Hancock |
Starring | Kevin Costner Clint Eastwood Laura Dern T.J. Lowther |
Music by | Lennie Niehaus |
Cinematography | Jack N. Green |
Editing by | Joel Cox Ron Spang |
Studio | Malpaso Productions |
Distributed by | Warner Bros. |
Release date(s) | November 24, 1993 |
Running time | 138 minutes |
Language | English |
Box office | $135,130,999 |
140 நிமிடங்கள் ஓடும் படம்
படத்தின் ட்ரெய்லர்