ஓப்பனிங்க்லயே வில்லனின் அதிரடி ஆக்ஷன்.. பேங்க்கை பிரமாதமா கொள்ளை அடிக்கறாரு.. ஆ ராசா எல்லாம் தோத்துப்போகனும். இவரோட கேரக்டர் புரட்சித்தலைவி மாதிரி, காரியம் ஆகிற வரை நட்பு, கூட்டணி , காரியம் முடிஞ்சதும் கழட்டி விட்டுடனும்.. அம்மா கட்சிக்கூட்டணில இருந்து கழட்டி விடுவாங்க.. இந்த வில்லன் உலகத்தை விட்டே கூட்டாளிங்களை அனுப்பிடுவார்.. பேங்க் கொள்ளை நடக்கறவரை கூட்டாளிங்க கூடவே இருக்கறவர் கொள்ளை நடந்ததும் எல்லாரையும் போட்டுத்தள்ளிட்டு பணத்தோட எஸ் ஆகறார்..
இவர் ஏன் ஜோக்கர் மாதிரி, ருத்ரா படத்துல பபூன் கே பாக்யராஜ் மாதிரி, அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு மாதிரி மேக்கப் போட்டிருக்காரு? அதுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக். போர் அடிக்காது,.,. காரணம் அது ஒரு குட்டியோட ஃபிளாஸ்பேக்.
வில்லன் ஒரு ஃபிகரை லவ் பண்றாரு.. அதும் தான்.. எவனோ ஒரு பொறம்போக்கு வில்லன் காதலி மேல ஆசிட் ஊத்தினதால ஃபிகர் முகம் அகோரம் ஆகிடுது.. வில்லன் ஏழை.. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண பணம் இல்லை.. காதலி முகம் இப்படி இருக்கே? நாம மட்டும் அழகா இருந்தா எப்படி?ன்னு தன் வாயை கிழிச்சு விட்டுக்கறாரு.. சொல்லாமலே படத்துல லிவிங்க்ஸ்டன் நாக்கை கட் பண்ணிக்கற மாதிரி.
இதனால அந்த காதலி வில்லன் மேல இரக்கப்படும்னு பார்த்தா அது நயன் தாராவை விட பெரிய கே டி போல.. தானா வந்து கூப்பிட்டா தி முக.. வெளீல போன்னு துரத்துனாலும் அதிமுக என கூட்டணிக்காக தன் கொள்கைகளை, மானம், மரியாதை ரோஷத்தை எல்லாம் கவனிக்காத டாக்டர் ராம் தாஸ் அய்யா மாதிரி வேற ஒருத்தன் கூட காதல் கூட்டணி போட்டுடுது.. அதனால வில்லனுக்கு செம கோபம்.. தளபதி படத்துல ரஜினி சொல்றாரே? வெறும் பணம்.. அந்த பணத்துக்காகத்தானே அவ உதறினா? பணம் சம்பாதிக்கனும்கற வெறில இருக்கறவன் தான் வில்லன்..
இப்போ ஹீரோவை பார்ப்போம்.. பேட்மேன்.. நகரத்துல இருக்கற ரவுடிங்க, கேடிங்க, திருட்டுப்பசங்க, மொள்ளமாரிகளை ஒழிக்கறதுதான் இவர் லட்சியம்.. போலீஸ் இவருக்கு உதவி செய்யுது,.. சரி நம்மாலதான் முடியல.. அவருக்கு உதவி செஞ்சா அந்த புண்ணியம், பேரு நமக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும்னு தான்.. அதனால நகர மேயர் பேட்மேனுக்கு நிறைய ஹெல்ப் பண்றார்..
மாஃபியா கேங்க் உடைய மீட்டிங்க் நடக்குது.. அங்கே வில்லன் அழையா விருந்தாளியா போறாரு.. உங்க எல்லா பிரச்சனைக்கும் பேட்மேன் தான் காரணம்.. நான் அவனை போட்டுத்தள்ளிடறேன்.. அப்டினு அதுக்கு ஒரு ரேட் பேசறான்..
பேங்க்ல இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 16 மில்லியன் டாலரையும் 5 வெவ்வேற பேங்க்ல போட்டு வெச்சிருக்காங்க,.,. அந்த 5 பேங்க்கையும் சீஸ் பண்ண மேயர் உத்தரவு போடறார்..
வில்லனுக்கு செம கோபம்.. பேட்மேனை சரண்டர் ஆக சொல்லுங்க.. இல்லைன்னா வி ஐ பி களை கொலை பண்ணுவேன்னு மிரட்டறான்.ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடந்த மோதல்ல யார் ஜெயிக்கறாங்க என்பதை ஒரு நிமிடம் கூட போர் அடிக்காம பர பர ஆக்ஷன் ஜால வித்தை காட்டி இருக்காரு,..
இந்த படத்தை தமிழ்ல எடுத்தா வில்லன் கேரக்டர்க்கு ரெண்டே சாய்ஸ் தான் 1. கமல் 2 சத்யராஜ்
படத்துல ஓவர் டாமினேஷன் வில்லனுக்குத்தான்.. பல காட்சிகளில் அப்ளாஸ் அள்ளறார் . இவர் தான் ஹீரோ மாதிரி.. எந்த இடத்துலயும் இவரை ஹீரோவால ஓவர்டேக் பண்ணவே முடியல.. திரைக்கதை அமைப்பு அப்படி..ஆனா முக பாவனைகள் சரியா தெரியல. மேக்கப் அப்படி..
பேட்மேனா வர்ற ஹீரோவும், மேயரா வர்ற செகண்ட் ஹீரோவும் கனகச்சித நடிப்பு. ஹீரோயின் சராசரி ஃபிகர் தான்.. நோலன் பொதுவா ஹீரோயின் செலக்சன்ல அதிக ஆர்வம் காட்டுவதில்லை போல.
மனம் கவர்ந்த வசனங்கள்
1. கொலை, கொள்ளைன்னு நாம இருந்தாலும் அதுலயும் நேர்மை, நியாயம் எல்லாம் வேணும்.
2. விக்கறது டிரக்ஸ். அதுல மேனுஃபேக்சரிங்க் டேட், எக்ஸ்பயரி டேட் எல்லாம் போட்டா விக்க முடியும்?என் கிட்டேயே கம்ப்ளைண்ட் பண்றீயா?
3. ஃபேக் ஐ டி ஆஃப் பேட் மேன் - (FAKE ID OF THE BAT MAN ) உங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாரும் நியாயத்துக்காக போராடுறோம்?
ம்.. பாலுக்கும், கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் தான்
4. ஒவ்வொரு தப்பும் ஒவ்வொரு அனுபவம் தரும்
அப்போ உங்க உடம்பு பூரா அனுபவமா?
5. கூட இருக்கற என்னாலயே உங்களை புரிஞ்சுக்க முடியலையே?
புரிஞ்சுக்காம இருக்கறதுதான் நல்லது
6. சின்ன மீனை வெளீயே விடுவோம், திமிங்கிலம் மாட்டாமயா போயிடும்?
7. ஃபேஷன் முக்கியம் இல்லை, ஃபங்க்ஷன் தான் முக்கியம்
8. செத்தா ஹீரோவாத்தான் சாகனும்.. ரொம்ப நாள் வாழ்ந்தா வில்லனாதான் நம்மை நாமே பார்க்க வேண்டி வரும்
9. வில்லன் - BAT MAN - இந்த சிட்டியை உஜாலாவுக்கு மாற்ற நினைக்கும் BAD MAN
10 . இந்த உலகத்துல எதுவுமே ஃப்ரீயா கிடைக்காது
11. என்னை அரெஸ்ட் பண்ணா என் ஃபிரண்ட்ஸ் உன்னை சும்மா விடமாட்டாங்க..
அதுக்கு அவசியமே இல்லை, உன் எல்லா ஃபிரண்ட்ஸ்சும் உன் கூட ஜெயில்ல களி சாப்பிட வர்றாங்க.
12. பெரிய தலைவர்கள்னா போலீஸ் அரெஸ்ட் பண்ணுனதும் நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு எஸ் ஆகிடலாம்.. இந்த இடைல இருக்கற ஆள்ங்களுக்குத்தான் கஷ்டம்.. பெயில் எல்லாம் கிடைக்காது
13. உங்களுக்கு தெரிஞ்சு அவளுக்கு எக்ஸ் பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா?
என்னைகேட்டா எப்படி? அவளையே கேளுங்க.
14. மனுஷனா பிறந்தா சாவு நிச்சயம்.. இப்போ நான் செத்துட்டா நீ யார் கூட வாழ்வே?
வேற ஏதாவது பேசலாம். ஐ வாண்ட் டூ ஸ்கிப்
15. அடப்பாவிகளா? கதவைத்தட்டிட்டு வர மாட்டீங்க? நல்ல வேளை , ஏதும் பார்க்கலை..
16. நீங்க என் அப்பா மாதிரியே இருக்கீங்க... ஆனா எனக்கு எங்கப்பாவை பிடிக்காது.
17. சில பேருக்கு எதுவுமே பெருசா தெரியாது.. பணம், புகழ், பேரு, மரியாதை.. இப்படி. எதையும் சட்டை பண்ணிக்க மாட்டாங்க..ஆனா சிலருக்கு இந்த உலகம் தீப்புடிச்சு எரியனும்.. நான் 2 வது கேட்டகிரி ( விருதகிரியை விட மோசமான ஆள் போல )
`18. சில விஷயங்கள் சிலருக்கு தெரியாம இருக்கறதே நல்லது
19. உனக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு.. ஆனா இந்த ஜோக்கருக்கு ரூல்ஸே இல்லை..
20. உன் முகமூடியை கழட்டு, அவளே தேடி வருவா..
21. தலை விழுந்தா உன் தலை தப்பும், பூ விழுந்தா சங்குதாண்டி..
22. மனுஷனோட உயிரை எடுக்க நமக்கு உரிமை இல்லை..
ம், ஆனா இவன் மனுஷனே கிடையாது
23. இந்த வண்டி புல்லட் புரீஃப் தானே?
ஆமா. ஆனா ராக்கெட் லான்ச்சர்க்கு எல்லாம் தாங்காது
அடடா.. நான் வேற வீட்ல சொல்லாம வந்துட்டேனே?
24. பேட்மேன் தான் உங்களை காப்பாத்துனாரா டாடி?
சொல்லப்போனா இந்த தடவை நான்தான் பேட்மேனை காப்பாத்துனேன்
25. தகுதியானவன் கூடத்தான் விளையாடனும்.. நான் உன் ரேஞ்சுக்கு திங்க் பண்றேன், நீ என் ரேஞ்சுக்கு திங்க் பண்ணு
26. இந்த ஜனங்க அட்டை மாதிரி, தேவைப்படும்வரை நம்ம கூடவே இருந்து நம்ம ரத்தத்தை உறிஞ்சிக்குவாங்க
27. இந்த உலகத்துல வாழனும்னு நினைச்சா எந்த ரூல்ஸும் வெச்சுக்கக்கூடாது
28. சாகறதுக்கு முன்னால தான் ஒவ்வொரு மனுஷனும் தன் உண்மையான சொரூபத்தை காட்டுவான்
29. காரைத்துரத்தும் நாய் மாதிரிதான் நான்./. துரத்தும் வரை துரத்துவேன், ஆளை பிடிச்சுட்டா அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாது எனக்கு
30. எல்லாமே போட்டு வெச்ச பிளான் பிரகாரம் செஞ்சா பயம் போயிடும்
31. மனுஷன் புத்தி குரங்கு புத்தி, அடிக்கடி மாறிட்டே இருக்கும்
32. இந்த உலகம் மோசமானது, நம்மால நல்லவனா வாழ முடியாது, வாழ விட மாட்டாங்க..
33. சில நேரங்கள்ல உண்மை வெளில வராம இருக்கறதே நல்லது,உண்மையை விட கற்பனைக்கு பவர் ஜாஸ்தி.. மக்களோட நம்பிக்கைக்கு பலன் கிடைச்சே ஆகனும்
34. அவர் ஏன் ஓடறார்?
அப்போதானே நாம அவரை துரத்திட்டு போக முடியும் ?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. டெட் பாடியில் செல் ஃபோன் இருப்பதும் அந்த ஃபோனுக்கு கால் பண்ண வில்லன் ஜெயில் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி ஃபோன் பண்ணுவதும், பாம் பிளாஸ்ட்டிங்கும்
2. சிறைக்கைதிகள் ஒரு போட்ல , பொது மக்கள் ஒரு போட்ல 2 போட்டையும் வெடிக்க வைக்கும் ரிமோட் பரஸ்பரம் ஆப்போசிட் கேங்க்ல.. யார் முதல்ல அமுக்கறாங்களோ அவங்க உயிர் பிழைக்கலாம்.. இந்த KNOT செம.. திரையில் ஆடியண்ஸிடம் டெம்ப்போ ஏற்றும் நல்ல உத்தி
3. பேட்மேனாக சரண்டர் ஆகும் போலீஸ் ஆஃபீசர் பொலீஸின் திட்டத்தை தன் காதலியிடம் சொல்லாமல் மறைத்து பின் பதறும் காதலியை சமாதானபப்டுத்தும் சீன்..
4. படம்முழுக்க விரவி நிற்கும் பிரமாண்டம்.. காட்சி அமைப்புகள், பிரமிக்க வைக்கும் நுணுக்கமான திரைக்கதை அமைப்பு.. ஒளிப்பதிவு, பின்னணி இசை.. வில்லனுக்கு அளிக்கப்பட்ட அபரித முக்கியத்துவம்
5. க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்..
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்..
1. தான் தான் பேட் மேன்னு நாடகம் ஆடி போலீஸ் ஆஃபீசர் சரண்டர் ஆகறார்.. அவரை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்களா? என்ன புரூஃப்னு கேட்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் பேட் மேன் டிரஸ் போட்டுட்டு பறந்து காட்டுன்னு சொல்ல மாட்டாங்களா? நிருபர்ங்க அத்தனை பேர் கூடி நின்னும் எந்த கேள்வியும் கேட்கப்படலையே?
2. ஓப்பனிங்க் ஷாட்ல கொள்ளை அடிக்கபட்ட பேங்க்லயே எல்லா கூட்டாளிகளையும் ஏன் போட்டுத்தள்ளனும்? பாதுகாப்பா வண்டி வில்லன் இடத்துக்கு வந்த பின் போட்டிருக்கலாமே? வில்லன் இன்னொரு வண்டில வழில வந்து வழி மறிச்சு கொள்ளை அடிகப்பட்ட வேனை ஆக்சிடெண்ட் மாதிரி செட் பண்ணி இருக்கலாமே?
3. ஒரு சீன்ல பேட் மேன் கண்ணாடி ஜன்னலை உடைச்சுட்டு உள்ளே குதிக்கறார். அப்போ ஒருத்தன் கைல கன்னோட வேடிக்கை பார்த்துட்டு இருக்கான்.. அப்பவே சுட்டு இருக்கலாம்.. பேட்மேன் ரூமுக்குள்ள எண்ட்டர் ஆகி திரும்பும் வரை வேடிக்கை பார்த்துட்டு அவர் சுதாரிச்சு எழுந்த பின் சுட முயற்சிப்பது அபத்தம். நம்ம ஊர்ல 40 அடியாளுங்க டோக்கன் சிஸ்டம் மாதிரி ஒவ்வொரு ஆளா ஹீரோவைமுறை வெச்சு அடிக்கற மாதிரிதான் இதுவும்
4. வில்லனோட கை ரேகை துப்பாக்கிக்குண்டோட ஒரு பகுதில போலீஸ்க்கு கிடைக்குது.. கிளவுஸ் போட்டிருந்தும் எப்படி ரேகை மாட்டுச்சு?
5. வில்லன் தன் சுய சரிதையை எதுக்கு ஒரு ஆள் பாக்கி விடாம சொல்லிட்டே இருக்காரு?
சி.பி கமெண்ட் - ஆக்ஷன், அதிரடி பிரியர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்க்லாம்,., செம ஸ்பீடு படம்.. சன் டி வில சண்டே அன்னைக்கு பார்த்தேன், இதன் அடுத்த பாக விமர்சனம் படிக்க http://www.adrasaka.com/2012/ 07/tthe-dark-knight-rises.html
ட்ரெய்லர் -
தொழில் நுட்பகலைஞர்கள்
Directed by | Christopher Nolan | |||
---|---|---|---|---|
Produced by | Christopher Nolan Emma Thomas Charles Roven | |||
Screenplay by | Jonathan Nolan Christopher Nolan | |||
Story by | Christopher Nolan David S. Goyer | |||
Based on | Characters by Bob Kane | |||
Starring | Christian Bale Michael Caine Heath Ledger Gary Oldman Aaron Eckhart Maggie Gyllenhaal Morgan Freeman | |||
Music by | Hans Zimmer James Newton Howard | |||
Cinematography | Wally Pfister | |||
Editing by | Lee Smith | |||
Studio | Legendary Pictures Syncopy Films DC Comics | |||
Distributed by | Warner Bros. Pictures | |||
Release date(s) |
| |||
Running time | 152 minutes[1] | |||
Country | United States United Kingdom[2] | |||
Language | English | |||
Budget | $185 million[3] | |||
Box office | $1,001,921,825[3] |