Showing posts with label CINEMA EXPRESS. Show all posts
Showing posts with label CINEMA EXPRESS. Show all posts

Wednesday, October 03, 2012

கமலுடன் எப்போ? மிஷ்கின் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

http://icdn.indiaglitz.com/tamil/news/miskint020506_1.jpg

இங்கே எதையும் துணிச்சல் என வெளிப்படையாக பேசி விட முடியாது. அதற்குள் ஆயிரம் பேசி விடுவார்கள். அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களையும் நம்முடைய சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதே இல்லை. ஆனால், சினிமா என வந்து விட்டால், இது அவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ, இவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ என சிறகு கட்டி விடுவார்கள். அதிலிருந்து தப்பிப்பதே பெரிய சவால். இந்தப் படமும் நிச்சயம் சவால்தான். சின்ன வயதில் நாம எல்லோரும் படித்த காமிக்ஸ் கதைதான் இது. ஒரு சூப்பர் ஹீரோ. அநியாயங்களை தட்டிக் கேட்பார். சில பிரச்னைகள், அதிலிருந்து மீள்வார். இது சாதராண கதைதான். அது எடுத்து வைத்திருக்கிற விஷயம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். என் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். "அஞ்சாதே' எல்லோரையும் கவனிக்க வைத்தது. "நந்தலாலா' நான் படைப்பாளியாக இருப்பதற்கு பெருமைப்பட வைத்தது. "யுத்தம் செய்' படத்தில் பெற்றோர்களின் கவலையை, கண்ணீரை எடுத்து வைத்தேன். இப்போதும் என் படங்களை பயந்து பயந்துதான் செய்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக. என் எல்லாப் படங்களிலும் ஏதோ புதிய விஷயங்களை முன்னெடுத்து வந்திருக்கிறேன். விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். "முகமூடி' நிச்சயம் வேறு மாதிரியான படம்தான்





.ஜீவா முன்பு மாதிரி இல்லை. எதிர்பார்க்காத இடத்துக்கு வந்து விட்டார். அவருக்கான இடத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?




ஜீவா இப்போது ரொம்பவே ஷார்ப். முதன் முதலில் நான் சந்தித்த ஜீவா இப்போது இல்லை. நாளுக்கு நாள் பக்குவப்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவருடயை சினிமா அக்கறை என்னை ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்திலும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு இது நம்பிக்கையான படம். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சிம்பிளான கதையானாலும், தொழில்நுட்ப ரீதியில் படமாக்கும் போது பெரிய சவால் இருந்தது. படத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரொம்பவே வெயிட்டான சூப்பர் மேன் உடை அணிந்து நடித்தார். ஷாட் இல்லாத போதும் அதை அணிந்திருக்க வேண்டிய அவசியம். ஏ.சி. அறைக்குள் அமர்ந்திருந்தாலும் வியர்க்கும். ரொம்பவே கஷ்டம். ஜீவா இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருந்திருக்குமா என்று சொல்ல தெரியவில்லை. ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் காத்திருக்கிறது. ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஹிந்திக்கும் போக போகிறார் என சொன்னார்கள். அவருக்கு இன்னும் தகுதிகள் கிடைக்கும்.





என்ன, நரேனை வில்லனாக்கி விட்டீர்களே?




நரேன் என் பெருமை மிகு தயாரிப்பு என சொல்லலாம். நான் கேட்டால் அவன் எந்த வேடத்திலும் நடிப்பேன் என்பான். அந்தளவுக்கு குரு பக்தி மிகுந்தவன். ""நீங்கதான் சார் என்ன தூக்கி விடணும். வேறு யாரு எனக்கு இருக்கா''ன்னு கேட்கும் போதே, என் பழைய வாழ்நாள் ஞாபகத்துக்கு வந்து விடும். என்னை மாதிரியே நிறைய உழைப்பான். சினிமா பற்றி நிறைய தெரிந்தவன். நரேன்தான் இதற்கு சரியாக வருவான் என்று தோன்றியது. கேட்டதும், ""எப்போ சார் ஷூட்டிங் வரணும்''ன்னு கேட்டான். ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடுகள் எல்லாம் அவனுக்கு தெரியாது. அவனிடம் கேட்டுப் பாருங்கள். ""நான் சினிமா நடிகன்'' என ரொம்பவே சிம்பிளாக பதில் சொல்லுவான். ரொம்பவே நம்பகமானவன். இது போக உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செல்வாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்திருக்கிறேன். அப்புறம் ஹீரோயின்ஸ்... பூஜா ஹெக்டே, மும்பை பொண்ணு. நல்லா நடித்திருக்கிறார்.





"மிஷ்கின் இயக்கத்தில் கமல்' என்று செய்தி வந்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அதன் பின் எந்தவொரு பெரிய ஹீரோவுக்கும் கதை சொல்லுவதே இல்லையா? அஜித், விக்ரம், விஜய், சூர்யா யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா?





அதை கதைதான் தீர்மானிக்க வேண்டும். நான் யாரையும வலுக் கட்டாயமாக எந்த கதைக்குள்ளும் கொண்டு போய் திணிக்க முடியாது. அப்படி செய்தால் அது நல்லா இருக்காது. நீங்கள் சொல்லுகிற எல்லோருமே அருமையான நடிகர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன். அஜித் அருமையான மனிதர் என கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் எந்த கதைக்கும் சரியாக பொருந்துவார். விக்ரம் பெரிய பெரிய இடங்களுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். சூர்யாவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இவர்களுக்கெல்லாம் கதை தயார் செய்யும் எண்ணத்துக்கே நான் இன்னும் போகவில்லை. யாருக்காவது ஒருவருக்கு படம் இயக்கினாலும் என் பாணி மாற வேண்டும். அந்த பக்குவம் எனக்கு இப்போதைக்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு தகுந்த கதைகள் அமைந்து, அதில் அவர்கள்தான் நடிக்க வேண்டும் என தேவை ஏற்பட்டால் நிச்சயம் நடக்கும். அதை அப்போதைய சூழல்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு எனக்கு இந்த இடம் போதும்.




"நந்தலாலா' உங்களை நல்ல நடிகராகவும் பளிச்சிட வைத்தது. தொடர்ந்து நடிக்கலாமே?



நண்பர்கள் பலரும் இதை கேட்கிறார்கள். எனக்கான கதைகள் அமையும் போது நிச்சயம் நடிப்பேன். மற்றபடி வேறு ஒருவரின் இயக்கத்தில் நடிப்பது சரியாக வருமா என்று தெரியவில்லை. யோசிக்கலாம்.இந்தப் படத்திலும் கே-தான் மியூசிக். அவரின் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல்?ரொம்பவே இசை தெரிந்தவன் கே. "யுத்தம் செய்' படத்தின் போது, ரொம்ப சின்ன பையன். ஆனால் அவன் பேசுகிற விஷயங்கள் ரொம்பவே ஆச்சரியம் அளிக்கும். ""உனக்கான உயரம் ரொம்பவே பெரிதாக இருக்கும்''ன்னு அவனை அழைத்துக் கொண்டு வந்து, "யுத்தம் செய்' படத்தில் மியூசிக் செய்ய வைத்தேன். எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டான். நிறைய இசை ஞானம் உள்ளவன். இப்போது கூட "ஆரோகணம்' படத்தில் ஒரு பாட்டு... அவ்வளவு சூப்பர். நல்லா வருவான்




.தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை கவனிக்கிறீர்களா? "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு அவ்வளவு கூட்டம் இருந்தது. "வழக்கு எண்' பரவலான பாரட்டுகளைப் பெற்றது. மக்களின் ரசனையை புரிந்துக் கொள்ள முடிகிறதா?



மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் படைப்பாளிகள்தான் அவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். ""ஒன்றுமே தெரியாமல் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் சேர்ந்தேன். இன்றைக்கு பெரிய இயக்குநராகி விட்டேன்'' என இனி யாரும் பேட்டி கொடுக்க முடியாது. ஏனென்றால் முதல் படத்திலேயே ரசிகர்கள் "செக்' வைக்கிறார்கள். அசிஸ்டெண்ட்டா சேர வேண்டும் என்கிற ஆசையில் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான். ""யாரையெல்லாம் படிச்சிருக்க''ன்னு கேட்டா, ""படித்தவர்களெல்லாம் சினிமாவில் சாதிக்க முடியாது''ன்னு ரொம்பவே சிம்பிளா பதில் சொன்னான். அவனை திட்டி அனுப்பி விட்டேன். முதலில் சினிமாவுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து விட்டால், நிறைய படியுங்கள். காலி டப்பாவாக வந்து இங்கு எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

Tuesday, October 02, 2012

பிரியாமணி பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUhlIrPNUJjw5uDIwWKa4V9iys-rN9ALotVs8oCaDzTeIBQnUH2Nz7nhnrfhOqHwPcBjYMPLdxcLMNMhjSW1QmAJFbtvJ7mGFQl38VOlkr_rg-_ZmWKGVitpLcTDiQ_f1SQRejEA4dy0N1/s1600/866854_f520.jpg 

சாருலதா' படத்தின் இசை வெளியிட்டிற்காக சென்னை வந்திருந்தார் பிரியாமணி. பேட்டி என்றதும் தான் தங்கியிருந்த இடத்திற்கு வரச்சொன்னார். அங்கு போய் கதவு தட்டினால் ""வாங்க சார்''. அழைக்கிறது பிரியாமணியின் அக்மார்க் குரல். ஷூட்டிங், மீட்டிங், டப்பிங் போன்ற களைப்பு சோர்வுகள் மீறி பளபளக்கின்றன கண்கள். முகம் பார்த்து கனிவாக பேசத் துவங்கினார் பிரியாமணி.




 
தமிழ் சினிமாதான் உங்களுக்கு முகம் தந்தது. இருந்தும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?



நல்ல படங்களாக தேர்வு செய்ய வேண்டும் எனக் காத்திருந்தேன். நல்ல கதைகள் அமையவில்லை. அதனால் வருத்தம் இல்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையா? அதனால்தான் இந்த இடைவெளி. நான் கொஞ்சம் நல்ல கதைகளாகத்தான் பார்ப்பேன். என் நடிப்புக்கு ஸ்கோப் இருந்தால்தான் நடிப்பேன். அப்படி பார்த்து பார்த்து செய்த படங்களே சில நேரங்களில் காலை வாரி விட்டு விட்டன. எல்லாமே பிடித்து நடித்த படங்கள்தான். சில நேரங்களில் நாம வைக்கிற குறி தவறாகி விடுவது உண்டு இல்லையா? ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என்று எல்லாம் பார்த்துதான் ஒரு படம் செய்ய முடியும். அதுக்காக அவ்வப்போதுதான் தமிழுக்கு வருவேன் என்று சொல்ல வரவில்லை. தொடர்ந்து நல்ல வேடங்கள் கிடைத்தால் எப்போதுமே தமிழ் சினிமாவில் இருக்கத் தயார்.





பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்னம், அமீர் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் சாய்ஸில் இருந்தீர்கள். இப்போது ஒரு அறிமுக இயக்குநரின் "சாருலதா' படத்தில்....?




கதை நன்றாக இருந்தால் யார் இயக்குகிற படத்திலும் நடிப்பேன். அவர் படம், இவர் படம் என்ற செண்டிமெண்ட் இருந்தால் சினிமாவில் இருக்கவே முடியாது. எனக்கு சினிமாவில் இருக்கிற எல்லோருமே நண்பர்கள்தான். முன்னணி இயக்குநர் என்பதெல்லாம் படத்தின் வெற்றியை பொறுத்துதான் இருக்கிறது. "பருத்தி வீரன்'தானே அமீர் சாரின் அடையாளம். "சாருலதா' படத்தின் இயக்குநர் பொன் குமரன். தமிழ்நாட்டுக்காரர்தான். ஆனால் முதல் ஹிட் கன்னடத்தில் கொடுத்திருக்கிறார். கடுமையான உழைப்பாளி. எனக்கு அவரை நன்றாகத் தெரியும். தலாய் மொழியில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட படம் "அலோன்'.அந்தப் படத்தின் உரிமையை முறையாக பெற்று இந்தப் படத்தை செய்திருக்கிறார். "அலோன்' படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். எனக்கு பிடித்த சினிமாக்களில் அந்த படத்துக்கு முதலிடம். அதே கதையில் நான் நடிப்பது அதிர்ஷ்டமான விஷயம்.




ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் கதை. ஒரே நேரத்தில் இரண்டு வகையான நடிப்பு, மலைக்க வைக்கிற உழைப்பு தேவைப்பட்டிருக்குமே?




ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதை. கான்ஜாயிண்ட் டிவிஸ்ன்னு சொல்லுவாங்க. ஒரே உடம்பு. இரண்டு மனசு. குணாதியசங்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சவால்கள் நிறைந்த கதை. கிராபிக்ஸ் பெர்பெக்டா இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாந்து விட வேண்டியதுதான். இயக்குநர் சொல்லும் போதே, பெரிய ரிஸ்க் இருப்பதாக தெரிந்தது. ஒரிஜினல் படத்தை பார்த்தவள் என்பதால் அதை நடிக்க தைரியம் இருந்தது. மூன்று படங்களுக்கு கொட்ட வேண்டிய உழைப்பு. அதை கொடுத்திருக்கிறேன். ஷூட்டிங் முடிந்த நாள்.""பிரியா மேடம் நீங்கள் இருந்ததால்தான் இந்தப் படம் சாத்தியமாகி இருக்கிறது'' என்றார் இயக்குநர் பொன் குமரன். ஒரே சமயத்தில் இரண்டு அவதாரங்கள் எடுத்து நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். தேங்க்ஸ் டு பொன்குமரன்




இதே... இதே... கதைதான். கே.வி.ஆனந்த் இயக்க, சூர்யா நடிப்பில் "மாற்றான்'. உங்களுக்கும் இந்த விஷயம் தெரிந்துதான் இருக்கும்?




நிச்சயம் தெரியும். ஆனால் இந்தக் கதையைத்தான் மாற்றானும் சொல்ல வருகிறதா என்று தெரியவில்லை. பார்க்கலாம். நானும் காத்திருக்கிறேன்




.எந்த சினிமாவாக இருந்தாலும், நிறைய இடைவெளி விடுகிறீர்கள். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எதாவது முடிவு எடுத்து இருக்கிறீர்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwems70YoKLS5zKkKJiswwu0KdqSgQO7XM_BuKnyTqVqCPF8glhlFXp4eBj4fV7-Yn5hyphenhyphen49PrmcE-bj6TqIKyoa8KrPmNMCPJghjyKXYEVrdh9LpIzRC54TMuc3P1nvJEzBNHKt3YkUaH9/s400/priyamani-hot-wet-bathing-images-01.jpg


சினிமாவில் என்ன கொள்கை? எதுவும் கிடையாது. ஆனால் வித்யாபாலன், நந்திதா தாஸ், தபு, பிரியங்காசோப்ரா போன்றவர்கள் மாதிரி கேரக்டர் ரோலில் நடிக்க ஆசைப்படுகிறேன். இவர்கள் நடித்தால் எல்லாமே புதிதாக இருக்கிறது. கல்யாணம் ஆகி, குழந்தை பெற்ற பின்னரும் நடிக்க வந்திருக்கிறார் நந்திதாதாஸ்.இது மாதிரியான ஒரு இடம்தான் என் சினிமா கனவு. இது எல்லோருக்கும் வாய்க்காது. அப்படி நடிக்க ஆசை இருந்தால் கூட, எத்தனை பேருக்கு அப்படி ஒரு இடம் கிடைக்கும். என்னை இயக்குகிற இயக்குநர்களிடம் நான் சொல்லும் விஷயம். ""என் பெயரை சொல்லி படத்தை விற்க பார்க்காதீங்க. என்னை ஒரு ஆர்ட்டிஸ்டா யூஸ் பண்ணுங்க'' என்பதுதான். இதை புரிந்துக் கொள்ளதா போதுதான் கோபம் வருகிறது.





இப்படி பேசுறீங்க. ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தமிழில் காட்டாத கிளாமரை அங்கு காட்ட வேண்டிய அவசியம் என்ன?





தை கதைகள்தான் முடிவு செய்கின்றன. நான் விரும்பி எதையும் ஏற்கவில்லையே. கிளாமர் எனக்கு பிடிக்கும் என்பதற்காக பருத்தி வீரனிலும், ராவணனிலும் "ஒரு கிளாமர் சீன் கொடுங்க' என்று கேட்க முடியாது. அப்படியான கதைகள் இல்லை அதெல்லாம். மலையாளத்தில் நீச்சல் உடையில் நடித்தது பெரும் பரபரப்பாகி விட்டது. தேவைப்பட்டதால் நடித்தேன். முதலில் பிரியாமணியை நடிகையாக பாருங்கள். அப்போது எல்லாமே சரியாக தெரியும். சில்க் பற்றிய படத்தில் வித்யாபாலன் நடித்ததால், விமர்சனங்களை எதிர்க் கொண்டார். ஆனால் அவரை தேடி வந்தது ஒரு தேசிய விருது.



அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, கார்த்திகா என எல்லோரும் முன்னணி வரிசைக்கு காத்திருக்கிறார்கள். இதில் உங்கள் இடம் இனி எப்படி இருக்கும்?





மற்றவர்களின் இடங்களை பிடிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. இப்போது வந்தவர்களுடன் என்னை இணைத்து பேசுவதே எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏழெட்டு வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வந்தவர்களை வைத்து கேள்வியை கேட்காதீர்கள். என் நடிப்பு, உழைப்பு என்னை எங்கு அழைத்துக் கொண்டு போகிறதோ, அந்த இடம் போதும் எனக்கு.



சம்பளத்தை வேண்டுமானால் குறைத்து கொள்கிறேன். நல்ல வாய்ப்புகள்தான் எனக்கு முக்கியம் என நீங்கள் சொல்லியிருந்ததாக ஒரு தகவல்...?




நான் 18 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதுவரை என்னைப் பார்த்து யாருக்கும் போரடிக்கவில்லை. அதனால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்க முடியாது. மணி சார் அழைத்து "ராவணன்' பட கேரக்டர் சொன்னதுமே, பிடித்திருந்தது. நடிக்கவும் சம்மதித்தேன். அது மாதிரியான கேரக்டர்கள்தான் வேண்டும். நாலு நல்ல படங்களில் நடித்த திருப்தி நிச்சயம் தேவைப்படும். அதுக்காக நடிக்கிறேன்



.உங்களிடம் பெர்சனல் கேள்விகள் கேட்ட காலமெல்லாம் தாண்டி விட்டது. அடுத்த லைஃப் பிளான் என்ன?


சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ""நல்ல நல்ல சினிமாக்களில் இந்த பொண்ணு நடிச்சிருக்குப்பா''ன்னு வருங்காலத்தில் ரசிகர்கள் பேசிக் கொள்ள வேண்டும். அது போதும்.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxvhOIlqqJDoplu9qsh1tbZIGnC4u30k8oeWGndyUnI6Bxhmw1vKfC4kaq0eZqpo_N0IQhYHzvqvdrY_M9HhHAjBEi0tCV7pnpjuiRBgrisIR5LgTCUryHvQywg2qcqXVJRdLV7JJ8FHhY/s640/priyamani-hot-hot.jpg