Showing posts with label CINEMA. Show all posts
Showing posts with label CINEMA. Show all posts

Friday, August 24, 2018

= ப்ரிபெய்டு பிளானா? போஸ்ட் பெயிடு பிளானா?

அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் #
# அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிடுமா?இது என்ன புது சிஸ்டம்?


=============


2 கலைஞருக்கு மெரினாவில் தரவில்லை என்றால் நானே போராட்டம் நடத்திருப்பேன்- ரஜினி
// எல்லாத்துக்கும் போராடுனா நாடே சுடுகாடாயிரும் னு"யாரோ சொன்னாகளே?


==============


3 திருவாரூர்..திருப்பரகுன்றம் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டி இடுவோம்- சீமான்..
# திருப்பரங்குன்ற முருகருக்கு அரோகரா அரோகரா வேட்பாளருக்கு கோவிந்தா கோவிந்தா


==============



4 எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?.. அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மிரட்டல் # ஜெ,மீண்டும் ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழகத்தைக்காப்பாத்த முடியாது"னு சொன்னப்ப ஜெ"டூர் போய்ட்டாரா?


=========


5 அரசியலில் காமராசர்
கக்கன் மாதிரி உதாரணம் காட்டக்கூட இப்போது ஆள் இல்லை நடிகர் பார்த்திபன் வேதனை -செய்தி # உதாரணபுருசனா மாறப்போறேன்னு இவரும் கட்சி ஆரம்பிச்சுடுவாரோ?


=============



6 தமிழக முதல்வரைக் கண்டு இயற்கைச் சீற்றங்களே அஞ்சுகின்றன.
-செல்லூர் ராஜூ தில்லாலங்கடி ஆள் னா அவரை கேரளா ஆலுவா ஏரியா க்கு அனுப்பி வைக்கலாமே?


==================


7 மதுரைக்காரர்கள் உண்மையைத்தான் பேசுவோம் -செல்லூர் ராஜு # சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் காமெடி யை மிஞ்சும் காமெடி


======================


8 திமுக வில் கொலை, கொள்ளை குற்றவாளிகளுக்கு இடம் இல்லை ~ஸ்டாலின்
# அப்போ வேட்பாளர்களுக்கு எங்கே போவீங்க? ஏற்கனவே எம் எல் ஏ வா இருந்தவங்களுக்கு சீட் இல்லைங்கறாரா? அண்ணன் அழகிரிக்கான அட்டாக்கா?


=============



9 விஜய்க்காக அண்ணாமலை படத்தை டிங்கரிங் செய்யும் அட்லி # டைட்டில் "வடை மாலை"


=================


10 வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி.
# தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே இதுவரை அதிகம் தந்தது இவர்தான்,குட்


===================


11 சென்னை வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றினால் விரைவாக செல்லலாம்.. 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் # மதுவிலக்கு,சிகரெட் பிரச்சனை,இவற்றைத்தொடர்ந்து பாமக இதிலும் ஜெயிக்க வாழ்த்துகள்.மக்கள் நலனுக்கானது


====================


12 என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..!" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி | மாசமும் அமாவாசை உண்டு,ஒவ்வொரு அரசியல்"கட்சிலயும் அமைதிப்படை அமாவாசை உண்டு,அதிமுக வுக்கு ஒரு ஓபிஎஸ் ,திமுக வுக்கு அழகிரி


========================



13 கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை பாஜக அரசு உருவாக்கியுள்ளது - பிரதமர் மோடி # மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அவ்ளோ பேர் இருப்பாங்களா?ஒரு வேளை பக்கோடா ,போண்டா,பஜ்ஜிக்கடை ஓனர்சை சொல்றாரா?



===================


14 நீங்கள் பயன்படுத்துகின்ற இணையதளம் கலைஞர் போட்ட பிச்சை - தமிழன்பிரசன்னா.#
நரசிம்மராவ் ஆட்சி மத்தியில் ஜெ அரசு மாநிலத்தில். 1995 ஆகஸ்ட் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. என்ன வேணா அடிச்சு விடுவாங்க..போல



====================


15 திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
# கருணா"நிதி" உயிரோட இருந்தப்பவே பிரச்னை கிளப்பி இருக்கலாமில்ல?



===================


16 திமுகவை ஒழிக்க மத்திய அரசு திட்டம்.. சுப்புலட்சுமி ஜெகத பகிரங்க குற்றச்சாட்டு # கவலைப்படாதீங்க தமிழகத்தில்
ஊழல் ,லஞ்சம்,சாராயம் ,திராவிடக்கட்சிகள் இந்த நான்கையும்"ஒழிக்கவே முடியாது


===================


17 காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.-தயா அழகிரி # சாம்பார் ,ரசம்,தயிர் அவர் வீட்ல ரெடி பண்ணிக்குவாரோ?



===================



18 வெளியில் கடையில் ரூ,25க்கு விற்கும் கோதுமையை, ரூ.2 க்கு அரசு கொடுக்கிறது - பிரதமர் மோடி #
ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா அதை உற்பத்தி செய்யுற விவசாயிக்கு நட்டம் தானே?விவசாயம் தழைக்க,விவசாயி பிழைக்க வழி என்ன?


==================



19 தமிழகத்தை காப்பாத்த மூணு ப்ளான் வைத்துள்ளேன்! - ரஜினிகாந்த் # ப்ரிபெய்டு பிளானா? போஸ்ட் பெயிடு பிளானா?ஜியோ சிம் பிளான்தான் இப்ப டாப் ல இருக்கு


===============


20 குடும்ப அரசியல் கூடாது என்பதற்காகவே கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர் - மாஃபா பாண்டியராஜன் "சசிகலா குடும்பம் ஆதிக்கம் ,ஓபிஎஸ் குடும்ப ஆதிக்கம்,
அதிமுக எம்.பி ஜெயவர்தன் (அமைச்சர் ஜெயக்குமாரின் மகன்)இவங்க எல்லாம் எந்த லிஸ்ட்?


===============

Thursday, August 23, 2018

= சாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்?

பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய்
"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா இருந்தா 40 பவுன் போட்டு கல்யாணம் கட்டிக்கலாமே?


==============


2 தமிழிசை,ஹெச் ராஜா கவனத்துக்கு ,கோலமாவுகோகிலா ல இந்துக்களை புண்படுத்தும் ,இந்து மதத்தினரை புண்படுத்தும் பல காட்சிகள் இருக்கின்றன.தடை விதிக்கப்போராடவும்
பை ஈரோடு மாவட்ட நயன் தாரா பேரவை


================


3 கேரளாவில் பணிபுரியும் தமிழர்கள் கவனத்துக்கு,போக்குவரத்து,சாலைகள் சரியான பிறகு (24/8/18)நீங்கள் பணிக்கு திரும்பும்போது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருக்கிறதா?என செக் செய்து கொள்ளவும். வெள்ளம் வந்து வடிந்ததால் காய்ச்சல் பரவும் அபாயம் உண்டு


================


அறிமுகமே இல்லாதவரின் வெற்றி உனக்கு சந்தோஷத்தைத்தந்தால்
பழகியவரின் தோல்வி உனக்கு வருத்தத்தைத்தந்தால் நீ போகும் பாதை சொர்க்கத்தை நோக்கி


=================


5 ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவும்போது செல்பி எடுக்காதீர்!உங்கள் சுயரூபம் தெரிந்துவிடும்



================


6 குருவே!
அதிகம் பேசறவங்க தான் நினைச்சதை சாதிச்சுக்கறாங்க..என்ற கருத்து உண்மையா? ஒருவேளை அதிகமா பேசறதுதான் சாதனை னு நினைச்சாங்களோ என்னவோ?போதிக்கறவன் வேணா அதிகம் பேசலாம்,சாதிக்கறவன் பேச மாட்டான்,பேசறவன் சாதிக்க மாட்டான்


===============


7 சில்லறை கேட்டால் இருக்கு னு"சொன்னா"சில்லறைப்பசங்க"னு"பேரு"வந்துடும்
இல்லை என்பவர்கள் நாணயமில்லாதவர்கள் னு"பேரு வாங்குவாங்க வாழ்ந்தாலும் ஏசும்;தாழந்தாலும் ஏசும் மொமெண்ட்


=============


8 கோபத்தினால் நீங்கள்
சம்பாதிப்பது வீண் வம்புகளையும் எதிரிகளையும் மட்டுமல்ல,பிளட் பிரஷரையும்,டென்ஷனையும்"தான்,மற்றவர்கள் மீது"நீங்கள் படும் கோபம் உங்கள் உடல்நலனுக்கு எதிரி


=================



9 சாமி"கும்பிடும்போது ஜனங்க"கண்மூடறாங்களே அதுதான் கண் மூடித்தனமான நம்பிக்கை


==============


10 பெண்கள் உங்களைக்கண்டுக்கலை என்ற கவலையா?உங்கள் வருகையை"தினம்"எதிர்பார்த்துக்காத்துக்கிடக்கனும்னு எண்ணமா?
பால்காரராகவோ பேப்பர் போடற பையனாகவோ பார்ட்டைம் ஜாப் செய்யவும்


====================

11 நல்ல வேளை,மாடர்ன்"பொண்ணுங்க லெக்கின்ஸ் +டாப்ஸ்"டக் இன்"பண்றது ஒரு பேஷன்"னு பாலோ பண்ணலை,எதிர்காலத்துல"வந்தாலும் வரலாம்


===========



12 எனக்கு தெரிஞ்சு பெரும்பாலான பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டா பெல்ட் போடுறதே இல்ல!! ஏன்?
பெல்ட் போட்டா இடுப்புல தழும்பு ஏற்படும்னு நினைக்கறாங்க,ஸ்கூட்டி பியூட்டி கள் பிரேக் போடறப்ப கால்களை தரை ல தேய்க்கற மாதிரி 2 மே மூட நம்பிக்கை தான்


==============


13 சாதா முத்தம்
செல்ல முத்தம் என்ன வித்யாசம்? சாதா முத்தம் நாம பொண்ணோட உதட்ல/கன்னத்துல தர்றது. "செல்"ல முத்தம் என்பது பொண்ணுங்க பேசிட்டு இருக்கற(ப்ப)"செல்"ல"முத்தம் தர்றது


=================


14 சென்னை− திருவனந்தபுரம் 12695,12696
கேரளா எக்ஸ்பிரஸ் 12625 இயங்கத்தொடங்கி விட்டது.வழக்கமாக 60 கிமீ −75 கிமீ வேகத்தில் செல்வது இன்னும் 2 நாட்களுக்கு 40−50 கிமீ வேகத்தில் இயங்கும்


=============


15 விஜய் நேரடியாக கேரள"முதல்வர் நிதி கணக்கில் பணம் தராமல் ரசிகர்கள் மூலம் தந்ததை பலர்"குறை கூறுகிறார்கள்.சென்று சேரும் இடம் சரியானதாக இருந்தால் போதும் ,வழி முக்கியமல்ல.அய்யர்(குருக்கள்) கிட்ட பூ குடுத்து விடுவதற்கும் ,நேரடியா சாமி சிலைல பூ வைப்பதற்கும் என்ன வித்யாசம்?


=================


16 குருவே!‌நாம ஜெயிக்கனும்னா எதிரியை விட நாம பலசாலியா இருக்கனும்,
இல்ல எதிரியை பலவீனம் ஆக்கனும்.! என்பது உண்மையா? ரன்னிங்க் ரேஸ்ல முதல்ல ஓடறவனை முந்தத்தான் பாக்கனும்,அவன்"காலை வாரி விட குனிஞ்சா 3 வதா வர்றவன் முந்திக்குவான்


===================


17 வழுக்கை தலையன் திருப்பதி போனா என்ன பிரயோஜனம்?
இது என்ன கேள்வி?மொட்டை அடிக்கவா போறாங்க?திருப்பதி லட்டு பிரசாதமா கிடைக்குதே?அதுக்கு வழுக்கை,சொட்டை விதிவிலக்கா என்ன?


==================


18 மனுஷ்யபுத்திரன் ஹெச் ராஜா மீது போலீசில் புகார் கொடுக்கும்போது பி.ராஜா என தவறுதலாக புகார் கொடுத்து விட்டார்.இது செல்லாது.


===================


19 நீ புத்திசாலியா இருந்தா நான்"முட்டாள் இல்லைனு தெரியும்



=================


20 சமைப்பது சுலபம்
நாக்குக்கு ருசி என நூடுல்ஸ் அடிக்கடி சமைப்பது சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடானது.குழந்தைகளுக்கு இந்த ருசியை பழக்காதீர்கள்


================

சாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்?

தலைவரே!இதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம்?


78
சராசரியா சம்பளம் எவ்வளவு?
10,000 ரூபா (அந்தக்காலத்துலயே)
சரி,இளையராஜா எத்தனை படம்?
படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல)
1000 படம் மேல சம்பளம் ?
இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம்?



=============


2 தலைவரே!எதுக்காக சமையல்காரம்மா முனியம்மாவை"அனுப்பிட்டு"ரோசியை வீட்டு சமையல் பண்ண விட்டுட்டீங்க?


இனிமே யாரும் என்னை ஓசி சோறுனு கிண்டல் பண்ண முடியாது,ரோசி (சமைச்ச) சோறு"னு பதிலடி"குடுத்துடுவமில்ல?



===============


3 குருவே!நாத்திகர் எவரும் கோவில் சிலைகளை திருடவில்லை..னு"சொல்றாங்களே,உண்மையா?


ஆமா,பிசாத்து காசு 10,000 ,20,000 திருடுனா கட்டுபடி ஆகுமா?அவங்க டார்கெட் கோடிகள்ல..



==============


4 தலைவரே!தேர்தல் வரும்போது"வீடு வீடா படி ஏறி "அம்மா ,தாயே !ஓட்டு போடுங்கனு பிச்சை எடுப்பது யாரு?


நாம
கோடிக்கணக்குல ஊழல் பண்ணி சொத்து சேர்த்தாலும் கட்சித்தொண்டன்கிட்டயே தேர்தல்நிதி பிச்சை எடுப்பது யாரு?
அதும் நாம ,எதுக்கு பழைய குப்பையை கிளறனும்?
இணையம் நீங்க போட்ட பிச்சையாமே?



==============


5 தலைவரே!தமிழை வளர்த்தார் ,தமிழை வளர்த்தார்னு எல்லாரும் சொல்றாங்களே?


செல்வியோட முழுப்பேரு தமிழ்ச்செல்வி,இப்ப புரியுதா?



==============


6 ஜோசியரே! ,பொண்ணு ரொம்ப சுத்த பத்தமா இருக்கனும்,அப்டி ஒரு ஜாதகம் கொண்டுவாங்க


கவலையேபடாதீங்க,மியூசிக்கலி வீடியோ போடறதா இருந்தாலும் குளிக்கற வீடியோதான் போடும்,எவளோ சுத்தம் பாருங்க



==============


7 பேங்க் மேனேஜர்"சார்,செல்"போன் வாங்க லோன்"வேணும்


ஓஹோ,என்ன"போன்?
லெ"loan"னோவா



==============



8 வரலாறு மிஸ் வனஜா = மோனோலிசா எதுக்கு புகழ் பெற்றவர்?


மாண்பு மிகு மாணவன் = மோனோ ஆக்டிங்க்"க்கு னு நினைக்கறேன் டீச்சர்



==============


9 குருவே!அனைத்து ரகசியங்களும்

வெளி(யிட)ப்படும் இடம்,
டீக்கடை பெஞ்ச்.!!னு சொல்றாங்களே ,அது"நிஜமா?
ஆமா,நல்லவேளை,டீக்கடைக்கு பொறணி பேசற பொண்ணுங்க அதிகம் வர்றதில்ல



==============



10 தரகரே!பொண்ணுக்கு இடது கை பழக்கமா?வலது கை பழக்கமா?

2 கையும் பழக்கம்தான்,ஏன்"கேட்கறீங்க?
அய்யய்யோ, 2 கன்னத்துலயும்"அறை வாங்க"வேண்டி வருமே?


==================


11 ஈரோடு ல சுத்தி பாக்கற மாதிரி என்ன இடம் இருக்கு??

ஆட்டோ ஸ்பேர்ஸ் கடைகள்
புரில
அங்கே தான் "சுத்தி" பார்க்க முடியும்


====================


12 தலைவரே!சொந்தமாக வீடு, கார் இல்லாமல் இருந்தவர்னு உங்களைப்புகழ்ந்திருக்காங்களே!

அதுதான்யா சாணக்கியத்தனம்.உழைச்சு சம்பாதிச்சதைதான் நம்ம பேர்ல வாங்கனும்,ஊரான் சொத்தை அடிச்சு சம்பாதிச்சதை சம்சாரம்,மகன்,மகள்,பினாமி பேர்ல தான் வாங்கனும்


==================


13 டாக்டர்,நகம் கடிக்கறவங்கள்ல 89% பேர்"மத்தவங்களை மதிக்க மாட்டாங்களாமே ,அது நிஜமா?

ஆமா,பொதுவா பொண்ணுங்கதான் நகம் கடிப்பாங்க,பொண்ணுங்க மத்தவங்களை மதிச்சதை கல்வெட்டுகள்ல,ஓலைச்சுவடிகள்ல படிச்சிரூக்கேன்


==================



14 தலைவரே!கோகோ வை தடை பண்ணனுமாம்

அந்த கேம்க்கு என்னய்யா?பொண்ணுங்க சிட்டாட்டம் விளையாடுவாங்களே?
அப்டேட் ஆகுங்க,கோல மாவு கோகிலா படத்துல இந்துக்கடவுளை கிறிஸ்டியன் டைரக்டர் அவமானப்படுத்திட்டாராம்


===================


15 இன்னைக்கு பிரேயர்ல காலம் தவறாமை பத்தி பேசச்சொன்னோமே?ஏன் பேசல?

சாரி சார்,ஸ்பீச் ரெடி பண்ண லேட் ஆகிடுச்சு,நான் ஸ்கூல் வர்றப்ப ப்ரேயரே முடிஞ்சிடுச்சு


==============


16 பிரபல"ரைட்டர் = என் நாவலைப்பற்றி எழுதி உங்க டைம்லைன்ல போஸ்ட் போட்டு அந்த லிங்க்கை கமெண்ட்டா என் டைம்லைன்ல போட்டா குலுக்கல்"முறைல, 10 பேரை தேர்ந்தெடுத்து ஓட்டப்பந்தயம்"வெச்சு,3 பேருக்கு என் புக்கை"இலவசமா தருவேன்

சார்,ஒரு பர்லாங்க் தூரம் நடந்தா லைப்ரரி வரும்,அங்கே போனா போதாதா?


================


17 மிஸ்,பால்/ஹார்லிக்ஸ்"குடிக்கறப்ப எப்பவும் உதட்ல சிந்தினபடிதான் குடிப்பீங்களா?கர்ச்சீப்ல துடைச்சுக்கலாமில்ல?

பால் வடியும் முகம்னு ஊரு"சனம் சொல்லுமில்ல?


================


18 சாதா முத்தம்
செல்ல முத்தம் என்ன வித்யாசம்?
சாதா முத்தம் நாம பொண்ணோட உதட்ல/கன்னத்துல தர்றது. "செல்"ல முத்தம் என்பது பொண்ணுங்க பேசிட்டு இருக்கற(ப்ப)"செல்"ல"முத்தம் தர்றது


==============


19 குருவே!தலையில் வைக்கும் பூச்சரத்தின் நீளம் குறைய குறைய பெண் வளர்கிறாள்.என அர்த்தமா?

ஆமா,அது கன்னிப்பெண்ணுக்கு.மணமான பெண் மணமான புதுசில் 4 முழம்,அடுத்த வருசம் 3 என படிப்படியாக குறைந்து 5 வது வருசம் வைக்கறதே இல்ல



================


20 வீட்ல ஏதாவது ரெஸ்டாரண்ட் வச்சிருக்கிர மாப்பிள்ளையா பாத்து மேரேஜ் பன்னி குடுத்தாங்கன்னா டெய்லி பிரியாணி சாப்டலாம் 🙄🙄

அதை விட நகைக்கடை வெச்சிருக்கற மாப்ளை சிக்குனான்னா டெய்லி எம்ஜியார் மாதிரி தங்க பஸ்பமா சாப்பிடலாம்


============