Showing posts with label CHRISTOPHEER (2023) மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label CHRISTOPHEER (2023) மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, March 14, 2023

CHRISTOPHEER (2023) மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்

 


மம்முட்டி  + பகத் ஃபாசில் -இளையதிலகம்  பிரபு + சினேகா  இவர்கள்  இணைந்து  நடிக்க 2010 ஆம் ஆண்டு  வெளியான   ப்ரமணி (PRAMANI)  எனும்  மலையாளப்படம்தான்  இயக்குநர் பி  உன்னி கிருஷ்ணன்  மம்முட்டியுடன்  இணைந்த முதல்  படம், 13  வருடங்களுக்குபின்  மீண்டும்  இருவரும்  இணைந்திருக்கிறார்கள் 2022 ஆம்  ஆண்டு  மம்முட்டிக்கு  இரண்டு  வெற்றிப்படங்கள் , பீஷ்மா பர்வம், ரோர்ஸ்சாச். இயக்குநர்  பி  உன்னிகிருஷ்ணன்  2022 ல் மோகன்  லாலுடன் இணைந்து  ஆராட்டு  எனும்  சுமார்  ரக   படம்  தந்திருக்கிறார். இப்போது  2023 ஆம்  ஆண்டு  தொடக்கத்தில் வந்திருக்கும்  இந்த  ஆக்சன்  த்ரில்லர் போலீஸ்  காப்  மூவி  எப்படி  இருக்கிறது? என  பார்ப்போம்

நாயகன்  ஒரு ஐபிஎஸ்  போலீஸ்  ஆஃபீசர். மிக  கண்டிப்பானவர் , பெண்களுக்கு  எதிராக  நிக்ழும்  பாலியல்  வன்  கொடுமைகளைக்கண்டு  கொதித்து  குற்றவாளிகளுக்கு  ஆன்  த  ஸ்பாட்  தண்டனை  தருபவர். என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட் . இவர்  ஏன்  இப்படி  கடுமையாக  நடந்து  கொள்கிறார்? என்பதற்கு  அவரது  சொந்த  வாழ்வில்  ஒரு  ஃபிளாஸ்  பேக்  உண்டு. இவரது  என்கவுண்ட்டர்  குறித்து  ஒரு  இன்வெஸ்டிகேஷ்ன்  நிகழ்த்த ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  நியமிக்கப்படுகிறார். அவரது  நோக்கம்  நிறைவேறியதா?  நாயகன்  தன்  கோபத்தைக்குறைத்துக்கொண்டாரா?  என்பது  மீதி  திரைக்கதை 


நாயகனாக  மெகா  ஸ்டார்  மம்முட்டி. ஓப்பனிங்  சீனில்  இருந்து  கடைசி  வரை  முகத்தை  இறுக்கமாகவே  வைத்திருக்கும்  ஒரு இண்ட்ராவர்ட்  கேரக்டர். நன்றாக  நடித்திருக்கிறார். 71  வயதானவர்  மாதிரியே  தெரியவில்லை , முகத்தில்  சுருக்கங்கள்  இல்லை , உடல்  மொழியில்  தளர்வு இல்லை. இவரது  கேரக்டர் டிசைன்  நான்  சிகப்பு  மனிதன்  ரஜினி  + கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு  சத்யராஜ்  இருவரின்  கலவையாக  அமைந்துள்ளது 


வினய்  ராய்  வில்லனாக  வருகிறார். இவரது  கேரக்டர்  டிசைன்  கச்சிதம்.  சரத் குமார்  ஒரு  கெஸ்ட்  ரோலில்  வருகிறார்.,


ந்டிகை  சினேகா  ஹோம்  செகரட்டரியாகவும்  நாயகியாக  நாயகனுக்கு  இணையாகவும்  வருகிறார்

ஏசிபி  ஆக  அமலா  பால், ஐஸ்வர்யா லட்சுமி , அதிதி ராவ்  என  ஏராளமான  நட்சத்திரப்பட்டாளம்  உள்ளது


ஏஜெண்ட்  டீனா  ஒரு  சின்ன  ரோலில்  வருகிறார், ஷைன்  டாம்  சாக்கோஸ்  முக்கிய  கேரக்டரில் நன்றாக  நடித்திருக்கிறார்


இரண்டரை  மணி  நெரப்படத்தில்  படம்  பூராவும்  பெண்கள்  பாலியல்  வன்  கொடுமைக்கு  ஆளாவதும் , நாயகன்  குற்றவாளிகளை  கொல்வதும்   வந்தாரு , சுட்டாரு , போனாரு   ரிப்பீட்டு  என  சொல்லும்  விதத்தில் இருக்கிறது 


பழைய  எம்  ஜி ஆர்  படங்களில்  பெண்களுக்கு  ஒரு  ஆபத்து  என்றால்;  ஆல  மர  விழுதைப்பிடித்து  வந்தாவது  நாயகன்  பெண்களைக்காப்பாற்றி  விடுவார். அது  போல  நாட்டில்  எங்கே  பெண்களுக்கு  எதிரான  பாலியல்  குற்றங்கள்  நடந்தாலும்    உடனே  மம்முட்டி  ஆஜர்  ஆகிறார். அது  எப்படி  என  தெரியவில்லை , போலீஸ்  டிபார்ட்மெண்ட்டில்   அவர்  ஒருவர்  மட்டும்  தான்  இருக்கிறாரா? 


நாயகன்  வரும்போதெல்லாம்  ஒரு  ஹீரோ  பில்டப்  பிஜிஎம்  திரும்பத்திரும்ப  வருவது கடுப்படிக்கிறது. படத்தில்  பெரிய  திருப்பங்களோ , சுவராஸ்யங்களோ    பெரிதாக  இல்லை ., ஃபிளாட்  ஆன  திரைக்கதை ஜஸ்டின் வர்கீஸ்  இசை  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  சிறப்பு ஃபெய்ஸ்  சித்திக்கின்  ஒளிப்பதிவு  அருமை . எடிட்டிங்  மனோஜ், இரண்டரை  மணி  நேரம்  ஓடுவது  போல  ட்ரிம்  செய்து  இருக்கிறார். நடிகர்  வினய்க்கு  வில்லனாக  மலையாளத்தில்  இது  முதல்  எண்ட்ரி 


மம்முட்டி  நடித்த  நண்பகல்  நேரத்து  மயக்கம்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  20  நாட்கள்  கழித்து  அதாவது  ஃபிப்ரவரி 9 , 2023   கிறிஸ்டோபர்  தியேட்டர்களில் ரிலீஸ்  ஆனது . அமேசான்  பிரைம் ஓடிடி  தளத்தில் மார்ச் 9  . 2023  ரிலீஸ்  ஆகி  உள்ளது ,18 கோடி  பட்ஜெட்டில்  உருவான  இந்தப்படம்  38  கோடி  வசூல்  செய்துள்ளது


ரசித்த வசனங்கள் 


1    மேலிடத்துக்கு  பயப்பட்டு  அரசியல்வாதிகளுக்கு  கைப்பாவையா  செயல்படும்  உங்களுக்கு  எப்படி  சார்  இனிமே  சல்யூட்  அடிப்பேன் ?


 நீங்க  சல்யூட்  அடிக்கற  ஆஃபீசர்ஸ்  90% பேர்  என்னை விட  மோசம் 



2   பணம்  வாங்கிட்டு  அவங்க  பக்கம்  வேலை  செய்யறதாலதான்  போலீஸ் மேலே  மக்களுக்கு  மரியாதையே  இல்லாம  போச்சு 


3  தாமதமாகக்கிடைக்கும்  நீதி  மறுக்கப்பட்ட  நீதி 


4 ஆறாத  காயங்கள் , ஈடு  செய்ய  முடியத  இழப்புகள்  எல்லார்  வாழ்க்கையிலும்  இருக்கும் 


5  நிர்பயா  கேஸ்ல  குற்றவாளிகளுக்கு  தண்டனை  கிடைக்க  8  வருசங்கள்  ஆச்சு 


6 உண்மைகள்  உருவாக்கப்படுபவை 


 சபாஷ்  டைரக்டர்


1   படத்தில்  வரும்  பப்ளிக்கும்  சரி , படம்  பார்க்கும் ஆடியன்சும்  சரி , என்கவுண்ட்டர்  செய்வது  சரிதான்  என  எண்ணும்படி  காட்சிகளை  அமைத்தது 


2   பெண்கள்  பாலியல்  வன்கொடுமைக்கு  ஆளாவதும் அதற்கான  என்கவுண்ட்டரும்  தான்  படம்  என்றாலும்  காட்சி   ரீதியாக  18+  காட்சிகள்  எதுவும்  திணிக்காமல்  கண்ணியமாக  விஷூவலில்   காட்டியது


3  ஐஸ்வர்யா  லட்சுமி , அம்லா பால், சினேகா  என  மூன்று  கதாநாயகிகள்  இருந்தும்  கிளாமர்  காட்சிகள்  ஏதும்  திணிக்காமல்  பாத்திரங்களின்  தன்மைக்கு  ஏற்ப  காட்சிகளை  வலுவாக  தந்தது 


4  வில்லனின்  கேரக்டர்  டிசைனை  வலுவுடன்  அமைத்தது .துப்பாக்க்கி  முனையில்  மிரட்டபப்டும்போது  கூட  அவர்  அனாயசமாய்  சமாளிக்கும்  காட்சிகள்  இரண்டும்  அருமை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  மம்முட்டி  சினேகா  வீட்டுக்குப்போகும்போது  கார்பன்  மோனாக்சைடு  வாயு  திறக்கப்பட்டு  இருப்பதை  எப்படி  அவர்  அறிகிறார்? எப்படி  கர்சீப்  அணிந்து  முகத்தில்  கவசமாக  வைத்துக்கொள்கிறார்? என்பது  சொல்லப்படவில்லை , அது  அவருக்கு  முதலிலேயே  தெரிந்திருந்தால்  ஃபோனில்  சினேகாவை  எச்சரித்து  இருக்கலாமே?


2  மம்முட்டி  தன்  மனைவியின்  தம்பியையே  என்கவுண்ட்டரில்  போட்டுத்தள்ளுகிறார் மனைவி  அவரைப்பிரிந்து  வாழ்ந்த  போதும்  அரசியல்  செல்வாக்கு  மிக்க  அவர்  மாமனார்  அவரது  மகன்  கொலைக்கு  மம்முட்டியை  பழி  வாங்க  முயலவே  இல்லையே? 


3  அத்தனை  காலம்  பிரிந்து  வாழ்ந்த  சினேகா  அமலாபால்  அட்வைஸ்  பண்ணியது,ம்  மனம்  மாறி  மம்முட்டிக்கு  கடிதம்  அனுப்புவது  நம்ப  முடியவில்லை ., ஒரு  பெண்  இன்னொரு  பெண்  சொல்வதை எந்தக்காலத்தில்  ஏற்றுக்கொண்டிருக்கிறார் ? 


4   வில்லன்  ஹீரோ  நேருக்கு  நேர்  ச்ந்திக்கும்போது  உன்னை  உருத்தெரியாமல்  ஆக்குகிறேன்  என  வெறும்  வாயில்  தான்  முழம்  போடுகிறார்  வில்லன்  வினய், செய்கையில்  ஒன்றையும்  காணோம், அதே  போல்  ஹீரோ  மம்முட்டி  நேருக்கு  நேர்  வில்லனை  சந்திக்கும்போது  எதுவும்  செய்யாமல்  விட்டு  விட்டு  பின்  அவரைக்கொல்ல  ஆள்  ரெடி  பண்ணி  தலையை  சுற்றி  மூக்கைத்தொடுவது  ஏன் ? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  மம்முட்டி  ரசிகர்கள்  பார்க்கலாம்  ,மற்ற  பொது  ரசிகர்கள்  மாமூல்  மசாலா  போலீஸ்  காப்  ஸ்டோரி  டெம்ப்ளேட்டை  ரசிப்பவர்கள்  பார்க்கலாம்  ரேட்டிங்  2. 5 / 5 



Christopher
Christopher.jpeg
Theatrical release poster
Directed byB. Unnikrishnan
Written byUdaykrishna
Produced byB. Unnikrishnan
Starring
CinematographyFaiz Siddik
Edited byManoj
Music byJustin Varghese
Production
company
Release date
  • 9 February 2023
Running time
150 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Budget₹18.7 crore[2]
Box office38.5 crore[3]