Showing posts with label CHILDREN SPECIAL. Show all posts
Showing posts with label CHILDREN SPECIAL. Show all posts

Monday, July 16, 2012

HOMEWORD BOUND 2 - சுட்டி ஸ்பெஷல் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgb-qI2XURF2CNCJK6seQReNXFzYP5LGfWQ7zE5S4Ru-Ol9FrpSzjunmtwyN55Qp1HVOb5aa2OeodUrxwxtbnK9i5Wt5KoPEYVlQsgK9zjv-ztoF3hATr12jFeRToCa8jXYm4bP2inaal8/s400/Homeward+Bound+2+Tamil+Dubbed+Movie.jpg 

 

Homeward Bound 2: Lost in San Francisco (1996)- எந்த பாத்திரத்துல தண்ணீர் ஊற்றினாலும் அந்த வடிவம் பெறுமே தண்ணீர் அந்த மாதிரி எந்த மாதிரி படம் பார்க்கறோமோ அந்த மாதிரி நாம ஆகிடனும், அப்போதான் ரசிக்க முடியும்.. இந்த மாதிரி குழந்தைங்க பார்க்க வேண்டிய  ஜாலி பட்டாசை பார்க்கறப்போ நம்ம மனசை குழந்தையா வெச்சுக்கனும்.. குழந்தைங்களோட விளையாடும்போது எப்படி  நம்ம மேதாவிலாசத்தை கழட்டி வெச்சுட்டு குழந்தையோட  குழந்தையா மாறிடறோம்? அந்த மாதிரி..


ஏன் ஓப்பனிங்க்ல இவ்ளவ் பில்டப்னா இந்தப்படத்துல நாய் , பூனை எல்லாம் பேசும் ஜாலியா நசிக்கனும்,, லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது.. சினிமால கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் லாஜிக் இல்லாம  பஞ்ச் டயலாக்ஸ் பேசும்போது உண்மையான நாய்ங்க பேசுனா எப்படி இருக்கும்? செம ஜாலிதான்..

 சரி , கதைக்கு வருவோம்.. ஒரு ஃபேமிலி.. கணவன் , மனைவி, 2 குழந்தைங்க.. அவங்க வீட்ல 2 நாய், ஒரு பூனை.. எல்லாரும் சம்மர் வெக்கேஷனுக்காக ஊருக்கு போறாங்க.. ஃபிளைட்ல.. நம்ம ஊர்னா எப்படியோ போகட்டும்னு நாயை விட்டுட்டு போவாங்க, ஆனா ஃபாரீன்ல அப்படி இல்லை, டிக்கெட் சார்ஜ் போட்டு கூட்டிட்டு போறாங்க..

ஃபிளைட்ல நாய்ங்களுக்கு தனி கூண்டு மாதிரி.. லக்கேஜ்ங்க எல்லாம் தனி செக்‌ஷன்ல வைக்கறது மாதிரி விலங்குகளை கூண்டுல அடைச்சு தனி அறைல வெச்சு கொண்டு போறாங்க.. ஆனா அந்த செல்லப்பிராணிகளுக்கு அது புரியலை..
 நைஸா எஸ் ஆகிடுதுங்க.. அவங்க என்ன நினைச்சுட்டாங்கன்னா எங்கேயோ நம்மளை கடத்திட்டு போறாங்கன்னு.. எஸ் ஆகி எப்பவும் இருக்கு ம் வீடு தேடி சுத்துதுங்க,.

வெக்கேஷன் போற ஊர் வந்ததும் ஃபிளைட்டை விட்டு இறங்குன ஃபேமிலி அப்போதான் தங்கள் பெட் அனிமல்ஸ் மிஸ் ஆனதை உணர்றாங்க.. குட்டீஸ் எல்லாம் எந்த வெக்கேஷனும் வேணாம்.. நாம கிளம்பலாம்னு அடம் பிடிக்கறாங்க..
 எஸ் வி சேகர் எப்படி அம்மா கட்சில இருந்து அய்யா கட்சிக்கு போய், மறுபடி அம்மா கட்சில இணைஞ்சு மாறி மாறி மங்காத்தா ஆடி காமெடி பண்ணாரோ  அந்த மாதிரி அந்த ஃபேமிலி மறுபடியும் அடியைப்பிடிடா பாரத பட்டாங்கற மாதிரி ரிட்டர்ன் வர்றாங்க .. 


 இங்கே இந்த 2 நாய்ங்களூம், பூனையும் ரோடு ரோடா சுத்துதுங்க.. அவங்களுக்கு 2 வகையான ஆபத்து. 1. இந்த மாதிரிநாய்ங்களை பிடிக்கற வில்லன் கூட்டம் ஒண்ணு வேன்ல ரோடு ரோடா சுத்தறானுங்க.. அவங்க கிட்டே இருந்து தப்பிக்கனும்.. விமான நிலைய அதிகாரிகள் காணாமப்போன நாயைக்கண்டு பிடிக்கற பொறுப்பேத்துக்கிட்டு அந்த முயற்சில இறங்கராங்க.. அவங்க நல்லதுதான் பண்றாங்க, ஆனா நாய்ங்க பார்வைல அவங்க வில்லன் தானே?

சேசிங்க், ஓட்டம்.. இதுக்கு நடுவுல சில தெரு நாய்ங்க கூட சினேகம்.. அதுல ஒரு நாய் கூட இந்த வீட்டு நாய்க்கு லவ்,., எப்படி அந்த லவ் ஜோடி சேருது? அந்த ஃபேமிலி நாய்ங்க , பூனையை கண்டு பிடிச்சாங்களா? என்பதை 90 நிமிடங்கள் ஜாலியா சிரிக்க சிரிக்க சொல்லி இருக்காங்க..

 மேலோட்டமா பார்த்தா இது கேனத்தனமான கதையா இருந்தாலும், என்னை மாதிரி சின்னக்குழந்தைங்க கண்ணோட்டத்துல ஜாலி பட்டாசு..

ஒரு தீ விபத்து நடக்கறப்போ  அந்த வீட்டுல மாட்டிக்கிட்ட ஒரு குழந்தை, ஒரு குட்டி நாய்க்குட்டி இவங்களை காப்பாத்தற மாதிரி ஹீரோ பில்டப் சீனும் உண்டு..

இந்த 2 நாய்ங்க,  ஒரு பூனைல வாக்கு வாதத்துல சண்டை வந்து கோவிச்சுக்கிட்டு பிரிஞ்சு பொகும் ஊடல் காட்சிகளும் உண்டு.. 

 http://s3.amazonaws.com/auteurs_production/images/film/homeward-bound-ii-lost-in-san-francisco/w448/homeward-bound-ii-lost-in-san-francisco.jpg?1305314329
மனம் கவர்ந்த வசனங்கள்

 .
1. காக்கா ஓட்டுனாக்கூட காலரைத்தூக்கி விட்டுக்கலாம் போல,ஆனா பட்டாம்பூச்சி துரத்துனா பிச்சைக்காரன் கூட மதிக்க மாட்டான்

2. நான் என்ன தப்பு செஞ்சேன்? திருடுனேன், அது ஒரு பெரிய தப்பா? எப்பவும் செய்யறதுதானே? ஹி ஹி

3. இப்போ நாம எங்கே போகப்போறோம்?

 சொன்னா  மட்டும் உனக்கு தெரிஞ்சிடுமாக்கும்?

கிழவி மாதிரி பேசாத, தெரியுமா? தெரியாதா?


4.  ஹூம், இதெல்லாம் ஒரு பூட்டு, வாலால  தட்டி விட்டாலே வழுக்கிட்டு வந்து விழுந்துடுச்சு..

விடு விடு, உன் பூட்டு மட்டும் திண்டுக்கல்லுலயா செஞ்சிருக்கப்போறாங்க?

5. நம்மளை பார்த்ததும் ஃப்ளைட்டை நிப்பாட்டி ஏத்திக்குவாங்களா?

ஃப்ளைட்டை நிப்பாட்டி ஏத்திக்கிட்டா பரவாயில்லை,நம்ம மேல ஏத்திட்டு அப்புறம் நிப்பாட்டிட்டா?

6.  வசதி எல்லாம் நம்ம வீட்ல தான் பார்க்கனும், வந்த இடத்துல பார்க்கக்கூடாது..

7. இந்த ஊர்ல பஸ் தண்டவாளத்துல போகுது.. இப்படி நான் பார்த்ததே இல்லை.. உட்கார சீட் இருந்தும் எல்லாரும் ஸ்டேண்டிங்க்லயே வர்றாங்க..

8. மேல இடிக்கனும்கறதுக்காக நான் இங்கே வர்லை..

அப்போ நாங்க இடிபட இங்கே நிக்கறமா?

உஷ் அப்பா.. என்ண்டா, பிரச்சனை இனும் வர்லையேனு பார்த்தேன்.


9. என்னது? நீ ஒரு பொண்ணா?

 இதுக்கே, இப்படி கேள்வி கேட்டதுகே.. உன்னை..

10. முந்திரிக்கொட்டைத்தனமா நடந்துக்காதே.. 

முந்திரிக்கொட்டைத்தனமா நடந்துக்கறதுன்னா என்ன?

அவசரக்குடுக்கைத்தனமா நடந்துக்கறது

அவசரக்குடுக்கைத்தனமா நடந்துக்கறதுன்னா என்ன?

 சுத்தம்..

11. வழி தெரியாம வந்துட்டீங்களா?

நோ நோ அவங்க 2 பேரும் வழி தெரியாம முழிச்சுட்டு இருந்தாங்க ,நான் அவங்களுக்கு உதவி பண்ண வந்தேன் ,ஹி ஹி .

12. மனுஷங்களை நான் எப்பவும் நம்ப மாட்டேன்

நீ அவங்களால பாதிக்கப்படலை தானே?

 பாதிப்பு என்பது நமக்கு வந்தாத்தானா? நம்ம நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு ஒரு பாதிப்புன்னா நமக்கும் அது வந்த மாதிரி தானே?


13. மனுஷனுங்க ரொம்ப மோசமானவங்க

நோ நோ, அவங்க உணவு, போடற சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கும்.. பாசிட்டிவ் சைடையும் பாரு

14. அடுத்தவன் ஏதாவது சொன்னா , அட்வைஸ் பண்ணா அதை காதுல போட்டுக்க ,கிடைச்சதை வாய்ல போட்டுக்க, இதுதான் வாழ்க்கை

15. கொஞ்ச நேரம் உன்னால பொறுத்துக்க முடியாதா?

கொஞ்ச நேரம் னா பொறுத்துக்கலாம், ஆனா கொஞ்ச ற நேரம்னா அதுவரை எப்படி  என்னால பொறுத்துக்க முடியும்?

16.  பிரச்சனைன்னா பங்கெடுப்போம், எதிர்த்து நின்னா நொங்கெடுப்போம்

17.  உலகம் ஏன் இவ்ளவ் ஃபாஸ்ட்டா சுத்துது?

டேய், நீ ஒரு உருளைல மாட்டி இருக்கே.. அது உருண்டு இறக்கத்துல ஓடிட்டு இருக்கு..

18. நான் கூட அறிமுகமாகாத புது இடத்துக்கு வந்து ரொம்ப கஷ்டப்படும் ஆரம்பத்துலன்னு நினைச்சேன், பரவாஇல்லையே, எல்லாரையும் கரெக்ட் பண்ணிடுச்சே?

19. நான் சாப்பிட ஆரம்பிச்சுட்டா யார் கூப்பிட்டாலும் என் காது கேட்காது எனக்கே இது பத்தாது, யாரும் பங்குக்கு வராதீங்க, ஹி ஹி 


http://i845.photobucket.com/albums/ab16/hortencia9/plaatjes%20film/marjan/homeward-bound-ii-lost-in-san-francisco-original.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. நாய் வண்டில ஏகப்பட்ட நாய்ங்க அடைச்சு வைக்கறவங்க அவைகளுக்கு தனித்தனி செயின் போட்டு கட்டி வைக்க மாட்டாங்களா? ஹீரோ நாய்ங்க கதவைத்திறந்ததும் நெல்லிக்காய் மூட்டைல இருந்து ஓடற மாதிரி, எலக்‌ஷன் முடிஞ்சு ஜெயிச்ச ஆளுங்கட்சில இணையும் எதிர்க்கட்சி மாதிரி மட மடன்னு ஓடிடுதுங்களே?

2. நாயைக்கடத்தும் வில்லன்க ரொம்ப சிரமப்படராங்க.. மயக்க மருந்து குடுத்தா மேட்டர் ஓவர்,, ஈசியான வழி இருக்கையில் ஏன்  சுத்தி வளைச்சு மூக்கைத்தொடனும்?

3. விமான நிலையத்தில் தனி அறையில் நாய்களை கூண்டில் வைப்பவர்கள் அந்த ரூமுக்கு செக்யூரிட்டி போட மாட்டாங்களா?

சிரிச்சு மகிழ, ஜாலியா டைம் பாஸ் பண்ண குழந்தைகளோட படம் பார்க்கலாம்

Director:

David R. Ellis